Sagayam Followers

உ. சகாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினருக்கு 22- 03- 1962 ஆம் ஆண்டு பிறந்தவர்.

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' எனும் வாசகத்தை தனது இருக்கையின் பின்புறம் இட்டிருந்தார். இவரது 29 ஆண்டு பணிக்காலத்தில் 26 முறை பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினைப் பெற்றார்.

2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆட்சி பணியாளர் விருதை பெற்றார். இந்த விருது டெல்லியில் உள்ள "ஜி பைல்ஸ்" நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை நேர்மையாக செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


19:20

Shared 8 months ago

129 views