என்றென்றும் தேவர் வழியில்...
சமுதாயப் பணியில் ...
Follow Us
Youtube : youtube.com/channel/UCQwaycx-cT6CapvLIpy7JKQ/?sub_…
Facebook : www.facebook.com/thevar.tube.79
Twitter: twitter.com/thevartube
Website : sites.google.com/view/thevartube/home
தேவர் பாட்டு
தேவர் பாடல்கள்
தேவர் மேடை பேச்சுகள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,
Pasumpon Muthuramalinga Thevar Song
Muthuramalingam, Thevar songs
Nattupura padalgal,
Thevar speeches
Thevar Tube
1) தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்.
2) நேதாஜி,தேவரை போல எந்த நிலையிலும் எதிரிகளிடம் தாழ்ந்தோ,சமாதானமாகவோ போவதில்லை என்ற கொள்கையை கடைசிவரை கடைபிடித்தவர்.
3) தனது தொகுதி மக்களிடமும்,ஃபார்வர்டுபிளாக்கின் அடிமட்ட தொண்டர்களிடமும் எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து போவார்.சாதாரண பாமர மக்கள் அவரிடம் கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியிருந்தார்.ஆனால் வெளியில் மிகவும் கம்பீரமான தலைவராக வலம் வந்தார்.
4) தனது கொள்கைக்கு முரணாக கருதும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் நட்புறவு கூட வைத்துக்கொள்ள மாட்டார்.
5) தேவரை தெய்வமாக வணங்குகின்ற பெரும்பாண்மை மக்கள் அரசியலில் மட்டுமில்லை,கல்வியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்கின்ற உயர்ந்த சிந்தனையை கொண்டிருந்தவர்.
6) ஒரு செய்தியை படித்தவர்களிடமும்,படிக்காத பாமரர்களிடமும் அவரவர்களின் எண்ணங்களுக்கு தகுந்தாற் போல சொல்லக் கூடியவர்.
7) ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின் போதும் மதுரையில் பிரம்மாண்ட அளவில் ஊர்வலம் நடக்கும்.அந்த கூட்டத்தில் ஏதாவது ஒரு புது செய்தியை சொல்வது தலைவர் பி.கே.மூக்கையாத்தேவரின் வழக்கம்.
8) தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எம்ஜிஆர் உடனான கூட்டணியை முறித்து கொண்டவர்.
9) எந்த தருணத்திலும் தன்னை ஒரு இயக்கத்தின் தலைவர் என்று அவர் சொல்லிக் கொண்டதில்லை.
10) தன் வாழ்நாள் முழுவதும் தேவரின் திருத்தொண்டராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
11) எம்ஜிஆருக்கும் ஒருபடி மேலாக ஏழை,எளிய,பெண்களின் செல்வாக்கை பெற்றிருந்தவர்.
12) மக்கள் விரும்புவதை மட்டுமே செய்து வந்தவர்.
13) நாட்டில் பின்னாளில் நடக்கவிருக்கும் அரசியல் அசாதாரண சூழ்நிலையை முன்னரே கணிக்கும் திறமை பசும்பொன் தேவருக்கு பிறகு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மட்டுமே இருந்தது.
14) மிசா காலத்தில் வடமாநிலங்களில் ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அந்த அளவுக்கு இயக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
15) எந்தவொரு தருணத்திலும் தான் சொன்னதை தான் தொண்டர்கள் கேட்க வேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை.
தகவல்: ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ்.நவமணி அவர்கள்.
Post: avinas
5 years ago | [YT] | 37
View 1 reply
Thevar Tube
பார்வாட் ப்ளாக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும் தேவர் தந்த தேவர் கல்வி தந்தை ஐயா #P.K. #மூக்கையா #தேவர் அவர்களின் 41வது குருபூஜை தினத்தில் வணங்குகிறோம்🙏🏻🙏🏻🙏🏻
5 years ago | [YT] | 31
View 1 reply
Thevar Tube
மாமன்னர் காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது. இந்த முழு கட்டுரையையும் வாசித்தால் மகிழ்ச்சி
சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின்அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணி பூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 640 ஆண்டுகள்ஆகின்றன. வழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர்சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிறவழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால் காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்கு நான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர்ஆவார்.
