Downside Up TV

*🍲அறுசுவை உணவு🍲*


⭐️தமிழர்களின் உணவுமுறை ஆறு சுவைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு சுவைகளும், ஐம்பூதங்களின் கூட்டுறவால் ஆனவை.

மண்+ நீர் - இனிப்பு
மண்+ தீ - புளிப்பு
நீர் + தீ - உவர்ப்பு
வளி+ தீ - கார்ப்பு
மண்+ வளி - துவர்ப்பு
வளி + வெளி - கசப்பு

"துவர் மிஞ்சுங் கறியால் பூரிக்கும் வாதம் செறி உவர் கைப்பேறில் பித்து சீறும் கிளிமொழியே கார்ப்பு இனிப்பு மிஞ்சில் கபம் மிகும் சட்டிரத சேர்ப்புணரில் நோயணுகாதே."
-பதார்த்த குண சிந்தாமணி


1.வாத (வளி) நோயை உண்டாக்கும் சுவைகள் : கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு

2. பித்த ( தீ) நோயை உண்டாக்கும் சுவைகள் : கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு

3. கப (நீர்) நோயை உண்டாக்கும் சுவைகள் ; இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு.

⭐️வாத(வளி) , பித்த(அழல்), கப(ஐயம்) நோய்கள் உண்டாவதற்குரிய காரணங்கள் உணவுதான்.

⭐️ஐம்பூதங்களில் காற்று, தீ, நீர் ஆகிய மூன்றும் மாறுபடக்கூடியவை.

⭐️இதற்கு காரணம் உயிரின் செயல்பாடுகளே.

⭐️உயிரானது உடலில் செயல்புரியும் போது மூன்று தொழில்களை செய்கிறது.
அவை;
1. படைத்தல் - வளி
2. காத்தல் - தீ
3. அழித்தல் - நீர்

⭐️மேற்கூறிய மூன்று தொழில்களை செய்யும் உயிரின் ஆற்றல்களுக்கு வளி, அழல், ஐயம் என சித்தர்கள் பெயரிட்டனர்.

⭐️இதனை சித்தர் தேரையர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"வாதமாய் படைத்து, பித்த வன்னியாய் காத்து, சேட்ப
சீதமாய்த் துடைத்து"
- சித்தர் தேரையர்

⭐️இவ்வாறு தத்துவ அடிப்படைகளை கொண்ட சித்த மருத்துவம் உணவே மருந்து என்பதை வலியுறுத்துகிறது.

⭐️அறுசுவை உணவு ஐம்பூத சமநிலை நம் உடலில் உருவாக்கி,, வாத பித்த கபம் என்ற முக்குற்றத்தை அழித்து உடலும் உள்ளமும் வளமை பெற வழிகாட்டுகிறது.

⭐️இனிமேல் அறுசுவை உணவு உண்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி!
வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

5 years ago | [YT] | 18