இன்றைய அறிவியல் துறை உருவாகி, வளர்ச்சியடைந்து, விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே நம் முன்னோர்கள், காலத்தை அளக்கவும் ஆராயவும் அறியவும் கூடிய வல்லுனர்களாக இருந்தார்கள். ஒரு நாளை 24 மணித்தியாலங்களாகவும், ஒரு மணித்தியாலத்தை அறுபது நிமிடங்களாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் அறுபது நொடிகளாகவும் பிரித்து, அவற்றின் அடிப்படையில் வானியல் மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும் அறிவும் திறனும் நம் முன்னோர் வசப்பட்டிருந்தது. இதுதான் சோதிடம் என்ற துறை உருவாவதற்கான ஆரம்பப்புள்ளி! இந்து சமய புராண இதிகாசங்களில் சோதிடத்துக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவம், அவற்றை வாசித்தறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
இன்றும் சோதிடத்தின்பால் பெருமதிப்புக் கொண்ட சோதிடகேசரி வாசகர்களாகிய உங்களுக்கு ஒரே இடத்தில், இந்து சமய சோதிடம் மட்டுமன்றி, உலக நாடுகளில் பிரபலமாக விளங்கும் நாடி சாஸ்திரம், வாஸ்து, ஃபெங்சுயி, ரெய்கி, சீன சோதிடம் எனப் பல்வேறு சோதிடப் பிரிவுகளில் தரப்பட்டிருக்கின்ற பலன்கள், எதிர்வுகூறல்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட பரிகாரங்கள் மட்டுமன்றி, இன்னோரன்ன உறுதிசெய்யப்பட்ட சோதிடத் தகவல்களை இங்கு தருகிறோம்.