mparunagiri

ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது உத்தரவு நாள் 8 6 2022 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவன்மலை ஆண்டவர்..உத்தரவுப்பெட்டியில் என்ன பொருள் தெரியுமா?

விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையிலான பொருள் வைத்து பூஜை செய்ய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். "சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்." என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

சிவன்மலை ஆண்டவர் கோவில் முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் எதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறை யானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதற்கு முன்பு ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது.

மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. பஞ்சு வைத்து பூஜை செய்யப்பட்டதால் பருத்தி பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, நேற்று இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, எதிர்காலத்தை கணிக்க பயன்படுத்தும் சோளி ஆகியன வைத்து வழிபாடு நடைபெற்றது.

ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம். அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்

2 years ago | [YT] | 34

mparunagiri

காலை சூரிய உதயத்தில்.

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||

கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,

மணிமங்கலம்,

காஞ்சிபுரம் மாவட்டம்

காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்

2 years ago | [YT] | 77

mparunagiri

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் (79,154) கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்

மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்

2 years ago | [YT] | 94

mparunagiri

கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தெய்வம் மீது மட்டும் கவனம் வையுங்கள் அப்போது எதையும் காண முடியாது எங்கும் தெய்வம் மட்டுமே தெரியும்

ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்! ஒரு நாள் அந்த பெண் பூசாரி கிட்ட சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன்
அர்ச்சகர் கேட்டார் ஏன்?
அப்போது அந்தப் பெண் சொன்னார் கோயில் வளாகத்தில் மக்கள் செல் போனில் எதைப்பற்றியோ பேசுவதை நான் பார்க்கிறேன்! கிசுகிசுக்கும் இடமாக கோயிலை சிலர் தேர்வு செய்துள்ளனர்! சிலர் பாசாங்குத்தனம் குறைவாக வழிபடுகிறார்கள், அதிகம் பாசாங்கு செய்கிறார்கள்!
இதில் அர்ச்சகர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார், பிறகு சொன்னார் சரி! ஆனால் நீங்கள் உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நான் சொல்வதை செய்ய முடியுமா!
பெண் சொன்னாள் சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்?
அர்ச்சகர் சொன்னார் ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் நிரப்பி 2 முறை கோவில் வளாகத்திற்குள் வலம் வர வேண்டும். ஆனால் தண்ணீர் தளும்பி கீழே விழக்கூடாது என்பதுதான் நிபந்தனை
பெண் சொன்னாள் என்னால் இதைச் செய்ய முடியும்
பிறகு சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணும் இதையே செய்தார் அதன்பிறகு கோவில் அர்ச்சகர் பெண்ணை 3 கேள்விகள் கேட்டார்
1. கையில் கண்ணாடி குவளையில் நீர் கொண்டு வலம் வரும்போது யாராவது செல்போன் பேசுவதை நீங்கள் பார்த்தீர்களா ?
2. கோவிலில் யாராவது கிசுகிசுப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
3. யாராவது பாசாங்குத்தனம் செய்வதை நீங்கள் பார்த்தீர்களா?
பெண் சொன்னாள் இல்லை நான் எதையும் பார்க்கவில்லை!
அப்பொழுது அர்ச்சகர் சொன்னார் நீங்கள் வலம் வரும் போது உங்கள் கவனமெல்லாம் கண்ணாடி குவளை மீதுதான் இருந்தது அதனால் தண்ணீர் சிந்தாதபடி உங்கள் கவனம் இருந்ததால் நீங்கள் வேறு எதையும் கவனிக்க இயலவில்லை.
இனி கோவிலுக்கு வரும்போதெல்லாம் தெய்வம் மீது மட்டும் கவனம் வையுங்கள் அப்போது எதையும் காண முடியாது எங்கும் தெய்வம் மட்டுமே தெரியும்

2 years ago | [YT] | 9

mparunagiri

திருவேங்கடத்தின் சிறப்பு

#திருவேங்கடம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் இன்று நேற்று புகழ் பெற்றதல்ல,
தமிழில் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பனம்பாரனார் (இவர் தொல்காப்பியருக்கு சமகாலம் என்றும் சிலர் சற்றே பிற்காலத்தவர் என்றும் கூறுவர்) என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு” என்று திருப்பதியைக் குறிப்பிடுகிறார்!

இவ்விடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் (இவர் சைவ சமயத்தவர் என்று கருதுகிறேன்), "நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை” என்று விளக்கியுள்ளார். இங்கு திருமால் வாமன அவதாரத்தில் உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்

சங்க இலக்கியங்களிலும் வேங்கடம் குறிப்பிடப்படுகின்றது! அதனை ஆண்டவன் கள்வர் கோமான் புல்லி என்ற செய்தியும் காணப்படுகின்றது! திருமலையை 'நெடியோன் குன்றம்' என்று கூறும் சிலப்பதிகாரம் (முழு பாடல் படத்தில் காண்க) அங்கு கோவில் கொண்டுள்ள திருமாலை அழகாக வர்ணிப்பதோடு அக்கோவிலுக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே பக்தர்கள் யாத்திரை செல்வதையும் மாங்காட்டு #மறையோன் என்கின்ற அந்தணரது வாக்குமூலமாகப் பதிவு செய்கின்றது! இதன் மூலம் திருமலையில் இருப்பவர் திருமாலே என்பதையும் இக்கோவில் திடீரென்று பிரபலமானது அல்ல மிகப் பழங்காலத்திலிருந்து திருமால் கோவிலாக சிறப்புற்றுள்ளது என்பதையும் உணரலாம்

2 years ago | [YT] | 3

mparunagiri

சிவ சிவ.
திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.
ஆறாம் திருமுறை.
திருவாரூர்.
பாடல் எண் : 4

கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே.

பொழிப்புரை :
தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ ? ஊர்வது காளையோ , யானையோ ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன் . அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ ?

பல்லடம் தண்டபாணி அவர்களின் குரலில் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் மற்றும் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம். அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.

2 years ago | [YT] | 87

mparunagiri

பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும் !

சித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.

வைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.

ஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.

ஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.

ஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷõபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.

புரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.

ஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகமும் விஷேசம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.

கார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.

மார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.

தைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.

மாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.

பங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.

3 years ago | [YT] | 582

mparunagiri

வெள்ளையங்கிரி மலை பயணம்

3 years ago | [YT] | 136

mparunagiri

மௌனசித்தர் தொடர்புக்கு சிற்றரசன் ஐயா தொடர்பு ஏன் 7708688827 @Arunagiri

https://youtu.be/7kvUinysIfA

3 years ago | [YT] | 5