மானுடம் காக்க - Maanudam Kaakka

மானுடம் காக்க அநீதிகளுக்கு எதிராக குரல் ஒலிக்கும் குரலற்றவர்களின் குரலாக.. வரலாற்று சுவடுகளை திருத்தி, மறைத்து அரசியல் செய்யும் போலி முகத் திரைகள் கிழிக்கப்படும் ..


மானுடம் காக்க - Maanudam Kaakka

அதுவரைக்கும் பெண்கள் கிரிக்கெட்டர்களுக்கு நல்ல hotels குடுக்க மாட்டாங்க. Trainல general compartment ல தான் எங்க மேட்ச் நடந்தாலும் போகனும். ஏதாவதொரு வசதி குறைவான hotelsல தங்க வைப்பாங்க. ஏன் மேட்ச் fees கூட ரொம்ப கம்மிதான். 2005 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு ஒரு மேட்ச்சுக்கு 1000 Rs. வழங்கப்பட்டது அதுவும் அந்த தொடருக்கு மட்டும் தான் மற்ற போட்டிகளில் பணம் எதுவும் ஊதியமாக வழங்கப்பட வில்லை..

2004 ல் இருந்து மிதாலிராஜ் Bcci கிட்ட போராடறாங்க. எங்களுக்கு நல்ல facilities வேணும் , Sponcers வேணும் , நிறைய மேட்ச் schedule போடனும் இப்படி. ஆனா அவங்க எதையும் கண்டுக்கல.

"சரி.. உங்களுக்கு பெண்கள் கிரிக்கெட்னா அவ்ளோ கீழ இருக்கா.. அதுக்கு ஒரு முடிவு கட்டறேன், எங்க ஆட்டத்தை இந்தியாவையே திரும்பி பாக்கவைக்கறேன்"னு 2005 ல் மற்றும் 2017 World Cupல ஒட்டுமொத்த அணியையும் encourage பண்ணி அவங்கள best குடுக்க வச்சாங்க மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி 2005 மற்றும் 2017 ல் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்று வரை வந்து தோழ்வியை தழுவியது. ஆனாலும் அவர்களின் விடா முயற்சி பெண்கள் கிரிக்கெட் பக்கம் இந்திய‌ ரசிகர்களின் கவனத்தைத்திருப்புச்சு. அதுல தோத்தாலும் அவங்கள மக்கள் உற்சாகத்தோட வரவேற்றாங்க.

இப்ப BCCI -Women teamக்கு குடுக்கற சம்பளம் Mens teamக்கு equal ஆனது. ஒரு ODI -6 லட்சம்.‌👏

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முகமாக இருந்தவங்க , அதோட Infrastructure, Growthனு உள்ளயும் வெளியவும் பலவிதத்துல பலப்படுத்தினவங்க கனவு இன்னைக்கி நனவாகீருக்கு. அவங்க கைல அந்த கப்பை கொடுத்ததும் Thank You ன்னு சொல்லி அதை அணைச்சுக்கிட்டாங்க.

மிதாலிராஜ் மிளிர்ந்தார், அந்தக்போப்பை வான வேடிக்கைகளால் ஜொலித்தது , பெண்கள் குதூகலித்திருந்தார்கள். 👏😍

சிறு குறிப்பு : மிதாலிராஜ் ஒரு தமிழ் பெண் அவரின் பூர்வீகம் தமிழ் நாடு..

"இது ஒரு மிதாலி ராஜின் கனவு.."💐

2 days ago | [YT] | 719

மானுடம் காக்க - Maanudam Kaakka

வேர்ல்ட் கப் சாம்பியன் டீமின் கேப்டன்...
ஒருவரில் காலில் விழுகிறார்... என்றால்...
அவர் யார்..!? அவரை அடையாளம் தெரிகிறதா..?!

இமயம் அளவுக்கு உயர
இவ்வளவு திறமைகள் இருந்தும்...
இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா..!
இவரால் ஏன் புகழ்பெற முடியவில்லை...
இவருக்கு என்னதான் தடை...யார்தான் எதிரி..?
--- என்று 1990களில் துவங்கி 2000களிலும் ஒருவரை பற்றி புரியாமல் குழம்பி முழித்தேன் என்றால்... அவர் தான்... #அமோல்_மஜும்தார்.

தனது முதலாவது ரஞ்சி டிராபி போட்டியில், ஹரியானா அணிக்கு எதிராக பாம்பே அணி சார்பில்... 260 ரன்கள் குவித்து உலக சாதனையுடன்... 1994ல் கிரிக்கெட்டில் அதிரடி எண்ட்ரி கொடுத்தவர்.

அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் மலை அளவுக்கு ரன்கள் குவித்தவர்.
"புதிய டெண்டுல்கர்"... "அடுத்த சச்சின்"... என்றுதான் அவரை பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதுவார்கள்.

ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு வரும்போதும்...
"என்னது... இந்த முறையும் அமோல் மஜும்தார் செலக்ட் ஆகலையா..?!" என்கிற கேள்வி தவறாமல் இடம்பெறும்.

