சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை மனித நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் உலகளாவிய ஆன்மீக அமைப்பு. உடல் ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாற்றம் தரும் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா வழங்குகிறது. ஈஷா அவுட்ரீச் மூலம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் போன்ற முன்முயற்சிகள் உலகளாவிய ஆதரவைப் பெற்று, முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற சுகாதார மருத்துவமனைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய முன்முயற்சிகள், அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தல் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு ஈஷா ஆதரவளிக்கிறது. யோகா மற்றும் தியானம் மூலம் உள்நிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் வெளிசூழ்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதோடு விழிப்புணர்வான மற்றும் நிலைக்கக்கூடிய உலகை நோக்கி ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.