Hi Friends,
This is Jackiesekar i am a Flim critic & also a Movie buff. I worked in lot of Tamil serials. I was a assitant Cameraman in famous tamil movies.
If you're interested in a movie's review, latest movie updates, FDFS review, movie sneak peak, tamil cinema news, trailer review or its latest news, Top 10 movies, famous directors films, this is the best place to get the complete picture!
I review Hollywood Movies, Hindi movies, Telugu movies, Tamil films, malayalam movie, korean movies, spanish movies, world Movies, korean dramas, netlix series, amazon prime latest movies & Ott released cinemas, movie end explaination, controversial talk. My Motto is to get educate, inspire and choose the right movies for our viewers.
I review all Genere like love. roamance, thriller, rom-com, classic, action, Crime,crime drama, korean drama, suspense thrillers, based on true stories, war movies, adventure movies, science fitcions, fantasy.
Subscribe & Share our channel to friends & Family
Jackie Cinemas
சாய்யாரா ஹிந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது... புதியவர்கள் நடித்திருக்கும் இந்த காதல் படத்திற்கு இவ்வளவு வசூலா என்று வாய்பிளக்கிறார்கள்... நானும் வாய்ப்பிளந்தேன் 😂
சாய்யாரா என்று நினைத்ததுமே கூகுளுக்கு வேர்த்து விடும் அல்லவா? சாய்யாரா வீடியோ ஒன்று இன்ஸ்டா ரில்ஸ்ல் காட்டியது....
நாயகனும் நாயகியும் கடற்கரைக்கு வருகிறார்கள். நாயகி ஜீன்ஸ் கலர் டிரவுசரும் மேலே ஒரு பனியனும் அணிந்திருக்கிறார்.
கடல் நீரை பார்த்ததுமே நாயகி குஷியாகி விடுகிறார். உடனே, தனது நீல கலர் ஜீன்ஸ் டிரவுசரை அவுத்து விடுகிறார்.... நாயகன் அதிர்ச்சியாவது போல,நாமும் அதிர்ச்சி ஆகிறோம்...
மேலே டி சட்டும் கீழே நீல கலர் ஜட்டியோடு ஓடும் நாயகி கடற்கரை நோக்கி ஓடுகிறார்... ஓடும்போதே மேலே இருக்கும் டீ சர்ட்டையும் அவுத்து விடுகிறார்... டிசைன் கலர் ப்ரா அணிந்திருக்கிறார்...
கடல் அலையில் இறங்கியதும் நாயகனும் அதே மாதிரி சட்டை டவுசர் எல்லாம் அவிழ்த்து விட்டு, அவரும் ஜட்டியோடு கடலில் இறங்குகிறார்.... நாயகியை அலேக்காக தூக்குகிறார்...
அந்தப் பாடல் நெடுகிலும் ஹீரோயின் உதட்டில் சுவை இருக்கிறதா என்பதை லிப்லாக்கின் மூலம் செக் செய்து கொண்டே இருக்கிறார் நாயகன் 🤣 படம் முழுவதும் எண்ணிலடங்கா லிப்லாக்சசீன்கள் இருக்கின்றன.
காதல் மறுக்கப்பட்டு தேசம்,
வெறும் பயலாக காதலித்தாலும் சரி, சாப்ட்வேர் இன்ஜினியராக மாதம் 2 லட்சம் சம்பாதித்தாலும் சரி, நடுரோட்டில் வெட்டிக் கொன்று விடுகிறார்கள்....
சனியன் புடிச்ச இயற்கை 13, 14 வயதில் வயிற்று பசியோடு காம பசியும் உருவாகிறது... வயிற்றுக்கு சோறு போட்டு விடுகிறோம் ஆனால் காமத்துக்கு....
எதிர்பாலின விழைவு என்பது இயற்கை... காதலிக்கும் பெண்ணின் உடலை பார்ப்பதற்கே ஒரு காலத்தில் மாமாங்கமாகும்....இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாகவே நடக்கிறது... ஆனால் காதலும் காமமும் மறுக்கப்பட்டவனுக்கு, எலைட் பெண்ணின் அறிமுகமே கிட்டாதவனுக்கு, கூட்டுக் குடும்பத்தில் இருப்பவனுக்கு, பெரிய வடிகால் என்பது, பெரிய ஸ்கிரீனில் அதிதீராவுக்கு தங்கையாக இருக்கக்கூடிய முக லட்சணம் கொண்ட நாயகி அனீத்பாடேவை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... முக்கியமாக அந்த அப்பாவி தனமான உதடுகள் 🤣❤️
சகலத்தையும் பார்த்த நமக்கே இப்படி இருக்கிறது என்றால்?
வாசனையே அறியாதவனுக்கு?
நீங்க பிரமாண்டமான ஸ்கிரீனில் கற்பனை உலகத்தில் நாயகனை தள்ளிவிட்டு தன்னை நாயகனாக நினைத்துக் கொண்டு நாயகியின்
உடலையும் உதட்டையும் பார்த்துக் கொண்டே இருக்கறான்
நாயகனாக நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரர் ஆஹான் பாண்டே நடித்திருக்கிறார்... நாயகியாக அனீத் பாடே நடித்திருக்கிறார்.
