LESS SPICE MORE TASTE


DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 21
முருகனிடம் சண்டை போட்ட தருணம்...

(((முதலில்
எல்லாரும்
என்னை
மன்னிக்க
வேண்டும்...

என்
சோகம்
உங்களை
இந்த
அளவு
தாக்கும்...
என
எண்ணவில்லை .....

உங்களை
அழ
வைக்கும்
எண்ணமும் இல்லை...

நீளாமாகவும்
ஆழமாகவும்
இந்த
சோகப்பதிவை
நான்
போடப்போவது
இல்லை....

தேவையான
அளவு
மட்டும்
சேர்த்து
கொள்கிறேன்....

கதைக்குள் போவோமா!!? ))

கண்ணுக்கு
அழகான
குருவிக்கூடு
என்
வீடு....!

யார்
கண்பட்டதோ...

காலனால் (காலன்-எமன்)
பிய்த்து
எறியப்பட்டு விட்டது...!

மறைந்தது
வீட்டின்
ஒளி
விளக்கு...

இருளாய்
போனது...
என்
கிழக்கு.....

இந்த
கிழக்கில்
இனி
சூரியன்
உதிக்காது....

என்
கால்கள்
முன்னேற
பாதம்
பதிக்காது...

பாலுக்கு
அழும்
குழந்தை
ஒரு
பக்கம்....

நடப்பது
என்ன
என்று
தெரியாமல்
ஓடி
விளையாடும்
மகள்.....

எதற்கும்
அஞ்சாத
அம்மா...
உடைந்து
நொறுங்கி
போய்...
ஒரு
ஓரம்....

நான்
மட்டும்
திடமாக....
நிற்கிறேன்...

திட்டுகிறேன்...
கத்துகிறேன்....
அங்கும்
இங்கும்
சுற்றுகிறேன்.....

அடுத்தது
என்ன...
அடுத்தது
என்ன!!?

அழவே
இல்லை
நான்....
அடைக்கிறது
நெஞ்சம்...

என்
அக்கா
மீண்டும்
அம்மாவாக...

குழந்தைகள்
அவர்
வசம்....
உன்னால்
பத்து மாத
கை குழந்தையை
வளர்ப்பது
கடினம்.....

நான்
பாத்துக்கிறேன்
என்றார்....
கண்ணீரோடு....

இறுதி
சடங்கு
வரை
அழாத
நான்.....

அத்தருணத்தில்
கதறினேன்..
என்னை
அறியாமல்....

செய்வது
தெரியாமல்.....

வாழ்க்கை
ஐந்து
வருடத்தில்
முடிந்தே
போகும்

என
கனவில்...
கூட
நினைக்கவில்லை...😌

காதலிக்கும்
போது...
நான்
இல்லைனா
நீ
என்ன
பண்ணுவ!!!?
என
கேட்டு
கொண்டே
இருப்பாள்....

நீ
இல்லாத
உலகில்
நான்
மட்டும்..‌‌.
என்ன
செய்ய போகிறேன்....
நானும்
வந்து
விடுவேன்....
என்றேன்...

ஆனால்
அது
பொய்யாகி
விட்டது....

அந்த
சொல்
அடிக்கடி
நெஞ்சை
சுட்டது.....

குழந்தைகள்
ஒரு
புறம்...
வீட்டுக்கடன்
ஒரு
புறம்...
ஊரிலே
சிவனே
என
இருந்த...
அம்மா
ஒரு...
புறம்.....

இங்கேயே
நாம்
மட்டும்
இருந்து
ஆவது
என்ன???

அவளோடே
போய்
விட்டாள்
என்ன!!

என்ற
எண்ணம்

முதலாளியிடம்
வீட்டு
பத்திரம்
கொடுத்து...
இது
உங்களிடம்
இருக்கட்டும்......

இந்த
வீட்டை
வந்த
விலைக்கு
விற்று
உங்கள்
கடனை...
எடுத்து
கொண்டு
மீதம்
உள்ளதை...
கொடுங்கள்.....என்றேன்

இந்த
ஊரே
வேண்டாம்.....
நான்
சொந்த
ஊருக்கே
செல்கிறேன்....
என்றேன்..‌.‌

அவரோ
பத்திரத்தை
வைத்து
என்ன
செய்வது....

இது
உங்க
கஷ்டம்....
உழைப்பு....

காணாமல்
போய்
விடும்
உங்கள்
வாழ்க்கை....

இனி தான்
நீங்கள்
மன
தைரியத்துடன்
வாழ
வேண்டும்...

பிள்ளைகள்
நலனை
பேண
வேண்டும்.....என்றார்

பைத்தியம்
போல
இருந்தேன்....
வெளியில்
செல்ல
கூடாது....
ஒரு
வழியாய்
16 ஆம்
நாள்
முடிந்தது.....

கொரோனாவால்
கோவிலுக்குள்
அனுமதி
இல்லை...

சிக்கல்
சிங்காரவேலன்
கோவில்
வாசலில்...
முருகனிடம்
சண்டை....

தவறுகள்
நான்
செய்து
இருக்கலாம்....!

தண்டனைக்கு
முன்
விசாரிக்காமல்
தீர்ப்பளித்த
நீதிபதி
நீ
தானா!??

என்
வாழ்வை
ஆக்க
தெரியாமல்
ஆக்கி...
குழைத்து
விட்டாயே
கூழ்
போல்....

இது
உனக்கு
தகுமா!!?

நான்
அழ
நீ
சிரிக்கிறாய்

என்
கண்ணீரில்
அப்படி
என்ன
சுகம்
உனக்கு?

முருகா...

அப்பா...
அப்பா
என
ஆசையாய்
அழைத்தேனே...

அப்பன்
பார்க்கும்
வேலையா
இது!?

நீ
நினைத்தால்
தடுத்து
இருக்கலாமே!!

மரணம்
பொதுவானது
இயற்கை
நீதி...
போகட்டும்....

திருமணத்தை
தடுத்து
இருக்க
கூடாதா....

சரி
பிள்ளைகள்
இல்லாதா
எத்தனையோ
பேர்
இருக்க....
இரண்டு
பிள்ளைகள்
பிறக்காமல்
தடுத்து
இருக்க
கூடாதா???

தூக்கு
தண்டனை
கைதிக்கு
கூட
கடைசி
ஆசை
கேட்பார்கள்...

உன்
சட்டத்தில்
அதற்கு
கூடவா
இடமில்லை‌‌...??

நடை
பிணமாக
என்னை
மாற்றி
விட்டாயே!!!?

நியாயம்
தானா!

சிக்கல்
முருகா....

ஏன்
இந்த
சிக்கல்....

எப்போது
நிற்கும்
என்
வாழ்வின்
விக்கல்....

எதையும்
தடுக்காத
நீ..!

என்னை
மட்டும்
குழைந்தைகளையும்
கடனையும்
கடமையும்
காட்டி
தடுப்பது
ஏன்.....?

நீ
வாழ்ந்தாக
வேண்டும்
என
ஆனை
விடுப்பது
ஏன்.....??

இப்படி
இதுவரை

மனதில்
இருந்ததை
கொட்டிய
பிறகு....

சிரித்தப்படியே
இருந்தான்
முருகன்...

கோவில்
கருவரை
பூசாரிக்கு
என்னை
யார்
என
தெரியாது....

அவர்
பெயர்
அருண் சாஸ்த்திரி...

வெளியே
வந்து...

ஏன்
கவலைபடுறீங்க.....

எல்லாமே
கொஞ்ச
நாள்தான்.....

சரியா
போயிடும்....

என
சொல்ல...

கோவில்
மணி
ஒலிக்க...
மயில்
ஒன்று
கோபுரத்தின்
உச்சியில்
அகவ....
மழை
தூறியது.....

அருண்
சொன்னார்...

உங்களுக்கு
என்ன
பிரச்சனையோ
எனக்கு
தெரியாது.....
ஆனால்
முருகனுக்கு
தெரிந்துவிட்டது....

நல்லது
மட்டுமே
நடக்கும்......
கவலைப்படாமல்
போய்ட்டு
வாங்க
என்றார்....

முருகனே
பேசியது
போல்...
ஒரு
ஆறுதல்
எனக்கு....

வீட்டில்
முடங்கி
இருந்த
என்னை...
அடிக்கடி
முதலாளியும்
உடன்
பணிபுரியும்
தொழிலாளிகளும்
வந்து
வந்து
பார்த்தனர்....

கொரோனா
விடுமுறை
போதும்...

ஓட்டலில்
பார்சல்
சர்வீஸ்
அனுமதி
இருக்கு...

உன்
சோகத்துக்கு
ஒரே
மருந்து
வேலைதான்....

நாளை
முதல்
ஓட்டல்
திறந்து விடலாம்...

நீங்க
வாங்க
என்றார்...
கிட்டத்தட்ட
நாற்பது
நாள்....

அக்கா
இங்கேயே
இருந்து
குழந்தைகளை
பார்த்துக்கொண்டார்....

குழந்தைகளை
அழைத்து
சென்று...
அவர்கள்
வீட்டிலேயே
வளர்க்க
தொடங்கினார்.....

அமாவாசை
விடுமுறையில்
நான்
அங்கு..

பள்ளி
விடுமுறையில்
அவர்கள்
இங்கு.....

