Jackie Cinemas

நான் கவனித்த வரை...
ஒருவேளை உங்களுக்கும் தோன்றினால் கமெண்டில் சொல்லுங்கள்...

சமீபத்தில் ஒரு ஆப் பாயில் வீட்டிலேயே குழந்தை பெற்றதையும் தமிழர்கள் பாரம்பரியம் இயற்கை மருத்துவம் சிறுதானியம் என்று ஓலா ஓட்டிக் கொண்டிருந்தது...
பைத்தியம்... இதுல பாதிக்கப்பட போவது என்னவோ பெண்ணு தான்... முழுக்க முழுக்க பெண்கள் உயிரை பணயம் வைத்து வீட்டில் சுகப்பிரசவத்துக்கு சம்மதிக்கிறார்கள்... ஆபாயிலோடு பழகினால் ஆஃப் ஆயில் தாட்தான் வரும் 😁

இந்த மாதிரி இயற்கை மருத்துவம், சிறுதானியம், தமிழர் பாரம்பரியம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல... இவைகளை கடுமையாக ஃபாலோ செய்யும்... பெண்களையும் ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன்...

இயற்கையாக வீட்டில் பிரசவம் பார்க்கும்... குழுவினர் தங்கள் குழு போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்கள் .... கிராமப்புற மகளீர்களோ கிராம புற ஆண்களோ... அந்தக் குழுவில் மிக குறைவாகவே இருந்தார்கள்...

இயற்கை முறை பிரசவ குழு போட்டோக்களில் மெத்தப் படித்த நவநாகரீக உடைய அணிந்த ஆபாயில்கள் தான் நிறைய பேர் இருந்தார்கள்...

நான் கவனித்தவரை...
எப்படி இவர்கள் மாறி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

நன்கு படித்தவர், நாகரிகம் தெரிந்தவர், இவ்வளவு நாலேஜ் இருக்கு என்று நான் வியந்தவர்களில் பலர் சமீபகாலமாக அவர்களோடு உரையாடும் போது, அல்லது அவர்களை கவனிக்கும் போது நாகரிக வளர்ச்சி அடையாத குகை மனிதர்களைப் போல பேசுகிறார்கள்....

நான் கவனித்த வரையில், இவர்களிடம் இருக்கும் ஒரே ஒற்றுமை....

1. சமீபத்தில் உடல் நலம் மீது அக்கறை கொண்டவர்கள்..
2. மலையேறும் குழுவினர்,
3. உடல் நலன் அக்கறையில் சமீபத்தில் ஜிம்மில் இணைந்தவர்கள்
4. பேட்மிட்டன் கிளப், ஜும்பா டான்ஸ் கிளாஸ், போன்றவைகளில் இணைந்தவர்கள்.
5. இந்தியா முழுவதும் பைக்கில் ஊர் சுற்றும் பைக் ரைடர்ஸ்.... ( குழு மனப்பான்மைக்காக சேர்த்திருக்கிறேன் )
6. ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மலைப் பிரதேச ஃபார்ம் ஹவுஸ் களில் குடிசை வீடுகளில் தங்குபவர்கள்...
7. மலையேறி டென்ட் அடித்து குழுவினராக இயற்கையை நேசித்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி இருப்பவர்கள்
8. கொல்லிமலை மேகமலை என்று மலையேறும் குழுவினர்கள்..
9. பீச் மற்றும் நகர்களில் வாக்கிங் செய்யும் குழுவினர் சர்வ லோக நிவாரணி அருகம்புல் என்று சொல்வது..
10. ரொம்ப ரொம்ப முக்கியமானது யோகா குரூப்....