சைக்காலஜிக்கலாக குழந்தைத்தனமான முகம் கொண்ட நாயகிகள் வெற்றி பெறுவார்கள்... இவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
அனீத் பாடே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய நெருங்கிய தோழிகள்... ரொம்ப அழகா இருந்தாலும் ஆண்டவன் உனக்கு அள்ளிக் கொடுக்காமல் புள்ளி வைத்து விட்டானே என்று அனீஸ் பாடே வை கலாய்த்து இருப்பார்கள்...
இருங்கடி இந்தியாவில் இருக்கும் அத்தனை பசங்க கை ரேகையையும் அழிக்க வைக்கிறேன் பார் என்று சபதம் போட்டிருக்கலாம்... அவர் போட்ட சபதத்தில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும் 🤣 காசையும் கொடுத்து கைரேகையும் அழித்து.... ஆனா இதுதான் நிஜமான களநிலவரம்.
இந்த படம் 300 கோடி சம்பாதிக்க மிக முக்கிய காரணம் அந்த கடற்கரை காட்சிதான் இதை சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்...
அவ்ளோ பெரிய டைட்டானிக் செட்டை விட, கேத் வின்செட் , கேப்ரியோ ஓவியமாக வரையும் காட்சி...
சரி விடுங்க இதெல்லாம் சொன்னா எவனும் ஒத்துக்க மாட்டான்...
காமம் இந்தியாவைப் பொறுத்தவரையில் ரகசியமானது... அதை ரசிப்பவனும் அதனை வெளியில் செல்பவனும் கெட்டவனாக விடுவார்கள்...
அமைதியாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் நல்லவன் டேக் லைனில் நிம்மதியாக வாழ்வார்கள் 😄
ஏன் 300கோடி சம்பாதித்தது என்ற கேள்விக்கான விடையறிய படம் பார்த்த என்னை வாழ்த்துங்கள் பிரென்ச்😄😍
-ஜாக்கிசேகர்
#saiyaaramovie #sayaara #romance
#aneetpadda #hindimovie
1 month ago | [YT] | 48
View 11 replies
Jackie Cinemas
ஆங்கர் #அர்ச்சனா
சில நேரங்களில் ஓவர் டூ செய்து விடுவார்...
தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது இது நிறைய அங்கர்களுக்கு நிகழ்ந்து விடும்... பிரியங்கா,சிவகார்த்திகேயன், மாகாபா,கோபிநாத், யாரும் இதில் விதி விலக்கல்ல.
அதே நேரத்தில் அர்ச்சனா பிரியங்கா இரண்டு பேருமே.. இசை நிகழ்ச்சிகளில் சாதாரண பின்புலத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கோ மற்றவர்களுக்கோ பெரிய பெரிய இடங்களில் வாய்ப்பு தேடி கொடுப்பதில் இந்த இரண்டு பேரையும் அடித்துக் கொள்ள முடியாது...
பிக் பாஸில் கொஞ்சம் பெயரை கெடுத்துக் கொண்டாலும் கூட, ஆங்கர் செய்வதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது...
மெட்ராஸ் மேட்நீ படம் பார்த்தேன்... ஒரு சில சீன்கள்தான் ஆனாலும் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
திருமண வாழ்க்கையில் தோற்றுப்போன ஒரு கேரக்டர்... வாவ்... என்ன மாதிரியான ஒரு நடிப்பு?
திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் தன் பணியாளருக்கு கொடுக்கும் அட்வைஸ்.
நிச்சயம் கல்யாணம் பண்ணிக்க தான் வேணுமா என்ற அந்த கேள்வி..
அந்தப் பெண் எனக்கு என்ன அட்வைஸ் பண்ணுவீங்க என்று கேட்கும் போது...
தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக் கொண்டே....
உன்னுடைய கேரியர்ல கவனம் செலுத்து...
நல்ல பையன் கிடைக்கிற வரை வெயிட் பண்ணு. நம்மளால வேற என்ன செய்ய முடியும்?
வேலை செய்யற பொண்ணுங்க வாழ்க்கையில நிறைய கஷ்டம் இருக்கு.
நம்மள பெத்தவங்கள பாத்துக்கணும், நமக்கு வயசாகறதுக்குள்ள நம்ம பெத்து போடணும், நேச்சுரல் நமக்கு டைம் கொடுக்கிறது இல்ல,
35 வயசுற்கு அப்புறம் குழந்தை பெத்துக்கிறது ரொம்பவும் கஷ்டம்.
ஆனால் நீ உன்ன நெனச்சு பெருமைப்படணும் என்று சொல்லிவிட்டு...
தீபிகா கேரக்டர், அர்ச்சனாவை பார்த்து ஒரு கேள்வி கேட்கும்..
தப்பா நினைச்சுக்கலன்னா. ஒரு கேள்வி உங்கள நான் கேட்கிறேன்... நீங்க ஏன் தனியா இருக்கீங்க?
அர்ச்சனா கடந்த கால நினைவுகளை சற்று அசைபோட்டப்படி... தைரியத்தை வரை வைத்துக் கொண்டு
"I am devorced ராஜாத்தி" என்று
சொல்லும் அந்த இடமும்..
நீங்க இப்ப ஹாப்பியா இருக்கீங்களா அப்படின்னு கேட்கும்போது...
