NEWS with entertainment flavour


WORLDPRINCE

Mobil 1 partners with RPPL to Power Up the Streets of India with Exhilarating Motorsport Roadshow
Mobil 1, in partnership with Racing Promotions Pvt Ltd (RPPL), successfully concluded the Bengaluru roadshow of F4 and Indian Racing League (IRL) cars ahead of the upcoming racing championship. Turning the streets of Bengaluru into a vibrant arena of specialized breathtaking performances and precision driving, the event marked a significant highlight in the ongoing partnership of Mobil 1 with RPPL, aimed at nurturing and promoting motorsport culture in India.
Spectators in Bengaluru were treated with a preview of the upcoming racing championship season, witnessing a dynamic display of IRL and Formula 4 cars operated by emerging motorsport talents –Sohil Shah, one of the two champions of IRL 2023, and Rishon Rajeev, Formula 4 Vice Champion. As these cars thundered along the KTPO Convention Centre, people from diverse backgrounds gathered in large numbers, drawn by the powerful engines and thrilling action against the city's bustling backdrop.
The roadshow not only delighted local spectators with a taste of professional motorsport but also celebrated Mobil 1’s 50 years of innovation and leadership in synthetic motor oils, highlighting its ongoing contributions to automotive and industrial advancements in India. While the Bengaluru roadshow witnessed the debut of the golden Mobil 1 emblem for 50 years, the brand plans to feature a series of specially designed liveries and other highlights from Mobil 1’s extensive racing history, celebrating its legacy.
"The Mobil 1 brand’s journey through the last 50 years is a testament to ExxonMobil’s ability to push boundaries and become the trusted choice of leading automakers, professional racers, and millions of drivers worldwide. The Mobil 1 -RPPL show run is not just an event; it's a celebration of the spirit of motorsports. By bringing the action right to the city streets, we aim to bring to the fans an up-close and personal experience of the world of racing. This event marks a significant milestone in our ongoing collaboration with RPPL, a key player in advancing motorsports in India with our partnership significantly contributing to the growing enthusiasm and support for motorsports nationwide”, said Vipin Rana, CEO of ExxonMobil Lubricants Pvt. Ltd.
"We are thrilled with the success of the Bengaluru show run, which kicked off our nationwide series in grand style. This event showcased the thrill and excitement of motorsports directly to the community, amplifying their anticipation for the full championship season. Mobil 1 has been instrumental in bringing this vision to life, and together, we are committed to further enriching India's motorsport landscape. As we gear up for upcoming roadshows, we are excited to continue this journey, inspiring a new generation of motorsport fans and participants across the country”, said Akhilesh Reddy, Chairman of Racing Promotions Private Limited.
Following the resounding success of the exhilarating Bengaluru roadshow, Mobil 1 and RPPL are poised to expand the series, bringing the same thrilling display of speed, precision, and motor prowess to the streets of Mumbai, Chennai and other parts of India in the upcoming months. This initiative highlights Mobil 1 and RPPL’s dedication to enriching India's motorsport culture and creating platforms that entertain and inspire the next generation of motorsport enthusiasts.


For more information about the Mobil 1 -RPPL Showrun and other upcoming events, please visit www.mobil.co.in/en-in .

1 year ago | [YT] | 2

WORLDPRINCE

*லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு*

*அமீர் தன்னை விமர்சித்த நிலையிலும் 'உயிர் தமிழுக்கு' படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்*

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் லண்டனில் 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆதம்பாவாவிடம் மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பினார்

இதனைத் தொடர்ந்து லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் திரு. சுபாஸ்கரன்.

திரு. சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறினார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆதம் பாவா.

1 year ago | [YT] | 2

WORLDPRINCE

*பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா*

*பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்க ரசிகர்கள் நடத்திய மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா*

தெலுங்கு திரையுலகில் ‘மெகாஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக இப்போதும் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திரையுலகுக்கு அவர் ஆற்றிய கலைச்சேவைக்காகவும் அவர் செய்துள்ள மிகப்பெரிய சாதனைகளுக்காகவும் அவருக்கு நமது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கவுரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவில் உள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்விற்கு பீப்புள் மீடியா ஃபேக்டரி சிஇஓ விஸ்வ பிரசாத் பொறுப்பேற்று நடத்தி உள்ளார் .

