அன்பு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்🙏
நல்ல ஊரும் நாலு பேரும் யூடியூப் சேனலின் நோக்கம் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகள்,கோவில்கள்,ஆன்மீகம்,கதைகள், உணவுகள் மற்றும் பலவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஒரு சிறு முயற்சி! எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரங்களை தாருங்கள்..!
Dear Tamil Natives🙏
Nalla Oorum Naalu Perum YouTube Channel aims to be a small effort to bring to the masses the lifestyles, temples, spirituality, stories, food and more of the villagers! Please lend your support to our effort..!
Contact us:
nallaoorumnaaluperum@gmail.com
Nalla Oorum Naalu Perum
அனைத்து உயிர்களும் வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அதற்கான ஞானத்தையும் செல்வச் செழிப்பையும் வழங்க வேண்டி சிவசக்தியின் மகனிடம் மனதார வேண்டி கொள்கிறோம்..!
நல்ல ஊரும் நாலு பேரும்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!
1 month ago | [YT] | 8
View 0 replies
Nalla Oorum Naalu Perum
6 months ago | [YT] | 5
View 0 replies
Nalla Oorum Naalu Perum
7 months ago | [YT] | 2
View 1 reply
Nalla Oorum Naalu Perum
தீமைகள் அகல பாரெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க. ஏற்ற தாழ்வுகள் அகல இந்நன்னாளில் தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்கள்..!🪷🪷🪷
11 months ago | [YT] | 15
View 0 replies
Nalla Oorum Naalu Perum
முனீஸ்வரன் ஈசன் அம்சமாக கருதப்படுவர் ஆவார். முனிவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என பொருள்படும் மேலும் முனீஸ்வரன் வழிபாடு என்பது இன்று நேற்று அல்ல பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருக்கிறது கிராம காவல் தெய்வமாக மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பனி, முனியப்பர் எனவும் அழைத்து வழிபடுகின்றனர்
முனி என்றால் "ரிக் வேதத்தில்" "தெய்வ ஆவேசம் படைத்தவர்" என்றும், பயமற்றவர் என்றும் பொருள், நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர்"பஞ்ச முனிகள்" அதாவது ஐந்து முனிகள், பச்சை அம்மனுக்கு காவலாக பூலோகம் வந்ததாக வரலாறு உண்டு. சில இடங்களில் சப்த முனிகள் உண்டு. ஈஸ்வர பட்டம் பெற்றவர் முனீஸ்வரர் ஆவர் இந்த முனீஸ்வரன், சிவ அம்சம் கூடியவர்.
முன்னொரு காலத்தில் "அந்தகாசுரன்" என்னும் அசுரன் தேவர்களையும், மக்களை வதைத்து, இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர், பார்வதி அம்மன் "காத்தாயி" என்ற பெயரில் பூமியில் அவதரித்து அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லடாமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி,சட்டைமுனி, என்று ஏழு முனிகளை உருவாக்கி, அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த நரகாசுரனை அடக்கி வதம் செய்தனர், பின்பு முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களை காக்க பூமிக்கு வந்தனர்.
பொதுவாக மக்களுக்கு முனீஸ்வரனை பற்றி நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டு, இதில் உண்மை எது பொய் எது என்றும் குழப்பங்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை மற்றும் பூலோகம் உயிரினங்கள் - புல் முதல் அண்டசராசரம் வரை படைத்த இறைவன் ஈஸ்வரன் ஆவான். பரமாத்மாவில் இருந்தே ஜீவாத்மா பிரிந்தது. அதுபோல் தான் முனீஸ்வரன் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சமே. கலியுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவும் மக்களை காக்கவும் வீர ஆவேசமாக அவதரித்தவரே "முனீஸ்வரன்" .
முனீஸ்வரன் வழிபாடு என்பது நம்மை காக்கும், ஆண்டி முதல் அரசன் வரை பாகுபாடின்றி வழிபாடும் தெய்வம் முனீஸ்வரன். கலியுகத்தில் ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு வழிபாடு செய்ய கூடிய எளிய முறை உள்ள ஒரே வழிபாடு முனீஸ்வரன் வழிபாடு மட்டும் தான்.
