welcome to our channel aadhirabakthi.in our channel content like prayers , poojas ,temple festivals ,abhisekham and more. all the festivals and utsavams happening in all the temples will be brought to you with devotion on our channel. SUBSCRIBE NOW FOR LETS TAKE A SPIRTUAL JOURNEY.
SUBSCRIBE NOW: youtube.com/channel/UCvx9NXfXtsSOLQvS-E4_1BQ
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-7ம்நாள்-29.09.2025 *தபசுக்காட்சி*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-7-Tapas💢
✨✨✨✨✨
நிந்தனைக் கொள்கல மானேனை
நீசனை நேயமிலாப்
பந்தனைப் பாவியை மக்கட்
பதடியைப் பார்த்தருள்வாய்
சிந்தனை வாக்கினுக்குஎட்டாத
சிற்பரன் தேவி செவ்வேல்
கந்தனை ஈன்ற அருள் என்னே தென்கூடற் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
20 hours ago | [YT] | 238
View 1 reply
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-6ம்நாள்-28.09.2025 *ருத்ர பசுபதியார் திருக்கோலம்*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-6-Ruthra Pasupathi Thirukolam💢
✨✨✨✨✨
படித்தேன் படித்தவை சொல்லும்
திறமை படைத்தலின்றித்
துடித்தேன் இனி அன்பர்கள் போலே
யெவரும் சொலும் பொருட்டு
நடித்தேன் இனிச்சகி யேன் என்னைக்
காத்தருள் ஆரணி பூங்
ழகடித்தே னுகு பொழிற் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
1 day ago | [YT] | 346
View 4 replies
AADHIRA
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் 5 ஆம் நாள் காலை இன்று (28.09.25) மோகினி அலங்காரம்!
2 days ago | [YT] | 203
View 1 reply
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-5ம்நாள்-27.09.2025 *இரசவாதம் செய்த படலம்*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-5-Evening💢
✨✨✨✨✨
*இரசவாதம் செய்த படலம்*
திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.
*திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்
கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்
அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமஃதவ ணியமம்!
அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்
பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.
அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்
அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
2 days ago | [YT] | 297
View 3 replies
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-4ம்நாள்-26.09.2025- *ஊஞ்சல்*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-4-Swing festival💢
✨✨✨✨✨
வேஞ்சின மாதி மிகுத்தே
சிதடரை மேவி நிதம் தாஞ் சிவபூசை செயாதே
திரியெனைச் சார்ந்தருள்வாய்
வாஞ்சிய மாதித் தலந்தோறு
மேவிய வள்ளறனைக்
காஞ்சியிற் பூசிக்குந் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
3 days ago | [YT] | 338
View 5 replies
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-3ம்நாள்-25.09.2025- *அன்னை மீனாட்சி ஏகபாதமூர்த்தி திருக்கோலம்*
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-3-Sri Meenakshi Ambal as Yekapadhamurthy💢
✨✨✨✨✨
நாவார நின்னை நவிலாது
சைவநல் லாரியர் சொல்
தேவாரபாரணஞ் செய்யாது
வீணரைச் சேர்ந்தொழுகித் தீவாய் நரகுக் கிரையாகுவேனைத் தியங்க விடேல்
காவாய் புனல்வையைத் தென்கூடல்
வாழும் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
4 days ago | [YT] | 462
View 3 replies
AADHIRA
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் 2025! பெரிய சேஷ வாகனத்தில் ஶ்ரீமலையப்ப சுவாமி ஶ்ரீதேவி பூதேவி மாடவீதிகளில் எழுந்தருளல்!24.09.25!
5 days ago | [YT] | 218
View 1 reply
AADHIRA
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம்! கொடியேற்றம்! 24.09.25!
5 days ago | [YT] | 135
View 2 replies
AADHIRA
✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-2ம்நாள்-24.09.2025-புதன் வளையல் விற்ற லீலை!
Madhurai Sri Meenakshi temple💢Navarathiri festival 2025-Day-2-A divine play of God Someswarar Swamy- selling Bangles to Chetti Womens (Meenakshi Ambal As Swamy)
✨✨✨✨✨
*திருவிளையாடல் புராணம்*
தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குற்று இருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்குச்சென்றார்.பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகிலே மயங்கி ஆடைகளையும்,அணிகலன்களையும் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அப்பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குலப்பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட,பத்தினிகளுக்கு இறைவனே வந்து உங்கள் கைகளில் வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று உரைத்தனர்.
அவ்வாறே ரிஷிபத்தினிகளும் செட்டிப்பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். இறைவனும் வளையல் வியாபாரியாக அத்தெருவில் வந்து, அவர்கள் கைகளைத் தொட்டு வளையல் அணிவிக்க அவர்களும் சாபம் நீங்கி சிவலோகம் சென்றனர். ✨✨✨✨✨✨✨✨✨✨✨
🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
5 days ago | [YT] | 437
View 6 replies
AADHIRA
✨✨✨✨✨✨ *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-நவராத்திரி திருவிழா*-2025-முதல்நாள்-23.09.2025-செவ்வாய் -அன்னை இராஜராஜேஸ்வரி அலங்காரம்)
Madhurai Sri Meenakshi Sundareswarar temple💢Navarathiri festival 2025-Day-1Sri Meenakshi Ambal as Rajarajeswari💢
✨✨✨✨✨✨
மாத்தருநீழ லிடத்தானிடத்து வளர்ந்தகிலம்
பூத்தருள் வாயருள் பூண்டருள் வாயன்பர் புந்திவிழை
வீத்தருள் வாயன்பு சற்றுமில்லேனையும் அண்ணலின்றிக்
காத்தருள் வாய்வையைத் தென்கூடல்
வாழுங் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை!
✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே துணை!
6 days ago | [YT] | 353
View 6 replies
Load more