என
நாட்கள்
மாதங்களாக

மாதங்கள்
வருடங்களாக....

அம்மா
இல்லாத
குறையை
தவிர
வேறு
குறையின்றி
குழந்தைகள்
வளர்ந்தன...

வீட்டில்
இரண்டு
வருடம்
நானும்
அம்மாவும்
மட்டும்....

கவலைகளே
இல்லை
என்று
இல்லை.....!!!

கவலைப்பட்டால்
சரியாகிவிடும்
என்றால்
விடிய
விடிய
கவலைப்படலாம்..

ஆனால்
நடக்கும்
யாவும்
நம்
கையில்
இல்லை..
என்ற
சூட்சமம்...

எனக்கு
வாழ்க்கை
சொல்லி
தந்த
மந்திரம்.....

இதோடு
முடிந்து
போய்விடுவான்‌...
என
நிறைய
பேர்
எண்ணினர்...

காதில்
படவே
பரிகாசம்
பண்ணினர்...

சிறு
வயதில்
பட்ட
அடிகள்
எல்லாம்...
எனக்கு
கஷ்ட்டமாக
இல்லை.....

அதை
நான்
இஷ்ட்டமாக
ஏற்றுக்கொண்டேன்......

ஆனால்
என்
மனைவி....யின்
பிரிவு..
மிகப்பெரிய
வலிதான்....

ஆனாலும்
எதையும்
தாங்கும்
இதயம்....
இறைவன்
அளித்தான்
அள்ளி.....

அதனால்
மீண்டும்
எழுந்தேன்
துள்ளி....

எப்படி
நான்
மீண்டேன்.....
என்பதை
நாளை பார்ப்போமா?

((குறிப்பு))

நிறைய
நண்பர்கள்
இந்த
தொடரை
எழுதுவது
யார்
என
கேட்கிறீர்கள்....
சந்தேகமே
வேண்டாம்...
நானே..
அடியேனேத்தான்
எழுதுகிறேன்....

கவிஞர்
வாலியின்
படைப்புகள்
வசனக்கவிதையில்
வரும்....
அதே போல்
தர
சிறு
முயற்சி
இது..........

நாம்
சூரியனிடம்
செல்ல முடியாது
தான்...
ஆனால்
சூரியன்
ஒளிக்கதிர்
நம்
மேல்
படுவதில்லையா!??????

அப்படித்தான்
எனக்கு
வாலி சார்

2 months ago | [YT] | 34

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 20
ஒவ்வொரு ஏழையின் ஏக்கம் ஒரு வீடு❤️

அம்மாவோ
ஊரில்
தனியாக..
வேலை
மட்டும்
துணையாக...

நாங்களோ
இங்கே
ஓட்டலுக்கு
மேலே...
ஓர்
அறையில்
கணவன்
மனைவி
குழந்தை
என
வாழ.....

குழந்தை
பிறந்தது
வறுமை
ஒழிந்தது....

மூன்று
மாதக் குழந்தை
முதல்
ஓட்டல்
மாடியில்
தான்....
மகள்
வளர்ந்தாள்...

நான்
கீழே
சமைத்தால்
கூட...
குழந்தை
அழுகுரல்
கேட்டால்
உடனே
ஓடுவேன்
மாடிக்கு...

அழுதால்
வருவேன்
என்று
தெரியும்
அந்த
செல்லக்
கேடிக்கு❤️

ராஜ
கவனிப்பு
அவளுக்கு...

பிரியாணி
சட்டியில்
கொதிக்கும்
தண்ணீர்
குளிப்பதற்கு...

குளிப்பாட்ட
என்னுடன்
பணிபுரியும்
அக்காக்கள்
நான்
நீ
என
அத்தைகளாக...

பிரியாணி
அடுப்பு
நெருப்பு
சாம்பிராணி
போட.....

ஓட்டல்
மேல்
மாடி
அறை
சூடாக
இருக்கும்
என
ஏ.சி
வாங்கி
தந்த
என்
அம்மா...

மொட்டை
மாடியில்
ஆயில்
மசாஜ்...
இளஞ் சூரியனின்
நேரடி
பார்வையில்

கொதிக்கும்
நீரில்
நல்ல
குளியல்
ஏசி
அறையில்
உறக்கம்...

மகள்
தும்பினால்
கூட
உதயசங்கர். ((குழந்தைநல மருத்துவர்))
வீடு
திறக்கும்..

அவரோ....
யப்பா...
உன்
குழந்தைக்கு
ஒன்னுமில்லை....

குழந்தை
என்றால்
அழும்‌..
பேசாது
சரியா!

அர்த்த
ராத்திரியில்
என்
தூக்கத்தை
கெடுப்பது
முறையா!!?

சாரி
சார்..
சாரி..
என
வருவேன்...

அவளுக்கு
என்
கைகள்தான்
கட்டில்...
என்
மடிதான்
தொட்டில்...
கட்டிலிலும்
தொட்டிலிலும்
வளர்ந்தால்...
வருடம்
ஒன்று
ஆனது...

(((வயிறையும்
வாயையும்
கட்டி...
2011 முதல் 2015
வரை
சேர்த்த
பணத்தில்
இடம்
ஒன்று
வாங்கினேன்...
அது
ஒரு
தனிக்கதை....

அம்மாவும்
அப்பாவும்
இருக்க
இரண்டு
இலட்சத்தில்
அடமானம்
போட்டோம்
நியாபகம்
இருக்கா!!?

அந்த
பணத்தில்
இடம்
வாங்க
போனேன்....
மூன்று
இலட்சம்
நானும்....
மீதி
முதலாளியும்
தந்தார்...
வட்டியில்லா
கடனாக....

கிட்டத்தட்ட
5 இலட்சத்தில்
இடம்...
வாங்கி
இருந்தேன்...
2015ல்...
திருமணத்திற்கு
முன்பே....

அந்த
கடன்
அனைத்தும்..
2018
வரை
நீடித்து
முடிந்தது....)))

நான்
சிறுக
சிறுக
சீட்டு
கட்டி
3 இலட்சம்
வைத்து
இருந்தேன்...

அம்மா
செருப்பு (ஷீ)
கம்பெனியில்
பல
வருடம்
பணிபுரிந்து
ஈவு
தொகையாக...
ஒரு
இலட்சம்
வைத்து
இருந்தார்....

இரண்டு
அக்காக்களும்
நான்
வேணும்னா
நகை
வைத்து
தருகிறேன்..
என்றார்...

மனைவியும்
நானும்
நகை
வைத்து
தருகிறேன்...
என்றார்.....

இப்படியாக
ஏழு முதல்
எட்டு
இலட்சம்
இருக்கும்.....

முதலாளிடம்
சொன்னேன்....

வருடம்
2018
ஆகிவிட்டது....
சொந்தமாக
ஒரு
குடிசையாவது
இல்லை
என்றால்
வர
மாட்டார்
அம்மா!

எனவே
ஏதவாது
செய்து
அந்த
இடத்தை
விற்று
என்னிடம்
உள்ள
பணத்தையும்
வைத்து
விற்பனைக்கு
வீடாக
வந்தால்
வாங்கி
விடலாம்
என்றேன்.‌‌....

புது
வீடு
எல்லாம்
நாம்
கட்ட
முடியாது
காரணம்
விலைவாசி
அப்படி...

எனவே
இந்த
யோசனை...

அவரும்
நானும்
அங்கே
இங்கே
என
ஆறு....ஏழு
வீடுகள்
பார்த்தோம்...

நான்
ஆஹா...
சூப்பர்
இதுவே
போதும்
என்பேன்....

முதலாளியோ....
ஒரு
மழை
ஒரு
காத்துக்கு
தாங்காது
என்பார்.....

சரி
மாடி
வீடு
பார்த்தால்...
உப்புத் தண்ணீர்
இந்த
இடம்
ஆகாது
என்பார்....

நான்
கடைசியாக
சுனாமி
குடியிருப்பு
கூட
பரவாயில்லை....

ஐயோ
அது
எல்லாம்
சட்ட
சிக்கல்...
வேண்டாம்
என்பார்....

பொறுமையை
இழந்த
நான்....

சார்...
நாங்க
இருந்த
வீட்டுக்கு.....
இந்த
வீடுகள்
எல்லாம்
அரண்மனை
சார்....

எனக்கு
இது
போதும்
என்றேன்....

லோன்
போட்டு
கூட
ஒரு
வீடு
கட்டிக்
கொள்ளலாம்...
வாங்க..
என

நானும்
போன
உடன்
வாங்கி
விடலாம்
என
செல்ல....

இடத்து
பத்திரத்தோடு
சென்று
விட்டேன்.....

பேங்க்
மேனேஜர்...
குலம்
கோத்திரம்
தவிர...
அனைத்தையும்
கேட்டார்...

பே...சிலிப்
ஐ.டி...ரிட்டன்
பேங்க் அக்கவுன்ட்
இது
எல்லாம்
வேண்டும்
என்றார்....

சார்
நான்
தினக்கூலி
இடத்தின்
பத்திரம்
இருக்கட்டும்
உங்களிடம்

கடனை
கட்டி
விட்டு
வாங்கிக் கொள்கிறேன்
என்றேன்.....

தம்பி
அப்படி
எல்லாம்
தர
மாட்டாங்க....

மேல்
சொன்ன
ஆவணங்கள்
கொண்டு
வாருங்கள்
என்றார்.....