நான் சந்தோஷமாக இருக்கிறேன்... பாரு சனிக்கிழமை கூட ஆபீஸ்ல இருக்கேன் உன்னுடைய போரிங் ஸ்டோரியை கேட்டுட்டு இருக்கேன் என்று சொல்லி தன் வாழ்வின் பெருமையை விளக்கும் இடத்தில் அர்ச்சனாவின் நடிப்பு வாவ் ❤️
அவருக்கேற்ற கனமான பாத்திரங்களை எதிர்காலத்தில் தமிழ் திரை உலகம் தொடர்ந்து வழங்கிட வேண்டும்... நடிப்பில் நன்றாக மிளிர்வார் என்பதில் ஐயமில்லை 😍
- ஜாக்கிசேகர்
#Archana #MadrasMatinee #tamilcinema #saregamapa #tamilartist
1 month ago | [YT] | 56
View 16 replies
Jackie Cinemas
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு போயி 401 நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறேன்.
கலாச்சாரம், சீதோசன நிலை , மொழி, பண்பாடு, சாலை விதிகள் என்று இந்த 401 நாட்களில் அப்படியே தலை கீழான வித்தியாசமான வாழ்க்கையை நான் வாழ்ந்து இருக்கிறேன்..
உதாரணத்துக்கு தண்ணியில் கழுவுவது, பேப்பரில் துடைத்துக் கொள்வது இரண்டுக்குமான பெரிய இடைவெளியை உங்களால் உணர முடியும் 😂
பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து பொம்மணஹள்ளி வரை கால் டாக்ஸியில் முன்னால் உட்கார்ந்து கொண்டு வந்தேன்...
401 நாட்களுக்கு முன்பாக இப்படித்தான் இதே ஊரில் இந்த விதமாகத்தான் நானும் வண்டியை ஓட்டினேன்... ஆனால் அந்த ஒன்றரை மணி நேர பிரயாணத்தில், எனக்கு பிளட் பிரஷர், ஹார்ட் பிரஷர் எகிறி விட்டது...
இங்கிலாந்தில் இருந்த
401 நாட்களில்.... நான் நான்கு முறை தான் ஹாரன் அடித்து கேட்டிருக்கிறேன்., நான் ஒரே ஒரு முறை தான் ஹாரன் அடித்திருக்கிறேன்
இங்கே காரில் ஏறி உட்கார்ந்து 10 அடி நகர்வதற்குள் இரண்டு முறை ஹாரன் எடுத்து விட்டார் கால் டாக்ஸி டிரைவர்... எல்லா பக்கத்திலிருந்தும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன... எல்லாமே ஒம்மால ஜஸ்ட் மிஸ் மொமென்ட்தான். உயிர் போய் உயிர் வந்தது.. ஏதோ நான் இந்த ஊரில் கார் எல்லாம் ஓட்டி இருக்கிறேன்... உண்மையிலேயே இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஒருவர்... இந்தியாவில் அதுவும் பெங்களூரில் டாக்ஸியில் பிரண்ட் சீட்டில் உட்கார்ந்து வந்தால் அவ்வளவுதான் அவர் கதை அன்றையோடு முடிந்தது..
1993 ஆம் ஆண்டு பாடகி மடோனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் Body of Evidence.
(இந்த படத்தில் மெழுகுவர்த்தி உருகும் சீனும், மடோனாவின் வெள்ளை சட்டையும் வெகு பிரபலம்.... சாலை விதிகள் பற்றிய பதிவில், கவன சிதறல் ஏற்படக்கூடாது என்பதற்காக மடோனாவின் வெள்ளை சட்டை, மார்பு, இடுப்பு உடம்பு போன்றவற்றை விவரிக்காமல், பொது நலன் கருதி பதிவுக்கு மீண்டும் செல்கிறேன் )
ம்... என்ன ஆச்சுன்னா..
கதையின் நாயகி மடோனா வயதான பெரும் பணக்காரர்களை காதலிப்பார், திருமணம் செய்து கொள்வார், மேட்டர் செய்வதற்கு முன் சரக்கு, மற்றும் போதை மருந்துகளை எடுத்துக் கொள்ள அனுமதிப்பார்.... வயதான காலத்தில் இளமையை நிரூபிக்கிறேன் என்று கிழவர்கள் உச்ச கட்டத்தை அடையும்போது, ஹார்ட் அட்டாக்கில் மர்கேயா ஆகிவிடுவார்கள்... அதன் பிறகு அந்த கிழவனின் சொத்துக்களை மடோனா ஆட்டையை போட்டு விடுவார்...
இது ஒரு கான்செப்ட்...
இதுவும் ஒரு கற்பனை தான். நீங்கள் ஒரு பெண்... மடோனா போல.... அதுவும் 1993 ஆம் வருடம் மடோன போல இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்ளுங்கள்
இதே போல இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அவருக்கு வயதாகி விட்டது.... ஆனாலும் அவருக்கு பெண் சபலம் உண்டு...அவருடைய சொத்துக்கள் எல்லாம் நீங்கள் ஆட்டையை போட நினைத்தீர்கள் என்றால்... Body of Evidence மடோனா போல அவரை மேட்டர் செய்து உச்சநிலையில் ஹார்ட் அட்டாக் வரவைத்து, அவரை காலி செய்து, நீங்கள் சொத்தை ஆட்டையை போட, தலையை சுற்றி மூக்கை தொட வேண்டிய அவசியமே இல்லை...