12 வயதிலேயே, அரியணைக்கு வர நேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்பபூலித்தேவன்
நெற்கட்டான்செவல். இந்தப் பகுதி வளம் நிறைந்த பகுதி. 1767இல் கடைசியாக வெள்ளையர்களின் கொடுமையால் உடன் இருந்தவர்கள் துரோகத்தால் மன்னர் பூலியின் படை வீழ்ந்ததற்குப்பிறகு இந்தப் பகுதியை அழிக்க வேண்டும் என்று வந்த கும்பினிப்படை அதிகாரி டொனல்டு காம்பல் ஆஹா, வளம் குவிந்துகிடக்கிறது வாசுதேவநல்லூர் பகுதி மரகதப் பச்சையைப்போல எங்கு கண்டாலும் கழனிகள் செழித்துக் கிடக்கின்றன.
கரும்புத் தோட்டங்களும்,செந்நெல் வயல்களும், வாழைத்தோப்புகளும் குவிந்து இருக்கின்றவளம் நிறைந்த இந்தப்பகுதியை அழிக்க எனக்கு மனமில்லை என்று சொன்னான். அப்படிப்பட்ட பகுதி தான் நெற்கட்டுஞ்சேவல். இது சிவந்த நிலம்.
வீரமறவர்கள் சிந்திய இரத்தத்தாலும் சிவந்த நிலம். இயற்கையிலேயே செம்மண் பூமி. அதில் நெல்கட்டான் என்கின்ற ஒரு செடி அதிகமாக இருந்தது என்றும் அந்த நெல்கட்டான் செடியை நினைவூட்டி நெல்கட்டும்செவல் என்று பெயர் வந்தது. நெற்கட்டுஞ் செவல் பாளையத்துக்கு எல்லை
கிழக்கே குவளைக்கண்ணி. மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை. தெற்கே முத்துக்குளம் சிவகிரிக்குப் பக்கத்தில் வடக்கே தலைவன் கோட்டை. இதுதான் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பூர்வமான பகுதியாக முதலில் இருந்தது.
வாசுதேவநல்லூர் கோட்டைக்கு ஈடான கோட்டை எதுவும் இல்லை என்றும் பரங்கியர் சொன்னார்கள். இது தென்னாட்டில் இருக்கின்ற மற்றக் கோட்டைகளைவிட, அபூர்வமான கோட்டை. பொறியியல் நுட்பத்தோடு கட்டப்பட்டு இருக்கின்ற கோட்டை. அந்தக் கோட்டையின் நீளம் 650 கெஜம். அகலம் 300 கெஜம். கோட்டையின் அடிமட்டத்தின் அகலம் 15 அடி. உச்சியின் அகலம் 5 அடி. கோட்டையின் மூலைகளில் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்தக் கொத்தளங்களுக்குள்ளே நிலவறைகளைப்போல வீரர்கள் உள்ளே இருந்து சண்டை செய்வதற்கு ஏற்ற அமைப்புகள் இருந்தன.
வெளியே இருந்து பார்த்தால் வீரர்கள் இருப்பது தெரியாது. அதில் அமைக்கப்பட்டு இருந்த துவாரங்கள் வழியாக அவர்கள் ஆயுதங்களை ஏவக்கூடிய அமைப்பு இருந்தது.சுண்ணாம்பும், பதநீரும், கருப்பட்டியும், கம்பப் பசையும் மற்றும் பல்வேறு பொருட்களையும் கொண்டு அமைத்த பீரங்கிக் குண்டுகள் கூட துளைக்க முடியாத மிகச்சிறந்த கோட்டை.
1755 ஆம் ஆண்டு பரங்கிப்படையின் கர்னல் ஹீரான்,ஆர்க்காடு நவாப்பின் துணையோடும், மாபூஸ் கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு களக்காட்டுக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அப்போது வாசுதேவநல்லூரில் இருந்த பூலித்தேவருக்கு களக்காடு வீழ்ந்ததன் காரணத்தை அறியவும்,மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் நினைத்தார்.