முதலாளி
சரி
விடுங்க
பாத்துக்கலாம்....
உங்களிடம்
இருப்பதற்கு
தகுந்து
பார்ப்போம்
என்றார்.....

முதலாளி
மூலம்
நம்பிக்கை
ஆன....

கட்டிட
மேஸ்த்திரியை
போய்
பார்த்தோம்...

அவர்
பெயர்
இப்ராஹிம்

சந்தித்தேன்....
அடிக்கு
இவ்வளவு
என
பேசி
முடித்தோம்...

கிட்டத்தட்ட
12 முதல் 14 இலட்சம்
ஆகும்
என்றார்..‌.

நான்
ஒரு
யோசனை
சொன்னேன்....‌

அறை
அறையாக
கட்ட
வேண்டாம்.....

நான்கு
பெரிய
சுவர்....
மேலே
ஒட்டிவிடுங்கள்....
போதும்
என்றேன்....

அவரோ
தம்பி....
சாதரணமாக
கதவே
ஒரு
இலட்சம்
வரும்
என்றார்.....

நான்
ஷட்டர்
கூட
போட்டுக்கலாம்
என்றேன்....

அனைவரும்
சிரித்து
விட்டு.....

என்னிடம்
இருக்கும்
வரை
செய்து
கொடுங்கள்.....
பிறகு
நான்
வேலையை
நிறுத்தி
விடுவேன்...

பணம்
தோதாகட்டும்
என்றேன்...

ஒரு
நாள்....
ஜுன்
மாதம்
வாஸ்து
நாளில்
பூமி
பூஜை
போட்டேன்.....

இருந்த
பணத்திற்கு
மூன்று
வாரத்தில்
மூன்றடி
சுவர்
வந்து
விட்டது....
எட்டு
இலட்சம்
க்லோஸ்....

முதலாளி
வந்து
பார்த்து...
அடுத்து
ஆக
வேண்டியதை
பாருங்கள்.....
பணத்தை
பார்த்து
கொள்ளலாம்...
என்றதும்.....

மேஸ்த்திரி
ரவி
சாஸ்த்திரி
போல்
வேகமானார்....

கட்டிட
வேலை
படு
ஜோராக
நடந்தது....

இதன்
நடுவே....
நாகை
மாவட்டம்
திருப்புகலூர்
என்ற
திருத்தலம்
சென்று
மூன்று
செங்கல்
வாங்கி
வந்தால்
வீட்டு
வேலை
தடைப்படாது
என
கேள்விப்பட்டு

பூஜை
செய்து
வாங்கி
வந்து
பூஜை
அறையை
கட்டினோம்...

நம்ப
மாட்டீர்கள்
100
நாட்களில்.....

அதாவது
ஆகஸ்ட்
22
பக்ரீத்
விடுமுறையில்
வீடு
குடிப்போகும்
வைபவம்
சிறப்பாக
நடைப்பெற்றது....

ஆக
மொத்த
செலவு
18 இலட்சம்...
8 நான்
10 முதலாளி....
2018ல்...

வீடு
குடியேறி
விட்டேன்...
கடன்
காரனும்
ஆகி
விட்டேன்....

கடன்
பெரும்
துயரம்
தான்...

ஆனால்
மகிழ்ச்சி
அம்மா
வந்து
விட்டார்.....

வேறு
ஒரு
சந்தோசம்
மனைவி
மறுபடி
மாசமாகி
விட்டார்....

வீடு
குடி
புகுந்து
சில
மாதத்தில்
மகன்
பிறந்தான்....

மகழ்ச்சி
மேல்
மகிழ்ச்சி

வயது
30....((2019))

சொந்த
வீடு
அம்மா
மனைவி
மகன்
மகள்
வாழ்க்கையில்
பெரிதாய்
சாதித்து
விட்டதாய்
மகிழ்ச்சி.....

வந்தது
கொரோனா....

கல்
அடி
பட்டாலும்
கண்
அடி
படக்கூடாது....

அழகான
வீடு
அருமையான
குடும்பத்தில்
கொரோனா
என்ற
அரக்கன்
கல்
எறிந்தான்....

பத்து
மாதக்
கை குழந்தையை
தவிக்க
விட்டு
என்
அன்பு
மனைவி
காலமானார்......

கொரோனாவின்
கோரப்பசி
அவளை
காவு
வாங்கியது....

நாளை.............தொடரும்

2 months ago | [YT] | 11

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 19
ஒரு வழியாக புது வாழ்வு துவக்கம்

இதயவலி
எப்படியோ
அப்படி
இனியவள்
பேசாத
நேரம்
இருக்கும்....

அலைபேசியில்
அவள்
அழைப்பு
சத்தம்
மருந்தென
இனிக்கும்....

மகராசி
வரவாலே....
முழு
நேரமும்
செலவாச்சி....

மல்லிப்பூ
அழகெல்லாம்
அவள்
முன்னே
சிறிதாச்சு...!

மாலை
நேர
மாசி. ...... (வென்மேகம்)

அவள்
முன்னே
தூசி .....

கண்களுக்கு
ஒரு
வித
நோய்...
அவள்
மட்டுமே
தெரிகிறாள்
எங்கிலும்....

அவள்
சிரிப்பொலி
சத்தம்
வராது
எவ்வித
சங்கிலும்...

திருமணத்திற்கு
பின்பு
வரும்
90 நாட்களை
விட
சுகமானது..
திருமணத்திற்கு
முன்பு
காத்திருக்கும்
90
நாட்கள்..!!

ஆம்
அந்த
நாள்
வந்தது...

திருமணம்
2015 ஆகஸ்ட்
மாதம்
நடந்தது....

இனிதாய்
நடந்தேறியது!

கஷ்ட காலங்கள்
கடந்தேறியது!

என
நினைத்தேன்....

மூன்று
மாதம்
வரை
பரவாயில்லை....

பிறகு
மெதுவாக
மெது
மெதுவாக....
வாய்கள்
கேட்டன..
விஷேசம்
இல்லையா
என!

பரிட்சையில்
பெயில்
ஆனால்
கூட
அடுத்த
பரிட்சை வரை..
கேட்க
மாட்டார்கள்..
தேர்ச்சி பற்றி....

ஆனால்
புது
தம்பதியரை
பார்த்தால்
விஷேசம்
இல்லையா
என
துக்கம்
விசாரிப்பது
என்ன
நியாயமோ
தெரியவில்லை....!!

பத்து
மாதங்கள்
தான்
ஆனது...

உங்கோளோடு
திருமணமானவர்கள்
வாயும்
வயிறுமாய்
இருக்காங்க...
என
கூற
கூற...

இனியவள்
இரவானால்
ஆறாக
கண்ணீரை
கொட்டுவாள்....

நானோ....

அட
எவ்வளவு
நாள்
பிள்ளைகள்
இல்லையோ
அவ்வளவு
நல்லது....

அதுவரை
நினைத்தப்படி
நாம்
எங்கு
வேண்டுமானாலும்
சுற்றலாம்
என
ஆற்றுவேன்...

அங்கே
இங்கே
என
அழைத்துச்சென்று
தேற்றுவேன்....

முதல்
திருமணநாள்
முடியும்
தருவாய்....

நலன்விரும்பி
சிலர்
தஞ்சை
மாவட்டம்
திருக்கருக்காவூர்
கர்ப்பரட்சாம்பிகையை
தரிசனம்
செய்
பிள்ளை
பேரு
நிச்சயம்
என.....கூற..

தரிசனம்
செய்தோம்...
அந்த
மாதமே
இனியவள்
தலைக்கு
குளித்த
கடைசி
மாதமானது....

2017 ஏப்ரல்
மாதம் 17ம்
தேதி
வெள்ளிக்கிழமை
மாலை
5.17க்கு...
மகம் நட்சத்திரத்தில்
சிம்ம ராசியில்
மகாலஷ்மியாய்
என
மகள்
பிறந்தாள்.....

அப்பா
என்ற
பெயருக்கு
வைத்தாள்
தொடக்கப்புள்ளி...

விஷேசம்
கேட்டோரின்
வாயுக்கு
வைத்தாள்
முற்றுப்புள்ளி....

அவள்
பிறந்த
நேரம்
புது
வீடு
கட்ட
அஸ்திவாரம்
போட்டேன்...

புதிதாய்
ஒரு
வீடு
கட்டும்
அனுபவம்
இருக்கே....
அது
ஒரு
வலி
நிறைந்த
சுகம்...

நாளைமுதல்...வீடு கட்டிய படலம்❤️

2 months ago | [YT] | 27

DK FOOD JUNCTION

மறைந்த
நரகாசூரனை
விடுங்கள்.....
நம்
மனதில்
நாம்
அறியாமலேயே
அடிக்கடி
வந்து
போகும்
நரகாசூர
சக்தியை
அழித்து....!!!
ஆனந்தமாய்
தீபாவளி
திருநாளை
கொண்டாட
மனமார்ந்த
வாழ்த்துக்கள்🥰🥰🥰❤️🙏

3 months ago | [YT] | 59

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 18
கல்யாண பிராப்தம்.....

2013 ல்
போனார்கள்
அப்பா
அம்மா
என்னை
விட்டு
ஊருக்கு...

அனாதை
ஆனேன்
பேருக்கு..

