Downside Up TV

தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்... உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்...

அனைத்து தமிழ் நல் உள்ளங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🙏

4 years ago | [YT] | 13

Downside Up TV

🌱🌾👨‍🌾⚒️விவசாயி🌱🌾👨‍🌾⚒️
https://youtu.be/FQmWY8QSPH0

விண்ணையும் மண்ணையும்
நன்கு உணர்ந்த
காலத்தையும் நேரத்தையும்
கண்டுபிடித்த
மானுட பிறப்பின் முதல் விஞ்ஞானி.

நீரின் மேன்மை அறிந்து
நிலத்தின் வளம் அறிந்து
மண்ணின் மகிமை அறிந்து
விதையின் விதியை கண்டறிந்துவன்.

கால்நடைகளை அறவனைத்து
காடுமேடுகளையும் கழனியாக்கி
இயற்கையோடு பின்னிப்பினணந்து
தலைக்கனம் கொள்ளாமல் தன்னிலை மாறாத தங்கமகன்.

மண்ணனை பொன்னாக மதித்து
விதையை வீரியமாக்கி
உழவுவை உயிராக கருதி
விளைந்து நிற்கும் நெல்மணி கதிர்தனை கடவுளாக போற்றுபவன்.

மாசு இல்லா சூழ்நிலை
கள்ளம்கபடமற்ற மனம்
உழைக்கும் சிந்தனை
எளிய வாழ்க்கை முறை
உலகத்துக்கே உணவு அளிக்கும் உண்ணதம்
எல்லோர் மனதிலும் எப்போதும் குடியிருக்கும் நம்ம அன்பு "விவசாயி".

4 years ago | [YT] | 15

Downside Up TV

*******நினைத்ததை அடைய!*******


🌻அறிவியல் தளம்🌻

⭐️நம் சிந்தனை என்பது பிரபஞ்சத்தில் இதுவரை
நாம் பதியவைத்த பதிவுகளின் அலைவரிசையில் மூளை
தொடர்புகொள்வதால் உண்டாகிறது.

⭐️ஆனால்..
நம் மூளை செயல் இழந்த தொலைகாட்சி தானாக சேனல் மாறுவது போல் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது.

⭐️அதை சரியாக tune செய்து ஒரு விஷயத்தில் நம் எண்ணத்தை தீவிரமாக குவிக்கும் போது அது பிரபஞ்ச அணுக்களில் அழுத்தமாக பதிகிறது.

⭐️அதைதான் நாம் ஆழ்மனம் என்கிறோம்.

⭐️அதிக வலிமை கொண்டவிந்தணு எப்படி கருமுட்டயை துளைத்துஉள்ளே சென்று வடிவம் பெறுகிறதோ அதேபோல் அதிக ஆதிக்கம் கொண்ட எண்ணமானது ஆழ்மனத்தை அடைந்து செயல் வடிவம் பெறுகின்றது.

⭐️நங்கள் கற்பனையாக எதை உணர்கிறீர்களே அது அணுக்களில் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினையுங்கள்.

⭐️உங்கள் எண்ணமும் என் எண்ணமும் சேர்ந்து ஒரு புதிய எண்ணம் உருவாகலாம். அது வேறு ஒருவர் மனதை அடைந்து புதிய கண்டுபிடிப்பாகலாம்.

⭐️நங்கள் செய்ய வேண்டியது நேர்மறையான எண்ணங்களால் மனதை நிரப்புவது மட்டுமே. சுருக்கமாக சொன்னால் நீங்கள் உணர்வது பிரபஞ்ச அணுக்களில் உங்கள் பெயரில் பதியும்.

⭐️இதுவரை எதை பதிய வைத்து இருக்குறீர்களோ அதுவே இன்றைய உங்கள் வாழ்க்கை அனுபவம்.

⭐️உங்கள் மனதை ஒரே அலைவரிசையில் தொடர்ந்து செலுத்த முடிந்தால் நீங்கள் தான் கடவுள்.

⭐️உங்களால் முடியாது எதுவும் இல்லை.



