11 மாதங்களுக்கு பிறகு இன்று என்னுடைய லேப்டாப், ஐபேட், மொபைல் போன், சிசிடிவி கேமரா முதலியவைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திரும்ப கிடைக்கப் பெற்றேன்.
நம் இனிய இந்திய நாட்டின் பிரஜையாக இருப்பதற்கான விலை இது
காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில் உள்ள பழமையான பொன் மற்றும் வெள்ளி பல்லி சிலைகள் திருடப்பட்டதாகவும், அதற்கு பதிலாக நவீன நகல்கள் வைக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளேன். மிகவும் துரதிர்ஷ்டவசமாக, @tnpoliceoffl இன் IWCID, இந்த சாத்தியமான திருட்டு தொடர்பான முக்கிய தகவல்களை செய்தி மற்றும் சமூக ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளது. இதனால், குற்றவாளிகளுக்கு ஆதாரங்களை தடை செய்யவும், சேதப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
@tnhrcedept இது போன்ற செயல்களுக்கு பிரபலமானது, ஏனெனில் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூரில் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது. போலீசாருக்கு எந்தவித கேள்வித்தாளையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை; சட்டம் அவர்கள் வேலை, ஒருவேளை முதல் கட்ட விசாரணை நடக்க வேண்டும் என்று அவர்கள் கருதினால், புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டுவது மட்டுமே.
போலீசாரின் அலட்சியமான போக்கு காரணமாக, எனக்கு அடையாளம் தெரியாத ஆதாரங்களிலிருந்து மிரட்டல் அழைப்புகள் வருகின்றன (அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்), மேலும் @tnhrcedept மூலம் செய்தி ஊடகங்களின் மூலம் மறைமுக மிரட்டல்கள் வருகின்றன (அதையும் நான் எப்படி சமாளிப்பது என்பது எனக்கு தெரியும்). ஒருவேளை FIR பதிவு செய்யப்படவில்லை என்றால், நான் வேறு வழியின்றி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். மற்றும் அதை உடனடியாக செய்யும் அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருக்கிறேன்.
பார்க்கலாம், குற்றவாளிகள் இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்று. ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவில், காஞ்சிபுரத்தில். குழப்பமடைந்த பொதுமக்களுக்கு விளக்கமளிக்க, நான் IGP, Idol Wing CID-க்கு அனுப்பிய எனது மின்னஞ்சலை இப்போது பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்.
எப்படி இருந்த YouTuber @RangarajPandeyR இப்படி ஆகிட்டார்.
2 வருடத்தை முன் மதுரையில் திசைகள்4 ஏராளமான பணச்செலவில், விளம்பரதாரர்கள் உதவியோடு துவங்கியவர் இன்று 2 வருடத்திற்கு பின், வியாபாரம் சரியில்லாமல் விளம்பரதாரர்கள் கூட மதிக்காத ஒரு சாதாரணமன யுட்யூபர் ஆகி இப்ப ஸ்டூடியோவில திசைகள்4 நடத்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒரு நல்ல மேசை கூட இல்லாத நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளாரே.
2 வருடம் முன்பு பகட்டாக பொது இடத்தில் சோபா போட்டு உட்கார்ந்து கேள்விகளை கேட்டவர் இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து......
பார்க்கவே பாவமாக இருக்கிறது.
ஏனோ!!!!!!!
நல்லவர்களை பகைத்துக்கொண்டு அவர்கள் மீது வன்மத்தை கக்கியதனாலோ என்னவோ!!!
பெருமாள் தன்னை இகழ்ந்தவர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் தன் பக்தனுக்கு ஒன்றென்றால்.... ..
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும் ‘ ‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர்.
ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான்.
இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர்.
இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!!
மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!!
இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர்
இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!!
சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும்.
இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும்.
பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும்.
சநாதன தர்மத்தின் அடிப்படை தத்வத்தை இப்படி பொது வெளியில் வைத்து அதுவும் யுட்யூபில் வைத்து பேசுவது இந்த யுட்யூபர் @RangarajPandeyOffical விற்கு வழக்கமாகிவிட்டது.
இப்படித்தான் எல்லாவற்றையும் நீர்த்து போக செய்யும் வேலையை இவர் பல நாட்களாக செய்து வருகிறார்.
இந்த ப்ரணவ மந்திரத்தை ஒழுங்காக கேட்காததால்தான் பார்வதி தேவி சிவபெருமானால் மயிலாக சபிக்கப்பட்டு மயிலைக்கு வந்தார்.
இப்படி பொதுவெளியில் ப்ரணவத்தை பேசி views மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னவென்று சொல்ல.
ஒரு ஆசார்யனிடம் அண்டி அடிபணிந்து பணிகள் செய்து பெற வேண்டிய ஒரு உயர்ந்த தத்துவத்தை கடைத்தெருவில் விற்பனை செய்வது இன்றைய பிழைப்பாகிவிட்டது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் ஆண்டாள் யானையை யானை பாகன் இல்லாமல் யாரோ ஒருவர் ஓட்டிச் செல்கின்றனர்.
இப்படி யானை பாகன் இல்லாமல் யாரோ ஓட்ட இதென்ன பன்னியா அல்லது ஆடா அல்லது மாடா?! இது யானை.
யாரையாவது கொன்றால் கூட @tnhrcedept க்கு பொது மக்களுக்கோ புத்தி வராது.
இந்த யானைக்கு பாகனே இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு இலுவையில் உள்ளது. 2021ல் தொடுக்கப்பட்டது. யானைக்கு சில பொதுட்கள் கொடுத்து கட்டுப்படுத்தி இருக்கின்றனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
WPNo 3656, 3660, 3662, 3663 of 2021 வழக்கு எண். அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் வந்து பார்வையிட்டு சென்ற யானை.
இன்று ஆண்டாள் யானை தெருவில் கண்டவர்கள் ஓட்ட செல்லும் பொழுது யாரையாவது தாக்கினால் யார் பொறுப்பு?
அன்று, ஆண்டாள் யானை தன் மகளைப் போல பார்த்துக் கொண்டிருந்த திரு ஸ்ரீதரனை வேலையை விட்டு வெளியேற்றும் பொழுது வேணு ஸ்ரீநிவாசன் யானை ஏதாவது செய்தால் தான் பொறுப்பேற்பதாக அன்றைய செயல் அலுவலரிடம் சொன்னாரே. அவர் பொறுப்பேற்பரா?! செயல் அலுவலர் பொறுப்பு ஏற்பாரா?! இந்த இரண்டு யாரோ மனிதர்கள் பொறுப்பு ஏற்பார்களா?! கேடுகெட்ட @tnhrcedept பொறுப்பு ஏற்குமா?! இந்த கோவிலில் முதல் தீர்த்தம் வாங்கும் ஸ்தலத்தார் தீர்த்தகாரர்கள் பொறுப்பு ஏற்பார்களா?!
இரண்டாவது யானை லக்ஷ்மி வெளியே பார்க்கவே முடிவதில்லை என்பது வேறு விஷயம்.
