PMT MEDIA

நமது முன்னோர்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் மருது பாண்டியர்கள் குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ராஜராஜ சோழன் சதய விழா ஆகியவைகளை முன்னிட்டு அந்தந்த ஊர்களில் நடைபெறும் விழாக்களில் மாணவ மாணவிகளுக்கு நமது முன்னோர்களின் தலைப்புகளை கொடுத்து அதில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி போன்றவற்றை நடத்துங்கள் அவற்றை பெரிய அளவில் விளம்பரப்படுத்துங்கள். ஆடம்பரமாக அனாவசியமாக செலவழிப்பதை விட நமது சமூக மக்களிடம் வரலாற்றை கொண்டு செல்லும் விதமாக அத்தியாவசியத்திற்கு செலவளியுங்கள். ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து நமது வரலாறு குறித்தும் நமது முன்னோர்களின் தியாகங்கள் குறித்தும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரியம் குறித்தும் மேடைகளில் பேச வையுங்கள்.

1 week ago | [YT] | 1,001