திருமணம்
செய்து
கொண்டால்
என்ன!!

அக்காவிற்கு
போன்
செய்தேன்...

நான்
மட்டும்
இருக்கின்றேன்...
தனியே...

தேடிக்கொள்ள
நினைக்கின்றேன்
துணையை....

உதவ
முன்
வா...
நான்
கேட்கவில்லை
சும்மா!!

இப்போ
உன்னை
விட்டால்
யார்
எனக்கு
அம்மா!!

அக்கா!!

அதுவும்
சரி
தான்....

உடனே
வேலையை
ஆரம்பிக்கின்றேன்...
என்றார்..

23
வயதில்
தொடங்கியது
பெண்
பார்க்கும்
படலம்...

ஏதோ
ஒரு
மகிழ்ச்சி
கொண்டது..
மனதும்
உடலும்....

நினைத்தேன்
நான்
எளியது
திருமணம்
என்று...

அனுபவம்
கிடைத்தது
நன்று....

அக்கா
பாவம்
பெண்
பார்க்க
போகிறேன்....
என
மாதா..மாதம்..
ஒரு ஊருக்கு
செல்வார்...

எனக்கு
விடுப்பு
இல்லாததால்....
அவரே
இருவரை
அழைத்து
செல்வார்....

தட-புடலாக
நடக்கும்
பெண்
பார்க்கும்
நிகழ்வு...

சம்பளம்
வீடு
குலம்
கோத்திரம்
எல்லாம்
சரி...

வேலையை
பார்த்தால்
சமையல்காரன்
என்கிறீர்கள்
அதுதான்
கஷ்டம்
என்பர்..

ஏறக்குறைய..
ஏழு
எட்டு
மாதம்
அமாவாசை
பௌர்ணமி
போல்...
பெண்
பார்ப்பதும்
வழக்கமானது..‌.

இடையே
2014ல்
தந்தையும்
காலமானார்....

வருடம்
ஒன்று
முடியட்டும்..
நல்லது
நடக்கும்...

எனவே
இந்த
மாதா..மாதம்
நடக்கும்
உற்சவம்
தள்ளி
வைக்கப்பட்டது....

என்
ஆசைகளும்
பரன்-மேல்
அள்ளி
வைக்கப்பட்டது....

ஒரு
வேலை
ஜாதகம்
சாதகமாய்
இல்லையோ!?

அதனால்தான்
இந்த
தொல்லையோ!?

என
கட்டம்
பார்ப்பவரை
கட்டம்
கட்டினோம்...

அவரோ
சனி
சரியான
இடத்தில்
இல்லை
என்றார்...

வருகிற
வருடம்
ஏறக்கூடும்
தாலி...

அதை விட்டால்
வயது
முப்பது
ஆகட்டும்..

அதன்
பின்தான்
நடக்கும்
தாலி
கட்டும்
சோலி...

ஆனால்
ஒன்று

இவன்
காதல்
திருமணம்
தான்
செய்வான்...

என்ற
உடன்
அனைவரும்
என்னை
திரும்பி பார்க்க....

(((((நானோ
பழைய
நினைவுகளில்
மூழ்க...

ஒரு
வேலை
ஒன்பதாம்
வகுப்பு
தோழியோ....

இல்லை
இல்லை
அவளுக்குத்தான்
போன
வருடமே
திருமணம்
முடிந்து
விட்டதே....!!

அதுமட்டுமில்லை
அவளுக்குத்தான்
நான்
காதலித்த
விஷயமே
சொல்லவில்லையே!

ஆம்
90ன்
காதல்
அப்படித்தான்...

உள்ளுக்குள்ளேயே
காதல்
இருக்கும்...

கண்கள்
இடையே
கடிதங்கள்
பறக்கும்...

பிடித்து
இருந்தால்
மட்டும்
இதயம்
திறக்கும்....

கடைசி
வரை
விரல்கள்
கூட
உரசாது...

காதலர்கள்
காதல்
மட்டுமே
செய்த
காலம்
அது....

நான்😅

அதை
கூட
ஒழுங்காக
செய்ததால்
வந்த
கோலமிது...

இரண்டு
வருடம்
தேடியும்..
இன்னும்
கிடைக்கவில்லை
பெண்....

ஒரு
வேலை
கல்லூரி
காதல்
கை
கொடுக்குமோ!??

கல்லூரியில்
அன்புத் தோழியும்
நானும்
அடுத்தடுத்த
இருக்கை

அமைத்து
தந்தது
இயற்கை...

உணவு
இடைவேளையில்
இருவரும்
பகிர்வோம்
உணவை....

ஒரு
நாளும்
பகிர்ந்தது
இல்லை
உணர்வை....

நான்
வேலை
பார்த்து
படித்ததால்
தோழிக்கு
என்மேல்
பிரியம்....

பிரியமான
தோழி
என்பதால்
என்
கண்கள்
அவள்
பேர்
சொன்னாலே
விரியும்....

ஆயினும்
குடும்ப
சூழல்
காரணமாய்
காதலை
வீட்டில்
சொல்லா-விட்டால்
கூட
பரவாயில்லை....

அவளிடமே
சொல்லவில்லை
நான்😂..

ஆக
இது
வரை
இரண்டு
காதல்
இரண்டும்
ஒரே
வகை
காதல்‌..
ஒரு
தலைக்காதல்....)))))))

ஐயரும்
அனைவரும்
என்னையே
பார்க்க....

எதாச்சும்
இருந்தா
சொல்லுடா...
என..

நானோ
ச்சே....சே
அப்படி
எல்லாம்
ஒன்னுமில்லை...
என்றேன்.....

கட்டம்
சொல்கிறது
காதல்
திருமணம
என...

என்
மனதோ
கட்டாயம்
சொல்கிறது...

அதுக்கு
நீ
சரிப்பட்டு
வர
மாட்டாய்
என...😂

ஐயர்
கொடுத்த
வருடம்
வந்து
விட்டது....

காதலும்
வந்த பாடில்லை...
கத்திரிக்காயும்
வந்த பாடில்லை...

வந்தது
அக்காவிடம்
இருந்து
ஒரு
போன்.....

சொந்தத்தில்
ஒரு
பெண்
நல்ல
குணவதி...
நல்ல
பெண்...
பேசிக்கொண்டு
இருக்கிறோம்....
என...

ஏதோ
ஒரு
எண்ணில்
இருந்து
அழைப்பு....

கிளியும்
குயிலும்
கலந்த
கீச்
குரலில்....
பெண்
குரல்....

ஆம்
2k
குரல்...

அந்த
குரல்
அந்த
சொந்தக்கார
பெண்
குரல்...

பிற்காலத்தில்
எனக்கு
சொந்தமாகும்
குரல்
என
அறியேன்.....

அழைப்பேசியில்
நான்...
நான்...
என
பெயர்
சொல்லி...
அறிமுகம்
ஆக...

நான் தான்
90ஸ் கிட்ஸ்
ஆச்சே....

இப்படி
எல்லாம்
வீட்டிற்கு
தெரியாமல்
போன்
செய்ய
கூடாது
தப்பு
என்றேன்....

அந்நியன்
அம்பியாக..‌..!!

இரு வீட்டார்
மனம்
ஒப்ப....

நல்ல
நாள்
ஒன்று
குறிக்கப்பட்டது

நிச்சயம்...
நிச்சயம்
செய்ய....!

பூ
வைக்கும்
நிகழ்வு...

பின்பு
இருவரும்
பேசலானோம்......

நான்..

என்னை
பிடித்து
இருக்கிறதா
உனக்கு
என!!

அவளோ
ஒரு
வருடமாகவே
உங்களை
பிடிக்கும்....

உங்கள்
பெயர்
சொன்னாலே
இதயம்
துடிக்கும்.....
என்றாள்...!

அப்படியா!!

எங்கே
எப்போது
என்னை
பார்த்தாய்
என
கேட்க....!!

உங்கள்
தந்தையின்
மரணத்தில்
பிறந்தது
உங்கள்
மீது
அன்பு....

தெருமுனை
பிள்ளையாரிடம்
மட்டுமே
சொல்லியதை
இன்று
உங்களிடமும்
சொல்லி
விட்டேன்......
என்றாள்...

அடடே
இதுவும்
காதல்
திருமணம்தான்
போலேயே!¡!!

ஜாதகம்
உண்மை
தானோ!??

மணப்பெண்
காதலி
ஆகி
மீண்டும்
மனைவி
ஆன கதை...

இன்னார்க்கு
இன்னார்
என்று
இறைவன்
வகுத்த
பாதையில்
திருமணம்
ஓர்
நாள்
என
முடிவு.....

அவள்....!!

சொல்லாமல்
சொன்னவள்
காதலை...

நான்
அவள்
சொல்லியதும்
சொன்னவன்
காதலை...

முதல்....
முறை
இரு தலை காதல்....

மூன்று
மாத
இடைவேளையில்
திருமணம்..

புது
அலைப்பேசி
ஒன்று
பரிசளித்து

சரியாக
வேலை
செய்கிறதா...
என
சாப்பிடும்
தூங்கும்
நேரம்
தவிர
சரிபார்த்த
காலம்
அது......

என்ன
பேசுகிறோம்!?
ஏன்
பேசுகிறோம்!?
எதற்கு
பேசுகிறோம்!?
என
தெரியமாலே
பல
மணி
நேரம்.....பேசி

பரவாயில்லை
அலைப்பேசி
அழகாய்த்தான்....
வேலை
செய்கிறது...
என்போம்..