எனக்கென்ன போச்சு என்று நான் இருக்கலாம். ஆனால் இப்படி "நன்கு கற்றவர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் கூட, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு அஹங்காரம் அதிகமாக இருப்பது வேதனை!!
ஸ்ரீரங்கத்து "பெரியவர்கள்" இவர்கள். சிலர் இதில் "ஆசார்ய புருஷர்கள்". பெரிய பெருமாள், நம்பெருமாள் பற்றி "நன்றாக" உபன்யாசம் செய்வாரகள். இந்த கூட்டத்திலும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று வழக்கம் போல ஊருக்கு உபதேசித்தவர்கள்!!
இந்த புகைப்படத்தில் உள்ள பிழை என்ன என்று தெரிகிறதா? அதெப்படி தெரியும். நான் எல்லோரையும் குறை சொல்கிறேன் என்றல்லவா நீங்கள் சொல்வீர்கள்!!
எம்பெருமானார் அதாவது ஸ்வாமி ராமாநுஜர் எழுந்தருளி இருக்க, அவர் முன் முதுகையும் பின் பக்கத்தையும் காட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற இந்த "ஸ்ரீ வைஷ்ணவர்கள்" ஊருக்கு உபதேசித்தால் நாடு எப்படி உறுப்படும்?!!!
இந்த அழகில் இவர்கள், ஆசார்யர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று விளக்குகின்றனர். ஏழை மக்கள் இவர்களை ஏதோ அறிவார்ந்தவர்கள் என்று நினைத்து கேள்விகளும் கேட்கின்றனர்.
சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகத்திற்கு சாக்கடை தண்ணீரில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் தேங்கிய சாக்கடை தண்ணீரில் பெருமானுக்கு திருமஞ்சனம்/அபிஷேகம் நடந்தது
அந்த சாக்கடைத் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர சென்ற வருடம் இரண்டு யானைகள் வந்திருந்தன - ஆண்டாள், லக்ஷ்மி.
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இது ஆழ்வார் பாசுரம்
என்னுடன் படித்த பலரும் இன்று அமெரிக்காவில் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அன்று கல்லூரியில் படிக்கும் பொழுது நகமும் சதையுமாக எல்லா கல்லூரி மாணவர்கள் போலத்தான் நாங்களும் இருந்தோம்.
ஒன்றாக உணவருந்த மெஸ்ஸுக்கு செல்வது, ஒரே அறையில் 6-7 பேர் வாழ்வது.
அரட்டை அடிப்பது. கிரிக்கெட் விளையாடுவது. என்று எல்லா கல்லூரி செல்லும் மாணவர்கள் போலத்தான் இருந்தோம்.
கல்லூரி முடிந்தும் பலரும் தொடர்பில் இருந்தனர். ஆனால் ஏனோ, கடந்த ஒரு 10-15 வருடங்களாக, அதாவது நான் கோவில் விஷயங்களை குறித்து என்னால் இயன்றதை செய்ய நினைத்த பிறகு அல்லது நான் வேலையை விட்ட பிறகு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பலரும் தொடர்புகளை குறைத்துக் கொண்டு இப்பொழுது எப்பொழுதாவது 4-5 வருஷத்திற்கு ஒரு முறை தவிற்க முடியாமத காரணத்தினால் ஓரிருவரை பார்க்க நேரிடும் நிலை.
அப்படி சமீபத்தில் அப்படிப்பட்ட கல்லூரி நண்பர் ஒருவருடன் வெகு வருஷங்ளுக்கு பிறகு நேரில் பேசக்கூடிய வாய்ப்பு கிட்டியது.அது போல சொன்னார், "உன்னுடைய செயல்பாடுகளை நாங்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உன் வீடியோக்களை பார்க்கிறோம். உன் ட்விட்டர் பதிவுகளை பார்க்கிறோம். எங்களுடைய "சப்போர்ட்" எப்பொழுதும் உண்டு. ஆனால், நீ கடுமையான சொற்களை எதற்கு உபயோகிக்கிறாய்?! ஒரு ப்ராஹ்மணன் இப்படி கடுமையான சொற்களை உபயோகிப்பது சரியில்லை என்று நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்" என்று சொன்னார்.
கல்லூரியில் இருக்கும் காலத்தில் எவர் ப்ராஹ்மணர் எவர் ப்ராஹ்மணர் அல்லாதார் என்கிற கேள்வி ஒரு முறை கூட வந்ததில்லை. சக மாணவன் என்கிற ஒரே ஒரு விதத்தில்தான் நாங்கள் அனைவரும் பழகினோம்.
என் நண்பரிடம் நான் கேட்டேன் "அப்படி என்ன கொடுமையான வார்த்தை சொல்லிவிட்டேன்! ஒரு கெட்டவார்த்தை கூட பதிவிட்டதில்லையே" என்று கேட்டேன்.
நாங்ள் கல்லூரியில் இருக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பொழுது பேசுபவர்கள் பேச்சுக்கு முன்னால் மட்டும் அடைமொழி இல்லை. பின்னும் அடைமொழிகளோடுதான் பேசுவார்கள். நானும் அப்படி பேசியதுண்டு.
ஆனால் அதே நண்பர்கள் இன்று என் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாகச் சொல்பவர்கள், நல்ல நிலையில் அமெரிக்காவில் வாழ்பவர்கள், ஒரே ஒரு முறை கூட என்னை தொலைபேசியிலோ, வாட்ஸப்பிலோ தொடர்பு கொண்டு "ரங்கா!! நன்றாகச் செயல்படுகிறாய்" என்றோ விமர்சனங்களோ சொன்னதில்லை.
அடைமொழி இல்லாமல் பேசியவர்கள், இன்று "இவன் ஒரு ப்ராஹ்மணன், இப்படி கடுமையாக பேசுவது கூடாது" என்று புறம்கூறிக் கொண்டிருப்பது வருத்தமளித்தது.
என்ன கடுமையாக பேசினேன் என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. இதை HYPOCRISY என்றுதானே சொல்ல வேண்டும்?!
காலேஜில் RAGGING என்கிற பெயரில், கெட்டவார்த்தைகள் பேசாதவர்களையும் கெட்ட வார்த்தை பேசித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியவர்கள், RAGGING என்கிற பெயரில் என்னவெல்லாமோ பேசியவர்கள், அப்படி RAGGING காலம் முடிந்ததும், இதெல்லாம் வாழ்க்கைக்கு அவசியம் "STREET SMART" ஆக இருக்க நமக்கு கிடைக்கும் பாடம் என்று பேசியவர்கள், இன்று STREET SMARTஆக என்னை பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் நான் பதிலளிப்பது கொடுமையாக எப்படி இருக்கிறது?!
என்னை பற்றி அவதூறு பேசுபவர்களை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, நான் என்னை தற்காத்துக் கொள்ளும் பொழுது "இப்படி செய்ய கூடாது. நீ ப்ராஹ்மணன். கடுமையான சொற்கள் உபயோகிக்க கூடாது" என்று எனக்கு பின்னால் என்னை பற்றி புறம்கூறுவது ஏன்?!