🌻ஆன்மீக தளம்🌻

⭐️நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கு ஈர்ப்பு விசை மாதிரி.

⭐️நங்க நல்லவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் கட்டிடத்துக்கு மேல இருந்து குதிச்சீங்கனா கீழ விழபோறது உறுதி.

⭐️அதேமாதிரி நீங்க நல்லத சிந்திச்சாலும் கெட்டத சிந்திச்சாலும் அத நீங்க அனுபவிக்க வேண்டியது நிச்சயம்.

⭐️*யத் பாவம் தத் பவதி-*
எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்.

⭐️நங்க முடியும் என்று சிந்தித்தாலும் முடியாது என்று சிந்தித்தாலும் இரண்டுமே சரிதான்.

⭐️கவனம் குவியும் இடத்துல சக்தி பாயும். கீழே உள்ளதை செயல்படுத்தி நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத வாழ்க்கையை அனுபவியுங்கள்.

1.என்ன வேண்டும் என்பதை முடிவு செய்
2.அதை பிரபஞ்சத்திடம்(கடவுள்) கேள்
3.அது கிடைத்து விட்டதாக நம்பு
4.அதை நிஜம் போல்மனதில் காட்சி படுத்தி பார்
5.அதை கொடுத்ததற்கு நன்றி சொல்.

⭐️இதை எல்லாம் நீங்க செஞ்சா!
நீங்க பாடுற பாட்டுக்கு பிரபஞ்சம் உங்ககூட சேர்ந்து பாடும்.

⭐️இத எல்லாம் உண்மையாக்குற விதமா நீங்க கேட்டதை பிரபஞ்சம் உங்கள் கண் முன்னாடி நிறுத்தும்.

⭐️இது நிச்சயம் நடக்கும்னு எமக்கு உறுதியாக தெரியும்...அனுபவித்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்...

The Secret | இரகசியம்: www.youtube.com/playlist?list...
🌻எண்ணம் போல் வாழ்க்கை

நன்றி!
வாழ்க வளத்துடன் 🙏!

5 years ago | [YT] | 27

Downside Up TV

*🍲அறுசுவை உணவு🍲*


⭐️தமிழர்களின் உணவுமுறை ஆறு சுவைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு சுவைகளும், ஐம்பூதங்களின் கூட்டுறவால் ஆனவை.

மண்+ நீர் - இனிப்பு
மண்+ தீ - புளிப்பு
நீர் + தீ - உவர்ப்பு
வளி+ தீ - கார்ப்பு
மண்+ வளி - துவர்ப்பு
வளி + வெளி - கசப்பு

"துவர் மிஞ்சுங் கறியால் பூரிக்கும் வாதம் செறி உவர் கைப்பேறில் பித்து சீறும் கிளிமொழியே கார்ப்பு இனிப்பு மிஞ்சில் கபம் மிகும் சட்டிரத சேர்ப்புணரில் நோயணுகாதே."
-பதார்த்த குண சிந்தாமணி


1.வாத (வளி) நோயை உண்டாக்கும் சுவைகள் : கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு

2. பித்த ( தீ) நோயை உண்டாக்கும் சுவைகள் : கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு

3. கப (நீர்) நோயை உண்டாக்கும் சுவைகள் ; இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு.

⭐️வாத(வளி) , பித்த(அழல்), கப(ஐயம்) நோய்கள் உண்டாவதற்குரிய காரணங்கள் உணவுதான்.

⭐️ஐம்பூதங்களில் காற்று, தீ, நீர் ஆகிய மூன்றும் மாறுபடக்கூடியவை.

⭐️இதற்கு காரணம் உயிரின் செயல்பாடுகளே.

⭐️உயிரானது உடலில் செயல்புரியும் போது மூன்று தொழில்களை செய்கிறது.
அவை;
1. படைத்தல் - வளி
2. காத்தல் - தீ
3. அழித்தல் - நீர்

⭐️மேற்கூறிய மூன்று தொழில்களை செய்யும் உயிரின் ஆற்றல்களுக்கு வளி, அழல், ஐயம் என சித்தர்கள் பெயரிட்டனர்.

