santhosh lifecoach

Spiritual guidance, Astrology, lifecoach

இந்த மாபெரும் பேரண்டத்தில் நம் பால்வெளி மண்டலம் ஒரு புள்ளி.
நம் பால்வெளி மண்டலத்தில் நம் சூரிய குடும்பம் ஒரு புள்ளி.
நம் சூரிய குடும்பத்தில் பூமி ஒரு புள்ளி.
நம் பூமியில் நம்முடைய மாவட்டம் ஒரு புள்ளி
அந்த மாவட்டத்தில் இதை படிக்கும் நீங்களும் நானும் ஒரு புள்ளி.

இதில் யாருக்கு யார் பெரியவர் ?
நாம் பல நேரங்களில் ஐம்புலங்களின் இச்சைக்கு இணங்கி தெரிந்தும் தெரியாமலும் பல பாவங்களை செய்து வருகிறோம்.

ஏற்கனவே நாம் இந்த பிறவிக்குக் கொண்டுவந்த முற்பிறவி ஊழ்வினை நம்மை பல துன்பங்களுக்கு ஆட்படுத்துகிறது

மேலும் இப்பிறவிகளில் நாம் சேர்க்கும் பாவ வினைகள் நம்மை முக்தி பெறவிடாமல் தவிர்த்து மீண்டும் மீண்டும் பிறவி வலையில் விழச்செய்யும்.
என்னால் இயன்ற அளவிற்கு என்னால் முடிந்த நபர்களுக்கு தங்கள் வாழ்கையை பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் எப்படி வாழ்வது?
இறைவன் என்னும் மாபெரும் சக்தியை எப்படி அடைவது?
இந்த பிறவியின் காரணம் என்ன?
வாழ்கையில் நாம் என் துன்பங்களை அதிகமாக அனுபவிக்கிறோம்?
இன்னும் இதை போன்ற பல தகவல்கள்
மேலும் ஜோதிடம் சார்ந்த தகவல்களும் தருவேன்
நன்றி