I, Arun C.J., have dedicated my life to guiding people toward meaningful living through health, peace, and clarity. With a Master’s in Yoga and Naturopathy, certifications in Acupuncture, and an International Diploma in Yoga Therapy, I began my journey in 2014 as a Yoga instructor and later as a full-time Acupuncture therapist. Working with people revealed to me that true healing requires addressing the mind, and for the mind to heal, it must connect with the Divine. This inspired me to create *Iraivazhi Dhyānam*—a holistic path combining meditation, acupuncture, yoga, naturopathy, and dietary wisdom. Through my academy, I share this approach via workshops, courses, online programs, and awareness sessions. My mission remains clear: to help individuals find wholeness and purpose, walking with them as a guide on their journey.




ArunCJ Academy

Course starts from July 21-2025

5 months ago | [YT] | 3

ArunCJ Academy

மலச்சிக்கல் நிவாரணமும், எதிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பும்! - Arun CJ
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். என்னைப்பொறுத்தவரை மருத்துவமே தேவைப்படாத ஒரு வாழ்வை வாழ்வது தான், நாம் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அடையாளம். மலச்சிக்கல் இல்லாத தன்மை தான் நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதற்கான அடிப்படை அடையாளம்.

அன்றாடம் நமது திடக்கழிவுகள் முழுமையாகவும் சுகமான தன்மையிலும் வெளியேற்றப்பட வேண்டும். தினம் தினம் நமது திடக்கழிவுகள் வெளியேற வேண்டும் என்று கூட அவசியமில்லை. ஆனால் வெளியேறும் போது, முழுமையாகவும் சுகமான தன்மையிலும் வெளியேற வேண்டும். இவ்விரண்டும் மிகவும் முக்கியம். திடக்கழிவுகள் முழுமையாகவும், சுகமான தன்மையிலும் வெளியேறாத நிலையைத்தான் மலச்சிக்கல் என்று சொல்கின்றோம். ஒரு நாள் நமக்கு மலச்சிக்கல் இருக்கின்றது என்றாலும், அது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதாவது, அடிப்படை வாழ்வியல் மற்றும் உணவுமுறை ஒழுங்குகளில் நாம் எதில் தவறியிருக்கின்றோம் என்பதை அறிந்து கொண்டு, உடனடியாக அவைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்னென்ன விஷயங்களை நாம் சிந்திக்க வேண்டும்...?

மலச்சிக்கல் ஏற்பட்ட அந்த குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரண்டு நாட்களில் நாம் முறையான பசி உணர்வு வராமல் சாப்பிட்டோமா, உணவை பொறுமையாக மென்று சுவைத்து உமிழ் நீரில் கலந்து சாப்பிடாமல், வேகவேகமாக சாப்பிட்டோமா, நமது உணவுகளில் காரம், புளிப்பு, உப்பு போன்ற சுவைகள் மிகுதியாக இருந்தனவா, இனிப்பு பண்டங்களை அதிகம் சாப்பிட்டோமா, பிஸ்கட், பிரட் உள்ளிட்ட மைதா உணவுகளை அதிகம் சாப்பிட்டோமா, போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருந்தோமா, தண்ணீரைத் தாண்டி, மோர், இளநீர், பழங்கள், சூப் உள்ளிட்ட நீர்த்தன்மை ஆகாரங்களை எடுத்துக்கொள்ளாமல் இருந்தோமா, போதுமான காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தோமா, இரவு உணவை தாமதமாக எடுத்துக்கொண்டோமா, நமது தூக்கம் சரியாக இல்லாமல் இருந்ததா, நமது இயல்பான வலிமைக்கு மீறிய உடல் மற்றும் மன உழைப்புகளைச் செய்துவிட்டதனால் உடல் உஷ்ணமாகியிருக்கிறதா, நமது மனம் சமாதானத்துடன் இல்லாமல் அழுத்தங்கள் நிறைந்ததாக இருந்ததா என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.

