#திருவேங்கடம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் இன்று நேற்று புகழ் பெற்றதல்ல, தமிழில் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பனம்பாரனார் (இவர் தொல்காப்பியருக்கு சமகாலம் என்றும் சிலர் சற்றே பிற்காலத்தவர் என்றும் கூறுவர்) என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு” என்று திருப்பதியைக் குறிப்பிடுகிறார்!
இவ்விடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் (இவர் சைவ சமயத்தவர் என்று கருதுகிறேன்), "நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை” என்று விளக்கியுள்ளார். இங்கு திருமால் வாமன அவதாரத்தில் உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்
சங்க இலக்கியங்களிலும் வேங்கடம் குறிப்பிடப்படுகின்றது! அதனை ஆண்டவன் கள்வர் கோமான் புல்லி என்ற செய்தியும் காணப்படுகின்றது! திருமலையை 'நெடியோன் குன்றம்' என்று கூறும் சிலப்பதிகாரம் (முழு பாடல் படத்தில் காண்க) அங்கு கோவில் கொண்டுள்ள திருமாலை அழகாக வர்ணிப்பதோடு அக்கோவிலுக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே பக்தர்கள் யாத்திரை செல்வதையும் மாங்காட்டு #மறையோன் என்கின்ற அந்தணரது வாக்குமூலமாகப் பதிவு செய்கின்றது! இதன் மூலம் திருமலையில் இருப்பவர் திருமாலே என்பதையும் இக்கோவில் திடீரென்று பிரபலமானது அல்ல மிகப் பழங்காலத்திலிருந்து திருமால் கோவிலாக சிறப்புற்றுள்ளது என்பதையும் உணரலாம்
mparunagiri
திருவேங்கடத்தின் சிறப்பு
#திருவேங்கடம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் இன்று நேற்று புகழ் பெற்றதல்ல,
தமிழில் நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பனம்பாரனார் (இவர் தொல்காப்பியருக்கு சமகாலம் என்றும் சிலர் சற்றே பிற்காலத்தவர் என்றும் கூறுவர்) என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள சிறப்புப் பாயிரத்தில் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு” என்று திருப்பதியைக் குறிப்பிடுகிறார்!
இவ்விடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் (இவர் சைவ சமயத்தவர் என்று கருதுகிறேன்), "நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை” என்று விளக்கியுள்ளார். இங்கு திருமால் வாமன அவதாரத்தில் உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்
சங்க இலக்கியங்களிலும் வேங்கடம் குறிப்பிடப்படுகின்றது! அதனை ஆண்டவன் கள்வர் கோமான் புல்லி என்ற செய்தியும் காணப்படுகின்றது! திருமலையை 'நெடியோன் குன்றம்' என்று கூறும் சிலப்பதிகாரம் (முழு பாடல் படத்தில் காண்க) அங்கு கோவில் கொண்டுள்ள திருமாலை அழகாக வர்ணிப்பதோடு அக்கோவிலுக்கு மிகப் பழங்காலத்திலிருந்தே பக்தர்கள் யாத்திரை செல்வதையும் மாங்காட்டு #மறையோன் என்கின்ற அந்தணரது வாக்குமூலமாகப் பதிவு செய்கின்றது! இதன் மூலம் திருமலையில் இருப்பவர் திருமாலே என்பதையும் இக்கோவில் திடீரென்று பிரபலமானது அல்ல மிகப் பழங்காலத்திலிருந்து திருமால் கோவிலாக சிறப்புற்றுள்ளது என்பதையும் உணரலாம்
3 years ago | [YT] | 3