படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இது ஆழ்வார் பாசுரம்
என்னுடன் படித்த பலரும் இன்று அமெரிக்காவில் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
அன்று கல்லூரியில் படிக்கும் பொழுது நகமும் சதையுமாக எல்லா கல்லூரி மாணவர்கள் போலத்தான் நாங்களும் இருந்தோம்.
ஒன்றாக உணவருந்த மெஸ்ஸுக்கு செல்வது, ஒரே அறையில் 6-7 பேர் வாழ்வது.
அரட்டை அடிப்பது. கிரிக்கெட் விளையாடுவது. என்று எல்லா கல்லூரி செல்லும் மாணவர்கள் போலத்தான் இருந்தோம்.
கல்லூரி முடிந்தும் பலரும் தொடர்பில் இருந்தனர். ஆனால் ஏனோ, கடந்த ஒரு 10-15 வருடங்களாக, அதாவது நான் கோவில் விஷயங்களை குறித்து என்னால் இயன்றதை செய்ய நினைத்த பிறகு அல்லது நான் வேலையை விட்ட பிறகு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பலரும் தொடர்புகளை குறைத்துக் கொண்டு இப்பொழுது எப்பொழுதாவது 4-5 வருஷத்திற்கு ஒரு முறை தவிற்க முடியாமத காரணத்தினால் ஓரிருவரை பார்க்க நேரிடும் நிலை.
அப்படி சமீபத்தில் அப்படிப்பட்ட கல்லூரி நண்பர் ஒருவருடன் வெகு வருஷங்ளுக்கு பிறகு நேரில் பேசக்கூடிய வாய்ப்பு கிட்டியது.அது போல சொன்னார், "உன்னுடைய செயல்பாடுகளை நாங்கள் அனைவரும் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உன் வீடியோக்களை பார்க்கிறோம். உன் ட்விட்டர் பதிவுகளை பார்க்கிறோம். எங்களுடைய "சப்போர்ட்" எப்பொழுதும் உண்டு. ஆனால், நீ கடுமையான சொற்களை எதற்கு உபயோகிக்கிறாய்?! ஒரு ப்ராஹ்மணன் இப்படி கடுமையான சொற்களை உபயோகிப்பது சரியில்லை என்று நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்" என்று சொன்னார்.
கல்லூரியில் இருக்கும் காலத்தில் எவர் ப்ராஹ்மணர் எவர் ப்ராஹ்மணர் அல்லாதார் என்கிற கேள்வி ஒரு முறை கூட வந்ததில்லை. சக மாணவன் என்கிற ஒரே ஒரு விதத்தில்தான் நாங்கள் அனைவரும் பழகினோம்.
என் நண்பரிடம் நான் கேட்டேன் "அப்படி என்ன கொடுமையான வார்த்தை சொல்லிவிட்டேன்! ஒரு கெட்டவார்த்தை கூட பதிவிட்டதில்லையே" என்று கேட்டேன்.
நாங்ள் கல்லூரியில் இருக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி இருக்கும் பொழுது பேசுபவர்கள் பேச்சுக்கு முன்னால் மட்டும் அடைமொழி இல்லை. பின்னும் அடைமொழிகளோடுதான் பேசுவார்கள். நானும் அப்படி பேசியதுண்டு.
ஆனால் அதே நண்பர்கள் இன்று என் பதிவுகளை தொடர்ந்து பார்ப்பதாகச் சொல்பவர்கள், நல்ல நிலையில் அமெரிக்காவில் வாழ்பவர்கள், ஒரே ஒரு முறை கூட என்னை தொலைபேசியிலோ, வாட்ஸப்பிலோ தொடர்பு கொண்டு "ரங்கா!! நன்றாகச் செயல்படுகிறாய்" என்றோ விமர்சனங்களோ சொன்னதில்லை.
அடைமொழி இல்லாமல் பேசியவர்கள், இன்று "இவன் ஒரு ப்ராஹ்மணன், இப்படி கடுமையாக பேசுவது கூடாது" என்று புறம்கூறிக் கொண்டிருப்பது வருத்தமளித்தது.
என்ன கடுமையாக பேசினேன் என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. இதை HYPOCRISY என்றுதானே சொல்ல வேண்டும்?!