அன்று எப்படி அவர்களுடன் பழகினேனோ அதே "ரங்கா"தான் நான். அன்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தேன். இன்று ஏதோ சிறிதளவு தெரிந்து கொண்டு அதன்படி வாழ முற்படுகிறேன்!!
நான் சிறையில் இருந்து பொழுது ஒருவர் கூட என் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசக் கூட இல்லை. தள்ளி விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். இன்றுவரை (ஓரிருவரை தவிற) ஒருவரும் என்னை தொடர்பு கொண்டு "எப்படி இருக்கிறாய்" என்று கேட்டதில்லை.
ஆனால் பாருங்கள் "ரங்கா இப்படி எழுத வேண்டும்!! எல்லா கட்சிகளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது!! பா.ஜ.க. பற்றி இவ்வளவு எழுத வேண்டாம்!! ரங்கா கோவில் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்!! ரங்கா அரசியலை பற்றி ஏன் பேசுகிறான். ரங்கா ப்ராஹ்மணானக இருந்து ஏன் கடும் சொற்கள் சொல்கிறான்" என்றெல்லாம் விமர்சனம் செய்வது எனக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
நான் செய்யும் செயல்களுக்கு இன்றுவரை ஒருவரிடமும் "நீ எனக்கு இதைச் செய்!! எனக்கு பணம் கொடு!! எனக்கு கூட இரு!! இந்த வேலையை செய்!! இப்படி இரு. அப்படி இரு!!" என்று சொன்னதில்லை. எதிர்ப்பார்த்ததும் இல்லை.
அமெரிக்கா சென்று, தன் இந்திய பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டு, அமெரிக்கர்களாகவே மாறிவிட்ட என் நண்பர்கள் இன்று அங்கே இருந்து கொண்டு, என்னை பற்றி கவலைப் படுவது போல நடித்துக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது வியப்பை அளிக்கிறது.
அமெரிக்கர்களாக பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டாலும் இன்னும் "இன்றைய" இந்தியர்களின் மனப்பான்மை அவர்களுக்கு மாறவில்லையே என்று வருத்தமளிக்கிறது.
அமெரிக்கா சென்று அங்கே குடி பெயர்ந்ததற்கு காரணமாக இவர்களில் பலர் சொல்வது "அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவில் அப்படி இல்லை. யாரும் அடத்தவர்கள் விஷயத்தில் வீணாக மூக்கை நுழைக்க மாட்டார்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால் இவர்கள், அமெரிக்கர்களாக தங்களை நினைத்தாலும் அவர்களும் இந்தியாவில் இருப்பது போலவே அங்கே வாழ்கின்றனரே!!!!!!!!
உலகம் என்பது வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும். அதனுடைய இயல்பு.
இன்றும் கூட பலரும் நான் செய்யும் செயல்களில் பல விதமான விமர்சனம் செய்கின்றனர். அது வெட்ட வெளிச்சம்.
உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவடி சிதைக்கப்பட்டதை உலகில் என்னை தவிற ஒருவர் பேசுவதில்லை. மயிலை கபாலி கோவில் மயிலம்மன் திருட்டு பற்றி ஒருவர் வாய் திறப்பதில்லை. ஆனால் இவற்றை குறித்து பலர் என்னை எதிர்க்கின்றனர். இவற்றை குறித்து ஒரு வார்த்tஹை பேசாத உபன்யாசகர்களில் சிலர் என் மீது புகார் கொடுத்து என் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு போகின்றனர். என் செயல்பாடுகளை தடை போடும் அளவிற்கு என் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.
என் நண்பனிடம் சொன்னேன், "அன்று பார்த்த் ரங்காதான் இன்றும். அன்று என்னை ப்ராhமணனாக நீங்கள் பார்க்கவில்லை. இன்று பார்க்கிறீர்கள். அன்று அடைமொழி இல்லாமல் நீங்கள் பேசியதில்லை. இன்று நான் பேசுவதையும் எழுதுவதையும் குறை சொல்கிறீர்கள். நான் மாறவில்லை. அப்படியே இருக்கிறேன்" என்று சொன்னேன்.
"இப்படி செய்யலாமே அப்படி செய்யலாமே என்பவர்களே அதை வந்து செய்யட்டுமே!! என்னால் செய்ய இயலவில்லை என்பதால்தானே அதை நான் செய்யவில்லை. அவர்கள் ஐடியா கொடுப்பதை அவர்கள் செய்யட்டுமே" என்று கேட்டதற்கு "நாங்கள் சொல்லதான் செய்வோம். செய்ய எங்களுக்கு இயலாது" என்று சொல்கிறார்.
இந்துக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் இயன்றால் உதவலாம். இல்லை என்றால் செயல்படுபவர்கள் செயல்பட்டால் அவர்களுக்காக ப்ரார்த்தனை செய்யலாம்.
முடிந்தால் செயல்படுபவர்கள் கூட நடக்கலாம். அதை விடுத்து "ஐடியா மணிக்களாக" வாழ்வது செய்பவர்களையும் செய்யவிடாமல் செய்யக்கூடிய செயல். அந்த பாவம் தேவையா?!!!
ஸ்ரீவைஷ்ணவன் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பெரியோரிடம் கற்று அவற்றை நடைமுறை படுத்த ஒவ்வொரு நாளும் முயன்று கொண்டிருப்பவன் நான். அது என் வாழ்க்கை குறிக்கோள்.
ராவணனுக்கு என்ன சொல்ல வேண்டும், குசேலனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அறிந்தவன்.
வைதிக மதத்தின் மகத்துவத்தை உணர்ந்தவன் . கூட எவரும் இல்லை என்றாலும் ப்ரஹ்லாதனைப் போல எம்பெருமானை மட்டும் நினைத்து செயல்பட வேண்டும் என்று அறிந்தவன்.
கஜேந்திரனைப் போல விடாமுயற்சி உடையவன்
சுக்ரீவ மஹாராஜனைப் போல, எப்படி தன் இயல்பை மறந்து, ராவணனை பாரத்த நொடி, அவன் தலையில் இருக்கும் கிரீடத்தை அகற்ற, தன் உயிரையும் துச்சமாக மதித்து அவனுடன் போர் புரிந்து அவன் கிரீடத்தை ஸ்ரீராமனின் திருப்பாதங்களில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அரசனே மிரட்டினாலும், ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவன் என்று உரக்ககூறிய கூரத்தாழ்வானைப் போல வாழ ஆசைப் படுபவன்.
நம்பெருமாளைக் காக்க 12000 பேர் உயிரைக் கொடுத்த வரிசையில் 12001வது ஆளாக நிற்க வேண்டும் என்று நினைப்பவன்.
யார் வந்தாலும் வராவிட்டாலும், என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும், போற்றினாலும் தூற்றினாலும், பாராட்டினாலும் மிரட்டினாலும், இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஸ்ரீமன் நாராயணனின் அடிமை நான்.