களக்காடு கோட்டையை கைப்பற்றுவது மட்டுமல்ல, கும்பினிபடைக்கு எதிராகவும், ஆற்காடு நவாபிற்கு எதிராகவும் எப்போதும் வெற்றி பெறும் வகையில் முதன் முதலாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குகினார்.
வெள்ளையர்களை எதிரியாக கொண்டு கூட்டமைப்பை உருவாக்க நினைத்த பூலித் தேவர், அதுவரை தனக்கு எதிரியாக இருந்த திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் கொடுத்து திருவிதாங்கூர் மன்னரை நண்பராக்கி கொண்டு உடன் சேர்த்துக்கொண்டார். அவர் அமைத்த அந்தக் கூட்டமைப்பில் சேத்தூர், கொல்ல கொண்டான், தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி,சொக்கம்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வடகரை, சுரண்டை,ஊர்க்காடு, ஊத்துமலை என பல சிற்றரசுகளை சேர்த்து ஒரு கூட்டமைப்பை மன்னர் பூலித்தேவர் ஏற்படுத்தினார்.
ஆறடி உயரமும், இரும்புபோன்ற தேகமும், ஒளிவீசும் கண்களும், பகைவருக்கு அஞ்சாத உள்ளமும், நட்புக்குத் தலை வணங்குகின்ற பண்புமும், அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதியும், குதிரையில்லா விட்டாலும் 40 கல் தொலைவு வேகமாக நடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மகத்தான மாவீரனாக பூலித்தேவன் இருந்தார்.
பூலித்தேவர் நடந்தால் உடன் வரும் வீரர்கள் தொடர்ந்து ஓடித்தான் வரவேண்டும் என்றும் அவரைப்பற்றி நாட்டுப்பாடல் சொல்கிறது. 40 கல் தொலைவும் அயர்வின்றி ஒரு குதிரையின் ஓட்டத்தில் நடக்கக்கூடிய ஆற்றல் மன்னர் பூலிக்கு இருந்தது என்று நாட்டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
காந்தசக்தி கொண்ட அவரது ஆளுமை காரணமாகஆர்க்காடு நவாப்பின் படையில் வந்த தளபதிகளில் மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச்,மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூவரும் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து
பூலித்தேவருக்காக வீரப்போர் புரிந்தார்கள்.
1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார் மன்னர் பூலித்தேவன். அந்தப் போரில் முடேமியா என்கின்ற இஸ்லாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவருக்குத் தகவல் கிடைத்து,ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்த போரில் வீரத்தின் விளை நிலமாக திகழ்ந்து உன் ஆவி பிரிகிற வேளையில் உன்மேனியில் இருந்து இரத்தம் என் மடியில் பாய்கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார்.
இஸ்லாமியக் குலத்தில் பிறந்து நவாப் படையில் வளர்ந்து, தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரிலே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன்.
மைசூர் ஹைதர் அலியைப் போர்க்களத்தில் தோற்கடித்த மருதநாயகம் என்கிற கம்மந்தான் கான்சாகிப் தெற்கே நவாபிற்காக படை நடத்தி வந்தான். வாசுதேவநல்லூரில் ஒரு மன்னன் இருக்கிறான். அவன் பெயர் பூலித்தேவன். அவனை எவராலும் வெற்றிகொள்ள முடியவில்லை என்று பிரிட்டிஷ்காரன் அவனுக்குத் துணையாக நாகப்பட்டினம், திருச்சி, தூத்துக்குடி,பாளையங் கோட்டை, மதுரை, திருவனந்தபுரம் மன்னன் அஞ்செங்கோவின் படை என பல முனைகளில் இருந்து அனுப்ப படைகள் வாசுதேவநல்லூரை நோக்கி வந்தது.
