PMT என்பது மூன்றெழுத்தல்ல முக்குலத்தின் வருங்கால தலையெழுத்து...!!!


PMT MEDIA

வீரத்தை விலை பேச வெள்ளையன் வந்தான்! வேங்கையாய் சீறி விடுதலைக் கொடி பிடித்தீர்கள்! "மண் எங்கள் சொத்து; மானமே எங்கள் மூச்சு" என்று முழங்கியே நெருப்பாய் நீங்கள் எழுந்தீர்கள்!

சிவகங்கை சீமையைக் காக்க உயிர் கொடுத்த மாவீரர்கள்! மன்னர் முடியை துறந்து மக்களுக்கான துடிப்பை சுமந்தீர்கள்! மகுடம் உங்களுக்கில்லை – மண் மீதான பற்றே மணிமகுடம்! அதைச் சாமானியரும் உணரும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர்கள்!

கண்ணீரில் நனைந்ததா? இல்லை, குருதியில் பூத்ததா? சிவகங்கைத் தாயின் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க – தூக்கு மேடையும் உங்கள் வீரத்தின் எல்லைதான்; தூக்கு கயிற்றின் பிடியில் உறைந்த உங்கள் குரல் – அது சுதந்திரத்தின் முழக்கம்!

உடல் பிரிந்தாலும் மருதிருவர்களின் ஆன்மா ஓயவில்லை – ஆங்கிலேயன் மூச்சிலும் பயத்தின் அதிர்வை தந்தீர்கள்! விழுந்தது தலை அல்ல, விதையாக விழுந்தது! மரணம் உங்களுக்கில்லை, மண்ணில் நீங்கள் விதைக்கப்பட்டீர்கள்!

வருடம் பல கடந்தாலும், மருது பாண்டியர்களின் குருதிச் சிவப்பால், தமிழரின் நரம்பில் இன்னும் வீரத்தின் நாதம் கேட்கிறது!

2 days ago | [YT] | 820

PMT MEDIA

YouTube-ல் தொடங்கிய பயணம்... Facebook-ல் 50,000 உறவுகளாய் வளர்ந்துள்ளது!🚀
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! 👋
எங்கள் PMT Media YouTube சேனலுக்கு நீங்கள் தந்த அதே அன்பு, இப்போது எங்கள் Facebook பக்கத்தையும் ஒரு மாபெரும் இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது! ஆம், சரியாக ஒரு வருடத்தில், நாங்கள் 50,000 பின்தொடர்பாளர்கள் (Followers) என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறோம்!
இந்த வெற்றிக்குக் காரணம் உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மட்டுமே! நீங்கள் லைக் செய்தீர்கள், ஷேர் செய்தீர்கள், கமெண்ட் செய்தீர்கள், மேலும் எங்கள் தகவல்களை உங்கள் நண்பர்களிடமும் கொண்டு சென்றீர்கள்.
உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் மனமார்ந்த நன்றி! 🙏
YouTube-ல் உள்ள எங்கள் தரமான உள்ளடக்கங்களை Facebook-லும் கொண்டு வந்து, மேலும் சுறுசுறுப்பாகவும், பயனுள்ளதாகவும் செயல்பட உறுதி அளிக்கிறோம்.
தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்! PMT Media குடும்பம் மேலும் வளரட்டும்! ❤️
#50KFollowers #PMTMediaTamilnadu #YouTubeToFacebook #DoubleTheFun #ஒருவருடவெற்றி #நன்றிஉறவுகளே #PMT #PMTMedia

5 days ago | [YT] | 360

PMT MEDIA

காலக் களத்தில் ஒரு வீரன்!

நிலையாமை உணர்!

விண் தொட்டு நிற்கும் வீரம்! உலகின் விதிகளையும் மாற்றும் வேகம்! — அதுவும் காலம் எனும் அனல்முன் கருகிப் போகும்! மண்ணில் எழும் மாவீரனும் ஒருநாள் மண்ணுக்குள் கறைந்து போவான், மறுக்க ஏதுமில்லை! நிலையாமையின் உச்சம் இது! நெஞ்சே, உணர்! இந்த நிதர்சனம் கண்டு, இன்னும் நீ வீறு கொள்!

இலக்கின் தீச்சுடர்!

களமாடும் போதில், கண்ணிமைப் பொழுதும் கணக்குக்குள் இருக்க வேண்டும்! — வீண் ஆரவாரம் விடுத்து, அக்னி மூச்சுடன் இறுதி வெற்றிக்கு எதுவோ தேவை, அந்த ஒரே செயலில் உன் உணர்வெல்லாம் திரட்டு! வெற்றியின் வேட்கையில் உன் வேர் பலம் காட்டிடு! கவனம் சிதறாதே! இலக்கு மட்டுமே உன் உயிர்!

அறத்தின் ஆயுதம்!

குருதி கொதிக்கும் போர்க்களம்! கோபம் குமுறும் புயலாய் நீ எழுந்தாலும் — உன் வாளின் இலக்கு வேறாக இருக்கட்டும்! அழிப்பதற்கல்ல உன் எழுச்சி! அமைதியை அங்கேயே கொண்டு வருவதற்கே சண்டையிடு! போரை முடிப்பதற்காகப் போரிடு! உன் ஆயுதத்தின் ஒரே நோக்கம் அறமாகட்டும்!