என் செயல்பாடுகள் பெருமானுடைய திருமுகத்தை நோக்கி மட்டுமே!!
நேற்று @SavukkuOfficial சேனலில் @trramesh ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். இது துரதிஷ்டவசமானது.
சங்கர் போன்றவர்கள் சங்காத்தம் ஆத்திகர்களுக்கு கூடாது.
இதை நான் சொன்னால், சிலர் (1) "உனக்கு பொறாமை" என்கிறார்கள். (2) "பலருக்கும் போய் சேருமே. சவுக்குக்கு சேனலை நிறைய பேர் பார்க்கின்றனர்" என்கிறார்கள். (3) "காரியத்தை எப்படியும் சாதித்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள் (4) "அவரையும் ஏன் குறை சொல்கிறீர்கள்" "உனக்கு குறை சொல்வதை விட வேறு தெரியாது" என்கிறார்கள்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்
முதலாவது குற்றச்சாட்டு: இது குப்பை குற்றச்சாட்டு. ஒன்றும் செய்யாத குண்டுசட்டி குதிரைகள் கமெண்ட் அடிக்க வேண்டும் என்று சொல்வது. புறம்தள்ளுகிறேன்
2வது: பலருக்கு போய் சேர்ந்துவிடும். சரிதான். சேர்ந்த பின்? அந்த பலரும் அடுத்த நாளிலிருந்து கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கேட்கப் போகின்றனரா? அல்லது புகார் எழுதப் போகின்றனரா?
இந்த பலருக்கும் போய் சேர்ந்து என்ன பயன்? அதுவும் போயும் போயும் இந்த சங்கர் சேனலை பார்ப்பவர்கள்! ஊர் வம்பு பேசுபவர்கள்தான் அவன் சேனலை பார்ப்பார்கள். இவர்களால் என்ன லாபம்!
அப்படியே பார்த்து அவர்களுக்கு ஜ்ஞானோதயம் பிறந்துவிடப்போகிறது.
கடந்த 10-12 ஆண்டுகளாக நானும் @trramesh அவர்களும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் எங்களுடைய கேஸ் கட்டுகளை எடுத்து வர கூட ஒருவரும் வந்ததில்லை. அது கொஞ்சம் நஞ்சமல்ல என்பது நீதிமன்றம் சென்றவருக்கு தெரியும்
இதை பார்த்துவிட்டு ஒரே ஒருவர் @trrameshஐ கூப்பிட்டு நான் உங்களுக்கு எடுபிடியாக இருக்கிறேன் என்றாவது சொல்வார்களா?
அப்படியே பலருக்கும் போய் சேர்ந்தவுடன், கோவில்கள் பளிச்சென்று ஆகிவிடுமா? கோவிலுக்கு போகுமவன் பெருமானிடம் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க போகிறானே ஒழிய கோவில் எப்படி போனால் என்ன?
மயிலை கபாலி கோவிலில் மயில் அம்மன் திருடப்பட்டு போலி மயிலுக்கு 21 வருடங்களாக போலி பூஜை நடக்கிறது. கேட்க நாதியில்லை. அப்படியே சட்டப்பிறிவுகளை பார்த்து நாளைக்கு பொங்கிடப்போகிறார்கள் பாருங்ள்
3வது: ஒரு காரியத்தை சாதிக்கும் முறையும் முக்கியம். எந்த காரியமும் சங்கர் சேனலில் பேசுவதால் சாதிக்க முடியாது. அவன் ஒரு ப்ராஹ்மண த்வேஷி. நாளைக்கே @trramesh மீது பழி பேசுவான்.
போகும் இடம் மட்டும் முக்கியமில்லை. வழியும் முக்கியம் என்பதுதான் சநாதன தரமம்.
இது கூடா நட்பு. பேட்டியின் முடிவில் அவனை பார்த்ததில் சந்தோஷம் என்கிறார். புரியவில்லை எனக்கு.
சில காலங்களுக்கு முன் @annamalai_k செய்துவிடுவார் என்று அவருக்கு இவர் வழக்கின் விவரங்களை கொடுத்தார். ஆனால் அவரோ!!!!!!!!!! அண்ணாமலை ஒரு விதத்தில் நல்லவர். அவருக்கும் இவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
மத்தியில் அரசு பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.விடம் நடக்காத விஷயம் இந்த பச்சோந்தி தற்குறி சங்கரிடம் கிடைக்க போகிறதா என்ன?!
4வது: தி.மு.க. செய்வதைச் அண்ணாமலை சொன்னால் சூப்பர் என்றும், அதை நீதிமன்றத்தில் நான் சொன்னால் அதை குறை என்றும் சொல்லும் மக்களை என்ன என்று சொல்வது.
குறை இருப்பதனால் சொல்கிறேன். இல்லை என்றால் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு
இதெல்லாம் குண்டுசட்டி குதிரைகளுக்கு எப்படி தெரியும்!
என்னை குறை சொல்கிறேன் என்று குறை சொல்லும் எவருக்கும் என்னை எதுவும் சொல்ல துளியும் தகுதியில்லை என்பது என் கருத்து.
எதையாவது வாழ்க்கையில் செய்துவிட்டு இதை இப்படி செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை நான்மதிப்பேன். ஆனால் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பொழுது போக வேடிக்கை பார்த்துவிட்டு "இவர் இப்படி செய்ய கூடாது. அப்படி செய்ய வேண்டும்" என்று திண்ணை பேசும் மனிதர்களுக்கு என்னிடம் மதிப்பு இல்லை. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பது என் கருத்து.
உலகத்தாருக்கு தெரிந்து பயனில்லை. தெரிந்தவர் தெரிந்ததை நடைமுறை படுத்தவில்லை என்றால் தெரிந்தும் தெரியாதவர்களே!!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
Our Temples - Rangarajan Narasimhan
11 மாதங்களுக்கு பிறகு இன்று என்னுடைய லேப்டாப், ஐபேட், மொபைல் போன், சிசிடிவி கேமரா முதலியவைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திரும்ப கிடைக்கப் பெற்றேன்.
நம் இனிய இந்திய நாட்டின் பிரஜையாக இருப்பதற்கான விலை இது
ஜெய் ஶ்ரீ ராம்
1 week ago | [YT] | 388
View 52 replies
Our Temples - Rangarajan Narasimhan
உண்மை தனது காலணிகளை அணிவதற்கு முன்பே பொய் உலகைச் சுற்றி விடும்
இன்றைய உலகத்தில், பொய் உண்மை தனது காலணிகளை தேடுவதற்கு முன்பே மில்லியன் சுற்றுகளை சுற்றிவிடும்
#Kancheepuram_Lizard_Theft
காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவிலில் உள்ள பழமையான பொன் மற்றும் வெள்ளி பல்லி சிலைகள் திருடப்பட்டதாகவும், அதற்கு பதிலாக நவீன நகல்கள் வைக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளேன். மிகவும் துரதிர்ஷ்டவசமாக, @tnpoliceoffl இன் IWCID, இந்த சாத்தியமான திருட்டு தொடர்பான முக்கிய தகவல்களை செய்தி மற்றும் சமூக ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளது. இதனால், குற்றவாளிகளுக்கு ஆதாரங்களை தடை செய்யவும், சேதப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
@tnhrcedept இது போன்ற செயல்களுக்கு பிரபலமானது, ஏனெனில் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூரில் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது. போலீசாருக்கு எந்தவித கேள்வித்தாளையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை; சட்டம் அவர்கள் வேலை, ஒருவேளை முதல் கட்ட விசாரணை நடக்க வேண்டும் என்று அவர்கள் கருதினால், புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டுவது மட்டுமே.
