பேசும் பணியே பணியாய் அருள்வாய் குகா......!
ஓம் சரவணபவ:
முழுமுதற் கடவுள் விநாயகர்
தமிழ் கடவுள் முருகப்பெருமான்
முருகன் ஆறுபடை வீடுகள்
முருகன் தமிழ் பாடல்கள்
கிருபணதவாரியார் பேச்சு
அருணகிரிநாதர், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
(Devotional songs,kantha sashti kavadam
Suprabhatham,devotional songs whatsApp status)
(Murugan shorts ,tamil, முருகன் ஷொட்ஸ்)
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 36 நாதா குமரா
🦜சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது🦜
நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பாதசேகரனே!
பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், 'நாதரே, குமராய நம' என்று வணங்கி [பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு] உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ?
13 hours ago | [YT] | 109
View 3 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 35 விதி காணு
🦜நற் கதி காண அருள்வாய்🦜
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்?
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுர பூபதியே!
பிறை போன்ற ஒளிவீசும் நெற்றியை உடைய வள்ளியம்மையாரைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விண்ணோர்களின் மாமன்னரே! பிரமன் படைத்ததும் வினையாலானதுமான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும்படி செந்தாமரை மலர்களையொக்கும் தேவரீரின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?
1 day ago | [YT] | 35
View 0 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 34 சிங்கார மட
🦜தீநெறியினின்று எனைக் காவாய்🦜
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்!
சங்க்ராம சிகாவல சண்முகனே!
கங்கா நதி பால க்ருபாகரனே!
போரில் வல்ல மயில் வாகனத்தையுடையவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் அடியேனுக்கு வரந்தந்து அருள்வாயாக!
2 days ago | [YT] | 172
View 7 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 33 சிந்தா ஆகுல
🦜பந்தத்தின்று எனைக் காவாய்🦜
சிந்தா ஆகுலம் இல்லோடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே!
கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?
3 days ago | [YT] | 128
View 2 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 32 கலையே பதறி
🦜கலை ஞானம் வேண்டாம்🦜
கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் ஆய்விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே!
வெற்றி வேலனே! கலை சார்ந்த நூல்களையே அடியேன் கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக்கற்று தலை வேதனையுறும்படி ஆகிவிடவோ? கொலைத்தொழில் புரியும் வேடர் குலத்தில் தோன்றிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையாரைச் சேர்ந்தவரும் கிரவுஞ்ச மலையை வெற்றி வேலால் பிளந்தவருமான மலைபோன்ற கடவுளே!
4 days ago | [YT] | 113
View 4 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 31 பாழ் வாழ்வு
🦜ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க🦜
பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தவைதாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே!
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!
5 days ago | [YT] | 160
View 7 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 30 செவ்வான்
🦜உணர்த்திய ஞானம் சொல்லொணானது🦜
செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?
சிவந்த வானத்தின் உருவில் விளங்கும் வேலாயுதப் பெருமான் அன்று அடியேனுக்கு உபதேசித்தருளிய ஒப்பற்ற ஞான உபதேசத்தை ஒருவர் அறிந்து அனுபவிக்க முடியுமே தவிர, எங்ஙனம் மற்றொருவருக்குச் சொல்ல இயலும்?
6 days ago | [YT] | 99
View 3 replies
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 29 இல்லே எனும்
🦜அறியாமையை பொறுத்தருள் முருகா🦜
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே!
இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளிவீசும் வேலாயுதரே!
1 week ago | [YT] | 78
View 1 reply
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 28 ஆனா அமுதே
🦜நீயும் நானுமாய் இருந்த நிலை🦜
ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானாகரனே! நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே?
இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! 'யான்' என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூறமுடியுமோ?
1 week ago | [YT] | 143
View 1 reply
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 27 மின்னே நிகர்
🦜வினையால் வருவது பிறவி🦜
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ
பொன்னே! மணியே! பொருளே! அருளே!
மன்னே! மயிலேறிய வானவனே!
மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!
1 week ago | [YT] | 92
View 1 reply
Load more