இந்தக் குழுக்களில் இணைந்திருக்கும் எல்லோரையும் நான் சொல்லவில்லை...
ஆனால் ஒரு சிலரின் சேர்க்கை...
அவர் சொல்லும் விஷயத்தை அப்பட்டமாக பாலோ செய்கிறார்கள்.... உதாரணத்திற்கு காடுகளில் நடக்கும்போது நமக்கு உதவி செய்யும் கைடுகள் ஒரு அவசரத்துக்கு செய்யும் இயற்கை மருத்துவங்களை... அதுதான் புற்று நோய்க்கும் சிறந்த நிவாரணி என்று வாதிடுகிறார்கள் 😁

இந்த மாதிரி குழுக்களில் பங்கு பெற்ற ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன்...

உடல் நலன் மீது அக்கறை என்ற
டேக் லைனில் தான் முதலில் அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்...

அது முதலில் சிறு தானியங்கள், அது சார்ந்த உணவுகள், புற்றுநோய்க்கு ஆடாதோடை கசாயம், சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க, அடர்ந்த காடுகளுக்கு நடுவில் தங்குவது, இயற்கை மருத்துவம், வீட்டில் சுகப்பிரசவம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை... என்று அவர்கள் அடுத்தடுத்த தளங்களுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்... இன்னும் சொல்லப்போனால் இதில் ஒரு சிலர் மெத்த படித்தவர்கள் என்பதால் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நம்பும் கூட்டமும் அதிகம்...

அவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், வீட்டில் சுகப்பிரசவம், அருகம்புல் கசாயம் புற்று நோய்க்கு மருந்து, என்று தூள் கிளப்புகிறார்கள்...

குழுவினராக இருந்தவர்கள்... வீட்டு விசேஷங்களில் தலைகாட்ட, சினிமா, ஹாப்பி வீக்கண்ட் என்று பயணிக்க, அவர்களுக்குள் இருந்திருக்கும் அந்த பாண்டில்
இயற்கை தன் வேலையை காட்டுகிறது 😄 இதில் நோ சொல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்...

இயற்கை மருத்துவம், வீட்டில் சுகப்பிரசவம், ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறுதானிய உணவுகளை பற்றி அதன் பெருமைகளை விவரிக்கும் போதும், அது பற்றிய பெருமை பேசும் போதும் சந்திரமுகியாக மாறி விவரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்....

இன்னொன்று இந்த இயற்கை மருத்துவம், சிறுதானியங்கள், ஆதித்தமிழர்கள் வாழும் முறை என்று பேசுபவர்கள் யோகாவோடு சேரும்போது பியூர் வெஜிடேரியன் உணவு முறைகளை ஆராதிக்கிறார்கள்...

என்னங்க இது? குகை மனிதன்.. ஆதி பெருமை எல்லாம் பேசும் போது எங்கு வெஜிடேரியன் வந்தது என்று கேட்டால்? அவன் காய்கறி பழங்கள் மட்டும் தானே சாப்பிட்டு வளர்ந்தான் என்று நம்முடன் வெஜிடேரியனுக்கு மல்லுக்கட்டி முட்டுக் கொடுக்கிறார்கள் 😂

நானும் மலையில் இருக்கிறேன், அடர்ந்த கானகங்களுக்கு நடுவில் தங்கியிருக்கிறேன்...
மெரினா பீச் வாக்கிங் குழுவில் இருந்து இருக்கிறேன், ஜிம்முக்குப் போய் இருக்கிறேன், சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் 😄

இவ்வளவு சொகுசு வாழ்க்கை, கொரோனா காலத்தில் மனித இனம் மீண்டது எல்லாமே அறிவியலாளே சாத்தியமானது...

பகுத்தறிவோடு அலசி ஆராய்ந்து, அறிவியலோடு இணைந்து வாழ்வது மிக சிறந்த வாழ்க்கை என்பது என் எண்ணம்...

நான் கவனித்த வரை என்று சொல்லி இருக்கிறேன், உங்களுக்கு இப்படி அனுபவம் இருப்பின் , பகிர்ந்து கொள்ளுங்கள் 😍

- ஜாக்கிசேகர்
#science #naturelovers #AgainstScience #pregnancy #risk #womenshealth

6 months ago | [YT] | 112