சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை மனித நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் உலகளாவிய ஆன்மீக அமைப்பு. உடல் ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாற்றம் தரும் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா வழங்குகிறது. ஈஷா அவுட்ரீச் மூலம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் போன்ற முன்முயற்சிகள் உலகளாவிய ஆதரவைப் பெற்று, முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற சுகாதார மருத்துவமனைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய முன்முயற்சிகள், அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தல் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு ஈஷா ஆதரவளிக்கிறது. யோகா மற்றும் தியானம் மூலம் உள்நிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் வெளிசூழ்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதோடு விழிப்புணர்வான மற்றும் நிலைக்கக்கூடிய உலகை நோக்கி ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
Isha Tamil
அழகுக்கு அழகு சேர்க்கும் சிவப்பு வண்ண மலர்கள்
நெல்லு வயலில் உழுது வரும் மாடு..
விவசாயிக்கு உற்ற தோழனாம் எங்கள் மாடு.
#MattuPongal #IshaYogaCenter
3 days ago | [YT] | 180
View 1 reply
Isha Tamil
நமஸ்காரம், நான் இப்போ தான் ஆதியோகி, லிங்க பைரவி, தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு வரேன். எல்லாம் சூப்பரா இருந்துச்சு. நீங்க எப்போ வரீங்க. இன்னொரு விஷயம், எனக்கு வேஷ்டி சட்டை எப்டி இருக்கு? கமென்ட்ல சொல்லுங்க.
#HappyPongal #IshaYogaCenter
4 days ago | [YT] | 127
View 5 replies
Isha Tamil
ஏகாதசி என்பது, நம் உடலுக்கு இயற்கையாகவே உணவு குறைவாகத் தேவைப்படும் ஒரு நாள். இந்நாளில் விரதம் இருப்பது நம் உடலமைப்பைத் தூய்மைப்படுத்துவதோடு, நம் விழிப்புணர்வை உள்நிலை நோக்கித் திருப்புகிறது. முழுமையாக விரதம் இருக்க இயலாதபட்சத்தில், லேசான பழ உணவு எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
#Ekadashi #Fasting
5 days ago | [YT] | 117
View 0 replies
Isha Tamil
ஈஷா மகா சிவராத்திரி விழாவின்போது ஆதியோகி சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய இசை நடனமான டோலு குனித்தா.
5 days ago | [YT] | 81
View 1 reply
Isha Tamil
உங்கள் ஐம்புலன்களின் எல்லைகளைத் தாண்டி இருப்பது என்ன? நீங்கள் இன்னும் உணராத பரிமாணங்கள் என்னென்ன? ஐம்புலன்களைத் தாண்டி இருக்கும் பரிமாணங்களை அறிய, உயிருள்ள நுழைவாயிலாக நிற்கிறது தியானலிங்கம். இது வெறும் இடம் அல்ல; ஓர் மகத்தான சாத்தியம். தியானலிங்கம் அதீத கவனத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட, யோக அறிவியலின் சாரத்தை தன்னுள் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவம்.
#Dhyanalinga
6 days ago | [YT] | 127
View 1 reply
Isha Tamil
முக்கண் நாயகிக்கு அவள் வாசலில் ஒரு பூக் கண் அர்ப்பணம்.
#IshaYogaCenter
1 week ago | [YT] | 123
View 2 replies
Isha Tamil
பிறந்த உயிரின் முதல் மூச்சு முதல், திருமண உறுதிமொழிகள் வரை, நம்பிக்கை நிறைந்த புதிய தொடக்கங்கள் முதல், அமைதியான விடைபெறுதல் வரை - வாழ்வின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் தேவி உங்களுடனே பயணிக்கிறாள். உங்கள் வாழ்க்கை பயணத்திற்கும், மரணத்திற்கு பின்னும் கூட அவள் கருணை உங்களுக்கு நிரந்தர துணையாக இருக்கும்.
ஒருவரின் முதல் மூச்சிலிருந்து மரணம் வரை வாழ்வின் முக்கியமான அனைத்து நிலைகளிலும் தேவியின் அருள் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும். அவளது கருணையை இந்த வாழ்க்கையிலும் மரணத்திற்குப் பிறகும் உங்கள் பயணத்தின் நிரந்தர துணையாக்கிக்கொள்ள முடியும்.
#LingaBhairavi #Devi #Grace
1 week ago | [YT] | 118
View 2 replies
Isha Tamil
மஹா சிவராத்திரி 2025 - இருள் சூழ்ந்த நிகரில்லா இரவை , வண்ணங்களால் ஒளிரச் செய்த சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்கள்
#mahasivaratri #sadhguru #Samskriti #ChildrenDance
1 week ago | [YT] | 114
View 0 replies
Isha Tamil
சத்குரு குருகுலம் சமஸ்கிருதி வளாகத்தில், குழந்தைகளுக்கு நடுவே மற்றுமோர் குழந்தையாய் வீற்றிருக்கும் அழகிய நந்தி!
#Nandi #IshaYogaCenter
1 week ago | [YT] | 163
View 0 replies
Isha Tamil
பிளாஸ்டிக் மண்ணில் சேரும்போது, அது மண்ணை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் - நிலத்தடியில் வாழும் உயிர்களைக் குழப்பி, சீர்குலைத்து, இடம்பெயரச் செய்கிறது.
இப்போது உலகம் முழுவதும் மண்ணில் மைக்ரோபிளாஸ்டிக் காணப்படுகிறது. அவை நுண்ணுயிர் செயல்பாட்டை மாற்றியமைக்கின்றன; உணவு வலையமைப்பில் குறுக்கீடு செய்கின்றன; மேலும், அனைத்து தாவர உயிர்களுக்கும் துணைநிற்கும் நுட்பமான சுற்றுச்சூழல் சமநிலையை அச்சுறுத்துகின்றன. அதன்மூலம் நம் அனைவரையும் பாதிக்கின்றன.
இதற்கான தீர்வின் ஓர் அங்கமாக இருங்கள். மேலும், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்து, காகித உறிஞ்சு குழல் (paper straw) மற்றும் மண்ணில் மக்கும் கைப்பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தேர்வுசெய்யுங்கள்.
இக்கணமே செயல்படுவோம்: savesoil.org
#SaveSoil
1 week ago | [YT] | 72
View 0 replies
Load more