இங்கிலாந்து தொழிலதிபருக்கு வெக்கேஷன்க்கு போலாம் என்று ஆசை வார்த்தை கூறி இந்தியாவுக்கு டிக்கெட் போட்டு, பெங்களூருக்கு வர வைத்து, உதட்டு முத்தம் கொடுத்து, கால் டாக்ஸி புக் பண்ணி, முன்சீட்டில் உட்கார வைத்து பெங்களூர் ஏர்போர்ட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு பயணம் செய்தீர்கள் என்றால்...
ஐந்தாவது கிலோமீட்டரிலேயே ஹார்ட் அட்டாக் வந்து அந்த கிழவர் பரலோகம் சென்று விடுவார்... 😂
இங்கிலாந்து கிழவர்களின் சொத்துக்களை அடைய இது ஒரு எளிய வழி... இதை சொன்னால் இந்த சமூகம் என்னை பேட் பாய் என்று சொல்லும்...
சொல்லிட்டு போங்கடா மயிரே 🤣
- ஜாக்கிசேகர்
#uklife #banglore #motherlandindia #india #ukroadrules #indiatrafficrules
#chennai #madona #bodyofevidence
2 months ago | [YT] | 44
View 15 replies
Jackie Cinemas
ஒரு 4 நாளைக்கு முன்னாடி சென்னை பெரம்பலூர் பேப்பர் மில் ரோட்ல 10 வயசு குழந்தை மேல லாரி ஏரி இறந்துவிட்டது...
ஆனா... அந்த குழந்தை இறந்ததற்கு மிக முக்கிய காரணம் ஒரு ஆட்டோ டிரைவர் உடைய அவசரக்குடுக்கத்தனம் தான்...
சைடு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும்போது நின்னு ரெண்டு பக்கமும் பார்த்துட்டு வரணும் அப்படின்ற எந்த ஒரு எண்ணமும் நம்ம ஆளுங்க யாருகிட்டயும் கிடையாது... அந்த ஆட்டோ டிரைவரின் பறக்கா வெட்டி தனத்தாள....
ஒரு பத்து வயசு பிஞ்சு குழந்தை இந்த உலகத்தை விட்டு போயிடுச்சு... கண்ணெதிரில் குழந்தையை பறிகொடுத்த அந்த பெண்மணிக்கு அது வாழ்நாள் துயரம்.
அரசாங்கம் இதற்கு மிகப்பெரிய முன்னெடுப்பை எடுக்க வேண்டும்... முதலில் சிசிடிவி இது போன்ற தவறு செய்பவர்களை பார்த்து அவர்களுக்கு அதிகபட்சமான பைன் மற்றும் தண்டனைகளை கொடுக்க வேண்டும்.
நேஷனல் ஹைவேஸ்ல போகும்போது சைடு ரோட்ல இருந்து வரக்கூடிய, டிராக்டர் கார் பஸ்,பைக், யாரோ ஒருவருடைய அஜாக்கிரதை காரணமாக எத்தனையோ பேர் இறந்து போய் இருக்காங்க...
யூ கே டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும்போது தாரக மந்திரமே "Give way " பரக்கா வெட்டி மாதிரி முன்னாடி போய் நின்னு, எவன் தாலியும் அறுக்காத அப்படின்னு தான் முதல்ல சொல்லிக் கொடுப்பாங்க...
ஒரு வருஷத்துக்கு முன்னாடின்னு நினைக்கிறேன் சென்னை அண்ணா சாலையில்
இதேபோல தேவர் சிலை கிட்ட ஒரு பையன் இரண்டு பொண்ணுங்கள கூட்டிட்டு ட்ரிபிள் அடிச்சிக்கிட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போயிட்டு இருந்தான். சைடு ரோட்டில இருந்து திடீர்னு உள்ள வந்த ஆட்டோவா பார்த்து சடன் பிரேக் அடிச்சு, பேருந்து ஏறி ஸ்பாட்லயே அந்த 18 வயசு நிரம்பிய ரெண்டு பொண்ணுங்களும் ஸ்பாட் அவுட்... உடனே நாம என்ன சொல்லுவோம்... ஹெல்மெட் போடாம ட்ரிபிள் எக்ஸ் அடிச்சுட்டு வந்தது தப்பு அப்படின்னு... அது தப்புதான் ஆனா அதே நேரத்துல வேற ஒரு தப்பால தான் இந்த உயிரே போச்சு....
அந்த விபத்து என் மனசுல குடஞ்சுகிட்டே இருந்துச்சு... முக்கியமா இன்னைக்கு சிசிடிவி ஃபுட்டேஜ் இல்லனா நம்ம அந்தப் பையனையும், அந்த சௌமியா பொண்ணோட அம்மா யாமினியையும் திட்டுவோம்.. லாரி மேல தான் தப்பு அப்படி என்ற மனநிலைக்கு நாமளும் வந்து விடுவோம்...
அதுவே அரசு பேருந்தாக இருந்தால் என்ன செஞ்சிருப்போம்?