⭐️இதனை சித்தர் தேரையர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"வாதமாய் படைத்து, பித்த வன்னியாய் காத்து, சேட்ப
சீதமாய்த் துடைத்து"
- சித்தர் தேரையர்

⭐️இவ்வாறு தத்துவ அடிப்படைகளை கொண்ட சித்த மருத்துவம் உணவே மருந்து என்பதை வலியுறுத்துகிறது.

⭐️அறுசுவை உணவு ஐம்பூத சமநிலை நம் உடலில் உருவாக்கி,, வாத பித்த கபம் என்ற முக்குற்றத்தை அழித்து உடலும் உள்ளமும் வளமை பெற வழிகாட்டுகிறது.

⭐️இனிமேல் அறுசுவை உணவு உண்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

5 years ago | [YT] | 18

Downside Up TV

வணக்கம் நண்பர்களே,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இதற்கு முன் நம்முடைய சேனலில் 5 நாள் வகுப்பின் ஆடியோ வெளியிடப்பட்டது. சில நண்பர்கள் வீடியோ வடிவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். 5 நாள் வகுப்பு ஆடியோவிற்கும் வீடியோவிற்கும் என்ன வித்தியாசம் என்றால் வீடியோ பதிப்பு சற்று மேம்படுத்த(Advanced)பட்டதாகும். யோகா போன்ற சில செய்முறை விசயங்களை(practical stuff) ஆடியோவில் காட்ட இயலாது. எனவே ஹீலர் பாஸ்கர் ஐயா 5 நாள் வகுப்பு முழு பதிப்பு வீடியோ வடிவில்
(மொத்தம் 55பகுதிகள்)

விரைவில்...


நன்றி...
வாழ்க வளத்துடன் 🙏.

5 years ago | [YT] | 60

Downside Up TV

வணக்கம் நண்பர்களே 🙏


இயற்கை வைத்தியம் (Nature Cure)

உணவு

பண்டைக் கிரேக்க நாட்டில் ஈஸ்குலேப்பியஸ் (Aesculapius) என்னும் மருத்துவர் இருந்தார்.

அந்தக் காலத்தில், இப்போது மாதிரித் தீராத நோய்கள் அவ்வளவாகக் கிடையாது. ஆகையால் தன்னிடம் வரும் நோயாளிகளையெல்லாம் அவர் பெரும்பாலும் குணப்படுத்தி அனுப்ப முடிந்தது. அதனால் மக்கள் அவரை ஒரு தெய்வம் போலவே கருதினார்கள். அவர் இறந்த பிறகு, கிரேக்கர்கள் அவருக்காக ஒரு கோயில் எழுப்பினார்கள். அந்தக் கோயிலில் பூஜை வைத்துக் கொண்டிருந்தார் ஒரு பூசாரி.

கிறிஸ்து பிறப்பதற்கு 460 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பூசாரிக்கு ஒரு மகன் பிறந்தான். ஹிப்போக்ரேட்டஸ் (Hippocreates) என்று அவனுக்குப் பெயரிட்டார்கள். அவன்தான் இன்றைய மேனாட்டு மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவன். ஆனால், அவனை இயற்கை மருத்துவத்தின் தந்தை எனப் போற்றுவதே இன்னும் பொருத்தமாய் இருக்கும். ஏனென்றால், இருமல், காய்ச்சல், வலி இவையெல்லாம் உண்மையில் வியாதிகள், அல்ல - வியாதிகளைப் போக்குவதற்காக உடம்பில் ஏற்படும் நிகழ்ச்சிகள் என்று முதலில் கூறியவர் ஹிப்போக்ரேட்டஸ் தான்.

எளிய உணவு, தூய காற்று, அளவான உடற்பயிற்சி இவைதாம் ஆரோக்கிய வாழ்வை அளிக்கக் கூடியவை என்று முதன் முதலில் கூறியவரும் அவரே தான். ஆனால் இவற்றையெல்லாம்விட முக்கியமான இன்னொரு சிறப்பான அறிவுரையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்!' இதுதான் அந்த அறிவுரை. இயற்கை வைத்தியத்தின் அடிப்படைக் கொள்கையும் இதுவேதான்! இந்தக் கொள்கையை நூற்றுக்கு நூறு கடைப்பிடிப் பவன்தான் உண்மையான இயற்கை வைத்தியன்!