திருமணத்திற்கு
முன்பு
காதலிக்கு
ஓர்‌
கவிதை
இல்லை என்றால்
எப்படி!!!?

நாளை பார்ப்போமா!!???

3 months ago | [YT] | 21

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 17
அம்மா என்றால் சும்மா இல்லை ❤️

ஆம்
பெற்றோரை
அழைத்து
வந்தேன்
இங்கே!
அவர்கள்
மனம்
இருந்ததோ
அங்கே!!

காலகாலமாய்
வாழ்ந்த
ஊரை
விட்டு
அழைத்து
வந்தது
அவர்களுக்கு
பிடிக்கவில்லை!

என்னைப்
பொறுத்தவரைக்
அப்பா அம்மாவை
அமர வைத்து
பார்க்க
வேண்டும்
என்ற
ஆசை !

அப்பா
கூட
சரி
என்றார்...
அம்மாவோ
நீ
என்ன
சொந்த
வீடா
கட்டிவிட்டாய்...!
வா
வா
என
நச்சரிக்கிறாய்...

வந்தே
ஆக
வேண்டும்
என
எச்சரிக்கிறாய்!!

எனக்கு
இருக்க
கூடாதா
ஆசை...

அப்பா
அம்மாவை
உட்கார
வைத்து
சோறு
போட
வேண்டும்
என்று!!

அந்த
கனவு
நினைவானது
இன்று!!
என
எனக்கு
திருப்தி...

அவர்களுக்கோ
இந்த
வயதிலேயே
பிள்ளை
உழைப்பில்
இருக்க
வேண்டுமா!?
என
அதிருப்தி...

அம்மா
ஓர்
அறிமுகம்...

கஸ்தூரி
என்ற
பெயரை
சுமந்தவர்...

சுகத்தை
ஒரு
நாளும்
சுமக்காதவர்....

அவருக்கு
எதிர்பாராமல்
பிறந்தவன்
நான்..

ஆம்...
அக்கா
பிறந்து
ஏழு
வருடம்
கழித்து
பிறந்தவன்
நான்...

குடிகார
கணவருடன்
நானே
ஒரு
பெண்
பிள்ளையை
வைத்து
கொண்டு
தினம்
தினம்
போராட...

நீ
வேறு
இங்கு
வந்து
ஏன்
பிறந்தாய்
என
புலம்புவார்....

பிறக்காமல்
நான்
இருக்க
எடுத்த
முயற்சிகளை
தகர்த்து
பிறந்தவன்
இவன்..
என
அடிக்கடி
சொல்வார்....

ஓட்டல்
தொழிலாளி
மனைவி
என்று
தான்
பெயர்...
சோறு
இரண்டு
வேளை
கிடைப்பதே
குதிரை
கொம்பு....

ஆம்
அடிக்கடி
வேலைக்கு
போகமால்
இருக்கும்
தந்தையால்..

முற்றுப்புள்ளி
வைக்க
முடியாத
துயரம்....

அதை
சரி
செய்ய...
அம்மா
நிறைய
வேலைகள்
செய்தார்....

படிக்காத
பெண்..
எனவே
எந்த
வேலை
செய்யவும்
கவுரவுத்
தடையில்லை.....

ஆம்பூரில்
பசு
பீடி
மண்டி
ஒன்று
உண்டு...

அதில்
பத்தாயிரம்
பீடி
சுற்றி
வரும்
பணத்தில்
வாழ்ந்தோம்
உண்டு..

பீடி
கட்டை
பிரித்து
லேபல்
ஒட்டி
16 பீடி
என
மீண்டும்
கட்டை
கட்டி....

பத்தாயிரம்
பீடிகளை
கொடுத்தால்
எட்டு ரூபாய்( 1995)
கிடைக்கும்
என்பார்..

பிறகு
வயிறுகள்
பெரிதாயின
எட்டு
ரூபாய்
போதவில்லை...

பீடி
ஒரு
பக்கம்...
புளி
சீசன்
வந்தால்...
நாள்
ஒன்றுக்கு
25 கிலோ
புளி....யில்
கொட்டை
கோது
நீக்கினால்..
25 ரூபாய்
கிடைக்கும்...

இப்படி
நாட்கள்
நகர
பிள்ளைகள்
வளர
அம்மா
பீடி
சுற்ற...
அப்பா
ஊரை
சுற்ற..!

கஷ்டங்கள்
மட்டும்
பஞ்சமில்லாமல்
எங்கள்
வீடு
நிறைய
இருந்தன....

அப்போது
ரேஷன்
அரிசி
கூட
பணம்
கட்டி
வாங்க
வேண்டும்....

10 ரூபாய்
கூட
கடன்
வாங்கி
அரிசி
வாங்கிய
காலம்
அது...

சரி
வீட்டில்
இருந்த
படி
வேலை
செய்ய
வேண்டாம்...

மாத
சம்பள
வேலையை
மாதா
தேட....

ஆயா
வேலை
மாதம்
எட்டு நூறு
சம்பளத்தில்
தனியார்
பள்ளியில்..
கிடைக்க..

அங்கே
கழிவறை
கூட
சமயத்தில்
சுத்தம்
செய்ய
வேண்டி
வரும்....

கருவறையில்
சுமந்ததால்
பள்ளிக்
கழிவறையை
சுத்தம்
செய்வார்...

ஆம்பூரில்
ஷீ (செருப்பு)
கம்பெனிகள்
அதிகம்...

அதிலும்
பல
ஆண்டு
பணி
புரிந்தார்..

இப்படி
காலத்திற்கும்
கஷ்ட
படுகிறாரே..

இன்று.....((2012-13))
நாம்
13,500
சம்பளம்
வாங்குகிறோமே!

எனவே
அம்மாவை
வேலைக்கு
அனுப்ப
கூடாது
என்பது
என்
ஆசை....

அவர்களோ
காலத்திற்கும்
வாடகை
வீட்டிலேயே
வாழ
வேண்டுமா....
சொந்த
வீடு
கட்டி
அழை
வருகிறேன்....
என்கிறார்!!

ஊர் பேர்
தெரியாத
ஊரில்
வாடகை
வீட்டில்
உட்கார்ந்து
சாப்பிட
மாட்டேன்
என
கூறி.....
ஆறே
மாதத்தில்
ஊருக்கு
அப்பாவுடன்
சென்று
விட்டார்.....

இரண்டு
இலட்சம்
அடமான
வீட்டில்
அனாதை
போல்
நான்....

அம்மாவிடம்
கிட்டத்தட்ட
இரண்டு
வருடம்
பேசவே
இல்லை
கோபத்தில்.....

பேசினேன்
என்
தந்தையின்
மரணத்தில்..

ஆம்
2014
நல்ல
வைகுண்ட
ஏகாதசி
தினத்தில்
என்
தந்தை
காலமானார்....

தாயோ
விதவை
கோலமானார்......

அப்போதும்
என்னோடு
வா...
என...
நான் கூற...!

எனக்கு
இன்னும்
உழைக்க
முடியும்....

எப்போது
முடியவில்லையோ...
அப்போது
நான்
வருகிறேன்
என
தனியாய்
ஆம்பூரில்
செருப்பு
கம்பெனி
பணி
தொடர...

சொந்த
வீடு
கட்டினால்
தான்...
அம்மா
வருவார்
என
முடிவு
செய்தேன்....

24வயது...
திருமணம்
செய்யலாம்
என
பேச்சுகள்
அடிப்பட்டன‌....

கஷ்ட்டங்கள்
மட்டுமே
இருந்த
கதையில்
சிறு
சிறு
காதலும்
வரப்போகிறது...
அடுத்த
பாகத்தில்
பார்ப்போமா!!?

3 months ago | [YT] | 22

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 16
எல்லா நேரமும்‌ ஒரே மாதிரி இல்லை...

ஏஜென்ட்டிடம்
இருந்து
வந்தது
போன்
கால்...

ஏய்...!
நீ
வந்த
வேலை
என்ன!?

இப்போ
பார்க்கும்
வேலை
என்ன!!?

எந்த
அரிசி
தந்தாலும்
ஏன்
சமைக்க
ஒத்துழைக்கிறாய்...

என்னால்
தான்
இங்கே
வந்தாய்
என்பதை
மறந்து
விட்டொளிக்கிறாய்....

நியாயம்தானா !??
நீ செய்வது
நம்பிக்கை
துரோகம்
இல்லையா
இப்படி
மாறுவது!!?

சிறிய
வயது
உனக்கு
நல்லது
கெட்டது
யார்
கூறுவது!!

என்
மனதில்
((ஆஹா
சாத்தானா
வேதம்
ஓதுவது))

நான்...

எந்த அரிசி
தந்தாலும்
ஆக்க
வேண்டியது
என்
வேலை!!

இதில்
என்ன
இருக்கிறது
நரி தந்திர
லீலை!!

கோபத்தின்
உச்சத்தில்
உன்னை
பணியிலிருந்து
நீக்கி
விடுவேன்
என்றான்
ஏஜென்ட்!!

இருப்பவனுக்கு
ஒரு
வேலை

இல்லாதவனுக்கு
பல
வேலை

என்னை
பார்த்து
நீ
தொழில்
செய்யவில்லை

உன்னை
பார்த்து
நான்
தொழில்
கற்கவில்லை..