ஆனால்.,. கடைசி வரைக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஒரு முறை கூட இந்திய அணிக்கு தேர்வாகி சர்வதேச போட்டிகளில் அவர் ஆடவே இல்லை... என்பது இன்றுவரை யாருக்குமே விளங்காத புரியாத புதிர்.

2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48.13 ஆவரேஜில், 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 செஞ்சுரி 60 பிஃப்டி அடித்திருக்கிறார்.

இவர்தான்....
இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்களான இந்திய பெண்கள் அணியின்... தலைமை பயிற்சியாளர்..!

ஆம். இன்று... வேர்ல்ட் சாம்பியன்களாக வானில் மின்னி ஜொலிக்கும் வைரங்களை கடந்த 2 வருடங்களாக பட்டை தீட்டிய... #கோச்_அமோல்_மஜும்தார்..!

லீக் மேட்ச்களில் அதிரடியாக ரன்கள் குவித்த ஓபனிங் பேட்டர் பிரதிகா ராவல் காயம். அவரால் நடக்கவே முடியாது. வீல் சேர்தான் என்று அரை இறுதி போட்டிக்கு முன்பு திடீர் இடர் ஏற்படுகிறது.

சென்ற வாரம் வீட்டில் அமர்ந்து நம்மை போல டிவியில் வேர்ல்ட் கப் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவரை...
கூட்டி வந்து... நேராக அரை இறுதியில் ஓபனிங் ஆட இறக்கினார்... கோச் மஜும்தார்.

அவர் 10 ரன்னில் அவுட் ஆனார்.

ஆனாலும்...
மனம் தளராமல் நம்பிக்கை வைத்து அவரையே...
இறுதி போட்டியிலும் ஓபனிங் இறக்கினார்.
78 பந்துகளில் 87 ரன்கள். 2 விக்கெட்.... என்று கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்து...#ஆட்டநாயகி விருது பெற்றார் #ஷிஃபாலிவர்மா.

கோச் என்றால் இப்படி இருக்க வேண்டும்..!
பாராட்டுகள் & வாழ்த்துகள் அமோல்👑..!
👌🏻👍🏻🎉💥🌟💫✨⚡🎊💢🔥💯🤩

#மானுடம்காக்க

3 days ago | [YT] | 336

மானுடம் காக்க - Maanudam Kaakka

சாம்பியன்ஸ்..!! Champiyans..!

Proud of our World Champion girls 🇮🇳

What a victory. Harmanpreet_kaur and her team..

#மானுடம்காக்க #womensworldcup
#CWC25 #worldcup

4 days ago | [YT] | 248

மானுடம் காக்க - Maanudam Kaakka

கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் பயிற்சியாளரை பாராட்டி 1 லட்சம் பரிசு வழங்கிய திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் 🔥

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்கு 100 பவுன் தங்க நகை தருவதாக வாக்களித்தார் மன்சூர் அலிகான் 🙏

#மானுடம்காக்க

4 days ago | [YT] | 2,753

மானுடம் காக்க - Maanudam Kaakka

யூனிவர்சல் கண்ணகி நகர் கபடி டீம் கேப்டன் சுஜி.. #மானுடம்காக்க

4 days ago | [YT] | 1,720

மானுடம் காக்க - Maanudam Kaakka

பாஜக மனித குலத்திற்கே கேடு.. சங்கிகள் மனித பிறவிகளே அல்ல.. #verified

Jemima…25 வயசு பொண்ணு… உண்மையா செம ப்ளேயர்… playerங்கிறத தாண்டி அந்த பொண்ணோட batting style செம classஆ இருக்கும்…

அத தாண்டி இன்னைக்கு அந்த பொண்ணு அடிச்ச அடி aussiesக்கு எதிரா மட்டும் இல்ல… ஒட்டு மொத்த சங்கு கும்பலுக்கும் எதிரா தான் அடிச்சிருக்கு

Series கொஞ்ச மாசம் முன்ன இந்த பொண்ணோட அப்பாவ கட்டாய மதமாற்றம் பண்ணாருனு ஒரு accusations வச்சு அதுக்கு சம்மந்தம் இல்லாம இந்த பொண்ண டார்கெட் பண்ணி இந்த பொண்ணோட gymkhana club membershipஅ புடுங்கிட்டாங்க…

கிட்டதட்ட cricketஅ quit பண்ற அளவு போன பொண்ணு… நண்பர்களோட backupனால மீண்பு அதீத மன அழுத்ததோட series உள்ள வருது… one down விளையாடுற பொண்ணுக்கு வழக்கமா கிடைக்கற அந்த இடமும் கிடைக்கல… பெருசா நல்ல performanceம் இல்ல..

