The immense power of man

குடியிலிருந்து விடுபட இலவச ஆலோசனை
கட்டுபடுத்த முடியாத குடிபழக்கம் ஒரு நோய் உலக சுகாதர நிறுவனம் ஒரு விசயத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் போது சுகமாகத்தான் இருக்கும்.ஒரு கட்டத்தில் குடியால் தான் அழிகிறோம் என்பதை உணர்ந்த பிறகு, வேண்டா வெறுப்பாகத்தான் குடியை தொடர்கிறார்கள். உடல் நல பாதிப்பு, பொருளாதார சிக்கல், அவமானங்கள், புறக்கணிப்புகள்,குடும்பத்தில் பிரிவு இன்னும் எத்தனையோ துயர்களை குடியால் அனுபவித்த பிறகும் ஏன் அதை விட முடிவதில்லை? ஒரு விசயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குடி என்பது.ஒரு நோய்.உடல் மற்றும் மனம் சார்ந்த நோய். இந்த நோயை நீக்கவே முடியாது.அதாவது குடிக்கும் ஆசையை நீக்கவே முடியாது.
அப்படியானால்,குடித்தே அழிய வேண்டியதுதானா?
இல்லை.குடிக்கும் ஆசையை, துடிப்பை நீக்கிட முடியாதுதான்.ஆனால் அடக்கிடமுடியும்.
ஆம் குடியை ஒத்திப்போடலாம்.வாழ்நாள் முழுவதும்.
புரியவில்லையா?
சர்க்கரை நோய் எப்படி தொடர்ந்துகொண்டே இருக்குமோ அது போத்தான் குடி நோயும். சர்க்கரையை நம் கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியத்துடன் வாழ்வதில்லையா.அது போலத்தான் குடி நோயை அணுக வேண்டும்.