மேற்சொன்ன காரணங்களில் நிச்சயமாக ஏதாவது ஒன்றில் நாம் சிக்கியிருப்பதை அறிந்துகொள்ள முடியும். அதனை உணர்ந்த அந்த நொடியிலிருந்து அவைகளை நாம் திருத்திக்கொள்வதற்கான செயல்களில் இறங்கிவிட வேண்டும். அதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்திலோ, அல்லது கூடுதல் வழிகாட்டல்கள் தேவைப்படும் பட்சத்திலோ ஒரு அக்குபங்சர் வாழ்வியல் ஆலோசகரையோ அல்லது ஒரு இயற்கை மருத்துவரையோ அணுகலாம். அடுத்தடுத்த நாட்களில் மலச்சிக்கல் இல்லாத ஒரு நிலையை அடைந்து கொள்வது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

ஒரு பிரச்சினைக்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளும் போது, நிச்சயமாக அதற்கு சுகமானதொரு தீர்வு உண்டு. அதுவும் மலச்சிக்கலுக்கான காரணங்களை அறிந்து கொள்வதும், அதனை சிந்தனை அடிப்படையில் மற்றும் இயற்கை மருத்துவ அணுகுமுறைகளின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதென்பதும், எதிர்காலங்களில் நமக்கு வரவிருக்கும் அனைத்து நோய்த்தன்மைகளையும் தடுத்துக் கொண்டு, நாம் மிக உறுதியாக பாதுகாக்கப்படுவதற்குச் சமம்.
மேலும் எந்தவொரு பெரிய நோய்த்தன்மையும் ஒரே இரவில் நமக்குள் ஏற்பட்டுவிடுவது கிடையாது. நமது சின்னச்சின்ன வாழ்வியல் தவறுகளினால் தான் அவைகள் வளர்கின்றன. ஒரு நோய் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகிறது, அதனை தடுத்து நிறுத்துங்கள் என்று நமது உடல் நமக்கு அறிவிக்கக்கூடிய ஒரு முக்கியமான அறிவிப்பு தான் மலச்சிக்கல் என்பதை உணர்ந்து கொண்டு, நாம் சரியாக நடந்து கொள்ள வேண்டும். அதில் சரியான மற்றும் துரிதமான கவனத்தை செலுத்த வேண்டும்.

இப்போது, அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படையில், மலச்சிக்கல் நிவாரணத்திற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான அக்குபங்சர் புள்ளிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். Sp5 எனப்படும் மண்ணீரல் சக்தி நாளத்தின் 5 ஆவது புள்ளி, Lu11 என்ற புள்ளி மற்றும் Li11 என்ற புள்ளி. இந்த மூன்று புள்ளிகளின் இருப்பிடங்களை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். Sp5, Li11 என்ற புள்ளிகள் பெருங்குடலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, மலம் கெட்டிப்படுதலைத் தடுக்க முடியும். மேலும் Lu11 என்ற புள்ளி பெருங்குடலின் தசை நார்கள் நல்ல முறையில் சுருங்கி விரிந்து, திடக்கழிவுகளை நகர்த்தி, அவைகளை முழுமையாக வெளியேற்றுவதற்கு உதவக்கூடியது. இந்தப் புள்ளிகளில் வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறைகளோ, நமது ஆள் காட்டி விரலை வைத்து லேசான அழுத்தம் கொடுக்கலாம். ஒவ்வொரு புள்ளியிலும் தலா முப்பது வினாடிகள் அழுத்தம் கொடுப்பது போதுமானதாக இருக்கும்.

அருண் சிஜே உரைகளின் எழுத்து வடிவம்
வீடியோ உரை கேட்க
Link - https://youtu.be/OX_zH9mKZ6k?si=jzZKj...

1 year ago | [YT] | 3

ArunCJ Academy

A special course for Women!

1 year ago | [YT] | 12

ArunCJ Academy

Theory and Practice Seminar on Surya Namaskar

1 year ago | [YT] | 4

ArunCJ Academy

இளைஞர்களே, முதுமையை நோக்கி விரைந்து செல்லாதீர்கள்…

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

ஒரு குறிப்பிட்ட காலத்தவனை வரை இந்த உலகத்தில் நாம் வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம். அதில் நமது இளமைப்பருவம் என்பது நம் அனைவரின் மனதிற்குமே மிகவும் பிடித்தமான, சுகமான ஒரு பருவமாக இருக்கும். இருந்திருக்கும். இப்போதும் கூட ஒரு பத்து வருடம் பின்னோக்கி செல்ல பெரும்பாலான மனங்கள் விருப்பம் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இளமைப்பருவத்தில் நமது உடல் அதனுடைய ஆரோக்கியத்தின் உச்சத்தில் இருக்க முடியும். உடலின் அந்த உறுதியும் வனப்பும் நம் மனதையும் துள்ளலுடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்கும். நிச்சயமாக இளமை என்பது அழகானது, நமக்கான இறைவனின் சிறப்பு மிக்க அருட்கொடைகளில் ஒன்றாகவும் அது உள்ளது. இளமைப்பருவத்தில் இருந்து கொண்டிருப்பவர்கள் இதனை ஆழமாக உணர்ந்து கொண்டு, அவர்களின் ஆற்றல்களை நன்மையான வழிகளில் செலுத்தி, நாளைய மேன்மைகளுக்கான விதைப்புகளை செய்துகொள்ள வேண்டும்.