மௌனத்தின் மாட்சி!

பேச்சுகள் ஓயட்டும்! போராட்டத்தின் சத்தங்கள் அடங்கட்டும்! — பல நேரங்களில், நீயே ஒரு பேரமைதி ஆகிவிடு! உள்ளிருக்கும் சலனங்கள் முழுதும் ஓய்ந்தாலே, விடைதேடும் வினாக்களுக்குச் சத்யத்தின் ஒளி பிறக்கும்! வெளியே தேடும் ஞானம் உனக்குள் வந்து குவியும்! மௌனமே மகத்தான சக்தி! மனதில் அதை ஏந்திடு!

இரா. ஆறுமுகச் செல்வன்
PMT Media

1 week ago | [YT] | 208

PMT MEDIA

நமது முன்னோர்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் மருது பாண்டியர்கள் குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ராஜராஜ சோழன் சதய விழா ஆகியவைகளை முன்னிட்டு அந்தந்த ஊர்களில் நடைபெறும் விழாக்களில் மாணவ மாணவிகளுக்கு நமது முன்னோர்களின் தலைப்புகளை கொடுத்து அதில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி போன்றவற்றை நடத்துங்கள் அவற்றை பெரிய அளவில் விளம்பரப்படுத்துங்கள். ஆடம்பரமாக அனாவசியமாக செலவழிப்பதை விட நமது சமூக மக்களிடம் வரலாற்றை கொண்டு செல்லும் விதமாக அத்தியாவசியத்திற்கு செலவளியுங்கள். ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து நமது வரலாறு குறித்தும் நமது முன்னோர்களின் தியாகங்கள் குறித்தும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரியம் குறித்தும் மேடைகளில் பேச வையுங்கள்.

1 week ago | [YT] | 1,000

PMT MEDIA

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீதான கொடூரத் தாக்குதல் – PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் வன்மையான கண்டனம்!

#விசிக #திருமாவாளவன் #திமுக #இசக்கிராஜாதேவர் #VCK #Thirumavalavan #DMK #esakkirajathevar

3 weeks ago | [YT] | 633

PMT MEDIA

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நீண்ட நாட்களாக நடந்து வரும் எல்லை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 08.10.2025 அன்று காலை 10 மணிக்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் KN இசக்கி ராஜா தேவர் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

#இருக்கன்குடி #விருதுநகர் #PMT #Irukkankudi #viruthunagar #esakkirajathevar #இசக்கிராஜாதேவர்

1 month ago (edited) | [YT] | 736

PMT MEDIA

தேவரினமே நேற்று இளைஞர் ரம்பு, இன்று ராம் பிரகாஷ், நாளை நீங்களோ உங்கள் குடும்பத்தில் ஒருவராகவோ இருக்கலாம். காரணமே இல்லாமல் ஆளும் அரசாங்கமும் சட்டமும் தனக்கு சாதகமாக இருக்கிறது என்கிற திமிறில் கொலை செய்பவர்களை வெளியே நடமாடவிட்டு வேடிக்கை பார்க்காதே! அரசியல்வாதிகளை நம்பாதே அவர்கள் ஏசி காரில் பயனிப்பவர்கள் தெருவில் நடந்து போகும் உன் பாதுகாப்புக்கு நீதான் போராட வேண்டும்.

உரிமைக்காக போராடு! நாளைய தலைமுறையை காப்பாற்று!

#மதுரை #மேலூர் #முக்குலத்தோர் #தேவர் #கள்ளர் #மறவர் #அகமுடையார் #madurai #melur #mukkulathor #thevar #kallar #maravar #agamudayar #ramprakash #ராம்பிரகாஷ்

1 month ago | [YT] | 517

PMT MEDIA

மாநில அரசே! மத்திய அரசே! பட்டியல் சாதி வெறியர்களிடமிருந்து பூர்வகுடி இன மக்களை காப்பாற்ற சிறப்பு சட்டத்தை உடனடியாக இயற்று.


#கள்ளர் #மறவர் #அகமுடையார் #தேவர் #முக்குலத்தோர் #kallar #maravar #agamudayar #thevar #mukkulathor

1 month ago | [YT] | 507

PMT MEDIA

தென்காசி தேவர் மாநாடு நிர்வாகிகள் ஆயத்தக் கூட்டம் மற்றும் தலைவன்கோட்டை ஜமீன் மன்னர் உபேந்திர தினகர் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு விழா.


இடம் : தாருகாபுரம் அரன்மனை
தேதி : 21.09.2025


#தேவர்மாநாடு #இசக்கிராஜாதேவர் #முக்குலத்தோர் #தேவர் #கள்ளர் #மறவர் #அகமுடையார் #தாருகாபுரம் #தலைவன்கோட்டை #பாண்டியர் #thevarmaanadu #esakkirajathevar #mukkulathor #thevar #kallar #maravar #agamudayar #tharukapuram #thalaivankottai #PMT

1 month ago | [YT] | 630

PMT MEDIA

தமிழுக்காக முச்சங்கங்கள் அழிந்த நிலையில் தமிழை வளர்க்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய தேவரினம்.

வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்களால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்ட தினம் 14, செப்டம்பர் 1901.


#4ம்தமிழ்ச்சங்கம் #பாண்டிதுரைதேவர் #மதுரை #madurai #pandiduraithevar

1 month ago | [YT] | 718