எதற்கும்
துணிந்தவன்
நான்

எதைப்
பற்றியும்
கவலை
இல்லை
எனக்கு!!

காரணம்
இதெல்லாம்
இறைவன்
கணக்கு....

உன்னை
என்ன
செய்கிறேன்
பார்
என்றான்......???

இறைவன்
என்ன
செய்தாலும்
சரி
என்றேன்....

போன்
கட்..
ஆனது...

முதலாளியிடம்
நடந்ததை
செப்பினேன் ..

முதலாளியோ..
அவர்தான்
சேர்த்தார்
உங்களை..

வேண்டாம்
என்றால்
நின்று
விடுங்கள்...

சென்று

மீண்டும்
வந்து
சேர்ந்து
விடுங்கள்..

கமிஷன்
இல்லாமல்
மொத்த
சம்பளமும்
உங்களுக்கே
உரித்தாகும்
என
உரைத்தார்...

ஆனால்
ஏஜென்ட்
மீண்டும்
எதுவும்
பேசவில்லை...

ஒரு
கட்டத்தில்
காரைக்கால்
கடை
முழுவதாய்
மூடும்
நேரம்
வந்தது...

ஏஜென்ட்
கிலோ
67
என
வாங்கிய
அரிசி
உண்மை
விலை
54
என
தெரியவந்தது...

ஆயினும்
முதலாளி
கோபப்படவில்லை...

நம்
தவறு
இதன்
விலை (பணம்)
அறியாமை..

அவர்
தவறு
இதன்
விலை (பாவம்)
அறியாமை...

என்றார்...

அந்த
ஊரை
விற்று
உலையில்
போடுபவன்..
மீண்டும்
நாகை
வர
துடிக்க...

முதலாளியோ
அதை
நடக்க
விடாமல்
தடுக்க...

அவனோ
நான்
இல்லாமல்
எப்படி!!

தேவையில்லாமல்
வைக்காதீர்
தப்படி!!

என்றான்...

முதலாளியோ
உங்களின்
அரிசி
பேரம்
கூட
தெரியும்
எமக்கு ...

அது
நன்றாக
புரியும்
உமக்கு...!

இருந்தும்
நாம்
நண்பர்களாக
சேர்ந்தோம்...

நண்பர்களாகவே
பிரிவோம்
என்றார்...

அப்பா....டி...
இப்போதாவது
திறந்தாரே
வாய்...
என
மனம்
மகிழ்ந்தேன்...

அவர்
பொறுமையை
கண்டு
நெகிழ்ந்தேன்...

அவன்
வைத்த
ஆட்களை
கொஞ்ச
கொஞ்சமாக
திரும்ப
பெற்றான்
ஏஜென்ட்....

அதில்
திரும்பி
பார்க்காதவன்
நான்...

நாளடைவில்
அவனின்
தொடர்பு
முழுதாய்
துண்டானது..

எங்களின்
நட்பு
பலம்
இரெண்டானது....

சிறந்த
வேலை
ஆட்களை
ஊர்
ஊராய்
சென்று
இருவரும்
பிடித்தோம்...

உழைப்பின்
ஊதியத்தை
வியர்வை
காயும்
முன்னே
உரியவருக்கே
கொடுத்தோம்....

நாட்கள்
நகர்ந்தது...

என்
வயதும்
தான்...

ஊரில்
அப்பா
அம்மா
தனியாக
இருப்பதால்
2012ல்
இதே
ஊருக்கு
அவர்களை
அழைத்தேன்
ஆசையாக...

தனி
வீடு
இலட்சம்
இரண்டு
கொடுத்து...

அடமானம்
பிடித்தேன்...

பெற்றோர்
இங்கேயே
வர
வேண்டும்
என
அடம்
பிடித்தேன்...

அவர்களோ...
ஊர்
தெரியாத
ஊரில்
நாங்கள்
செய்வது
என்ன!?

வீட்டில்
சும்மா
இருந்து
என்ன
பண்ண???

என்றனர்...

நானே
உங்களை
பார்த்து
கொள்கிறேன்...
என்று
கட்டாய
ஓய்வு

உழைப்பில்
இருந்து
என
அழைத்து
வந்தேன்...

ஆனால்
அது
நீடிக்கவில்லை...

ஏன்!!
எப்படி!!
எதனால்...!!!?
நாளை
பார்ப்போமா....

3 months ago | [YT] | 18

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை .. பாகம் 15
இறுதி பாகமாக கூட இருக்கலாம்❤️🙏

அந்த
ஏஜென்ட்
முதலாளி-
தொழிலாளி
பேசுவதை
தவிர்ப்பான்....

பேசினால்
செய்வதறியாது
திகைப்பான்...

எங்கே
என்ன
பொருட்களை
வாங்குகிறோம்
என்பதை
கூட
மறைப்பான்...

தரம்
நல்லா
இல்லையே
என்றால்
முறைப்பான்....

பாஸ்மதி
அரிசி கிலோ
67 ரூபாய் ((2011)
என
மூட்டை
மூட்டையாக
வாங்கி
போட்டுவிட்டான்...

ஆஹா...ஓஹோ
அற்புதமான
அரிசி
என்றான்...

அரிசியை
பார்த்தால்
மஞ்சள்காமாலை
வந்தது போல்
உள்ளது....

என்ன
மசாலா
போட்டு
சமைத்தாலும்
நான்
ஏன்
நல்லா
இருக்க
வேண்டும்
என
கேட்கிறது....

இந்த
ஏரியாவில்...
இது
புதுசு
என்பதால்...
முதலாளிக்கும்
தெரியவில்லை...

அவனோ
இது
ஸ்பெஷல்
அரிசி
இப்படித்தான்
இருக்கும்
என்கிறான்....

இவரோ
அப்படியா!!
சரி
சரி..
என்கிறார்...

என்
கண்
முன்
நடந்தாலும்
அநியாயத்தை
தட்டி
கேட்க முடியவில்லை...

இவனால்தான்
நாம்
இங்கு
வந்து
இருக்கிறோம்....

எப்படி
இவனை
எதிர்த்து
பேசுவது
என
தயக்கம்...

ஏற்கனவே
இப்படி
பேசி
பேசி
ஏகப்பட்ட
வேலையை
இழந்தாயிற்று...

எனவே
அமைதி
காப்போம்
என
இருந்தாயிற்று....

அனையப்போகும்
விளக்கு
பிரகாசமாக
எரிவதை
போல்...

அந்த
ஏஜென்ட்டுக்கு
ஒரு
விபரீத
ஆசை...

நாமே
முதலாளி
ஆகி விட்டால்
என்ன!??

இவரின்
முதலீடுக்கு
ஈடு
கொடுக்க
அவனிடம்
ஈடு (பணம்)
இல்லை....

எனவே
இவ்வளவு
பெரியதாய்
வேண்டாம்...
குறைந்த
முதலீட்டில்
தனியாய்
துவங்க
போகிறேன்...

என
காரைக்காலில்
அடி
வைப்பதாய்
செய்தான்
முடிவு....

நல்ல ஊர்
நன்றாக
போகும்
வியாபாரம்
என
நம்பி...

அதாவது
அரசனை
நம்பி
புருசனை
கைவிட்ட
கதையாய்.....

இந்த
கடையை
நான்
அங்கிருந்தே
பார்த்துக்கொள்கிறேன்..
புதுக்கடையை
நானே
நடத்திக்கொள்கிறேன்
என்றான்.....

அதற்கும்
ஆட்டுகிறார்
இவர்
தலையை...

வெட்ட
வெட்ட
காட்டுகிறார்
தலையை....

அய்யோ
இப்படியுமா?
ஒரு
பொறுமைசாலி🧐
நான்
பார்த்து
இல்லை...

அவனோ
இந்த
கடையின்
பெயரை
பயன்படுத்தி
எல்லாப் பொருட்களை
வாங்கி
கொள்கிறேன்....

புது
மாஸ்டராக
நல்ல
ஆள்
வேண்டும்
என்று
என்னிடமே
கேட்கிறான்....

இவன்
இங்கேயே
இருப்பதால்....

எங்களை
பரஸ்பரம்
பேச
கூட
விடமாட்டான்...

சரி
என
நானே‌
என்
குருவை
வர
சொல்லி
அந்த
கடையில்
சேர்த்தேன்..

சேர்த்தப் பின்னர்
வேர்த்தேன்...

ஏன்...டா!
சேர்த்தோம்
என!

ஆம்
நல்ல ஊர்
நல்ல மாஸ்டர்
நல்ல பொருட்கள்
நல்ல இலவச பொருளாதாரம்
இத்தனை
இருந்தும்
நடக்கவில்லை
அவனுக்கு
வியாபாரம்....

ஆம்
ஆண்டவன்
என்ன
அப்துல்‌ காதாரா!??
சரி
சரி
என
தலையாட்ட!!

ஒட்ட
ஒட்ட
வெட்டிவிட்டான்
இவன்
வாலாட்ட...

ஆம்
ஏமாற்றி
சேர்த்த
அனைத்து
பணமும்
அம்பேள்.....

மாதம்
மூன்று
ஆனது...
நிலைமை
முற்றி
போனது...

