நீங்கள் கூற வந்ததை மற்றவர் மனம் புண்படாமல், இனிமையாக கூற முடியும் என்றால், உங்களை நீங்களே பாராட்டி கொள்ளலாம். பல வருடங்களுக்கு முன்பு, office செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்த போது, ஆஜானுபாகுவாக, நெற்றியில் திருமண் பளிச்சிட, பஞ்சகச்சவேட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது நபர், இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா ? என்று பவ்யமாக கேட்டார். விளக்கம் சொன்னவுடன், நன்றி என்று கூறிவிட்டு, நீங்கள் செல்லும் காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறட்டும் என்று இனிமையாக கூறி விட்டு புன்னகையோடு நகர்ந்தார். இன்னும் அந்த இனிய நண்பரை என்னால் மறக்க முடியவில்லை. கடுவன் பூனை போல கேட்பதற்கு எல்லாம் சிடுசிடு என்று பதில் கூறாமல் இனிமையாக பேசினால், நம் வாழ்வில் வசந்தம் மலரும். காரில் செல்லும் போது, சிக்னலில் நின்ற போது, என் கார் பக்கத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த குட்டி பெண், How are you grand pa ? என்று புன்னகையோடு கேட்டபோது, Fine darling, Have a nice day.God bless you என்று கூறினேன்.ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணின் அம்மா, முக பர்தாவை விலக்கி சுக்ரியா என்று அகமும் முகமும் மலர நன்றி கூறினார். இனிய சொற்கள் எப்பொழுதுமே நம்மை சுற்றி நல்ல Auraவை, சந்தோஷ அலைகளை ஏற்படுத்தும். சிலர் எப்போதும் வீட்டில், வெளியில் சீரியஸாகவே இருப்பார்கள். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச கூட தயக்கமாக இருக்கும். இனிய சொல் உளவாக... வள்ளுவன் குறள் என்றும் மெய்மை. A sweetest thing in the world is his own name என்று கூறுவார்கள். யாராவது நம் பெயரை, பேசும் போது அடிக்கடி குறிப்பிட்டால், இயல்பாக அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். இல்லை மனோகரா, இப்படி யோசிச்சு பாரேன் மனோ என்று கூறும் போது, நானும் அவர் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விடுவேன் என் அலுவலகத்தில் ஒரு பெண் staff. எல்லோரிடமும் அகமும் முகமும் மலர நல்லதையே பேசுவார். யாரையும் குறையே கூற மாட்டார். குறை கூறும் சந்தர்ப்பம் வந்தாலும், அண்ணா ஏதோ ஞாபகத்திலே தப்பா எழுதிட்டீங்க.Correct பண்ணிடுங்க என்று மென்மையாக கூறுவார். நான் கூட அதிசயிப்பேன். எப்படி இந்த பெண்ணுக்கு இவ்வளவு maturity இந்த இளம் வயதில். நானே கூட என்னை திருத்தி கொண்டேன். என் நண்பர் ஒருவர். நண்பர்களுக்குள் சண்டை போடுவது போல சூழ்நிலை வந்தாலும், எதையாவது இனிமையாக சொல்லி atmosphereயே மாற்றி விடுவார். இனிமையான சொற்கள் வாழ்வில் கவசம் போல. என்றும் நம்மை பாதுகாக்கும். ஒரு பிரச்னை. உங்கிட்டே பேசினால் நல்லா இருக்கும் என்று உன்னை தேடி வந்தேன் என்று உங்கள் நண்பர் யாராவது கூறினால், நீங்கள் நல்ல இனிமையான நட்பை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்கள். சில சமயம் கல்யாண வீடுகளில் பிரச்னை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை. சட்டென்று யாராவது ஒருவர் மென்மையாக, அட விடுங்கப்பா அப்புறம் பேசி கொள்ளலாம்.முருகேசு நல்ல விவரம் தெரிஞ்ச நீயே அவசரப்படலாமா என்று கூறி, சட்டென்று சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். என் நண்பர் ஒருவர், ஹோட்டலில் சாப்பிட்டால் கூட Bearerக்கு புறப்படும் போது இயல்பாக நன்றி கூறுவார். நம்மை சுற்றி எல்லோருமே ஈஸ்வர சொரூபம்தான் என்று ஸ்ரீ ரமணர் குறிப்பிடுவார். ஏற்ற தாழ்வின்றி இனிமையாக பேசுவது என்றுமே சிறப்பு. இனிமையாக பேசுவதற்கு எந்த செலவும் இல்லை. பேசுவதற்கு மனதளவில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அது மட்டும்தான் வேண்டும்.
Pavi's Classic
*இனிமையான*
*சொற்கள்....*
நீங்கள் கூற வந்ததை மற்றவர் மனம் புண்படாமல், இனிமையாக கூற முடியும் என்றால், உங்களை நீங்களே பாராட்டி கொள்ளலாம்.