போலீசாரின் அலட்சியமான போக்கு காரணமாக, எனக்கு அடையாளம் தெரியாத ஆதாரங்களிலிருந்து மிரட்டல் அழைப்புகள் வருகின்றன (அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்), மேலும் @tnhrcedept மூலம் செய்தி ஊடகங்களின் மூலம் மறைமுக மிரட்டல்கள் வருகின்றன (அதையும் நான் எப்படி சமாளிப்பது என்பது எனக்கு தெரியும்). ஒருவேளை FIR பதிவு செய்யப்படவில்லை என்றால், நான் வேறு வழியின்றி தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். மற்றும் அதை உடனடியாக செய்யும் அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருக்கிறேன்.
பார்க்கலாம், குற்றவாளிகள் இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்று. ஸ்ரீ தேவராஜ சுவாமி கோவில், காஞ்சிபுரத்தில். குழப்பமடைந்த பொதுமக்களுக்கு விளக்கமளிக்க, நான் IGP, Idol Wing CID-க்கு அனுப்பிய எனது மின்னஞ்சலை இப்போது பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்.
#Kancheepuram_Lizard_Theft
இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுபவர்கள், உண்மை பரவ வேண்டும் என்பதற்காக #Kancheepuram_Lizard_Theft என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பகிரவும்.
உண்மை தனது காலணிகளை அணிவதற்கு முன்பே பொய் உலகைச் சுற்றி விடும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால், இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
2 weeks ago | [YT] | 246
View 20 replies
Our Temples - Rangarajan Narasimhan
எப்படி இருந்த YouTuber @RangarajPandeyR இப்படி ஆகிட்டார்.
2 வருடத்தை முன் மதுரையில் திசைகள்4 ஏராளமான பணச்செலவில், விளம்பரதாரர்கள் உதவியோடு துவங்கியவர் இன்று 2 வருடத்திற்கு பின், வியாபாரம் சரியில்லாமல் விளம்பரதாரர்கள் கூட மதிக்காத ஒரு சாதாரணமன யுட்யூபர் ஆகி இப்ப ஸ்டூடியோவில திசைகள்4 நடத்தும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒரு நல்ல மேசை கூட இல்லாத நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளாரே.
2 வருடம் முன்பு பகட்டாக பொது இடத்தில் சோபா போட்டு உட்கார்ந்து கேள்விகளை கேட்டவர் இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து......
பார்க்கவே பாவமாக இருக்கிறது.
ஏனோ!!!!!!!
நல்லவர்களை பகைத்துக்கொண்டு அவர்கள் மீது வன்மத்தை கக்கியதனாலோ என்னவோ!!!
பெருமாள் தன்னை இகழ்ந்தவர்களை கண்டுகொள்வதில்லை. ஆனால் தன் பக்தனுக்கு ஒன்றென்றால்....
..
ஜெய் ஸ்ரீ ராம்!!!!!
1 month ago | [YT] | 51
View 15 replies
Our Temples - Rangarajan Narasimhan
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும்
‘
‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர்.
ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான்.
இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர்.
இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!!
மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!!
இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர்
இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!!
சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும்.
இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும்.
பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும்.
அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும்
உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!!
அஹிம்ஸா பரமோ தர்ம:
ஜெய் ஶ்ரீ ராம்
1 month ago | [YT] | 255
View 77 replies
Our Temples - Rangarajan Narasimhan
சநாதன தர்மத்தின் அடிப்படை தத்வத்தை இப்படி பொது வெளியில் வைத்து அதுவும் யுட்யூபில் வைத்து பேசுவது இந்த யுட்யூபர் @RangarajPandeyOffical விற்கு வழக்கமாகிவிட்டது.
இப்படித்தான் எல்லாவற்றையும் நீர்த்து போக செய்யும் வேலையை இவர் பல நாட்களாக செய்து வருகிறார்.
இந்த ப்ரணவ மந்திரத்தை ஒழுங்காக கேட்காததால்தான் பார்வதி தேவி சிவபெருமானால் மயிலாக சபிக்கப்பட்டு மயிலைக்கு வந்தார்.
இப்படி பொதுவெளியில் ப்ரணவத்தை பேசி views மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னவென்று சொல்ல.
ஒரு ஆசார்யனிடம் அண்டி அடிபணிந்து பணிகள் செய்து பெற வேண்டிய ஒரு உயர்ந்த தத்துவத்தை கடைத்தெருவில் விற்பனை செய்வது இன்றைய பிழைப்பாகிவிட்டது.
3 months ago | [YT] | 51
View 19 replies
Our Temples - Rangarajan Narasimhan
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் ஆண்டாள் யானையை யானை பாகன் இல்லாமல் யாரோ ஒருவர் ஓட்டிச் செல்கின்றனர்.
இப்படி யானை பாகன் இல்லாமல் யாரோ ஓட்ட இதென்ன பன்னியா அல்லது ஆடா அல்லது மாடா?! இது யானை.
யாரையாவது கொன்றால் கூட @tnhrcedept க்கு பொது மக்களுக்கோ புத்தி வராது.
இந்த யானைக்கு பாகனே இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு இலுவையில் உள்ளது. 2021ல் தொடுக்கப்பட்டது. யானைக்கு சில பொதுட்கள் கொடுத்து கட்டுப்படுத்தி இருக்கின்றனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
WPNo 3656, 3660, 3662, 3663 of 2021 வழக்கு எண். அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் வந்து பார்வையிட்டு சென்ற யானை.
இன்று ஆண்டாள் யானை தெருவில் கண்டவர்கள் ஓட்ட செல்லும் பொழுது யாரையாவது தாக்கினால் யார் பொறுப்பு?
அன்று, ஆண்டாள் யானை தன் மகளைப் போல பார்த்துக் கொண்டிருந்த திரு ஸ்ரீதரனை வேலையை விட்டு வெளியேற்றும் பொழுது வேணு ஸ்ரீநிவாசன் யானை ஏதாவது செய்தால் தான் பொறுப்பேற்பதாக அன்றைய செயல் அலுவலரிடம் சொன்னாரே. அவர் பொறுப்பேற்பரா?! செயல் அலுவலர் பொறுப்பு ஏற்பாரா?! இந்த இரண்டு யாரோ மனிதர்கள் பொறுப்பு ஏற்பார்களா?! கேடுகெட்ட @tnhrcedept பொறுப்பு ஏற்குமா?! இந்த கோவிலில் முதல் தீர்த்தம் வாங்கும் ஸ்தலத்தார் தீர்த்தகாரர்கள் பொறுப்பு ஏற்பார்களா?!