ஆனா இந்த தப்புக்கு முழு காரணம் முதல் காரணம் அந்த ஆட்டோ டிரைவர் தான்.
ஆனா அவங்க ரெண்டு பேருமே ரொம்ப ரொம்ப அப்பாவிங்க... இரண்டு இடத்திலேயும் ஆட்டோ டிரைவர்கள் தான் ரொம்ப ரொம்ப பெரிய தப்பு பண்ணாங்க...
அதுதான் ஒரு விழிப்புணர்வு வீடியோவா யூகே சாலைகளில் நின்னு இந்த வீடியோவ பண்ணி இருக்கேன்...
சிறுமி மீது ஏறிஇறங்கிய லாரி Shocking Chennai School Girl Lorry Accident
video link - https://youtu.be/17Aw6w989SY
#ChennaiSchoolGirlAccident #LorryAccident #TamilNaduNews #RoadSafetyAwareness #JusticeForTheGirl #ChennaiTraffic #HitAndRunCase #SchoolSafety #AccidentNews #PublicOutrage #StopNegligentDriving #ChennaiProtests #tragicaccident
இந்த வீடியோ பார்த்து யாராவது ஒருத்தவங்க சைடு ரோட்ல போய் நிக்குன்னு ரெண்டு பக்கமும் பார்த்துட்டு மெயின் ரோட்டுக்கு போன அதுவே இந்த வீடியோவோட வெற்றியா நான் பார்ப்பேன்.
- ஜாக்கிசேகர்
3 months ago | [YT] | 51
View 13 replies
Jackie Cinemas
நிராகரிப்பின் வலி!!!
அதிகப்பிரசங்கித்தனமான பேச்சு, மற்றும் செயல்களால் தமிழ் திரை உலகில் அறிமுகமான பையன் சிம்பு...
ஆனாலும் தனக்கான இடத்தையும் ரசிகர்கள் கூட்டத்தையும், உருவாக்கிக் கொண்டாலும், சர்ச்சைகளுக்கு குறைவில்லை.
தக்லைப் ஆடியோ வெளியீட்டு விழா பேச்சில் கூட தான் நிறைய மசாலா திரைப்படங்கள் நடித்ததை ஒத்துக் கொண்டார்...
படம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும், சிம்புவுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது...
சிம்பு ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்திருந்தாலும், விண்ணைத்தாண்டி வருவாயாவில், என் கவனம் ஈர்த்தார், ரசிக்க வைத்தார்.
அதன் பிறகு சிம்பு திடீரென பிரபலமானார், உடல் எடை குறைப்பதற்காக வீட்டுக்குள்ளேயே ஓடிக் கொண்டிருந்தார்...
அதன் பிறகு அவர் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அடுத்த பயணத்தை தொடங்கினார் பத்து தலை திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார் ..
தக்லைப் ஆடியோ வெளியிட்டு விழாவில் சிம்புவின் பேச்சு, ஆழ்ந்த கருத்துக்களோடு, நிராகரிப்பின் வலியையும், பீப் சாங் இன் பிரச்சனையின் போது, சரியான நேரத்தில் கை கொடுத்த ஏ ஆர் ரகுமானையும், ரெட் கார்டு போட்டு படம் நடிக்க வாய்ப்பே இல்லாத போது, தனது திரைப்படத்தில் நடிக்க அழைத்து, வாய்ப்பு கொடுத்த மணிரத்தினத்தையும் குறிப்பிட்டு, சிம்பு பொதுவெளியில் நெகிழ்ச்சியாக நன்றி கூறினார்.
மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சியில்,வையாபுரியில் இருந்து வடிவுக்கரசி வரை நன்றி கூறியதை, நிராகரிக்கப்பட்டதின் வலியை, அது கொடுத்த அனுபவத்தை மிக கச்சிதமாக பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார் சிம்பு.
இனி எனது கேரியரில், செகண்ட் இன்னிங்ஸ் இந்த மேடையில் இருந்து துவங்குவதாக அறிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை தன்னை அறிதல் என்பது மிக முக்கியமான விஷயம்... சிம்புவுக்கு நிராகரிப்பின் மூலமாக அது புரிந்து இருக்கிறது.
வயதானால்... ஒரு மெச்சூரிட்டி வரும் அது சிம்புவின் பேச்சில் தென்பட்டது.
நம்முடைய வாழ்வில், ஏதாவது ஒரு இறங்கு முகத்தின் மூலம், தன்னை சுற்றி இருந்தவர்கள்.. தன்னை எப்படி ட்ரீட் செய்தார்கள் என்பதை புரிந்து கொண்டு, தவறுகளை உணர்ந்து அதை பொதுவெளியில் நேர்மையாக ஒத்துக்கொண்டு, தன் தாய் தந்தையருக்கும், கமலுக்கும்,மணிரத்தினத்திற்கும், நெகிழ்ச்சியாய் நன்றி சொன்ன அந்த கணத்தில் சிம்பு எனக்கு மிகவும் பிடித்து போனார்.
சிம்பு, இன்னும் பல உயரங்களை அடைய எல்லாம் வல்ல இயற்கைத் துணை நிற்கட்டும்...
- ஜாக்கிசேகர்
#Simbu
#emotionalspeeh
#SilambarasanTR
#ThugLife
#KamalHaasan
#maniratnam #ARRahman
4 months ago | [YT] | 142
View 13 replies
Jackie Cinemas
நான் கவனித்த வரை...
