Downside Up TV

*******நினைத்ததை அடைய!*******


🌻அறிவியல் தளம்🌻

⭐️நம் சிந்தனை என்பது பிரபஞ்சத்தில் இதுவரை
நாம் பதியவைத்த பதிவுகளின் அலைவரிசையில் மூளை
தொடர்புகொள்வதால் உண்டாகிறது.

⭐️ஆனால்..
நம் மூளை செயல் இழந்த தொலைகாட்சி தானாக சேனல் மாறுவது போல் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது.

⭐️அதை சரியாக tune செய்து ஒரு விஷயத்தில் நம் எண்ணத்தை தீவிரமாக குவிக்கும் போது அது பிரபஞ்ச அணுக்களில் அழுத்தமாக பதிகிறது.

⭐️அதைதான் நாம் ஆழ்மனம் என்கிறோம்.

⭐️அதிக வலிமை கொண்டவிந்தணு எப்படி கருமுட்டயை துளைத்துஉள்ளே சென்று வடிவம் பெறுகிறதோ அதேபோல் அதிக ஆதிக்கம் கொண்ட எண்ணமானது ஆழ்மனத்தை அடைந்து செயல் வடிவம் பெறுகின்றது.

⭐️நங்கள் கற்பனையாக எதை உணர்கிறீர்களே அது அணுக்களில் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினையுங்கள்.

⭐️உங்கள் எண்ணமும் என் எண்ணமும் சேர்ந்து ஒரு புதிய எண்ணம் உருவாகலாம். அது வேறு ஒருவர் மனதை அடைந்து புதிய கண்டுபிடிப்பாகலாம்.

⭐️நங்கள் செய்ய வேண்டியது நேர்மறையான எண்ணங்களால் மனதை நிரப்புவது மட்டுமே. சுருக்கமாக சொன்னால் நீங்கள் உணர்வது பிரபஞ்ச அணுக்களில் உங்கள் பெயரில் பதியும்.

⭐️இதுவரை எதை பதிய வைத்து இருக்குறீர்களோ அதுவே இன்றைய உங்கள் வாழ்க்கை அனுபவம்.

⭐️உங்கள் மனதை ஒரே அலைவரிசையில் தொடர்ந்து செலுத்த முடிந்தால் நீங்கள் தான் கடவுள்.

⭐️உங்களால் முடியாது எதுவும் இல்லை.



🌻ஆன்மீக தளம்🌻

⭐️நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கு ஈர்ப்பு விசை மாதிரி.

⭐️நங்க நல்லவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் கட்டிடத்துக்கு மேல இருந்து குதிச்சீங்கனா கீழ விழபோறது உறுதி.

⭐️அதேமாதிரி நீங்க நல்லத சிந்திச்சாலும் கெட்டத சிந்திச்சாலும் அத நீங்க அனுபவிக்க வேண்டியது நிச்சயம்.

⭐️*யத் பாவம் தத் பவதி-*
எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்.

⭐️நங்க முடியும் என்று சிந்தித்தாலும் முடியாது என்று சிந்தித்தாலும் இரண்டுமே சரிதான்.

⭐️கவனம் குவியும் இடத்துல சக்தி பாயும். கீழே உள்ளதை செயல்படுத்தி நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத வாழ்க்கையை அனுபவியுங்கள்.

1.என்ன வேண்டும் என்பதை முடிவு செய்
2.அதை பிரபஞ்சத்திடம்(கடவுள்) கேள்
3.அது கிடைத்து விட்டதாக நம்பு
4.அதை நிஜம் போல்மனதில் காட்சி படுத்தி பார்
5.அதை கொடுத்ததற்கு நன்றி சொல்.

⭐️இதை எல்லாம் நீங்க செஞ்சா!
நீங்க பாடுற பாட்டுக்கு பிரபஞ்சம் உங்ககூட சேர்ந்து பாடும்.

⭐️இத எல்லாம் உண்மையாக்குற விதமா நீங்க கேட்டதை பிரபஞ்சம் உங்கள் கண் முன்னாடி நிறுத்தும்.

⭐️இது நிச்சயம் நடக்கும்னு எமக்கு உறுதியாக தெரியும்...அனுபவித்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்...

The Secret | இரகசியம்: www.youtube.com/playlist?list...
🌻எண்ணம் போல் வாழ்க்கை

நன்றி!
வாழ்க வளத்துடன் 🙏!

5 years ago | [YT] | 27