இதுகுறித்து அவர் கூறும்போது, “’மெகாஸ்டார்’ சிரஞ்சீவி போன்ற மிகப்பெரிய ஜாம்பவானுக்கு இதுபோன்று விழா எடுப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்த விழா திரை உலகில் அவர் செய்த சாதனைகளுக்காக மட்டுமல்ல.. பல தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதற்காகவும் தான்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியை கௌரவிக்கும் இந்த முயற்சிக்கு அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்களும் தோள் கொடுத்து உறுதுணையாக நின்றனர். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தும் விதமாக ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியின் ரசிகரும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் ஷெரீப் ஒருங்கிணைப்பு பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸில் ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவிக்கு இப்படி ஒரு விழா எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக பெருமைப்படுகிறேன். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த திரு. விஸ்வ பிரசாத் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வை மிகப்பெரிய அளவில் வெற்றி ஆக்கியதற்கு தங்களது ஆதரவை கொடுத்த மெகாஸ்டாரின் ரசிகர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி” என்று கூறியுள்ளார் இம்தியாஸ் ஷெரீப்.

1 year ago | [YT] | 1

WORLDPRINCE

வாங்கண்ண வணக்கங்கண்ணா (Vanganna Vanakkanganna)

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு யூடூபருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.அதிலிருந்து யூடுபர் தப்பினானா என்பதே வாங்கண்ண வணக்கங்கண்ணா (Vanganna Vanakkanganna) படத்தின் கதை. காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக இப்படத்தில் நடிக்கிறார். நாயகனாக சுந்தர் மகாஸ்ரீ . தோத்துப்போன MLAவாக நதியா வெங்கட். வில்லி மகளாக நாயகி அபிநயா ஸ்ரீ.சமூக பொறுப்பாளறாக நாயகனின் அப்பா லஷ்மணன்.ஒரு பத்திரிக்கையாளறாக நாயகனின் தம்பி ஷிபு சரவணன் நடிக்கிறார்கள். ஒரே நாளில் நடக்கும் முழுக்க முழுக்க காமெடி கதை.

Story of the Hero – Comedy Actor Senthil
Hero – Sundar Mahasri
Heroine – Abinaya Sri
Comedy – Sunny Babu
Direction – Raj Kannayiram
Story, Screenplay, dialogues – Sundar Mahasri
Camera man – Deepak Tamilchelvan
Editing – Ramesh Mani
Music – Joseph Chandra sekar
Sounds – Sathish Shanthivasan
Posters – Selva
DI – Pavan
PRO-SIVAKUMAR
Producers- Yasmeen Begam ,Manimagalai Lakshmanan

2 years ago | [YT] | 0

WORLDPRINCE

*“வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்*

எப்போதாவது அத்திப்பூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான் சமீபத்தில் வெளியான ‘நூடுல்ஸ்’. அருவி படம் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி, முதன்முறையாக இயக்கத்திலும் கால் பதித்து இந்த படத்தின் மூலம் ஓர் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக மாற்றியதே இயக்குனர் மதனுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்.

ஹரீஷ் உத்தமன் மட்டுமல்ல, நாயகி ஷீலா ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மதன் தட்சிணாமூர்த்தி வக்கீலாக நடித்திருந்த வசந்த் மாரிமுத்து, மேல் வீட்டுக்காரர் சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசு குழந்தை ஆழியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருமே அந்த கதாபாத்திரங்களாக மாறி நடிப்பில் நூறு சதவீத பங்களிப்பை கொடுத்திருந்தனர். சொல்லப்போனால் படம் பார்க்கும் ஒவ்வொருவருமே அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்கு அருகிலிருந்து பார்த்து அவர்களின் கஷ்டத்தை நாமே படுவது போல உணர வைக்கும் அளவிற்கு வெகு நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார் மதன் தட்சிணாமூர்த்தி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தொகுப்பாளர் சரத்குமார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரின் பங்கும் இன்றியமையாததாக அமைந்து நல்ல சினிமா ரசிகர்களுக்கு நூடுல்ஸ் விருந்தானது எனில் அது மிகையாகாது,.