நாகை
கடை
நல்ல
வியாபாரம்..

காரைக்கால்
கடை
கடும்
நஷ்டம்....

ஆமாம்
தொழில் தர்மம்
என்று
ஒன்று
இல்லையா!!

அப்பாவி
ஒருவரை
இப்படி
ஏமாற்றினால்
எந்த
தர்மமும்
சும்மா
விடாது...

அதுவும்
செய்வதெல்லாம்
அதர்மம்
என்றால்
சும்மா
விட்டுவிடுமா!?

இந்த
நேரத்தில்

அவன்
வாங்கிய
அரிசி
காலியாகும்
நேரம்....

அது
தான்
அவனை
காவு
வாங்கும்
நேரமும்
கூட....

முதலாளி
என்னிடம்...
தினேஷ்
நாம
வேற
அரிசி
போடலாமா!?
என்றார்....

நானோ
நீங்க
ரேஷன்
அரிசி
குடுத்தா கூட
போடுவேன்
என்றார்...

முதலாளி
நாம்
சென்னை
சென்று

மாதிரி(sample)
பார்த்து
வாங்கலாமா!?
என்றார்...

அதனால்
என்ன
தாரளமாக
போகலாம்....
என்றேன்.....

சென்னை
எங்களை
வரவேற்ற
விதமே
சரியில்லை...

அது
மிகப்பெரிய
மார்க்கெட்...

நாங்கள்
ஒரு
மூட்டை
வாங்கி
சமைத்து
பார்த்தால்
பின்பு
வாங்கி
கொள்கிறோம்...
என்றோம்...

அவர்களோ..
அதைப்பற்றி
கவலைபடுவதாய்
தெரியவில்லை...

பிறகு
பாண்டிச்சேரி
நமக்கு
பக்கம்...
அங்கேயும்
பார்ப்போமா
என்றார்
முதலாளி...

நீங்க
ரைட்டுனா...
ரைட்...
லெப்டுனா
லெஃப்ட்...
என்றேன்.....

அப்படியாக
பாண்டி
பாரதியார் தெரு
தணிகாச்சல முதலியார்
கடைக்கு
போனோம்....

அப்போதெல்லாம்
எங்களிடம்
கார்
இல்லை...
பேருந்து
பயணம்
தான்.....

வயது 21
அப்போதே
நான்
ஆயிரம்
யோசனை
சொல்வேன்....

காரணம்
என்னை
பொருத்தவரை
இவர்
அமிர்தத்தை
போன்றவர்..
அவன்
நஞ்சை
போன்றவன்......

எனவே
அதர்மம்
எப்போதும்
ஜெயிக்காது..
என்பதை
நான்
என்னை
அறியாமலேயே
அறிந்து
இருந்தேன்....

நாங்கள்
நான்கு
மூட்டை‌
அரிசி
தலா
இரண்டு
இருவருக்கும்
என
தோளில்
சுமந்து
பேருந்தில்
வந்தோம்...

மறுநாள்
பிரியாணி
செய்தேன்...

மகிழ்ச்சி
வெள்ளத்தில்
முதலாளி

ஆம்
ஆயிரம்
சூரியனாய்
பிரகாச
புன்னகைப்பு
அவரில்....

அதுதானே
தேவை
என்னில்.......

விஷயம்
கசிந்து விட்டது..
ஆம்
மற்ற
தொழிலாளிகள்
ஏஜென்டிடம்
பற்ற
வைத்தனர்...
இவ்வாறாக!!

அண்ணா
நீங்கள்
இல்லை
இங்கு...

எனவே
எல்லாமே
மாறிக்கொண்டே
போகிறது....

கணக்கு
என்றால்
என்ன
என
கேட்கும்
முதலாளி!!

இப்போது
தொட்டதுக்கெல்லாம்
கணக்கு
கேட்கிறார்....
காரணம்
அந்த
பொடிப்
பயல்!!

இருவரும்
இருக்கின்றனர்
நகையும்...
சதையுமாக..

எனவே
ஒவ்வொன்றிலும்
நம்
பெயர்
பெறுகிறது
அடியும்
உதையுமாக....

நம்முடைய
ஊழல்
குற்றச்சாட்டு
அனைத்தும்....
தெரியவந்து விட்டது...

என
போட்டு கொடுக்க
எனக்கு
அந்த
ஏஜென்ட்டிடம்
இருந்து‌
போன்
வந்தது....

என்ன ஆனது!!!!?
நாளை பார்ப்போம்...

இன்னும்
ஒன்று
அல்லது
இரண்டு
பாகத்தில்
முடித்து விடவா கதையை....!!!
உங்கள் விருப்பமே
என்
விருப்பம்...
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது....

3 months ago | [YT] | 28

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 14
முதலாளி பற்றிய ஓர் அறிமுகம்🥰👍

ஏஜென்ட்
இப்படி
சொல்ல...

நானும்
கோவத்தில்
வந்த
வார்த்தைகளை
வாய்க்குள்ளேயே
மெல்ல....

கமிஷன்
பிடித்தாலும்
என்ன
செய்வது
300 ரூபாய்
சம்பளத்தில்
இருந்து
450 கிடைத்ததே
மகிழ்ச்சி
என
இருந்தேன்....!

அனைத்திலும்
கமிஷன்
எடுக்கும்
வேலைகள்
எல்லாம்
தெரிந்தும்
முதலாளி
அமைதி
காப்பார்...!

இருந்தும்
ஏஜென்ட்டிம்
புன்னகை
பூப்பார்!!

காரணம்
அவருக்கு
இந்த
தொழில்
புதிது...

முதலாளி
பற்றிய
அறிமுகம்!!

பெயர்
முகமது அப்துல்காதர்....

முகமது
முகம்...அது
வாடாதது!!

சுகம்!!
சுவை..என
தேடாதது.....

ஆம்.
உழைப்பு
தான்
அவர்
உயிர்ப்பு....

தேவையில்லாமல்
திறக்காகது
அவர்
வாயும்..

திறந்தால்
பதில்
பேசாது...
எந்த
வாயும்...

காரணம்
பேசுவதெல்லாம்
நியாயம்...

எனவே
புன்னகை
நம்மை
அறியாமலே
அவர்
மீது
பாயும்....

உரக்க
பேசினால்
கூட
அடுத்தவருக்கு
கேட்காது....

கேட்டாலும்
கோபப்படாது
நம்
காது.....

தரம்
தாழ்ந்த
பேச்சுக்கள்
தடை
செய்யப்பட்ட
பகுதி
இவர்
நாக்கு....

சொன்ன
சொல்
தவறாதது
இவர்
வாக்கு....

2014
எ.டி.ம்
பே.டி.ம்
என்னிடம்
இல்லாத
காலம்...

பயணத்தில்
இடையே
என்
தந்தை
காலமாகி..விட்டார்

உடனே
இரவோடு
இரவாக
வந்து
25000
பணம்
தந்து
இறுதி சடங்கு
நடத்தி
வைத்தார்.....

அன்று
முதல்
என்
மனதில்
காவியமாகி
விட்டார்.....

இருந்தாலும்
இடை இடையே..
வரும்
சிறு சிறு
சண்டை...

அதற்கும்
காரணம்
நானாக
இருப்பேன்....

இரண்டு
நாள்
இருவரும்
பேசாமல்
இருப்பது...
தான்
அதற்கு
பரிகாரம்...

பிறகு
என்ன!!
இந்த
அழகரும்
பரி...ஏறும்... (பரி-குதிரை)

விசுவாசம்
என்பது
ஒரே
நாளில்
வருவது
அல்ல....

அதே
போல்
அது
தொழிலாளிக்கு
மட்டும்
சொந்தமானதும்
அல்ல....

என்பதை
உணர்த்துவதை
போல்
நடப்பார்...

நம்
கஷ்டத்தில்
கேட்காமலே
கை
கொடுப்பார்...!

மதம்
பார்த்து
ஒரு
நாளும்
பார்த்ததில்லை
பேதம்....

அப்படி
இருக்க
சொல்கிறது
போல்
அவர்கள்
வேதம்...

ஆம்
ஆயிர கணக்கில்
எனக்கு
கடன்
கொடுப்பார்...
பெறுவார்...

கேட்க
மாட்டார்
பெறவும்
மாட்டார்
வட்டி!!

அவரின்
மத நூல்
போட்டு
இருக்கிறது
அவரை
கட்டி!!

ஏழை
எனக்கு
இருக்க
கூடாதா!
ஆசை
ஒரு
பிடி மண்ணாவது
என்
பெயரில்
வாங்க.....

வாங்கினேன்
அவர்
என்னை
தாங்க!!!

ஏணி
வைத்தால்
கூட
எட்டாது
அவர்
குணத்திற்கும்
என்
குணத்திற்கும்...
இருந்தும்‌
அனுசரிப்பார்...

என்
மனமே
என்னிடம்
சொல்லும்
உன்னை
சரிப்பார்....

இப்படிபட்ட
இடத்தில்
கூட
இரண்டு
மூன்று
முறை
கோபத்தில்
வெளியேற
பார்த்தேன்...

அவரோ
இரண்டு
நாள்
போகட்டும்
என்பார்...
இரண்டு
மணி
நேரம்
கூட..
தாங்காது...
என்
கோபம்...

ஆக
மொத்தத்தில்
என்
விசுவாசத்திற்கு
ஏற்றவர்....