1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக்கவேண்டும் என்று வந்த கான்சாகிப், 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடந்தது. ஹைதர் அலியையேத் தோற்கடித்த சூராதி சூரனான கான்சாகிப், பூலித்தேவனை எளிதில் வெற்றி கொள்வான் என்று கும்பினியர்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான். பூலித்தேவன் வெற்றிபெற்றான்.
பீரங்கிகளும்,துப்பாக்கிகளும் கொண்ட இத்தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றிபெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான்.
இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் பலநூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார்.கான்சாகிப் தோற்றான்.
மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மே மாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன்,பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை,பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.
வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் பள்ளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி இரண்டாவது போரில் பிரதான தளபதி.அந்தப்போரில் தோற்று ஓடுகின்றவர்களை விரட்டிச்சென்று வெற்றிபெற்றுவந்தான் வெண்ணிக் காலாடி.
அந்த வெண்ணிக்காலாடியின் வயிற்றில் பாய்ந்த ஆயுதம் வயிற்றைக் கிழித்து குடல் வெளியேவந்து விட்டது. குடல் வெளியே வந்தவுடன் அந்தப் பெருவீரன் தலையிலேயே கட்டி இருந்த தலைப்பாகையை எடுத்து அந்தக் குடலை உள்ளே தள்ளிவிட்டு இரத்தம் பெருக்கெடுக்கின்ற இடத்தில் அந்த தலைப்பாகையைவைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு திரும்பவும் சண்டை செய்கிறான்.
சண்டை செய்து வெற்றிச் செய்தியோடுதான் வந்து மன்னர் பூலித்தேவன் முன் கீழே விழுகிறார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூலித்தேவர் எப்படி இஸ்லாமிய முடேமியாவை எடுத்துமடியில் போட்டாரோ அதேபோல,பள்ளர் சமூகத்தில் பிறந்த வெண்ணிக்காலாடியை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்க பூலித்தேவன் அழுகிறார்.
அப்பொழுது அந்தத் தலைப்பாகை முழுக்க இரத்தத்தில் நனைந்து பூலித்தேவனின் உடம்பெல்லாம் இரத்தம் பாய்கிறது. ஓற்றர் படைத்தலைவன்ஒண்டிப்பகடையும் பூலித்தேவனுக்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க தனது உயிரை அர்ப்பணம் செய்தான்.
இப்படி அனைவரையும் அரவணைத்து யுத்தகளத்தில் நின்று சாகசங்கள் புரிந்தவர்தான் பூலித்தேவர்.
இதற்கிடையில் கும்பினி படைக்கு எதிராக மாறி போராடிய மருதநாயகத்தை 1964ல் பிரிட்டிஷார் தூக்கிலிட்டனர்.
1767 ஆம் ஆண்டு கும்பினிப்படையின் டொனல்டு காம்பெல் பெரும் பீரங்கிகளோடு வந்து வாசுதேவ நல்லூர் கோட்டையை தாக்கினான். இந்தச் சண்டையில்தான் அனந்த நாராயணன் துரோகத்தால் பூலித்தேவர் தோற்றதாக சரித்திரம் சொல்கிறது. காம்பெல் தனது டைரிக்குறிப்பில் எழுதுகிறான். நினைத்தேப் பார்க்கமுடியாது. எங்கள் பீரங்கிகளின் குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. கோட்டைத் தகரவில்லை ஆனால் கோட்டையின் சுவர்களில் ஓட்டைகள் மட்டும் விழுந்தன.
ஆனால், பூலித்தேவரின் மறவர்கள் அந்த ஓட்டைகளை அடைப்பதற்கு பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். இந்த வீரத்தை எங்கும் பார்த்தது இல்லை. மறவர்கள் சிலரின் உடலைப் பீரங்கிகுண்டுகள் துண்டு துண்டாகவும் சின்னாபின்னமாகவும் சிதறவைத்தன.