ஹிப்போகிரேட்டஸ் வகுத்துக் கொடுத்த இந்த அடிப்படைக் கொள்கையை நூற்றுக்கு நூறு புறக்கணிக்கிறவர்கள் அல்லோபதி டாக்டர்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவக் கலையின் தந்தை என்பதாக ஹிப்போகிரேட்டஸ் மீது உரிமை கொண்டாடுவது, வெறும் கேலிக்கூத்தே தவிர வேறு அல்ல?

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும், (Let food be the medicine and let medicine be the food) என்றால் அதன் பொருள் என்ன?

'உணவே உன்னுடைய மருந்தாக இருக்கட்டும்' என்பது; நோயாளிகளை நோக்கிக் கூறப்பட்ட அறிவுரை. அதாவது, நமக்கு நோய் வந்தால், அந்த நோய்க் காலத்தில் நாம் உண்ணுகிற உணவுகளே நமக்கு மருந்தாக அமைய வேண்டும். அவ்வாறு மருந்தாக அமையக்கூடிய உணவுகளை மட்டுமே நாம் தேர்ந்து எடுத்து உண்ண வேண்டும். நமக்கு உணவாகப் பயன்பட இயலாத எதையுமே நாம் மருந்தாக உண்ணக் கூடாது! இதுதான் அந்த அறிவுரையின் கருத்து.

இப்போது நமது அல்லோபதி டாக்டர்கள் கொடுக்கிற எந்த ஒரு மருந்தாவது இந்த இலக்கணத்துக்குப் பொருந்துவதாக இருக்கிறதா? சாதாரண தலைவலிக்கு கொடுக்கிற மருந்தையும் காய்ச்சலுக்குக் கொடுக்கிற மருந்தையும் எடுத்துக் கொள்வோம். எனினும், இந்த மருந்துக்களை நம்முடைய பசி தீர்க்கும் உணவாகப் பயன்படுத்த முடியுமா?

'உணவாகப் பயன்படுத்த முடியாத எதையுமே மருந்தாகப் பயன்படுத்தாதே' என்பது ஹிப்போகிரேட்டஸின் கட்டளை. இயற்கை வைத்தியன் ஒருவன்தான் அந்தக் கட்டளையை இன்றளவும் தலைமேல் தாங்கிக் கடைப்பிடித்து வருகிறான். அல்லோபதி டாக்டர்கள் அதைக் காலின் கீழ் போட்டு மிதித்து வருகிறார்கள்!

அடுத்தபடியாக,

'மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்' என்றார் ஹிப்போகிரேட்டஸ். நோயின்றி வாழும் மக்களை நோக்கிக் கூறப்பட்ட அறிவுரை இது.

இப்போது நீ நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இதேபோல் எதிர்காலத்திலும் நீ நோயின்றி வாழவேண்டுமானால், 'மருந்துபோல் உதவக்கூடிய உணவுகளையே நீ உட்கொள்ள வேண்டும்' - இதுதான் அந்த அறிவுரையின் கருத்து.

ஸாத்விக, இராஜஸ, தாமஸ உணவுகள்

மருந்துபோல் உதவக்கூடிய உணவுகள் என்றால், அவை யாவை?