இரண்டாவது யானை லக்ஷ்மி வெளியே பார்க்கவே முடிவதில்லை என்பது வேறு விஷயம்.
3 months ago | [YT] | 137
View 17 replies
Our Temples - Rangarajan Narasimhan
எனக்கென்ன போச்சு என்று நான் இருக்கலாம். ஆனால் இப்படி "நன்கு கற்றவர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் கூட, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு அஹங்காரம் அதிகமாக இருப்பது வேதனை!!
ஸ்ரீரங்கத்து "பெரியவர்கள்" இவர்கள். சிலர் இதில் "ஆசார்ய புருஷர்கள்". பெரிய பெருமாள், நம்பெருமாள் பற்றி "நன்றாக" உபன்யாசம் செய்வாரகள். இந்த கூட்டத்திலும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று வழக்கம் போல ஊருக்கு உபதேசித்தவர்கள்!!
இந்த புகைப்படத்தில் உள்ள பிழை என்ன என்று தெரிகிறதா? அதெப்படி தெரியும். நான் எல்லோரையும் குறை சொல்கிறேன் என்றல்லவா நீங்கள் சொல்வீர்கள்!!
எம்பெருமானார் அதாவது ஸ்வாமி ராமாநுஜர் எழுந்தருளி இருக்க, அவர் முன் முதுகையும் பின் பக்கத்தையும் காட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற இந்த "ஸ்ரீ வைஷ்ணவர்கள்" ஊருக்கு உபதேசித்தால் நாடு எப்படி உறுப்படும்?!!!
இந்த அழகில் இவர்கள், ஆசார்யர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று விளக்குகின்றனர். ஏழை மக்கள் இவர்களை ஏதோ அறிவார்ந்தவர்கள் என்று நினைத்து கேள்விகளும் கேட்கின்றனர்.
ஓட்டை ஓடத்தோடு ஒழுகலோடம் என்று சொல்வர்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதத்தின் அடிப்படையே ஜ்ஞானமும் அநுட்டானமும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
3 months ago | [YT] | 148
View 45 replies
Our Temples - Rangarajan Narasimhan
சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகத்திற்கு சாக்கடை தண்ணீரில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் தேங்கிய சாக்கடை தண்ணீரில் பெருமானுக்கு திருமஞ்சனம்/அபிஷேகம் நடந்தது
அந்த சாக்கடைத் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர சென்ற வருடம் இரண்டு யானைகள் வந்திருந்தன - ஆண்டாள், லக்ஷ்மி.
ஆனால் இந்த வருடம் லக்ஷ்மி வரவில்லை!!! ஏனோ!!
4 months ago | [YT] | 123
View 23 replies
Our Temples - Rangarajan Narasimhan
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இது ஆழ்வார் பாசுரம்
என்னுடன் படித்த பலரும் இன்று அமெரிக்காவில் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அன்று கல்லூரியில் படிக்கும் பொழுது நகமும் சதையுமாக எல்லா கல்லூரி மாணவர்கள் போலத்தான் நாங்களும் இருந்தோம்.
ஒன்றாக உணவருந்த மெஸ்ஸுக்கு செல்வது, ஒரே அறையில் 6-7 பேர் வாழ்வது.
அரட்டை அடிப்பது. கிரிக்கெட் விளையாடுவது. என்று எல்லா கல்லூரி செல்லும் மாணவர்கள் போலத்தான் இருந்தோம்.
கல்லூரி முடிந்தும் பலரும் தொடர்பில் இருந்தனர். ஆனால் ஏனோ, கடந்த ஒரு 10-15 வருடங்களாக, அதாவது நான் கோவில் விஷயங்களை குறித்து என்னால் இயன்றதை செய்ய நினைத்த பிறகு அல்லது நான் வேலையை விட்ட பிறகு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பலரும் தொடர்புகளை குறைத்துக் கொண்டு இப்பொழுது எப்பொழுதாவது 4-5 வருஷத்திற்கு ஒரு முறை தவிற்க முடியாமத காரணத்தினால் ஓரிருவரை பார்க்க நேரிடும் நிலை.
அப்படி சமீபத்தில் அப்படிப்பட்ட கல்லூரி நண்பர் ஒருவருடன் வெகு வருஷங்ளுக்கு பிறகு நேரில் பேசக்கூடிய வாய்ப்பு கிட்டியது.அது போல சொன்னார், "உன்னுடைய செயல்பாடுகளை நாங்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உன் வீடியோக்களை பார்க்கிறோம். உன் ட்விட்டர் பதிவுகளை பார்க்கிறோம். எங்களுடைய "சப்போர்ட்" எப்பொழுதும் உண்டு. ஆனால், நீ கடுமையான சொற்களை எதற்கு உபயோகிக்கிறாய்?! ஒரு ப்ராஹ்மணன் இப்படி கடுமையான சொற்களை உபயோகிப்பது சரியில்லை என்று நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்" என்று சொன்னார்.
கல்லூரியில் இருக்கும் காலத்தில் எவர் ப்ராஹ்மணர் எவர் ப்ராஹ்மணர் அல்லாதார் என்கிற கேள்வி ஒரு முறை கூட வந்ததில்லை. சக மாணவன் என்கிற ஒரே ஒரு விதத்தில்தான் நாங்கள் அனைவரும் பழகினோம்.
என் நண்பரிடம் நான் கேட்டேன் "அப்படி என்ன கொடுமையான வார்த்தை சொல்லிவிட்டேன்! ஒரு கெட்டவார்த்தை கூட பதிவிட்டதில்லையே" என்று கேட்டேன்.
நாங்ள் கல்லூரியில் இருக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பொழுது பேசுபவர்கள் பேச்சுக்கு முன்னால் மட்டும் அடைமொழி இல்லை. பின்னும் அடைமொழிகளோடுதான் பேசுவார்கள். நானும் அப்படி பேசியதுண்டு.
ஆனால் அதே நண்பர்கள் இன்று என் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாகச் சொல்பவர்கள், நல்ல நிலையில் அமெரிக்காவில் வாழ்பவர்கள், ஒரே ஒரு முறை கூட என்னை தொலைபேசியிலோ, வாட்ஸப்பிலோ தொடர்பு கொண்டு "ரங்கா!! நன்றாகச் செயல்படுகிறாய்" என்றோ விமர்சனங்களோ சொன்னதில்லை.
அடைமொழி இல்லாமல் பேசியவர்கள், இன்று "இவன் ஒரு ப்ராஹ்மணன், இப்படி கடுமையாக பேசுவது கூடாது" என்று புறம்கூறிக் கொண்டிருப்பது வருத்தமளித்தது.
என்ன கடுமையாக பேசினேன் என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. இதை HYPOCRISY என்றுதானே சொல்ல வேண்டும்?!