ஒருவேளை உங்களுக்கும் தோன்றினால் கமெண்டில் சொல்லுங்கள்...
சமீபத்தில் ஒரு ஆப் பாயில் வீட்டிலேயே குழந்தை பெற்றதையும் தமிழர்கள் பாரம்பரியம் இயற்கை மருத்துவம் சிறுதானியம் என்று ஓலா ஓட்டிக் கொண்டிருந்தது...
பைத்தியம்... இதுல பாதிக்கப்பட போவது என்னவோ பெண்ணு தான்... முழுக்க முழுக்க பெண்கள் உயிரை பணயம் வைத்து வீட்டில் சுகப்பிரசவத்துக்கு சம்மதிக்கிறார்கள்... ஆபாயிலோடு பழகினால் ஆஃப் ஆயில் தாட்தான் வரும் 😁
இந்த மாதிரி இயற்கை மருத்துவம், சிறுதானியம், தமிழர் பாரம்பரியம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல... இவைகளை கடுமையாக ஃபாலோ செய்யும்... பெண்களையும் ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன்...
இயற்கையாக வீட்டில் பிரசவம் பார்க்கும்... குழுவினர் தங்கள் குழு போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்கள் .... கிராமப்புற மகளீர்களோ கிராம புற ஆண்களோ... அந்தக் குழுவில் மிக குறைவாகவே இருந்தார்கள்...
இயற்கை முறை பிரசவ குழு போட்டோக்களில் மெத்தப் படித்த நவநாகரீக உடைய அணிந்த ஆபாயில்கள் தான் நிறைய பேர் இருந்தார்கள்...
நான் கவனித்தவரை...
எப்படி இவர்கள் மாறி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...
நன்கு படித்தவர், நாகரிகம் தெரிந்தவர், இவ்வளவு நாலேஜ் இருக்கு என்று நான் வியந்தவர்களில் பலர் சமீபகாலமாக அவர்களோடு உரையாடும் போது, அல்லது அவர்களை கவனிக்கும் போது நாகரிக வளர்ச்சி அடையாத குகை மனிதர்களைப் போல பேசுகிறார்கள்....
நான் கவனித்த வரையில், இவர்களிடம் இருக்கும் ஒரே ஒற்றுமை....
1. சமீபத்தில் உடல் நலம் மீது அக்கறை கொண்டவர்கள்..
2. மலையேறும் குழுவினர்,
3. உடல் நலன் அக்கறையில் சமீபத்தில் ஜிம்மில் இணைந்தவர்கள்
4. பேட்மிட்டன் கிளப், ஜும்பா டான்ஸ் கிளாஸ், போன்றவைகளில் இணைந்தவர்கள்.
5. இந்தியா முழுவதும் பைக்கில் ஊர் சுற்றும் பைக் ரைடர்ஸ்.... ( குழு மனப்பான்மைக்காக சேர்த்திருக்கிறேன் )
6. ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மலைப் பிரதேச ஃபார்ம் ஹவுஸ் களில் குடிசை வீடுகளில் தங்குபவர்கள்...
7. மலையேறி டென்ட் அடித்து குழுவினராக இயற்கையை நேசித்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருப்பவர்கள்
8. கொல்லிமலை மேகமலை என்று மலையேறும் குழுவினர்கள்..
9. பீச் மற்றும் நகர்களில் வாக்கிங் செய்யும் குழுவினர் சர்வ லோக நிவாரணி அருகம்புல் என்று சொல்வது..
10. ரொம்ப ரொம்ப முக்கியமானது யோகா குரூப்....
இந்தக் குழுக்களில் இணைந்திருக்கும் எல்லோரையும் நான் சொல்லவில்லை...
ஆனால் ஒரு சிலரின் சேர்க்கை...
அவர் சொல்லும் விஷயத்தை அப்பட்டமாக பாலோ செய்கிறார்கள்.... உதாரணத்திற்கு காடுகளில் நடக்கும்போது நமக்கு உதவி செய்யும் கைடுகள் ஒரு அவசரத்துக்கு செய்யும் இயற்கை மருத்துவங்களை... அதுதான் புற்று நோய்க்கும் சிறந்த நிவாரணி என்று வாதிடுகிறார்கள் 😁
இந்த மாதிரி குழுக்களில் பங்கு பெற்ற ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன்...
உடல் நலன் மீது அக்கறை என்ற
டேக் லைனில் தான் முதலில் அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்...
அது முதலில் சிறு தானியங்கள், அது சார்ந்த உணவுகள், புற்றுநோய்க்கு ஆடாதோடை கசாயம், சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க, அடர்ந்த காடுகளுக்கு நடுவில் தங்குவது, இயற்கை மருத்துவம், வீட்டில் சுகப்பிரசவம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை... என்று அவர்கள் அடுத்தடுத்த தளங்களுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்... இன்னும் சொல்லப்போனால் இதில் ஒரு சிலர் மெத்த படித்தவர்கள் என்பதால் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நம்பும் கூட்டமும் அதிகம்...
அவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், வீட்டில் சுகப்பிரசவம், அருகம்புல் கசாயம் புற்று நோய்க்கு மருந்து, என்று தூள் கிளப்புகிறார்கள்...
