Thanks for coming my About page.. 💐💐
Keep Support & Subscribe.🔔🔔

💥Here I want to share
1.Kolam videos,
2.Hindu devotional stories,
3. SUNDARAKANDA
4. SAI SATCHARITRA
5. MAHA PERIYAVA & SAIBABA MOTIVATIONAL QUOTES

In this channel, spiritual way to know about the God through my audio. This is best suitable listening for pregnancy ladies, kids, traveling passengers and all.

📌Dear Subscribers!!! Your likes and comments are motivates me to create more.
📌Hope you satisfied my videos as much as we have pleasure to making them...
Pavithra Karthick 🙏🙏



Pavi's Classic

*இன்றைய சிறுகதை*

*பாடாதே! செத்தேன்!*

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.

கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.

மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன்.

எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.
கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான்.

தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.

நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.
வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.
அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான்.

அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான்.

வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.
எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.

உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.

அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும்.

உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.

சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை.

நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.

அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.


குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.
அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.

இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.

திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.

முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.

உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.

தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.

இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.

திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.
எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.
முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.

ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன்.

நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.

நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.

உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.

அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.

நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.

அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.

எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.

வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.

நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.

அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.

வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.

உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா?

நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.

அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட ஒரு காவலன் வந்தான்.

நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.
புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.

அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.
சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.

அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.

உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.

புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.
அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள்.

தூணில் கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.
பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.

பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்..

பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.


கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.

உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.

எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.

பகிர்வு

9 months ago | [YT] | 1

Pavi's Classic

காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்....
1. அம்மா அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை.

2. மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்...

3. ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே

4. பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும்.

5. கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

6. நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

7. நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி.

8. குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு.

9. போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே.

10. சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.

இவை அனைத்தையுமே மனிதர்கள் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்.

9 months ago | [YT] | 1

Pavi's Classic

🙏🍇 வாழ்க வளமுடன் 🍇🙏72.
🍇 கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதைப் போன்று ஆதாயம் வேறில்லை.
🍇சின்ன சின்ன செலவுகளை குறையுங்கள்.காரணம், எவ்வளவு பெரிய கப்பலையும் சிறிய ஓட்டை மூழ்கடித்து விடும்.
🍇 வலிமை உள்ள போதே சேமிக்கப் பழகுங்கள்.கடைசியில் யாரும் கொடுத்து உதவமாட்டார்கள்.
🍇 நேர்மையாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறவர்கள் சாதாரண மனிதர்கள்.
🍇 அவ்வாறு சம்பாதிக்கிற பணத்தை, எதிர்கால வசதிக்காக, பாதுகாப்பாக சேமித்து வைப்பவர்கள் மாமனிதர்கள்.
🍇 அருட் பேராற்றல் கருணையினால் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும் அமையுமாக.
🙏 🍇வாழ்க வளமுடன்🍇🙏

9 months ago | [YT] | 0

Pavi's Classic

முதல் அவமானம் அழுகையைத் தரும் இரண்டாவது அவமானம் அறிவைத் தரும் மூன்றாவது அவமானம் அமைதியைத் தரும் இறுதி அவமானம் அடையாளத்தை தரும் அவமானங்கள் உனக்கான முற்றுப்புள்ளியல்ல, அவைகள்தான்
உன் வெற்றியின் தொடக்கப்புள்ளி அவமானம் இன்றி எவரும் வெற்றி பெற்றதில்லை

எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும்
நேர்மையாளனாக இருந்தாலும்
வார்த்தைகளில் கடுமை இருந்தால்
வாழ்க்கையே கொடுமையாகி விடும்

மனம் ஒன்றும் கருங்கல் பாறை அல்ல.
அடித்து அடித்து உடைத்து நொறுக்க.
குணம் ஒன்றும் பொங்கல் பானை அல்ல
விதவிதமாக வண்ணம் பூசிக் கொள்ள.

