திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 31 பாழ் வாழ்வு
🦜ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க🦜
பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தவைதாம் உளவோ வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே!
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!
திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 31 பாழ் வாழ்வு
🦜ஜெகமாயையில் இட்டனையே .. நீ வாழ்க🦜
பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தவைதாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே!
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!
5 days ago | [YT] | 160