கேழ்வரகு, கோதுமை, அவல், அரிசி, பாசிப்பயறு, அக்ரோட்டு, தேங்காய், வேர்க்கடலை, பாதாம் பருப்பு, பனை நுங்கு, பப்பாளி, பேரிக்காய், வால் பேரி, வாழைப்பழம், ஆல்பகோடா, அன்னாச்சிப்பழம், தக்காளிப்பழம், சப்போட்டா பழம், தர்பூஸ் பழம், ஆரஞ்சுப்பழம், நாரத்தம் பழம், பனம்பழம், பச்சைக்கொடி முந்திரிப்பழம், கறுப்புத் திராட்சைப்பழம், கடாரங்காய், கொடுக்காப்புளிப்பழம், மாம்பழம், மாதுளம்பழம், பம்பிளிமாஸ், பலாப்பழம், நாவல் பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், பறங்கிக்காய், நெல்லிக்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், கொவ்வைக்காய், காரட்டு, புடலங்காய், வெண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சுரைக்காய், மணத்தக்காளி, பசலைக்கீரை, கையாந்தகரை, கறிவேப்பிலை, முட்டைக்கோஸ், நூக்கோல், முளைக்கீரை, அரைக்கீரை, இலந்தைப்பழம், விளைக்கீரை, விளாம்பழம்...

இவையும், இவை போன்ற இன்னும் பல காய்கனி கிழங்குகளும் மருந்துபோல் உதவக்கூடிய உணவுகள் ஆகும். அதாவது, இந்த உணவுகளை அளவு அறி

ந்து உண்பவர்கள், நோய்வாய்ப்படாமலே நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள். அதுமட்டும் அல்ல. இந்த உணவுகளை வழக்கமாக உண்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டுத் தம் நிதானத்தை இழந்து விடமாட்டார்கள். அவர்களுடைய அறிவு எப்போதும் தெளிவாகவும் கூர்மையாகவும் விளங்கிக் கொண்டிருக்கும். உள்ளத்தில் அமைதி நிலவும், உடம்பும் சுறுசுறுப்பாக இருக்கும். இத்தகைய உணவுகளுக்கு ஸாத்விக உணவுகள் என்று பெயர்.

'உணவு என்பது உடலை வளர்ப்பது. உள்ளத்தின் அமைதிக்கும், அறிவின் தெளிவுக்கும் உணவை எப்படிக் காரணமாக கூறமுடியும்? என்னும் ஓர் ஐயப்பாடு இங்கே சிலருக்கு எழக்கூடும்.

நாம் உண்ணும் உணவுகள் நம் உடலை மட்டும் அல்ல, உள்ளத்தையும் அறிவையும் கூடப் பாதிக்கின்றன என்பதற்கு, மது ஒன்றே போதுமான சான்றாகும். மதுவை அருந்துகிறவனுக்கு அவனுடைய உடலில் மட்டும்தான் கேடுகள் விளைகின்றன என்பது இல்லை. அவனுடைய உள்ளத்தில் வெறி ஏற்படுகிறது. அவனுடைய அறிவில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால் அவன் தன் நிதானத்தை இழந்து உளறுகிறான்! மதுவானது நம் உடலையும் உள்ளத்தையும் அறிவையும் உடனடியாகப் பாதிக்கிறது.

ஸாத்விகம் வகை உணவுகளைப் பற்றி பகவத்கீதை பின்வருமாறு கூறுகிறது:

'சாறு, பசை, உறுதி, சுவை இந்நான்கு குணங்களும் அமையப் பெற்றவை ஸாத்வீக உணவுகள், அவற்றை உண்பதால், ஆயுள் பெருகுகிறது. வலிமை வளர்கிறது. உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனம் அமைதி அடைகிறது. ஊக்கம் பிறக்கிறது.

பகவத்கீதை வகுத்துக் கொடுத்துள்ள இந்த இலக்கணங்களைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருள் ஸாத்வீக வகையைச் சேர்ந்ததா என்பதை நாம் எளிதில் புரிந்து கொண்டுவிட முடியும். ஆனால், எல்லா விதிகளுக்கும் சில விலக்குகள் இருப்பதுபோல, இந்த இலக்கணங்களுக்கும் சில விலக்குகள் உண்டு. எடுத்துக்காட்டாக, எலுமிச்சம்பழம் புளிப்பானது இருந்தாலும் அது ஸாத்வீக உணவு.

இந்த ஸாத்வீக உணவுகளில் அப்படி என்னதான் இருக்கிறது?

முதல்தர உணவுகளும் இரண்டாந்தர உணவுகளும்

பொதுவாக, உணவுகளில் உள்ள முக்கியமான சத்துக்களைப் பாகுபடுத்திப் பேசுகிற இன்றைய விஞ்ஞானிகள்.