குழுவினராக இருந்தவர்கள்... வீட்டு விசேஷங்களில் தலைகாட்ட, சினிமா, ஹாப்பி வீக்கண்ட் என்று பயணிக்க, அவர்களுக்குள் இருந்திருக்கும் அந்த பாண்டில்
இயற்கை தன் வேலையை காட்டுகிறது 😄 இதில் நோ சொல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்...
இயற்கை மருத்துவம், வீட்டில் சுகப்பிரசவம், ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறுதானிய உணவுகளை பற்றி அதன் பெருமைகளை விவரிக்கும் போதும், அது பற்றிய பெருமை பேசும் போதும் சந்திரமுகியாக மாறி விவரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்....
இன்னொன்று இந்த இயற்கை மருத்துவம், சிறுதானியங்கள், ஆதித்தமிழர்கள் வாழும் முறை என்று பேசுபவர்கள் யோகாவோடு சேரும்போது பியூர் வெஜிடேரியன் உணவு முறைகளை ஆராதிக்கிறார்கள்...
என்னங்க இது? குகை மனிதன்.. ஆதி பெருமை எல்லாம் பேசும் போது எங்கு வெஜிடேரியன் வந்தது என்று கேட்டால்? அவன் காய்கறி பழங்கள் மட்டும் தானே சாப்பிட்டு வளர்ந்தான் என்று நம்முடன் வெஜிடேரியனுக்கு மல்லுக்கட்டி முட்டுக் கொடுக்கிறார்கள் 😂
நானும் மலையில் இருக்கிறேன், அடர்ந்த கானகங்களுக்கு நடுவில் தங்கியிருக்கிறேன்...
மெரினா பீச் வாக்கிங் குழுவில் இருந்து இருக்கிறேன், ஜிம்முக்குப் போய் இருக்கிறேன், சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் 😄
இவ்வளவு சொகுசு வாழ்க்கை, கொரோனா காலத்தில் மனித இனம் மீண்டது எல்லாமே அறிவியலாளே சாத்தியமானது...
பகுத்தறிவோடு அலசி ஆராய்ந்து, அறிவியலோடு இணைந்து வாழ்வது மிக சிறந்த வாழ்க்கை என்பது என் எண்ணம்...
நான் கவனித்த வரை என்று சொல்லி இருக்கிறேன், உங்களுக்கு இப்படி அனுபவம் இருப்பின் , பகிர்ந்து கொள்ளுங்கள் 😍
- ஜாக்கிசேகர்
#science #naturelovers #AgainstScience #pregnancy #risk #womenshealth
4 months ago | [YT] | 111
View 12 replies
Jackie Cinemas
எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில்... சமீபத்தில் நான் ஸ்டாப்பாக 30 நிமிடத்திற்கு மேல... ஏன் படம் முழுக்க... சிரிக்க வைத்த படம் "பெருசு"
அமெரிக்கன் பைய் படங்களெல்லாம் பாத்துட்டு... இப்படி எல்லாம் தமிழில் படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது... என்னைப் பொறுத்தவரை பெருசு அந்த குறையை நிவர்த்தி செய்து இருக்கிறது...
நான் தொடாத பாகம் தன்னில் தென்றல் தீண்டாது... வனிதா மணி பாட்டு இன்ட்ரோ ஆகட்டும்... மஞ்சு மால் பாய்ஸ்ல எப்படி... குணா திரைப்படத்தின் மனிதர் உணர்ந்து கொள்ள பாடல் உண்டான காதல் பிளேஸ்மெண்ட் ஆன இடத்தை எப்படி ரசித்தேனோ? அதேபோல பார்த்த விழி பார்த்தபடி "பூத்து கிடக்க " வேற லெவல்... எல்லாத்தையும் விட பெருசுன்னு டைட்டில் போட்ட அந்த இடம்... வாவ் மேட்டருக்கும் பெருசு😄 வயசானவருக்கும் பெருசு 😂
படம் முழுக்க வசனங்கள்ல தெறிக்க விட்டிருக்காங்க... முக்கியமா கிரேசி மோகன் அப்புறம்... வண்டியில பின்னாடி முன்னாடி மாதிரி கவுண்டர் டயலாக் எழுதறதுக்கு ஆளே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... இயக்குனர் இளங்கோ ராம் மற்றும் பாலாஜி ஜெயராமன் அந்த குறையை போக்கியிருக்கிறார்கள்....
அப்பா செத்துப் போயிட்டாரு... அப்பாவுடைய சிஞ்கு வானத்தைப் பார்த்து நட்டுகிட்டு இருக்கு 🤣 அம்மாக்காரி அதை பார்த்துட்டு புடவ தலைப்ப முகத்தை மூடிட்டு அழறா... பெரிய பையன் சாமி ஒரு சின்ன நம்பு சிரிப்பு சிரிச்சு அந்த சீன்ல எனக்கு இந்த படம் புடிச்சது... அது மட்டுமல்ல அண்ணா கயிறு வெள்ளின்னு உனக்கு எப்படி தெரியும் ? இப்ப அதுவா முக்கியம் என்று சித்தி தீபா கொடுக்கும் ரியாக்ஷன்...