இனிய காலை வணக்கம்

9 months ago | [YT] | 2

Pavi's Classic

#படித்தேன்_பகிர்ந்தேன்

*அப்பா ஏன்* *எப்போதும்* *பின்தங்கி*
*யிருக்கிறார் என்று தெரியவில்லை.....*

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். *இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். *இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.*

3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.*

4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திரு

10 months ago | [YT] | 0

Pavi's Classic

*இனிமையான*
*சொற்கள்....*

நீங்கள் கூற வந்ததை மற்றவர் மனம் புண்படாமல், இனிமையாக கூற முடியும் என்றால், உங்களை நீங்களே பாராட்டி கொள்ளலாம்.
பல வருடங்களுக்கு முன்பு, office செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்த போது, ஆஜானுபாகுவாக, நெற்றியில் திருமண் பளிச்சிட, பஞ்சகச்சவேட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது நபர், இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா ? என்று பவ்யமாக கேட்டார். விளக்கம் சொன்னவுடன், நன்றி என்று கூறிவிட்டு, நீங்கள் செல்லும் காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறட்டும் என்று இனிமையாக கூறி விட்டு புன்னகையோடு நகர்ந்தார். இன்னும் அந்த இனிய நண்பரை என்னால் மறக்க முடியவில்லை.
கடுவன் பூனை போல கேட்பதற்கு
எல்லாம் சிடுசிடு என்று பதில் கூறாமல் இனிமையாக பேசினால், நம் வாழ்வில் வசந்தம் மலரும்.
காரில் செல்லும் போது, சிக்னலில் நின்ற போது, என் கார் பக்கத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த குட்டி பெண், How are you grand pa ? என்று புன்னகையோடு கேட்டபோது, Fine darling, Have a nice day.God bless you என்று கூறினேன்.ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணின் அம்மா, முக பர்தாவை விலக்கி சுக்ரியா என்று அகமும் முகமும் மலர நன்றி கூறினார்.
இனிய சொற்கள் எப்பொழுதுமே
நம்மை சுற்றி நல்ல Auraவை,
சந்தோஷ அலைகளை ஏற்படுத்தும்.
சிலர் எப்போதும் வீட்டில், வெளியில் சீரியஸாகவே இருப்பார்கள். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச கூட தயக்கமாக இருக்கும்.
இனிய சொல் உளவாக...
வள்ளுவன் குறள் என்றும் மெய்மை.
A sweetest thing in the world is his
own name என்று கூறுவார்கள்.
யாராவது நம் பெயரை, பேசும் போது அடிக்கடி குறிப்பிட்டால், இயல்பாக அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். இல்லை மனோகரா, இப்படி யோசிச்சு பாரேன் மனோ என்று கூறும் போது, நானும் அவர் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்
என் அலுவலகத்தில் ஒரு பெண் staff. எல்லோரிடமும் அகமும் முகமும் மலர நல்லதையே பேசுவார். யாரையும் குறையே கூற மாட்டார். குறை கூறும் சந்தர்ப்பம் வந்தாலும், அண்ணா ஏதோ ஞாபகத்திலே தப்பா எழுதிட்டீங்க.Correct பண்ணிடுங்க என்று மென்மையாக கூறுவார். நான் கூட அதிசயிப்பேன். எப்படி இந்த பெண்ணுக்கு இவ்வளவு maturity இந்த இளம் வயதில். நானே கூட என்னை திருத்தி கொண்டேன்.
என் நண்பர் ஒருவர். நண்பர்களுக்குள் சண்டை போடுவது போல சூழ்நிலை வந்தாலும், எதையாவது இனிமையாக சொல்லி atmosphereயே மாற்றி விடுவார்.
இனிமையான சொற்கள் வாழ்வில் கவசம் போல. என்றும் நம்மை பாதுகாக்கும்.
ஒரு பிரச்னை. உங்கிட்டே பேசினால் நல்லா இருக்கும் என்று உன்னை தேடி வந்தேன் என்று உங்கள் நண்பர் யாராவது கூறினால், நீங்கள் நல்ல இனிமையான நட்பை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்கள்.
சில சமயம் கல்யாண வீடுகளில் பிரச்னை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை.
சட்டென்று யாராவது ஒருவர் மென்மையாக, அட விடுங்கப்பா அப்புறம் பேசி கொள்ளலாம்.முருகேசு நல்ல விவரம் தெரிஞ்ச நீயே அவசரப்படலாமா என்று கூறி, சட்டென்று சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.
என் நண்பர் ஒருவர், ஹோட்டலில் சாப்பிட்டால் கூட Bearerக்கு புறப்படும் போது இயல்பாக நன்றி கூறுவார்.
நம்மை சுற்றி எல்லோருமே ஈஸ்வர சொரூபம்தான் என்று ஸ்ரீ ரமணர் குறிப்பிடுவார். ஏற்ற தாழ்வின்றி இனிமையாக பேசுவது என்றுமே சிறப்பு.
இனிமையாக பேசுவதற்கு எந்த செலவும் இல்லை. பேசுவதற்கு மனதளவில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அது மட்டும்தான் வேண்டும்.

இந்த நாள் இனிய நாள்!!