காலேஜில் RAGGING என்கிற பெயரில், கெட்டவார்த்தைகள் பேசாதவர்களையும் கெட்ட வார்த்தை பேசித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியவர்கள், RAGGING என்கிற பெயரில் என்னவெல்லாமோ பேசியவர்கள், அப்படி RAGGING காலம் முடிந்ததும், இதெல்லாம் வாழ்க்கைக்கு அவசியம் "STREET SMART" ஆக இருக்க நமக்கு கிடைக்கும் பாடம் என்று பேசியவர்கள், இன்று STREET SMARTஆக என்னை பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் நான் பதிலளிப்பது கொடுமையாக எப்படி இருக்கிறது?!
என்னை பற்றி அவதூறு பேசுபவர்களை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, நான் என்னை தற்காத்துக் கொள்ளும் பொழுது "இப்படி செய்ய கூடாது. நீ ப்ராஹ்மணன். கடுமையான சொற்கள் உபயோகிக்க கூடாது" என்று எனக்கு பின்னால் என்னை பற்றி புறம்கூறுவது ஏன்?!
அன்று எப்படி அவர்களுடன் பழகினேனோ அதே "ரங்கா"தான் நான். அன்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தேன். இன்று ஏதோ சிறிதளவு தெரிந்து கொண்டு அதன்படி வாழ முற்படுகிறேன்!!
நான் சிறையில் இருந்து பொழுது ஒருவர் கூட என் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசக் கூட இல்லை. தள்ளி விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். இன்றுவரை (ஓரிருவரை தவிற) ஒருவரும் என்னை தொடர்பு கொண்டு "எப்படி இருக்கிறாய்" என்று கேட்டதில்லை.
ஆனால் பாருங்கள் "ரங்கா இப்படி எழுத வேண்டும்!! எல்லா கட்சிகளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது!! பா.ஜ.க. பற்றி இவ்வளவு எழுத வேண்டாம்!! ரங்கா கோவில் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்!! ரங்கா அரசியலை பற்றி ஏன் பேசுகிறான். ரங்கா ப்ராஹ்மணானக இருந்து ஏன் கடும் சொற்கள் சொல்கிறான்" என்றெல்லாம் விமர்சனம் செய்வது எனக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
நான் செய்யும் செயல்களுக்கு இன்றுவரை ஒருவரிடமும் "நீ எனக்கு இதைச் செய்!! எனக்கு பணம் கொடு!! எனக்கு கூட இரு!! இந்த வேலையை செய்!! இப்படி இரு. அப்படி இரு!!" என்று சொன்னதில்லை. எதிர்ப்பார்த்ததும் இல்லை.
அமெரிக்கா சென்று, தன் இந்திய பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டு, அமெரிக்கர்களாகவே மாறிவிட்ட என் நண்பர்கள் இன்று அங்கே இருந்து கொண்டு, என்னை பற்றி கவலைப் படுவது போல நடித்துக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது வியப்பை அளிக்கிறது.
அமெரிக்கர்களாக பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டாலும் இன்னும் "இன்றைய" இந்தியர்களின் மனப்பான்மை அவர்களுக்கு மாறவில்லையே என்று வருத்தமளிக்கிறது.
அமெரிக்கா சென்று அங்கே குடி பெயர்ந்ததற்கு காரணமாக இவர்களில் பலர் சொல்வது "அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவில் அப்படி இல்லை. யாரும் அடத்தவர்கள் விஷயத்தில் வீணாக மூக்கை நுழைக்க மாட்டார்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால் இவர்கள், அமெரிக்கர்களாக தங்களை நினைத்தாலும் அவர்களும் இந்தியாவில் இருப்பது போலவே அங்கே வாழ்கின்றனரே!!!!!!!!
உலகம் என்பது வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும். அதனுடைய இயல்பு.
இன்றும் கூட பலரும் நான் செய்யும் செயல்களில் பல விதமான விமர்சனம் செய்கின்றனர். அது வெட்ட வெளிச்சம்.
உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவடி சிதைக்கப்பட்டதை உலகில் என்னை தவிற ஒருவர் பேசுவதில்லை. மயிலை கபாலி கோவில் மயிலம்மன் திருட்டு பற்றி ஒருவர் வாய் திறப்பதில்லை. ஆனால் இவற்றை குறித்து பலர் என்னை எதிர்க்கின்றனர். இவற்றை குறித்து ஒரு வார்த்tஹை பேசாத உபன்யாசகர்களில் சிலர் என் மீது புகார் கொடுத்து என் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு போகின்றனர். என் செயல்பாடுகளை தடை போடும் அளவிற்கு என் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.
என் நண்பனிடம் சொன்னேன், "அன்று பார்த்த் ரங்காதான் இன்றும். அன்று என்னை ப்ராhமணனாக நீங்கள் பார்க்கவில்லை. இன்று பார்க்கிறீர்கள். அன்று அடைமொழி இல்லாமல் நீங்கள் பேசியதில்லை. இன்று நான் பேசுவதையும் எழுதுவதையும் குறை சொல்கிறீர்கள். நான் மாறவில்லை. அப்படியே இருக்கிறேன்" என்று சொன்னேன்.
"இப்படி செய்யலாமே அப்படி செய்யலாமே என்பவர்களே அதை வந்து செய்யட்டுமே!! என்னால் செய்ய இயலவில்லை என்பதால்தானே அதை நான் செய்யவில்லை. அவர்கள் ஐடியா கொடுப்பதை அவர்கள் செய்யட்டுமே" என்று கேட்டதற்கு "நாங்கள் சொல்லதான் செய்வோம். செய்ய எங்களுக்கு இயலாது" என்று சொல்கிறார்.
இந்துக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் இயன்றால் உதவலாம். இல்லை என்றால் செயல்படுபவர்கள் செயல்பட்டால் அவர்களுக்காக ப்ரார்த்தனை செய்யலாம்.
முடிந்தால் செயல்படுபவர்கள் கூட நடக்கலாம். அதை விடுத்து "ஐடியா மணிக்களாக" வாழ்வது செய்பவர்களையும் செய்யவிடாமல் செய்யக்கூடிய செயல். அந்த பாவம் தேவையா?!!!
ஸ்ரீவைஷ்ணவன் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பெரியோரிடம் கற்று அவற்றை நடைமுறை படுத்த ஒவ்வொரு நாளும் முயன்று கொண்டிருப்பவன் நான். அது என் வாழ்க்கை குறிக்கோள்.
ராவணனுக்கு என்ன சொல்ல வேண்டும், குசேலனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அறிந்தவன்.
வைதிக மதத்தின் மகத்துவத்தை உணர்ந்தவன் . கூட எவரும் இல்லை என்றாலும் ப்ரஹ்லாதனைப் போல எம்பெருமானை மட்டும் நினைத்து செயல்பட வேண்டும் என்று அறிந்தவன்.