எல்லா தரப்பு மக்களும் வழிபாடு செய்யவே கிராமங்கள் தோறும் சிறு ஆலயங்களிலும் முனிகள் வீற்றிருக்கின்றனர்.
சிவன, பெருமாள், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு , இவர் தான் காவலர் ஆவார். பெரிய ராஜகோபுரம் உள்ள கோவில்களிலும் முனீஸ்வரர்க்கு தனி சன்னதி உண்டு உதாரணமாக ஸ்ரீரங்கம் திருதலத்தில் ராஜா கோபுரத்தில் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. பல பெரிய தனி சன்னதிகளும் முனீஸ்வரன் காட்சி தருவதும் உண்டு இப்படி எல்லா இடங்களிலும் முனீஸ்வரன் வழிபாடு உண்டு.
இவர் கனல் வீசும் கண் உடையவர், அருள் ஒளிரும் மேனி உடையவர், சகல சௌபாக்கியமும் தருபவர், நள்ளிரவில் கண்ட நெடிய வெண்புகை வடிவத்தில் வலம்வருபவர் என்று பல நம்பிக்கைகள் உண்டு. "நம்பினார் கெடுவதில்லை" என்ற வாக்கின் அடிப்படையில் நம்பி வழிபட்ட பலருக்கு முனீஸ்வரன் இப்படி காட்சி தந்த வரலாறுகள் நமது கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் உண்டு.
நமது நாட்டில் மட்டுமல்ல "பர்மா" என்று அழைக்கப்பட்ட தற்போதைய "மியான்மர்" என்ற நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு பல லட்சம் தமிழர்கள் வசித்தனர். "ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட "யாங்கூன்" இருந்து சுமார் 1 மணி நேரப்பயணம் வருகிற ஊர் "பிலிக்கான்" அங்கே முனீஸ்வரர்க்கு அற்புதமான ஆலயம் உள்ளது. நீதி, நியாயம் இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இந்த தேசத்து மக்கள் இவரை"ஜட்க் ஐயா" என்றே அழைக்கிறார்கள்.
பர்மா மட்டுமல்ல மலேஷியா, சிங்கப்பூர் சீனா, ஜப்பானிலும் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது..!
1 year ago | [YT] | 18
View 0 replies
Nalla Oorum Naalu Perum
பிறந்துள்ள இந்தப் புதிய ஆண்டு நம் எல்லோருடைய வாழ்விலும் மகிழ்வையும், செழிப்பையும், வசந்தத்தையும் நிறைவாக அள்ளித்தர வேண்டுமென்று உளமார எல்லாம் வல்ல ஈசனையும் திருமாலையும் வேண்டிக்கொள்கிறோம்..!
1 year ago | [YT] | 12
View 2 replies
Nalla Oorum Naalu Perum
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது..?
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.
விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.
குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் எனஅளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் அழியா இறைநம்பிக்கையும் இருக்கிறது..!
🔥 ஓம் நமச்சிவாய 🔥
🔥 ஓம் நமச்சிவாய 🔥
🔥 ஓம் நமச்சிவாய 🔥
#nallaoorumnaaluperum
#ஓம்நமச்சிவாய
1 year ago (edited) | [YT] | 17
View 5 replies
Nalla Oorum Naalu Perum
தைப்பூசம் நாளின் சிறப்பு என்ன?
1 year ago | [YT] | 11
View 0 replies
Nalla Oorum Naalu Perum
"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம்"
சிவபெருமான் வேண்டியார்க்கு வேண்டிய வடிவில் வருபவன்,
அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன்,
முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருள்பவனே என் அய்யனே ஈசனே,
இவ்வுலக உயிர்கள் அனைத்தும் செழித்து இன்புற அருள்புரிவாய்..!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..!🔱🔥🔱🔥🔱🔥
1 year ago | [YT] | 21
View 6 replies
Nalla Oorum Naalu Perum
மாவிலைக் கட்டி மாக்கோலம் இட்டு, முச்செங்கல் பூட்டி மண்பானை வைத்து, பக்குவங்கள் காட்டி பொங்கல் செய்து, கரும்பிரண்டு கூட்டி சூரியனை நினைத்து, நன்றிகள் கூறி கொண்டாடுவோம் பொங்கலை, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
1 year ago | [YT] | 20
View 4 replies
Load more