Our Temples - Rangarajan Narasimhan

பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும்

‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர்.

ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான்.

இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர்.

இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!!

மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!!

இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர்

இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!!

சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும்.

இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும்.

பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும்.

அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும்

உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!!

அஹிம்ஸா பரமோ தர்ம:

ஜெய் ஶ்ரீ ராம்

1 month ago | [YT] | 255