அப்ப பெருசு குளத்தங்கரையில் குளித்த பெண்களை மட்டுமல்ல... கொழுந்தியாளையும் விட்டு வைக்கவில்லை என்பதை போகிற போக்கில் ஜஸ்ட் லைக் தட் ஆக சொன்ன இடத்தில் அசத்தியிருக்கிறார்கள்...
எல்லாவற்றையும் விட முக்கியமாக.... எல்லா கேரக்டர்களில் மிகச் சிறப்பாக குறை இல்லாமல் எழுதி இருக்கிறார்கள்... அதனால இந்த படத்தை ரசித்து பார்த்தேன்...
முக்கியமாக... அம்பாசிடர் காரில் அண்ணனும் தம்பியும் அப்பாவை பற்றி பேசும் அந்த இடம் செம... வைபவ் அண்ணனை இன்னும் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்...
செத்துப்போன அப்பாவுடைய சிஞ்கு நட்டுக்ககிச்சி... அதை சுத்தியே திரைக்கதை அமைத்த ஒரே படம் எனக்கு தெரிஞ்சு இதுவாதான் இருக்கும்...
படமா இத பார்த்து இன்னைக்கு ரசிக்கிறோம்... ஆனா இந்த சமாச்சாரத்தை சொல்லி புரிய வச்சு, பேசி நடிக்க வச்சு ,படத்துல எல்லா காட்சிகளுமே ரொம்ப இயல்பாகவும் தத்ரூபமாகவும் இருந்துச்சு... சினிமா பாக்குற ஒரு பீலிங்கே இல்ல... படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சிரித்துக் கொண்டே இருந்தது இந்த படமாக தான் இருக்கும்..
வாழ்த்துக்கள் "பெருசு" டீம்
இயக்குனர் இளங்கோ ராமுக்கு வாழ்த்துக்கள் 🫰❤️
netflixல படம் இருக்கு பார்த்து என்ஜாய் பண்ணுங்க 🤣
DONT MISS🤣
-ஜாக்கிசேகர்
#Perusu #perusumovie #perusumoviereview #jackiesekarreview #JackieCinemasReview
5 months ago | [YT] | 132
View 8 replies
Jackie Cinemas
அவன் ஏழ்மை குடியில் பிறந்தவன்…
சமையல்காரர் மகன்
உழைப்பால் உயர்ந்தவன்…
சினிமாவில் சின்ன பாத்திரங்கள் ஏற்று பத்தோடு பதினொன்றாக திரையில் தலைகாட்டியவன்…
தொடர்ந்து நம்பிக்கையோடு பணியாற்றி… நாயகனாக உயர்ந்தவன்…
ஹீரோவாக இருந்தாலும் உதை வாங்குவார்கள் என்று தன் திரைப்படங்களில் காட்சிபடுத்தியவன்.
நடிகர், திரைக்கதையாசியரியர், இயக்குனர் தயாரிப்பாளர், சண்டைபயற்சி வல்லுனர், என்று பன்முக திறமைகொண்டவன்.
சீரியசான ஆக்ஷன் படத்தில் கூட ஜாக்கியின் காமெடி சென்ஸ் உலகபிரசித்தம்…
ஒரு படத்தை தவிற வேறு எந்த படத்திலும் புகைபிடிக்கும் காட்சியில் ஜாக்கி நடித்ததில்லை…
குழந்தைகளுக்கும் பிடித்த நடிகன்… அதனாலே ஜாக்கி கார்ட்டுன் கேரக்டராக வலம் வந்தார்.
ஜாக்கியின் எந்த படப்பிடிப்புலும் புக் படித்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஷாட்டுக்கு மட்டும் தலைகாட்டும் நம்மூர் ஹீரோ போல அவர் இல்லவே இல்லை… சட்டென டிராலி தள்ளிக்கொண்டு போகையில் ஊழியர்கள் தினறினால் கூட… அவரும் சேர்ந்து தள்ளும் அந்த டவுன்ட் டூ எர்த் குணம் உலகில் வேறு எந்த நடிகனிடத்திலும் கண்டதில்லை…
60வயது என்று சொன்னாலும் தன் சுறு சுறுப்பினால் அந்த வயதுக்கே ஆச்சர்யத்தை கொடுத்தவன்…
ஹாங்காங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து ஆசிய சூப்பர் ஸ்டாராக மாறி… ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக வெற்றிக்கொடி நாட்டியவன்…
ஜாக்கியின் உழைப்பின் மீது இருந்த காதலும், அந்த நம்பிக்கையும், என் பெயரையே ஜாக்கிசேகர் என்று வைத்துக்கொள்ள துண்டியது….
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இன்றுபிறந்தநாள்…
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கிசான் ஜி.
happy birthday jackiechan
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
10 வருடத்திற்கு முன்பாக இதே நாளில் எழுதிய பதிவு
5 months ago | [YT] | 79
View 4 replies
Jackie Cinemas
Happy birthday ❤️❤️❤️
#JackieChan #JackieChanhbd #HBD
Which Jackie Chan film... your most favourite?
5 months ago | [YT] | 11
View 6 replies
Jackie Cinemas
Happy birthday ❤️❤️❤️
#JackieChan #JackieChanhbd #HBD
5 months ago | [YT] | 255
View 2 replies
Load more