# புரதப் பொருள்கள் (Proteins)

# மாவுப் பொருள்கள் (Starches)

# சக்கரைப் பொருள்கள் (Sugars)

# கொழுப்புப் பொருள்கள் (Fats)

இந்த நால்வகைப் பொருள்களும் தாம் மனித உடலுக்கு இன்றியமையாதவை என்று சொல்லுகிறார்கள்.

அப்படியானால், ஸாத்வீக உணவுகளில் இந்த நால்வகைப் பொருள்களும் நிரம்ப இருக்கின்றனவா?

இல்லை.

இந்நால்வகைப் பொருள்களும் அல்லாத இன்னொரு பொருள் ஸாத்வீக உணவில் இருக்கிறது.

அதுதான் தாதுஉப்புகள் (Mineral salts) என்னும் பொருள். இளங்கீரை வகைகளிலும், புதிதாகப் பறித்த இளங்காய்கறிகளிலும், கனிகளிலும் தளிர்களிலும் இந்தத் தாது உப்புகள் நிரம்ப இருக்கின்றன. அதனாலேயே இயற்கை வைத்தியத்தில் அவற்றை முதல் தரமான உணவுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தானியங்கள், பயறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவற்றில் புரதப் பொருள்களும், மாவுப் பொருள்களும், சர்க்கரைப் பொருள்களும், கொழுப்புப் பொருள்களும் இருக்கின்றன. இயற்கை வைத்தியர்கள் இவற்றை இரண்டாந்தர உணவுகளாகக் கருதுகிறார்கள்.

இரண்டாந்தர உணவுகளும் உடம்புக்கு ஓரளவு இன்றியமையாதவைதாம். ஏனென்றால், உடம்பின் வளர்ச்சிக்கு புரதங்கள் தேவைப்படுகின்றன. உடம்பிற்குச் சக்தி அளிப்பதற்கு மாவுப்பொருள்களும் சர்க்கரை பொருள்களும் தேவைப்படுகின்றன. உடம்பிற்கு வெப்பத்தை அளிப்பதற்குக் கொழுப்புப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இந்த மூன்று தேவைகளையும் கருத்தில் கொண்டுதான், சில இரண்டாந்தர உணவுகளையும் ஸாத்வீக உணவுகளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஸாத்வீக உணவுகளில் மிகப் பெரும்பான்மையாக காணப்படுபவை முதல்தர உணவுகளே ஆகும்.

இந்த முதல்தர உணவுகளில் உள்ள தாது உப்புகள் வேறு எந்த உணவுச் சத்துக்களிலிருந்தும் நாம் பெற முடியாத ஒரு பெரிய நன்மையை நமக்குச் செய்கின்றன. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு அவைதாம் உதவி புரிகின்றன.

எப்படியென்றால்,

நமக்கு நோய்கள் எதனால் வருகின்றன?

நாம் அறிந்தோ அறியாமலோ செய்கிற தவறுகளினாலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் நம் உடம்பினுள்ளே நச்சுப் பொருள்களும் அழுக்குப் பொருள்களும் சேர்ந்துபோய் விடுகின்றன. அவ்வாறு பல நாள்களாகச் சேர்ந்து போயிருக்கும் கழிவுப் பொருள்களை ஒரு நாள் வெளியேற்ற முயற்சி செய்கிறது நம் பிராணசக்தி. பிராணசக்தியின் அந்த முயற்சியைத்தான் நாம் நோய் என்ற பெயரால் அழைக்கிறோம். இது நாம் ஏற்கெனவே நன்கு அறிந்த ஒரு செய்தி.

கழிவுப் பொருள்கள் பல நாள்களுக்குச் சேர்த்து வைக்கப்படாமல், நம் உடம்பிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டு விடுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்படியானால் நமக்கு எப்போதுமே எந்த நோயும் வரமாட்டாது என்று ஆகிறது அல்லவா?