அடுத்து, முதுமை என்பதும் நம் வாழ்வில் நாம் அடைய வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. முதுமையைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதனை தாமதப்படுத்த முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கே இளமை முதுமை என்பதனை நமது உடல் ஆரோக்கியம் சார்ந்து நாம் விளங்கிக்கொள்வோம். உதாரணத்திற்கு முதுகு வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, நரை ஏற்படுதல், பாலியல் குறைபாடுகள், கண்பார்வை குறைபாடுகள், நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை ஒருவரின் முதுமைப்பருவத்தில் ஏற்படக்கூடிய நோய்த்தன்மைகளாகவே பெரும்பாலும் நாம் அறிந்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைக்கு இளைஞர்களுக்கும் அதாவது தோராயமாக ஒரு இருபத்தி ஐந்து முதல் முப்பத்தி ஐந்து வயது இருப்பவர்களுக்கும் மேற்சொன்ன நோய்த்தன்மைகள் இருப்பதை பார்க்க முடிகின்றது. தீவிர பொருள் தேடல், முறையான ஓய்வற்ற தொடர்ச்சியான உழைப்புகள், மன அழுத்தங்கள், இரவு நேர வேலைக்கலாச்சாரம், வீணான பொழுதுபோக்குகள் மற்றும் அவற்றிற்காக தூக்கத்தை தாமதப்படுத்துதல், ஒழுங்கற்ற உணவு முறைகள், கவனமற்ற, இறையச்சம் இல்லாத வாழ்க்கை முறைகள் இன்னும் பல்வேறு விதமான அறியாமைகள் என பல காரணிகள் இதன் பின்னால் இருந்து கொண்டிருக்கின்றன. இளம் வயதிலேயே மேற்சொன்ன நோய்த்தன்மைகளில் இருந்து கொண்டிருப்பவர்கள் மிகவும் கவனம் கொடுத்து சில வாழ்வியல் ஒழுங்குகளை உறுதியாகப் பேணிக்கொள்ளத் தொடங்க வேண்டும்.

அதில் முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது இரவுத்தூக்கத்தை முறையாகப் பேணிக்கொள்வதாகும். இரவு உணவை மாலை எட்டு மணிக்கு முன்னதாகவே முடித்துவிட்டு, இரவு அதிகபட்சம் ஒன்பது முப்பது முதல் பத்து மணிக்குள்ளாக தூங்கச்செல்லுங்கள். ஆரோக்கிய வாழ்வின் தொடக்கம், முறையான இரவுத்தூக்கமேயாகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்து, கோல்டன் ரூல் என்று சொல்வார்களே, அதைப்போல ஒன்றைப் புரிந்து கொள்வோம். உண்ணும் உணவில் நோய் இல்லை, உண்ணும் முறையில் தான் நோய் உள்ளது. அதாவது நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, அதனை எப்போது எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே எப்போதும் நல்ல பசி உணர்வு வந்த பிறகு மட்டுமே சாப்பிடுங்கள். நேரம் பார்த்து சாப்பிடும் பழக்கம் வேண்டாம். முறையான பசி உணர்வு வராமல் ஒருபோதும் சாப்பிடாதீர்கள். அதேபோல உணவை பொறுமையாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சுவைத்து உமிழ் நீரில் கலந்து சாப்பிடுங்கள். இந்த தங்க விதியை பக்தியுடன் கடைப்பிடித்து வாருங்கள். நன்மைகள் உறுதி.