குண்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. பக்கத்தில் நிற்பவன் செத்து விழுகிறான். அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த இடத்தின் சிதிலமான பகுதிகளை செப்பனிடுவதில் பனை ஓலைகளையும், ஈரமண்ணையும் கொண்டுவந்து அந்த ஓட்டைகளை அடைப்பதிலே உறுதியாக இருக்கக்கூடிய வீரர்களை இந்த உலகத்தில் எங்கே பார்க்க முடியும்.
வாசுதேவநல்லூரில் தான் பார்க்க முடிந்தது என்று தனது குறிப்பில் எழுதிவைத்துள்ளான்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர் கால்டு வெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரத்தில் பூலித்தேவனைப் பற்றி “இந்த மேற்கத்திய பாளையக்காரர்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு வந்தவர்தான் பூலித்தேவன்.
அவர் படைபலம் குறைவாக இருந்தாலும் பண்பால், வீரத்தால், திறமையால் அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட இடத்தைவிட செல்வாக்கும் புகழும் பெற்றார்” என்று எழுதுகிறார்.
இந்தப் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் சிவனை நினைத்துப் பாடிய பாடல் என்று இன்றும் பாடப்படுகிறது.
''பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி''
சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை.
நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்திய விடுதலைப் போரில் வீரன் பூலித் தேவனின் வீரமிகு பாத்திரம் வீண் போகவில்லை. மண்ணில் போட்ட விதையாய் பல வடிவங்களில் தென்னிந்தியாவில் முளைக்க ஆரம்பித்தது.
5 years ago | [YT] | 39
View 3 replies
Thevar Tube
இன்று ஒண்டி வீரன் நினைவு நாள்
தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சார்ந்த ஒண்டிவீரன் என்பவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் ஒற்றர் படையை சேர்ந்தவர்.
இரண்டுமுறை பூலித்தேவரிடம் தோற்று ஓடிய வெள்ளையர் படை திரும்ப முற்றுகை இட யாருக்கும் தெரியாமல் பூலித்தேவன் சீமை அருகில் முகாமிட்டிருந்தனர். அவர்களின் பலம் என்ன என்பதை அறிந்து பூலித்தேவனுக்கு சொல்ல வெள்ளைக்காரன் முகாமில் உளவு பார்க்க ஒண்டிவீரன் சென்றபோது வீரர்கள் குதிரையில் வரும் சத்தம் கேட்டு குதிரைகள் கட்டும் இடத்தில் மறைந்தார்.
தனது மேல் குதிரைக்கும் வைக்கும் செடிகளை அள்ளி போட்டுக்கொண்டார். அப்போ ஒரு போர் வீரன் தான் வந்த குதிரையை கட்டிப்போட ஈட்டி போன்ற ஒரு நெடிய முளைக்குச்சி போன்ற ஆயுதத்தை தரையில் சொருகினார். அது எதர்ச்சியாக ஒண்டிவீரனின் கை மீது பாய்ந்துவிட்டது. அந்த வலியை பொறுத்துக்கொண்டு வெள்ளையர்கள் சென்ற பிறகு தனது கையை எடுக்க முடியாமல் தவித்தார் ஒண்டிவீரன். வேறு வழி இல்லாத காரணத்தால் தனது கையை வெட்டிக்கொண்டு பூலித்தேவரிடம் செய்தியை தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த அரசபையோரும் , நாட்டு மக்களும் ஒண்டிவீரா " உனக்கு அங்ககை போனால் என்ன பூலித்தேவர் மகராசா தங்க கையே கொடுப்பார்" என்று பாடினர். இன்றும் இந்த வரலாறு நெல்லை மக்களிடையே நாட்டுப்புற பாட்டாக வழக்கில் இருக்கு .