இனிய காலை வணக்கம்!!!🙏🙏😀😀😀

10 months ago | [YT] | 0

Pavi's Classic

10 months ago | [YT] | 4

Pavi's Classic

_காரணமின்றி அன்பு வைப்பது _*முதலாவது தவறு.*_

_எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் _*இரண்டாவது தவறு.*_

_மற்றவர்கள் நம்மைப் போல் இருப்பார்கள் என்று நினைப்பது _*மூன்றாவது தவறு…!*_

10 months ago | [YT] | 0

Pavi's Classic

_*ஒரு மரத்தில் பூத்த பூக்களின் மணங்களில் பேதமில்லை. ஆனால் ஒரு தாயின் வயிற்றின் பிறந்த குழந்தைகளின் குணங்கள் வேறுபடுகிறது.*_

_காரணம் அதன் ஆணிவேர் ஆசை என்பதை உணர வேண்டும்._

_*இலை மீது எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு நீரை கூட வேரின் உதவி இல்லாமல் குடிக்க முடியாது.*_

_அதுபோலவே எத்தனை கடவுளை தரிசித்து வந்தாலும் பெத்தவங்களை வணங்காமல் புண்ணியம் சேராது._

_*பெற்றோர்களைக் காக்காமல், அவர்களின் தேவைக்கான செலவு செய்யாமல் சேமிக்கும் பணம், ஓட்டைக் குடத்தில் தண்ணீர் ஊற்றுவது போல தங்காமல் சென்றுவிடும்.*_

10 months ago | [YT] | 0

Pavi's Classic

_*தடுக்கி விழுந்த குழந்தையை*_
_*பதறி போய் தூக்குவது தாய்..*_
_*பக்கத்திலிருந்து தானாக*_
_*எழுகிறதா என்று பார்ப்பது தந்தை..*_
_*இரண்டுமே இரு வேறு*_
_*வகையான அன்புதான்*_

_எந்த வீழ்ச்சிகளும் வருத்தப்படுவதற்கு அல்ல._
_அது தான் வாழ்வின் எழுச்சிக்கு ஓர் உந்துதல்._

_*மரியாதை தெரியாத*_
_*நபர்களுடன் நெருங்கிப்*_ _*பழகுவதை விட, மரியாதை*_ _*தெரிந்தவர்களுடன்*_
_*தூரமாகப்*_ _*பயணிப்பதே மேல்.*_

_வாழ்க்கையில்_ _தடம் மாறும்போது_
_தட்டிக்_ _கேட்பவர்களோடும்,_
_தடம் பதிக்கும்போது_
_தட்டிக்_ _கொடுப்பவர்களோடும்_
_பயணியுங்கள்._

_*நேரம் ஒதுக்கிப் பேசுபவர்களிடம் பழகுங்கள்,*_ _*அவர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.*_ _*வேலைகளை ஒதுக்கி*_ _*பேசுபவர்களை நேசியுங்கள்,*_
_*அவர்களை மறக்காமல் இருங்கள்.*_

_அடுத்தவர்கள் உங்களுக்கு_ _கொடுக்கும்_
_விமர்சனங்கள்_ _சரியானதாக இருப்பின்_
_"திருத்தி விட்டு"_ _நகருங்கள்._
_தவறாக இருப்பின்_
_"சிரித்து விட்டு" நகருங்கள்._

_*மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அதற்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும்.*_

_எல்லோருக்கும் மற்றவர்களின்_ _குறைகள் பளிச்சென தெரிகிறது தம்முடைய_ _குறைகள்_
_மங்கலாக கூடத்_ _தெரிவதில்லை._

_*எனக்கென்று யாருமே இல்லை என்று நீ நினைக்கும் பொழுது உனக்கு என்று நான் உள்ளேன் என்று உள் மனது கூறுவது கடவுள் மட்டுமே.*_

_நீ பிறருக்குச் செய்யும் துரோகமானது உன்_ _பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவமாகும்._
_நீ வளர்ந்து விட்டாய் என்று பெருமைப்படாதே_
_நீ வளர்வதற்கு முன் இருந்த நிலையை ஒரு முறை சிந்தித்துப் பார்._

_*வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை*_
_*ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ளமுடியாது.*_

_மகிழ்ச்சியாக இருப்பதற்கு_
_மந்திரங்கள் தேவையில்லை சில மறதிகள் இருந்தாலே போதுமானது._

_*முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி.*_
_*அடுத்த நிலையை*_
_*அடைய முயற்சி செய்*_
_*அடுத்தவன் நிலையை*_
_*அடைய முயற்சி* *செய்யாதே*_

10 months ago | [YT] | 0