Jai Akash Vijayan

Current Affairs of India
Political Leader

President of Tamizhaga Makkal Munnetra Sangam

என் உயிரில் கலந்த அன்பு சொந்தங்களே

Here I'm sharing and motivating Discuss about the Public issues and Trending Contents.
Food vlog , Movie review

Do Subscribe and Support Pannuga Makkaley
😊😊🥰


Jai Akash Vijayan

சென்னை, கண்ணகிநகர் பகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்கள் நேற்று மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி வருந்தமடைந்தேன்.‌

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

@tmms__official

2 weeks ago | [YT] | 0

Jai Akash Vijayan

மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.

எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார்

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Tamizhaga Makkal Munnetra Sangam

4 weeks ago | [YT] | 0

Jai Akash Vijayan

கடந்த 13 நாட்களாக தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்குக் கண்டனம்!

குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது.

காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலனை காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்..

தற்போது தூய்மை பணியாளர்களை‌‌ திராவிட மாடல் அரசு விட்டுகொடுக்காது என்று‌ சொல்லி நாடகமாடி வருகிறார் தமிழக முதலமைச்சர். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு அளிக்க அரசியல் கட்சியினரையும் விட்டு வைக்காமல் கைது செய்துள்ளது. சர்வாதிகாரத்தின் உச்சம்‌.

கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை திமுக அரசு விடுவித்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

#SanitaryWorkers #DMKFailsTN #TMMSForTN

4 weeks ago | [YT] | 0

Jai Akash Vijayan

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை திசை திருப்ப திமுக கொடுத்த வேலையை செய்கிறாரா ஐயா திருமாவளவன் ?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வறுமையில் பிறந்து -கடுமையாக உழைத்து-மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்!

பல்வேறு சமூகநல திட்டங்களை கொண்டு வந்து,பழங்குடியின மக்கள் முதல் எல்லோரின் வாழ்வையும் ஏற்றம் பெற வைத்தவர்!

சாதி கடந்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதால் தான் மக்கள் இன்றும் அவரை நேசிக்கின்றனர்!

அதனால் தான் நம் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் வழிகாட்டி மற்றும் கொள்கைத் தலைவராக அவரை நாங்கள் கொண்டாடுகிறோம்

விசிக தலைவர் திருமாவின் பேச்சு வன்மத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியை தியாகியாக காட்ட திருமாவளவன் முயல்வதை பார்க்கும் போது காமெடியாக தான் உள்ளது.

ஐயா திருமாவளவன் அவர்கள் திமுகவின் சார்பு அணி தலைவரைப் போல பேசி வருவதை விசிக தொண்டர்களே விரும்பவில்லை!
திமுகவிற்கு வாக்கு வாங்கி கொடுப்பதையும்-அறிவாலயத்திற்கு காவடி தூக்குவதையும் முழு நேரமாக செய்து வரும் ஐயா திருமாவிற்கு எங்கள் கொள்கை தலைவரை பற்றி பேச என்ன தகுதி-என்ன அருகதை உள்ளது?

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து பேசிய ஐயா திருமாவளவன் அவர்கள் மற்றும் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

1 month ago | [YT] | 0

Jai Akash Vijayan

Remembering Dr. APJ Abdul Kalam on his death anniversary, an inspiring visionary, exceptional scientist and true patriot. His steadfast commitment to the nation and his timeless words continue to inspire India’s youth to work towards a stronger, developed nation.

1 month ago | [YT] | 0

Jai Akash Vijayan

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பிட எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Due to Some Health issues Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. @mkstalin admitted in the Hospital. I Pray to God for Speedy recovery of our CM sir.

1 month ago | [YT] | 0