மேலும் ஒண்டி வீரன் என ஒருவன் இந்த உலகில் பிறக்கவில்லை மாமன்னர் பூலித்தேவரின் உண்மையான வரலாற்று பூா்வமான தளபதி ஈஸ்வரத்தேவரின் வரலாற்றை போர்வையாக போத்தி வாழும் பொய் உருவம் தான் ஒண்டி வீரன் என்ற வரலாறும் ஒரு பக்கம் உண்டு
யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு பெரும் ஆபத்தை அறிந்துக்கொண்டு மன்னரிடம் சொன்ன ஒண்டிவீரனுக்கு இந்திய விடுதலை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு. வாழ்க அவர் தியாகம். அவரின் நாட்டுப்பற்றை போற்றுவோம்.🙏
5 years ago | [YT] | 22
View 2 replies
Thevar Tube
#திருவள்ளுவர் மற்றும் #திருக்குறள் பற்றி #தேவர் திருமகனார்:
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து சான்றோர்கள் பலரும் ஆச்சரியப் பட்டனர்..அரசியலில் முடி சூடா மன்னராகத் திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும்-ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர்.குறளைப் பற்றி என்ன பேசி விடப் போகிறார் என்று அமர்ந்த அனைவரும் மெய் மறந்தனர். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலை முடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத் தை தந்தது வியப்பு.அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும்-வழக்கமும் இல்லாமல் போய் விட்டன.ஆனால் அனைவரது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் சாரம்...
(தேவர் பேச்சு ஆரம்பம்) "கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில் ...
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்"
என்பது ஒரு அரிய குறள்.திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும்.
நான் மெத்தப் படித்தவன் அல்ல.தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும்.. எவ்வளவு தான் கற்றாலும் அது கைமண்ணளவேதான் ஆகும்..நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் "ஊள்வினை உடைமை" என்ற அதிகாரத்தில் உள்ளது. திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலை சிறந்தவர்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டு போனார். இது முற்றிலும் சரியே.வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள்வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லோரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் -திட்பத்தையும் -மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொன் மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக் காலத்திற்கும், எந்த மக்களுக்களுக் கும் திருக்குறள் என்ற இந்த நூல் முழுக்க முழுக்கப் பொருத்த முடையது.இதனால் இந்த அரிய திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்கலிலே , ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.
"கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத் தரித்த குறள். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் " என்று திருக்குறள் பெருமையுடன் பேசப்படுகிறது..
"நற்பலகை யொக்க இருக்க உருத்திர சன்மரெனவுரைத்து வானில் ஒருக்க ஓ வென்றதோர் சொல்" என்ற இந்த திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையை பாராட்டி அசரீரியாக வந்தது..
இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்து காட்ட அல்ல.வள்ளுவர் எத்தகைய அறிஞர்- புலவர்- சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவே
இங்கு கூடியிருப்பவர்களே.... ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும" என்று எழுதி இருப்பாரா? என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன்..
தெய்வத்தால் ஆகாது எனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?
புலவர் பெருமக்களே! சிந்தியுங்கள்.. !
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம்,பேனா,பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைக் கருத்துக்களை ,ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணியைப் பிடித்து எல்லோரும் எழுதி விட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதனைக் கருதுகிறேன்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறு தான் பாடியிருக்கக் கூடும் என்று மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப்பெரிய வன்.அவனின்றி ஓரணுவும் அசையாத காரணத்தால் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்திக் கூலிதரும்"
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து..நேர்,நேர் என்று தேமா என்று வாய்ப்பாடு கூறுவர்..
"ஆகும்" என்ற சொல்லையும் ஆ கும் பிரித்தால் நேர்,நேர் என்றும் கூறலாம்..
மா முன் நிரை அசை வரும் வாயப்பாடு ஆகும். ஆகவே தளையும் தட்டவில்லை . தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகும் என்பதே சரி .தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது உரையை முடிக்கிறார்..
வள்ளுவரை வைத்து அரசியல்-மத சாயம் பூசுவோர்களே! வள்ளுவன் உலகோர்க்குச் சொந்தம்.. தமிழினம் பெருந்தன்மையோடு வழங்கிய கொடை ஆகும் வள்ளுவர்..
வாழ்க வள்ளுவர்..! வளர்க வள்ளுவர் புகழ்!.
5 years ago | [YT] | 67
View 5 replies
Thevar Tube
மதுரை கீழமாத்தூரில் பசும்பொன் தேவர் உரையாற்றிய அரிய புகைப்படம்...