காலேஜில் RAGGING என்கிற பெயரில், கெட்டவார்த்தைகள் பேசாதவர்களையும் கெட்ட வார்த்தை பேசித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியவர்கள், RAGGING என்கிற பெயரில் என்னவெல்லாமோ பேசியவர்கள், அப்படி RAGGING காலம் முடிந்ததும், இதெல்லாம் வாழ்க்கைக்கு அவசியம் "STREET SMART" ஆக இருக்க நமக்கு கிடைக்கும் பாடம் என்று பேசியவர்கள், இன்று STREET SMARTஆக என்னை பற்றி அவதூறு பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் நான் பதிலளிப்பது கொடுமையாக எப்படி இருக்கிறது?!
என்னை பற்றி அவதூறு பேசுபவர்களை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, நான் என்னை தற்காத்துக் கொள்ளும் பொழுது "இப்படி செய்ய கூடாது. நீ ப்ராஹ்மணன். கடுமையான சொற்கள் உபயோகிக்க கூடாது" என்று எனக்கு பின்னால் என்னை பற்றி புறம்கூறுவது ஏன்?!
அன்று எப்படி அவர்களுடன் பழகினேனோ அதே "ரங்கா"தான் நான். அன்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தேன். இன்று ஏதோ சிறிதளவு தெரிந்து கொண்டு அதன்படி வாழ முற்படுகிறேன்!!
நான் சிறையில் இருந்து பொழுது ஒருவர் கூட என் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசக் கூட இல்லை. தள்ளி விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். இன்றுவரை (ஓரிருவரை தவிற) ஒருவரும் என்னை தொடர்பு கொண்டு "எப்படி இருக்கிறாய்" என்று கேட்டதில்லை.
ஆனால் பாருங்கள் "ரங்கா இப்படி எழுத வேண்டும்!! எல்லா கட்சிகளையும் பகைத்துக் கொள்ளக் கூடாது!! பா.ஜ.க. பற்றி இவ்வளவு எழுத வேண்டாம்!! ரங்கா கோவில் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்!! ரங்கா அரசியலை பற்றி ஏன் பேசுகிறான். ரங்கா ப்ராஹ்மணானக இருந்து ஏன் கடும் சொற்கள் சொல்கிறான்" என்றெல்லாம் விமர்சனம் செய்வது எனக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
நான் செய்யும் செயல்களுக்கு இன்றுவரை ஒருவரிடமும் "நீ எனக்கு இதைச் செய்!! எனக்கு பணம் கொடு!! எனக்கு கூட இரு!! இந்த வேலையை செய்!! இப்படி இரு. அப்படி இரு!!" என்று சொன்னதில்லை. எதிர்ப்பார்த்ததும் இல்லை.
அமெரிக்கா சென்று, தன் இந்திய பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டு, அமெரிக்கர்களாகவே மாறிவிட்ட என் நண்பர்கள் இன்று அங்கே இருந்து கொண்டு, என்னை பற்றி கவலைப் படுவது போல நடித்துக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது வியப்பை அளிக்கிறது.
அமெரிக்கர்களாக பாஸ்போர்ட்டை மாற்றிக் கொண்டாலும் இன்னும் "இன்றைய" இந்தியர்களின் மனப்பான்மை அவர்களுக்கு மாறவில்லையே என்று வருத்தமளிக்கிறது.
அமெரிக்கா சென்று அங்கே குடி பெயர்ந்ததற்கு காரணமாக இவர்களில் பலர் சொல்வது "அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவில் அப்படி இல்லை. யாரும் அடத்தவர்கள் விஷயத்தில் வீணாக மூக்கை நுழைக்க மாட்டார்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால் இவர்கள், அமெரிக்கர்களாக தங்களை நினைத்தாலும் அவர்களும் இந்தியாவில் இருப்பது போலவே அங்கே வாழ்கின்றனரே!!!!!!!!
உலகம் என்பது வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும். அதனுடைய இயல்பு.
இன்றும் கூட பலரும் நான் செய்யும் செயல்களில் பல விதமான விமர்சனம் செய்கின்றனர். அது வெட்ட வெளிச்சம்.
உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருவடி சிதைக்கப்பட்டதை உலகில் என்னை தவிற ஒருவர் பேசுவதில்லை. மயிலை கபாலி கோவில் மயிலம்மன் திருட்டு பற்றி ஒருவர் வாய் திறப்பதில்லை. ஆனால் இவற்றை குறித்து பலர் என்னை எதிர்க்கின்றனர். இவற்றை குறித்து ஒரு வார்த்tஹை பேசாத உபன்யாசகர்களில் சிலர் என் மீது புகார் கொடுத்து என் மீது வழக்கு தொடுக்கும் அளவுக்கு போகின்றனர். என் செயல்பாடுகளை தடை போடும் அளவிற்கு என் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.
என் நண்பனிடம் சொன்னேன், "அன்று பார்த்த் ரங்காதான் இன்றும். அன்று என்னை ப்ராhமணனாக நீங்கள் பார்க்கவில்லை. இன்று பார்க்கிறீர்கள். அன்று அடைமொழி இல்லாமல் நீங்கள் பேசியதில்லை. இன்று நான் பேசுவதையும் எழுதுவதையும் குறை சொல்கிறீர்கள். நான் மாறவில்லை. அப்படியே இருக்கிறேன்" என்று சொன்னேன்.
"இப்படி செய்யலாமே அப்படி செய்யலாமே என்பவர்களே அதை வந்து செய்யட்டுமே!! என்னால் செய்ய இயலவில்லை என்பதால்தானே அதை நான் செய்யவில்லை. அவர்கள் ஐடியா கொடுப்பதை அவர்கள் செய்யட்டுமே" என்று கேட்டதற்கு "நாங்கள் சொல்லதான் செய்வோம். செய்ய எங்களுக்கு இயலாது" என்று சொல்கிறார்.
இந்துக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் இயன்றால் உதவலாம். இல்லை என்றால் செயல்படுபவர்கள் செயல்பட்டால் அவர்களுக்காக ப்ரார்த்தனை செய்யலாம்.
முடிந்தால் செயல்படுபவர்கள் கூட நடக்கலாம். அதை விடுத்து "ஐடியா மணிக்களாக" வாழ்வது செய்பவர்களையும் செய்யவிடாமல் செய்யக்கூடிய செயல். அந்த பாவம் தேவையா?!!!
ஸ்ரீவைஷ்ணவன் ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பெரியோரிடம் கற்று அவற்றை நடைமுறை படுத்த ஒவ்வொரு நாளும் முயன்று கொண்டிருப்பவன் நான். அது என் வாழ்க்கை குறிக்கோள்.
ராவணனுக்கு என்ன சொல்ல வேண்டும், குசேலனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அறிந்தவன்.
வைதிக மதத்தின் மகத்துவத்தை உணர்ந்தவன் . கூட எவரும் இல்லை என்றாலும் ப்ரஹ்லாதனைப் போல எம்பெருமானை மட்டும் நினைத்து செயல்பட வேண்டும் என்று அறிந்தவன்.
கஜேந்திரனைப் போல விடாமுயற்சி உடையவன்
சுக்ரீவ மஹாராஜனைப் போல, எப்படி தன் இயல்பை மறந்து, ராவணனை பாரத்த நொடி, அவன் தலையில் இருக்கும் கிரீடத்தை அகற்ற, தன் உயிரையும் துச்சமாக மதித்து அவனுடன் போர் புரிந்து அவன் கிரீடத்தை ஸ்ரீராமனின் திருப்பாதங்களில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அரசனே மிரட்டினாலும், ஸ்ரீமன் நாராயணனே உயர்ந்தவன் என்று உரக்ககூறிய கூரத்தாழ்வானைப் போல வாழ ஆசைப் படுபவன்.
நம்பெருமாளைக் காக்க 12000 பேர் உயிரைக் கொடுத்த வரிசையில் 12001வது ஆளாக நிற்க வேண்டும் என்று நினைப்பவன்.
யார் வந்தாலும் வராவிட்டாலும், என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும், போற்றினாலும் தூற்றினாலும், பாராட்டினாலும் மிரட்டினாலும், இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஸ்ரீமன் நாராயணனின் அடிமை நான்.
என் செயல்பாடுகள் பெருமானுடைய திருமுகத்தை நோக்கி மட்டுமே!!
Our Temples - Rangarajan Narasimhan

படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
4 months ago | [YT] | 378