நூடுல்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி கூறும்போது,

“’நூடுல்ஸ்’ மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பை கொடுத்தது எனவும்,

ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது எனவும் கூறினார்.,

மேலும் நூடுல்ஸ் படத்தை பாராட்டிய சில தயாரிப்பாளர்கள் நூடுல்ஸ் குழுவினரை இதே போன்ற நல்ல படங்கள் செய்யவேண்டும் என வரவேற்று இருப்பது மேலும் மகிழ்ச்சியை தருகிறது எனவும்.,

திரைத்துறையை சேர்ந்த பலரின் பாராட்டுகள் அடுத்த படத்திற்கான பொறுப்பையும் கவனத்தையும் அதிகரித்துள்ளது எனவும்,

இச்சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ROLLING SOUND PICTURES பிரக்னா அருண் பிரகாஷ், LIME TREE CINEMAS cinemas சுருளிராஜ் மற்றும் V HOUSE PRODUCTIONS தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என பெருமிதத்தோடு கூறியுள்ளார்..
.

2 years ago | [YT] | 2

WORLDPRINCE

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி...

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான தண்டட்டி கடந்த ஜூன் 23ல் திரையரங்கில் வெளியாகியது. பின் ஜூலை 14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.

கிராமத்து வாழ்வியலை, தண்டட்டி என்ற அப்பத்தாக்கள் அணிந்திருக்கும் நகையை வைத்து அழகுறச் சொல்லியிருந்த இப்படம் வெகு வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல சினிமா என மக்கள் பார்த்துக் கொண்டாடும் ஒரு படமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சினிமாக்களை கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் தண்டட்டி சென்று சேர்ந்துள்ளது.

அதன் காரணமாக வெளியிட்ட நாள் முதல் இன்று வரை அமேசான் பிரைமில் தண்டட்டி முதலிடத்தில் இருக்கிறது.

இயக்குநர் ராம் சங்கையா இயக்கிய இப்படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக S. லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு A. வெங்கடேஷ். நிர்வாகத் தயாரிப்பு ஷ்ராவந்தி சாய் நாத். தயாரிப்பு மேற்பார்வை AP. பால்பாண்டி.

2 years ago | [YT] | 2

WORLDPRINCE

#Guest2 #GoodHopePictures wishes our Gorgeous Heroine of the movie @ssakshiagarwal
A Happy Birthday & Victorious year ahead ….

#HBDSakshiagarwal
#HappyBirthdaySakshi
#HBDSakshi

@bhuvane96212386 @gokulakrishnan @aktariqmusic
@dop_rameshg
@johnmediamanagr

2 years ago | [YT] | 1

WORLDPRINCE

சென்னை சுற்றுலா வளாகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளின் அறைகள் முன்பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு அலுவலகத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (20.07.2023) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் திருமதி.லி.பாரதிதேவி, முதன்மை கணக்கு அலுவலர் திரு.எஸ்.கணேஷ் கார்த்திகேயன், உதவி தலைமை மேலாளர் (ஓட்டல்கள்) திரு.சௌ.வெங்கடேசன், திட்ட பொறியாளர் திரு.பால் ஜெப ஞானதாஸ் உள்பட மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

2 years ago | [YT] | 1

WORLDPRINCE

*சாதனைப் படத்தில் மற்றொரு நாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா*

மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘கலைஞர் நகர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. SR பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுகன் குமார் என்பவர் இயக்கியுள்ளார். நரேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்களை பாபா கென்னடி எழுதியுள்ளார்.

பிரஜின் ஹீரோவாகவும், மிகமிக அவசரம் புகழ் பிரியங்கா ஹீரோவாகவும், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த அனுபவம் குறித்தும் தனது மற்ற படங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை டாலி ஐஸ்வர்யா.

“நடிப்பு தான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே காதலே கோமாளி என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். கலைஞர் நகர் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது,

அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொக்கேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது.

இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது, அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். இதில் பிரஜின், பிரியங்கா என நடிப்பு அனுபவம் மிகுந்த இருவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது,

ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம்பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இந்தமுறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டார்.

யுனிவர்சல் ஜீனியஸ் என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

இதுதவிர தற்போது இரவின் கண்கள் என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ஹேப்பி பர்த்டே ஜூலி என்கிற திரில்லர் மற்றும் கடைசி தோட்டா என்கிற கிரைம் திரில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன.

மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், அதிக வசனம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன்.

சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதே சமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்”. என்று கூறியுள்ளார்.

2 years ago | [YT] | 1