கஜேந்திரனைப் போல விடாமுயற்சி உடையவன்
சுக்ரீவ மஹாராஜனைப் போல, எப்படி தன் இயல்பை மறந்து, ராவணனை பாரத்த நொடி, அவன் தலையில் இருக்கும் கிரீடத்தை அகற்ற, தன் உயிரையும் துச்சமாக மதித்து அவனுடன் போர் புரிந்து அவன் கிரீடத்தை ஸ்ரீராமனின் திருப்பாதங்களில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அரசனே மிரட்டினாலும், ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவன் என்று உரக்ககூறிய கூரத்தாழ்வானைப் போல வாழ ஆசைப் படுபவன்.
நம்பெருமாளைக் காக்க 12000 பேர் உயிரைக் கொடுத்த வரிசையில் 12001வது ஆளாக நிற்க வேண்டும் என்று நினைப்பவன்.
யார் வந்தாலும் வராவிட்டாலும், என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும், போற்றினாலும் தூற்றினாலும், பாராட்டினாலும் மிரட்டினாலும், இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஸ்ரீமன் நாராயணனின் அடிமை நான்.
என் செயல்பாடுகள் பெருமானுடைய திருமுகத்தை நோக்கி மட்டுமே!!
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
4 months ago | [YT] | 378
View 147 replies
Our Temples - Rangarajan Narasimhan
நேற்று @SavukkuOfficial சேனலில் @trramesh ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். இது துரதிஷ்டவசமானது.
சங்கர் போன்றவர்கள் சங்காத்தம் ஆத்திகர்களுக்கு கூடாது.
இதை நான் சொன்னால், சிலர்
(1) "உனக்கு பொறாமை" என்கிறார்கள்.
(2) "பலருக்கும் போய் சேருமே. சவுக்குக்கு சேனலை நிறைய பேர் பார்க்கின்றனர்" என்கிறார்கள்.
(3) "காரியத்தை எப்படியும் சாதித்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள்
(4) "அவரையும் ஏன் குறை சொல்கிறீர்கள்" "உனக்கு குறை சொல்வதை விட வேறு தெரியாது" என்கிறார்கள்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்
முதலாவது குற்றச்சாட்டு: இது குப்பை குற்றச்சாட்டு. ஒன்றும் செய்யாத குண்டுசட்டி குதிரைகள் கமெண்ட் அடிக்க வேண்டும் என்று சொல்வது. புறம்தள்ளுகிறேன்
2வது: பலருக்கு போய் சேர்ந்துவிடும். சரிதான். சேர்ந்த பின்? அந்த பலரும் அடுத்த நாளிலிருந்து கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கேட்கப் போகின்றனரா? அல்லது புகார் எழுதப் போகின்றனரா?
இந்த பலருக்கும் போய் சேர்ந்து என்ன பயன்? அதுவும் போயும் போயும் இந்த சங்கர் சேனலை பார்ப்பவர்கள்! ஊர் வம்பு பேசுபவர்கள்தான் அவன் சேனலை பார்ப்பார்கள். இவர்களால் என்ன லாபம்!
அப்படியே பார்த்து அவர்களுக்கு ஜ்ஞானோதயம் பிறந்துவிடப்போகிறது.
கடந்த 10-12 ஆண்டுகளாக நானும் @trramesh அவர்களும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் எங்களுடைய கேஸ் கட்டுகளை எடுத்து வர கூட ஒருவரும் வந்ததில்லை. அது கொஞ்சம் நஞ்சமல்ல என்பது நீதிமன்றம் சென்றவருக்கு தெரியும்
இதை பார்த்துவிட்டு ஒரே ஒருவர் @trrameshஐ கூப்பிட்டு நான் உங்களுக்கு எடுபிடியாக இருக்கிறேன் என்றாவது சொல்வார்களா?
அப்படியே பலருக்கும் போய் சேர்ந்தவுடன், கோவில்கள் பளிச்சென்று ஆகிவிடுமா? கோவிலுக்கு போகுமவன் பெருமானிடம் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க போகிறானே ஒழிய கோவில் எப்படி போனால் என்ன?
மயிலை கபாலி கோவிலில் மயில் அம்மன் திருடப்பட்டு போலி மயிலுக்கு 21 வருடங்களாக போலி பூஜை நடக்கிறது. கேட்க நாதியில்லை. அப்படியே சட்டப்பிறிவுகளை பார்த்து நாளைக்கு பொங்கிடப்போகிறார்கள் பாருங்ள்
3வது: ஒரு காரியத்தை சாதிக்கும் முறையும் முக்கியம். எந்த காரியமும் சங்கர் சேனலில் பேசுவதால் சாதிக்க முடியாது. அவன் ஒரு ப்ராஹ்மண த்வேஷி. நாளைக்கே @trramesh மீது பழி பேசுவான்.
போகும் இடம் மட்டும் முக்கியமில்லை. வழியும் முக்கியம் என்பதுதான் சநாதன தரமம்.
இது கூடா நட்பு. பேட்டியின் முடிவில் அவனை பார்த்ததில் சந்தோஷம் என்கிறார். புரியவில்லை எனக்கு.
சில காலங்களுக்கு முன் @annamalai_k செய்துவிடுவார் என்று அவருக்கு இவர் வழக்கின் விவரங்களை கொடுத்தார். ஆனால் அவரோ!!!!!!!!!! அண்ணாமலை ஒரு விதத்தில் நல்லவர். அவருக்கும் இவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
மத்தியில் அரசு பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.விடம் நடக்காத விஷயம் இந்த பச்சோந்தி தற்குறி சங்கரிடம் கிடைக்க போகிறதா என்ன?!
4வது: தி.மு.க. செய்வதைச் அண்ணாமலை சொன்னால் சூப்பர் என்றும், அதை நீதிமன்றத்தில் நான் சொன்னால் அதை குறை என்றும் சொல்லும் மக்களை என்ன என்று சொல்வது.
குறை இருப்பதனால் சொல்கிறேன். இல்லை என்றால் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு
இதெல்லாம் குண்டுசட்டி குதிரைகளுக்கு எப்படி தெரியும்!
என்னை குறை சொல்கிறேன் என்று குறை சொல்லும் எவருக்கும் என்னை எதுவும் சொல்ல துளியும் தகுதியில்லை என்பது என் கருத்து.
இவர்களை பற்றி வள்ளுவர் சொல்வது
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
செயல்படாததார்கள் கண்ணோட்டமில்லாத கண் போன்றவர்கள்.
எதையாவது வாழ்க்கையில் செய்துவிட்டு இதை இப்படி செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை நான்மதிப்பேன். ஆனால் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பொழுது போக வேடிக்கை பார்த்துவிட்டு "இவர் இப்படி செய்ய கூடாது. அப்படி செய்ய வேண்டும்" என்று திண்ணை பேசும் மனிதர்களுக்கு என்னிடம் மதிப்பு இல்லை. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பது என் கருத்து.
உலகத்தாருக்கு தெரிந்து பயனில்லை. தெரிந்தவர் தெரிந்ததை நடைமுறை படுத்தவில்லை என்றால் தெரிந்தும் தெரியாதவர்களே!!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
4 months ago | [YT] | 179
View 66 replies
Load more