பல வருடங்களுக்கு முன்பு, office செல்ல வீட்டிலிருந்து வெளியே வந்த போது, ஆஜானுபாகுவாக, நெற்றியில் திருமண் பளிச்சிட, பஞ்சகச்சவேட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது நபர், இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா ? என்று பவ்யமாக கேட்டார். விளக்கம் சொன்னவுடன், நன்றி என்று கூறிவிட்டு, நீங்கள் செல்லும் காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறட்டும் என்று இனிமையாக கூறி விட்டு புன்னகையோடு நகர்ந்தார். இன்னும் அந்த இனிய நண்பரை என்னால் மறக்க முடியவில்லை.
கடுவன் பூனை போல கேட்பதற்கு
எல்லாம் சிடுசிடு என்று பதில் கூறாமல் இனிமையாக பேசினால், நம் வாழ்வில் வசந்தம் மலரும்.
காரில் செல்லும் போது, சிக்னலில் நின்ற போது, என் கார் பக்கத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த குட்டி பெண், How are you grand pa ? என்று புன்னகையோடு கேட்டபோது, Fine darling, Have a nice day.God bless you என்று கூறினேன்.ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணின் அம்மா, முக பர்தாவை விலக்கி சுக்ரியா என்று அகமும் முகமும் மலர நன்றி கூறினார்.
இனிய சொற்கள் எப்பொழுதுமே
நம்மை சுற்றி நல்ல Auraவை,
சந்தோஷ அலைகளை ஏற்படுத்தும்.
சிலர் எப்போதும் வீட்டில், வெளியில் சீரியஸாகவே இருப்பார்கள். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச கூட தயக்கமாக இருக்கும்.
இனிய சொல் உளவாக...
வள்ளுவன் குறள் என்றும் மெய்மை.
A sweetest thing in the world is his
own name என்று கூறுவார்கள்.
யாராவது நம் பெயரை, பேசும் போது அடிக்கடி குறிப்பிட்டால், இயல்பாக அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். இல்லை மனோகரா, இப்படி யோசிச்சு பாரேன் மனோ என்று கூறும் போது, நானும் அவர் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்
என் அலுவலகத்தில் ஒரு பெண் staff. எல்லோரிடமும் அகமும் முகமும் மலர நல்லதையே பேசுவார். யாரையும் குறையே கூற மாட்டார். குறை கூறும் சந்தர்ப்பம் வந்தாலும், அண்ணா ஏதோ ஞாபகத்திலே தப்பா எழுதிட்டீங்க.Correct பண்ணிடுங்க என்று மென்மையாக கூறுவார். நான் கூட அதிசயிப்பேன். எப்படி இந்த பெண்ணுக்கு இவ்வளவு maturity இந்த இளம் வயதில். நானே கூட என்னை திருத்தி கொண்டேன்.
என் நண்பர் ஒருவர். நண்பர்களுக்குள் சண்டை போடுவது போல சூழ்நிலை வந்தாலும், எதையாவது இனிமையாக சொல்லி atmosphereயே மாற்றி விடுவார்.
இனிமையான சொற்கள் வாழ்வில் கவசம் போல. என்றும் நம்மை பாதுகாக்கும்.
ஒரு பிரச்னை. உங்கிட்டே பேசினால் நல்லா இருக்கும் என்று உன்னை தேடி வந்தேன் என்று உங்கள் நண்பர் யாராவது கூறினால், நீங்கள் நல்ல இனிமையான நட்பை அவருக்கு கொடுத்து இருக்கிறீர்கள்.
சில சமயம் கல்யாண வீடுகளில் பிரச்னை பெரிதாக வெடிக்கும் சூழ்நிலை.
சட்டென்று யாராவது ஒருவர் மென்மையாக, அட விடுங்கப்பா அப்புறம் பேசி கொள்ளலாம்.முருகேசு நல்ல விவரம் தெரிஞ்ச நீயே அவசரப்படலாமா என்று கூறி, சட்டென்று சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.
என் நண்பர் ஒருவர், ஹோட்டலில் சாப்பிட்டால் கூட Bearerக்கு புறப்படும் போது இயல்பாக நன்றி கூறுவார்.
நம்மை சுற்றி எல்லோருமே ஈஸ்வர சொரூபம்தான் என்று ஸ்ரீ ரமணர் குறிப்பிடுவார். ஏற்ற தாழ்வின்றி இனிமையாக பேசுவது என்றுமே சிறப்பு.
இனிமையாக பேசுவதற்கு எந்த செலவும் இல்லை. பேசுவதற்கு மனதளவில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அது மட்டும்தான் வேண்டும்.
இந்த நாள் இனிய நாள்!!
இனிய காலை வணக்கம்!!!🙏🙏😀😀😀
10 months ago | [YT] | 0