அடுத்து, தினந்தோறும் தியானம் செய்யுங்கள். நம் மனதின் அமைதியின்மையும், தெளிவின்மையும் தான் நமது உடலின் அத்தனை நோய்களுக்கும் காரணம் என்பதை சந்தேகமில்லாமல் உணர்ந்து கொண்டு, மனதின் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதற்கான ஆன்மிக வழிமுறைகளில், முக்கியமாக தியானம் செய்தலில் தொடர்ச்சியாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. தியானம் குறித்த வழிகாட்டல்களுக்கு, வாரம் ஒரு முறை நடக்கும் எங்களது இலவச இறைவழி தியான வகுப்புகளில் கலந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.

இறுதியாக ஒரு முக்கியமான பரிந்துரை, உங்களின் எந்தவொரு நோய்த்தன்மைக்கும், தற்காலிக நிவாரணங்களுக்காக, பக்க விளைவுகளைத் தரக்கூடிய ரசாயன மருத்துவ அணுகுமுறைகளை நாடாமல், மூல காரணங்களை சரி செய்யக்கூடிய அக்குபங்சர் சிகிச்சை உள்ளிட்ட இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முயலுங்கள்.

Text form of Healer.Arun CJ's recent speech

to watch the speech, here is the video link

https://youtu.be/vquOjdRyfAA?si=DfFEA...

1 year ago | [YT] | 2

ArunCJ Academy

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இறைவன் இந்த உலக வாழ்வில் 'வாழ்வதை' நம் மீது கடமையாக்கியிருக்கின்றான். உணவு, ஜீரணம், கழிவு நீக்கம், பொருளீட்டுதல், பயணங்கள், அனுபவங்கள், கற்றல்கள், சிந்தனைகள், ஓய்வு, உறக்கம், உறவுகள், ஆன்மிக நிலைப்பாடுகள், மரணம் போன்றவை நமது வாழ்வின் அம்சங்களாக இருக்கின்றன. இந்த வாழ்வியல் அம்சங்களில் நாம் எப்படி நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களையும், எப்படி வாழக்கூடாது என்ற அறிவுறுத்தல்களையும், சில நேரங்களில் எச்சரிக்கைகளையும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உணர்வாக படைப்பாளனாகிய இறைவன் அறிவித்த வண்ணமே இருக்கின்றான். இருந்தாலும் மனிதன் தவறுகள் செய்யக்கூடிய இயல்பைக் கொண்டவனாகவும், பலகீனனனாகவுமே இருக்கின்றான். வாழ்வியல் அம்சங்களிலிருந்து மனிதன் அவனது அறிவைக்கொண்டும், அறியாமையைக்கொண்டும் பலமுறைகள் தவறுகின்றான், நோய்களிலும், துன்பங்களிலும், வறுமையிலும் அவன் விழுகின்றான். இறை வழிகாட்டல்களைப் புறக்கணித்து வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறும் போதெல்லாம் மனிதனுக்கு நோய்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன. வாழ்வியல் நெறிகளிலிருந்து பிறழ்ந்து தவறும் மனிதர்களுக்கு 'மருத்துவம்' என்பது தேவையாக ஆகின்றது.

ஒரு நல்ல மருத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறி நோயின் வேதனையில் சிக்கியிருக்கும் மனிதனை, அவனது வலிகளிலிருந்து மீட்டு, வாழ்வியல் அம்சங்களை அவனுக்குள் உறுதியாக நினைவூட்டி, அதில் அவனை உறுதியாகப் பொருத்தி, இன்னும் அதில் அவனை உறுதியாக நிலைபெற வைக்கக்கூடியதாக, அதாவது மீண்டும் அவன் மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதனாக ஆகிவிடாமல் அவனை ஆக்கக்கூடிய ஒன்றாக ஒரு மருத்துவ வழிமுறை இருக்க வேண்டும். அதுவே 'நல்ல மருத்துவம்'.

நாம் அனைவரும் நம் உள்ளத்தின் இறை வழிகாட்டல்களை செவியேற்று, வாழ்வியல் தெளிவுகளோடு, மருத்துவம் தேவைப்படாத மனிதர்களாக வாழ வேண்டும். அதற்காக நம் இறைவன் நமக்கு உதவி செய்வானாக! ஆனால் நாம் வாழ்வியல் நெறிகளிலிருந்து தவறி, மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டிருக்கின்றோமெனில், நாம் மிகவும் தெளிவுடன், மேற்சொன்ன 'நல்ல மருத்துவத்தை' தேர்ந்தெடுத்து நமது நோய்களிலிருந்து நாம் மீண்டு ஆரோக்கியம் பெற்றுவிட வேண்டும், மற்றும் அந்த ஆரோக்கியத்தில் நிலைபெற்றும் விட வேண்டும்.