இப்படி
பட்ட
மனிதரை
விட்டு போவது
எப்படி!?

போனால்
எனக்கு
கிடைக்க... கூடும்
இன்னும்
நிறைய
பணம்...

அதை
ஒருபோதும்
ஏற்காது
என்
குணம்!!!!

ஏஜென்ட் செய்த தில்லுமுல்லு ...தடைளை தகர்த்த என் தந்திரங்கள்...
நரியாக சில நேரம்
சரியாக சில நேரம்
இவை எல்லாம்...15 ஆம் பாகத்தில்....🙏

3 months ago | [YT] | 19

DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 13
இனிதான் ஆட்டம் ஆரம்பம்🥰🥰🙏

இரவு
நேரம்
ஆதலால்
சரியாக
பரிமாறப்படவில்லை
வார்த்தைகள்..

காரணம்
அனைவருக்கும்
தூக்க...
கலக்கம்..🙂

விடியட்டும்
எனக்கூறி
உறங்குவது
என
முடிவானது...!

சற்று
நேரத்திலேயே
வந்துவிட்டது
விடிவானது!!

என்னை
இங்கு
வேலைக்கு
அழைத்தவர்
பெயரை
தவிர்க்க
போகிறேன்....

காரணம்
போகப்
போக
உங்களுக்கு
புரியும்...!

ஆறு மணி
காலை
ஒரு
குரல்...

தினேஷ்
வந்து
விட்டாரா
என!!

இவ்வளவு
மரியாதையாக
பேசுகிறார்களே!
என
உள்ளுக்குள்
ஆச்சரியம்...

எங்க
ஊரில்
வா!
போ!
என்பதே
மரியாதையான
சொற்கள்
தான்....

ஆனால்
இங்கு
யாரும்
யாரையும்
அப்படி
விளிப்பதில்லை..

ஆனால்
சிறு
பாலகன்
என்னை
வந்துவிட்டாரா!?
என
விளித்ததால்
நானோ
ஆச்சரியத்தில்...
புருவம்
உயர்த்தி
விழிக்கிறேன்..!!

அந்ந
குரலின்
சொந்தகாரர்
ஜன்னலின்
ஓரத்தில்
இருந்து
இப்படி
கேட்க....

என்னை
வேலைக்கு
அழைத்த
ஏஜென்ட்
ம்..ம்..
வந்துட்டார்..
நான்
7.30 போல
கூட்டி
வருகிறேன்...
என்றுக்கூற

அவரோ
சரி...சரி
என
பறந்தார்...

நானும்
ஏஜென்ட்டும்
கடைக்கு
செல்ல
மணி
எட்டு...

20 கிலோ
பிரியாணி
செய்ய
வேலைகள்
மும்முரமாய்
நடந்து
கொண்டு
இருந்தது....

நீல கலர்
முழுக்கை
சட்டை
வெள்ளை
கைலியோடு
ஒருவர்...
வெங்காயம்
வெட்டிய படி
இருந்தார்....

ஏஜென்ட்
என்னிடம்
இவர்தான்
முதலாளி
என்றார்....

அவர்
வாங்க
வாங்க
என்றார்..

முகமன்
பரிமாற
சிறு
புன்னகையோடு
சந்திப்பு
நிகழ்ந்தது...

எனக்கு
ஏகப்பட்ட
ஆச்சரியம்..
இதுவரை
நான்
பார்த்த
முதலாளிகள்
தோரனையான
முதலாளிகளாக
இருந்தனர்...

ஆனால்
இவர்
முதலாளி
என்ற
தோரனையே
இல்லாமல்
இருக்கிறார்...

நம்மையும்
பார்த்து
மதிக்கிறார்..
.
இவர் தான்
காலையில்
தினேஷ்
வந்துவிட்டரா
என
கேட்டவர்...!

கதைப்படி
நேற்று
வெள்ளிக்கிழமை
கடந்த
மூன்று
மாதமாய்
ஏஜென்ட்
மூலம்
பணியில்
இருந்தவர்...

சோமபான
பிரியராய்
மாறி
பிரியாணியை
போடாமல்
சரக்கை
போட்டு...
சாகசம்
செய்ததால்

பணியில்
இருந்து
நீக்கப்பட்டார்...

அவசரத்திற்கு
உள்ளூர்
பிரியாணி( புல்லட் அரிசி)
மாஸ்டர்
யாரோ
ஒருவர்..

15 கிலோ
பாஸ்மதி
பிரியாணியை
குழைய
விட்டுவிட்டார்..

காரணம்
அவருக்கு
மட்டுமல்ல..
அந்த
ஊருக்கே
பாஸ்மதி
அந்த
அளவுக்கு
பரிட்சையம்
இல்லாத
காலம்(2010-2011)

இதனால்
தான்
ஏகப்பட்ட
எதிர்பார்ப்பு
என்
மேல்...

ஆனால்
என்னை
பார்த்ததும்..

சரியாக
இன்னும்
மீசை
கூட
முளைக்காத
பயல்...
என்ன
செய்ய
போகிறானோ!
என்ற
நியாயமான
பயம்...
அவர்களுக்கு...

தாடி
வைத்தவரே..
தடுமாறிய
அரிசி
இது...

என்னிடம்
ஒரு
பழக்கம்
உண்டு...

புதிய
இடத்தில்
சமைத்தால்
பொருட்களை
எண்ணி
பார்ப்பேன்..

அவர்கள்
என்னையே
பார்க்கின்றனர்..

என்ன
செய்கிறீர்
என்றார்...
முதலாளி...

அனைத்தும்....
சரியாகத்தான்
உள்ளதா
என
பார்க்கிறேன்...
என்றேன்...

ஒரு
மாதிரியாய்
தலை
அசைத்துவிட்டு
சென்றுவிட்டார்...

ஏஜென்ட்
என்னை
சமைக்க
சொல்லிவிட்டு
சென்றார்...

விறகு
அடுப்பு..

இரும்பு
துடுப்பு....

விரு விருவென
பிரியாணி
வேலை
ஆரம்பம்...

12.00
மணிக்குள்
மட்டன்
மற்றும்
சிக்கன்
பிரியாணி
தயார்....

அந்த
ஏஜென்ட்
தான்
பிரியாணியை
உடைத்தார்....

எதுவும்..
சொல்லவில்லை...

விடிய
விடிய
பயண..கலைப்பு
நீங்க...
ரூமுக்கு
போய்...
ஓய்வெடுங்கள்
என்றார்...

ஒருவேளை
பிரியாணி
பிடிக்கவில்லையோ!?
என
எனக்கு
ஒரு யோசனை..

முதலாளியோ
இருங்க
நான்
கூட்டிட்டு
போகிறேன்
என்றார்...

அவரின்
இருச்சக்கர
வாகனத்தில்
முதன்
முதலில்
சென்றேன்...

அவர்
என்னிடம்
கேட்டது..
என்ன
வயது
உங்களுக்கு...

எனக்கு
பயம்...

குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைத்து
விட
போகிறார்...என..

அங்கே
ஒரு
பொய் ..21 என்றேன்...(19)

அவ்வளவு
தானா
என்றார்....

((அய்யோ
குறைத்து
சொல்லிவிட்டோம்
போல்..))

அவ்வளவு தான்
என்றேன்...
கூடவே
ஏன்
என்றேன்...?

எவ்வளவு
நாளாய்
பிரியாணி
செய்கிறீர்கள்
என்றார்...

அனுபவத்தை
குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைந்து
விட
போகிறது....

எனவே
இன்னும்
ஒரு பொய்...
3 வருடம்((2))
என்றேன்...

எனக்கு
பொறுமை
இல்லை....

பிரியாணி
உங்களுக்கு
பிடிக்கவில்லையா!?
என்றேன்...

சத்தமாக
சிரித்து விட்டார்!!!

சூப்பரா
இருக்கு...
எப்படி
இவ்வளவு
சின்ன
வயதில்
இப்படி
சமைக்கிறீர்கள்
என
ஆச்சரியத்தில்
கேட்டேன்
என்றார்...

உடனே
நான்
வானத்தைப் போல...
விஜயகாந்த்
மாதிரி...
அந்த
சம்பளம்
எவ்வளவு
தருவீங்க
என்றேன்...

அதெல்லாம்...
நீங்க
ஏஜென்ட்டிடம்
பேசிக்கொள்ளுங்கள்
என்றார்...

ஆம்
இங்கு
இவர்
முதலீடு
செய்ததால்
முதலாளி..!

அந்த
ஏஜென்ட் தான்
வேலையாட்களை
சேர்ப்பது..
கடையை
நடத்துவது....
ஆர்டர்
எடுப்பது...
விலையை
நிர்ணயிப்பது....

எனவேதான்
இவர்
சம்பளம்
பற்றி
எதுவும்
பேசவில்லை.....

நான்கு
மணி போல
அந்த
ஏஜெண்ட்
வந்தார்..

சிறு சிறு
குறைகளை
சொன்னார்...

சம்பளம்
550
அதில்
100
எனக்கு
450
உனக்கு
என்றார்...

இந்த
நிபந்தனை..
நீ
இங்கு
பணிபுரியும்
வரை
என்றார்....

தொடரும்....14 ஆம் பாகத்தில் பார்ப்போமா!??

3 months ago | [YT] | 20