5 years ago | [YT] | 102
View 6 replies
Thevar Tube
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அனல் பறந்த ஒரு மணி நேர அரசியல் மேடைப் பேச்சு...
https://youtu.be/lqsaVKtqdu8
நேர வாரியாக தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ Description - ஐ முழுமையாக திறந்து பார்க்கவும்.
00:00:00 - தேவர் மனமுருகி பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல்
00:01:15 - ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்பிட்டு தேவர் சொன்ன குறுங்கதை
00:06:00 - வரலாற்றுப் பிழை செய்த ஆங்கிலேயன் - கட்ட பொம்மன் வரலாறு 00:09:30 - ஆட்சியாளர்கள், படித்தவன், படிக்காதவன் நிலை எப்படி இருக்கிறது - தேவர்
00:11:06 - அஹிம்சையை பற்றி பேச யாருக்கு தகுதி இருக்கிறது
00:12:41 - சீனிவாச அய்யரின் தீர்க்கதரிசனம்
00:16:06 - அரசியல் என்பது வீரத்தையும் விவேகத்தையும் ஒருசேரக்கொண்டது 00:18:36 - சீக்கியரை துரோகம் செய்ய பயன்டுத்திக்கொண்ட ஆங்கிலேயர் 00:22:04 - காங்கிரசை ஆங்கிலேயன் தோற்றுவித்த வரலாறு
00:24:36 - உண்மையில் தேசத்திற்கு சுதந்திர வித்து போட்டவர்கள் யார்?
00:26:27 - உலகப்போருக்கு பிரிட்டிஷ் ராணுவத்துடன் சேர்ந்து சண்டையிட இந்தியர்களை ஆள்சேர்த்து கொடுத்த காந்தியடிகள்
00:27:22 - ஜாலியன் வாலாபாக் படுகொலை
00:29:19 - சுபாஷ் சந்திரா போஸ்-இந்திய தேசிய ராணுவம், உலகப்போர் காந்தி அஹிம்சை
00:35:20 - வெள்ளைக்காரனோடு சேர்ந்து சுபாஷ் சேனையை துப்பாக்கியால் சுடுவது தான் அஹிம்சையா?
00:37:40 - வெள்ளையனோடு நெருக்கமானவர்கள் மந்திரிகள் அதுபோலவே தமிழ்நாட்டில் காமராஜால் நியமிக்க பட்டவர்கள்.
00:46:36 - வெள்ளையனிடம் தேச தியாகிகளை காட்டி கொடுத்த கம்யூனிஸ்ட் 00:49:00 - காமராஜர் காங்கிரஸ் தலைவராவதற்கு தேவர் உதவினாரா? 00:50:12 - காமராஜர் ஆட்டுக்குட்டிக்கு வரி செலுத்தி ஓட்டர் ஆனது எப்படி?
00:52:05 - அன்று நாடார் இனமக்கள் காமராஜருக்கு செய்தது என்ன? காமராஜருக்கு உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய தேவர்.
00:53:56 - ஜாதி உணர்வால், பகைமை மறந்து ஜாதியினரிடம் கூடிய காமராஜர் 00:57:43 - வெள்ளைக்காரன் போலீசும், காமராஜரின் போலீசும்
5 years ago | [YT] | 69
View 1 reply
Thevar Tube
என்றென்றும் தேவர் வழியில்...
சமுதாயப் பணியில் ...
Facebook : www.facebook.com/thevar.tube.79Twitter: twitter.com/thevartubeWebsite : sites.google.com/view/thevartube/home
5 years ago (edited) | [YT] | 45
View 1 reply
Thevar Tube
தேவர் கல்லூரி விவகாரம் - நடிகர் R.K. சுரேஷ் வேண்டுகோள்
5 years ago | [YT] | 4
View 0 replies
Thevar Tube
இராமதாஸ் அவர்களின் தேவர் பாடல்கள்...
www.youtube.com/playlist?list...
5 years ago | [YT] | 36
View 0 replies
Load more