அந்த 'நல்ல மருத்துவம்' என்று நான் இங்கே குறிப்பிடுவது அக்குபங்சர் மருத்துவத்தை. நிறைவான வாழ்வியல் தெளிவுகளையும், வலிமை மிக்க மருத்துவ நுட்பங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மனித வாழ்வியல் ஞானமாக அக்குபங்சர் மருத்துவம் அமைந்திருக்கின்றது. அக்குபங்சர் மருத்துவம் என்பது இறைவன் மனிதர்களை அன்பாக மன்னிக்கக்கூடிய ஒரு வழிமுறை. ஏற்கனவே சொன்னபடி, நீங்கள் மருத்துவம் தேவைப்படக்கூடிய ஒருவராக இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நிச்சயமாக அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவத்தை நாடுங்கள். அதன் வழிமுறைகள் உங்களுக்கு உதவ முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நோய்களும், மருந்துகளும், பக்கவிளைவுகளும், அறுவை சிகிச்சைகளும், உறுப்பு நீக்கங்களும், நோய்களைப் பற்றிய பயமும், அந்த பயத்தின் விளைவால் அவசரமும், குழப்பமும், இன்னும் இதுவே ஒரு சுழற்றியாகவும் இன்றைக்கு மனிதர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது நமக்கு வேண்டாம். யாருக்கும் வேண்டாம். இந்த கெட்ட சுழற்சியில் நாம் சிக்கியிருந்தாலும், மீட்சி உண்டு என்பதை நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போம். அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவம் நமக்கு ஆகுமாக வேண்டும் என்ற பிரார்த்தனை கொள்வோம்.

அக்குபங்சர் மருத்துவத்தின் மூலம் சுகமான நோய் நிவாரணங்களைத் பெற்றுக்கொள்வதோடு, மனித வாழ்வியல் குறித்த உறுதியான தெளிவுகளைப் பெற்று, அதில் உங்களை உறுதிப்படுத்தி, மருத்துவமே தேவைப்படாத ஒரு மகத்துவ வாழ்வை வாழ உறுதியாக நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியெனில், அக்குபங்சர் வாழ்க்கை அறிவியலையும், அதன் மருத்துவ நுட்பங்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான அதன் மருத்துவ அணுகுமுறைகளையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு முக்கியமான முடிவாக அமையட்டும். உங்களுக்காக மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் சந்ததிகளுக்காகவும் அந்த முடிவை நீங்கள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அக்குபங்சர் மருத்துவராக ஆகிவிடுங்கள். உயர்வான பாதுகாப்பு அரணில் நீங்கள் புகுந்து விடுங்கள். உங்கள் குடும்பத்தினரையும் அதில் புகுத்தி விடுங்கள்.

அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் மற்றும் அதன் மருத்துவ நுட்பங்கள் பற்றிய நான்கு மாத இணையவழி பயிற்சி வகுப்பை நாங்கள் துவங்கவிருக்கின்றோம். அக்குபங்சர் போன்ற ஆழமான மருத்துவக் கோட்பாடுகளை, அதன் விளக்கங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் இது தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் ஒரு சுய விழிப்புணர்விற்கான வகுப்பு. கல்வித்தகுதிதிகள் என்று எதுவும் தேவையில்லை. பொதுவான புரிதல் திறனும், ஆர்வமும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த மனித வாழ்வியல் ஞானத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஒரே அனுமதிச்சீட்டில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிக்கலாம். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிப்பதால் இன்னுமே எளிமையாகவும் தெளிவுடனும் புரிதலுடனும் நம் குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். தவறவிடக்கூடாத ஒரு முக்கிய கற்றல் வாய்ப்பு இது. இன்னும் எங்கெங்கு இந்த வாய்ப்பு கிடைக்கின்றதோ, அவைகளையெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கின்றேன். இறைவன் அருளால் வாழ்வியல் ஞானங்களும், நன்மையான மருத்துவ வழிகாட்டல்களும் நமக்குக் கிடைத்து, நம் வாழ்வில் அமைதியும், சமாதானமும், ஆரோக்கியமும் நிலைபெறட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

1 year ago | [YT] | 12

ArunCJ Academy

The perfect bathing!

1 year ago | [YT] | 19