நாம் உட்கொள்ளுகிற முதல்தர உணவுகளில் அடங்கியிருக்கும் இயற்கையான தாது உப்புகள், நம் உடம்பில் சேருகிற கழிவுப் பொருள

்களை அவ்வப்போது வெளியேற்றிவிடுவதற்கு உதவிபுரிகின்றன. அதாவது, நாம் என்றைக்குமே யாதொரு நோய் நொடிக்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு முதல்தர உணவுகள் துணைபுரிகின்றன.

அதனால்தான், அந்த முதல்தர உணவுகளையே பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஸாத்வீக வகையைச் சேர்ந்த உணவுகளை, 'மருந்துபோல் உதவக் கூடிய உணவுகள்' என்று நாம் சொல்லுகிறோம்.

'மருந்தே உன்னுடைய உணவாக இருக்கட்டும்' என்று ஹிப்போகிரேட்டஸ் கூறியதுபோது, அவர் இத்தகைய உணவுகளைத்தாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது தவறு ஆகாது.

தாது உப்புகள் தாம் உடம்பைத் தூய்மைப்படுத்துகின்றன என்றால், அதற்காக நாம் கீரைகளையும் காய்கனிகளையும் தான் சாப்பிட வேண்டுமா? அதே தாது உப்புகளை நாம் செயற்கை முறையில் தயாரித்துச் சாப்பிடக் கூடாதா? என்று கேட்கப்படலாம்.

செயற்கை முறையில் ஏராளமான தாது உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அல்லோபதி மருந்துகளில் அந்த உப்புகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிற சாதாரண உப்புக் கூட ஒரு செயற்கை உப்புத்தான். ஆனால் இந்தச் செயற்கை உப்புகளுக்கு நம் உடம்பைத் தூய்மைப்படுத்தும் சக்தி கிடையாது. கீரை காய் கனிகளில் உள்ள இயற்கை உப்புகளுக்குத்தாம் அந்தச் சக்தி உண்டு.

அந்தக் கீரை காய்கனிகளும்கூட அவற்றைத் தண்ணீரில் வேக வைப்பதாலும், எண்ணெயில் வதக்குவதாலும் மிளகாய் ஊறுகாய் போடுவதாலும், தம் இயல்பான உப்புச் சத்துக்களை இழந்து விடுகின்றன.

செடியிலிருந்து பறித்தபடியே பச்சையாகச் சாப்பிடும் போதுதான், அவற்றில் உள்ள இயற்கையான தாது உப்புகளின் பயனை நாம் முழுமையாக அடைய முடியும்...

நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கட்டும்!

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏

5 years ago | [YT] | 12

Downside Up TV

*ஒரு குட்டிக்கதை*


அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.

அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.

திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.

ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.

உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.

அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.

மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.

அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

அரண்மனைகளில்
கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.

அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.

மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.

வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.

நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை.

வீட்டையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.

இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

மகிழ்ச்சியாக இருப்போம்.

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏.

5 years ago | [YT] | 15

Downside Up TV

ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ.

என்ன செய்ய வேண்டும்?

1) சினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.

2) கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை

3) கடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.

4) ரத்தம் வெளியே வந்தால் வர விடுங்கள். விஷம் ஏறிய ரத்தம் தான் முதலில் வெளிவரும். கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில், சோப்பு கொண்டு கழுவுங்கள். 

5) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்

6) பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே அழைத்துப் பேசி விடவும். இல்லையேல், அங்கு போன பிறகு உதவ மருத்துவர்கள் இல்லை என தட்டிக்கழிப்பார்கள்.

7) கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.

8) கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்

9) எல்லா சமயங்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சாத்தியம் ஆகாது. அப்படிப்பட்ட நேரத்தில் கிராமங்களில் பின்பற்றப்படும் வைத்தியங்களை செய்து பார்க்கலாம்.  நோயாளிக்கு வாழைச் சாற்றை கொடுப்பது நமது கிராமங்களில் உண்டு. அது விஷ முறிவுக்கு நல்ல மருந்து என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்துகொண்டிருக்கும் மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் வைத்து அழுத்துவார்கள். அப்படி செய்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்ப்பது நல்லது. 

10) நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். கண் இமை சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் இதனுடம் வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும். 

என்ன செய்யக்கூடாது:

1) வாயால் ரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பாக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்

2) காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.

3) ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.

5 years ago | [YT] | 13

Downside Up TV

இயற்கை Vs செயற்கை?

*நோய்கள் உருவாகும் இடங்கள் !*
-----------------------------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*ந

ோய்கள் குணமாகும

் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..


முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?

நன்றி!
வாழ்க வளமுடன்🙏

5 years ago (edited) | [YT] | 21

Downside Up TV

💎 💎 💎 💎 💎 💎 💎

*வணக்கம் நண்பர்களே 🙏*


கொரோனா வைரசின் தாக்குதல் இன்று குறையும்,

நாளை தீர்ந்து விடுமென்கிற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தி வருகிறோம்.

கொரோனா வைரஸ் இன்று இல்லையேல் நாளை காணாமல் போய்விடும் என்று காலத்தை கடத்தி வருகிறோம்.

நம்பிக்கையை நம் மனங்களில் சுமப்போம்.

அதேநேரத்தில் செய்ய வேண்டியவற்றை ஒத்திப் போடாமல் அந்தந்த நேரங்களில் செய்து முடிப்போம்.

கொரோனா முற்றிலும் முடிவடையும் என்று காத்திருந்தால் கொரோனா நம்மை வஞ்சித்துவிடும்.

வாழ்வை காத்துக் கொள்வோம்!

வாழும்போது உடனிருப்பவர்களின் உன்னதத்தை புரிந்துகொள்வோம்.

கடலில் வாழும் ஒரு சிறிய மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

உடனே அம்மாவிடம் சென்று அம்மா நாம் வாழ வேண்டுமென்றால் தண்ணீர் அவசியம் என்று கூறுகிறாய்.

அது எங்கே இருக்கிறது எனக் கேட்டது.

உடனே தாய் மீன் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரை காட்டியது.

அம்மா நீ தண்ணீரை காட்டு என்று மீண்டும் சிறிய மீன் அடம்பிடித்தது.

மீண்டும் தண்ணீரை காட்டியும் சிறிய மீன் நம்பவில்லை.

உடனே அப்பா மீனிடம் போய் கேட்க அப்பா மீனும் நீ தண்ணீரில்தான் வாழ்கிறாய்.

இதுதான் தண்ணீர் என்றது.

ஆனால் அப்பாவுக்கும் தண்ணீரை காட்ட தெரியலை என்று தீர்மானித்து,

உறவினர்களிடம் போய் கேட்டது.

ஒவ்வொருவரும் அப்படியே பதில் சொன்னார்கள்.

எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னதால் திருப்தி அடையாத குட்டி மீன்
இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் போய் கேட்டது.

உடனே திமிங்கலம் குட்டி மீனை அதன் முதுகில் ஏற்றி தரையில் கொண்டுபோய் போட்டது.

குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் உயிருக்காகப் போராடியது.

என்னை தண்ணீரில் விட்டு விடு
என கெஞ்சியது. உடனே திமிங்கலம்
நீ வாழ்ந்தது தான் தண்ணீர் என்றுச் சொல்லி குட்டி மீனை தண்ணீரில் விட்டது.

அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

நாமும் இப்படித்தான் நேயர்களே!

நம்மோடு உடன் வாழும்
அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்ற உறவுகள் நட்பிலும் மேலான உறவுகள் எல்லாம் உடன் வாழும் போது அவர்களின் அன்பை அனுபவிப்பதில்லை.

அவர்கள் பிரிந்த பின்புதான் அவர்களை அன்பு செய்ய நம் இதயம் துடிக்கிறது.

அம்மா, அப்பா இருக்கும்போது நாம் அன்பு செய்வதில்லை.

நாம் அன்பு செய்ய ஆசைப்படும் போது அவர்கள் நம்மோடு இருப்பதில்லை!

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏.

💎 💎 💎 💎 💎 💎 💎

5 years ago | [YT] | 14