எல்லாம் தாண்டி அந்த பொண்ணால இன்னைக்கு ஜெயிச்சு final போயிருக்கோம்…இவரளோ கடந்து வந்ததால தான் நேத்து groundலயும் presentation ceremonyலயும் அழுது தீத்துட்டு🥺

இந்தியால மட்டும் தான் cricket கூட சேத்து சாதி,மதம் கூடலாம் விளையாட கத்துக்கணும்

Asusual twitterல சங்கி கும்பல் கதற ஆரம்பிசிருக்கு… அடிச்ச அடி aussiesக்கு மட்டும் இல்லடா… இவனுகளுக்கும் சேத்து தான் 💥💥💥

#மானுடம்காக்க
#jemimahrodrigues
#jemima
விஜயபாரதி

6 days ago | [YT] | 1,080

மானுடம் காக்க - Maanudam Kaakka

ஆசிய அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் இருவரும் அசோக் நகர் அம்பேத்கர் திடலில் எழுச்சித் தமிழர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்பொழுது மாலை அணிவித்து நிதியாக இருவருக்கும் தலா 50000 காசோலை வழங்கப்பட்டது.. அவர்களின் பயிற்சியாளர்கள் இருவருக்கும் ஊக்க தொகை தலா 10000 வழங்கப்பட்டது.. #மானுடம்காக்க

1 week ago | [YT] | 1,992

மானுடம் காக்க - Maanudam Kaakka

💥2 வது உலககோப்பை பெண்கள் கபாடி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாக்காவில் நவம்பர் மாதம் 15 முதல் 25 வரை நடைபெற உள்ளது .

💥இதற்கான 25 வீரங்கனைகளை கொண்ட இந்திய அணி பயிர்ச்சி முகாம் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13 வரை குஜராத்தில் உள்ள காந்திநகர் சாய் மையத்தில் நடைபெற உள்ளது.

💥இதற்க்கு பயிர்சியாளர்ராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தேஜஸ்வி பை அவர்களும் மேலாளராக ஹரியானவை சேர்ந்த பிரியங்கா அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர்.

💥மார்ச் மாதம் 4 முதல் 9 தேதி 2025 நடந்த சீனியர் ஆசிய கபடி சாம்பியன்சிப்பில் இடம்பெற்ற வீரங்கனைகளே அதிகம் இந்த உலககோப்பை போட்டியிலும் இடம்பெற வாய்பதிகம்.

💥அதில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த சோனாலி சிங்கேட் கேப்டனாகவும்,ஹிமாச்சலை சேர்ந்த புஷ்பா ராணா துணைகேப்டனாகவும் இருந்தனர்.

💥இந்த அணி ஈரானுடன் நடந்த இறுதி போட்டியில் 32-25 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வென்று தங்க பதக்கத்தை வென்றது .

💥நாளை முதல் பயிர்ச்சியில் ஈடுபடபோகிற 25 பேரில் இருந்து 14 வீரங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு பங்களாதேஷ் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

💥என்னதான் பயிர்ச்சி நடைபெற்றாலும் 90% இந்த வீரங்கனைகளே மெயின் 7 ல் ஆட வாய்ப்புள்ளவர்கள் ..

💥u18 ல் எப்படி ராஜஸ்தான்,ஹரியான வீரங்கனைகள் கோலோட்சினார்களோ அது போல் இதில் ஹிமாச்சல் வீரங்கனைகள் ஆளுமை செலுத்துவார்கள்.

💥நாம் கணிக்கும் 7 வீரங்கனைகள் .

💥சோனாலி சிங்கேட் -ரைடர் -மகாராஷ்ட்ரா

💥புஷ்பா ராணா -ஆல் ரவுண்டர் -ஹிமாச்சல்

💥ஜோதி - ஆல் ரவுண்டர் - ஹிமாச்சல்

💥சாக்சி சர்மா - லெப்ட் கார்னர்-ஹிமாச்சல்

💥பாவ்னா தேவி -ரைட் கவர் -ஹிமாச்சல்

💥நிதி சர்மா -ரைட் ரைடர் - ஹிமாச்சல் .

💥பூஜா ஹத்வாலா -லெப்ட் ரைடர்-ஹரியானா

💥இதில் ஜோதி ரைடர் மற்றும் ரைட் கார்னர் இவருக்கு மாற்றாக ரித்து நேகி இல்லை ரித்து மித்ரவால் இடம் பெறலாம்.

💥புஷ்பா லெப்ட் கவரில் சொதப்பினால் பெங்காலை சேர்ந்த பின்கி ராய் இடம்பெறலாம்.

💥நிதி சர்மா சொதப்பினால் ஹரியானவை சேர்ந்த பூஜா நர்வால் இடம்பெறலாம்.

💥இந்த 11 நபர்கள் தாண்டி மீதம் உள்ள 3 நபர்கள் சாம,பேத,தண்டம் என்ற அடிப்படையில் இடம் பெறலாம் .

💥இதில் உள்ள வீரங்கனைகளில் 70% பேருக்கு இதுவே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் ஏனென்றால் வயது மற்றும் விளையாட்டின் தன்மையே காரணம்.

💥அடுத்த சர்வதேச போட்டியில் அதிகமாக இளம் வீரங்கனைகளே இடம்பெறுவர் .

💥வீரங்கனைகளை பற்றி தனித்தனியாக அடுத்த பதிவில் காணலாம் 🙏🙏🙏

***படத்தில் உள்ளது புஷ்பா,அமரபள்ளி ,சாக்சி,சோனாலி,ஜோதி,பூஜா,ரித்து சியரோன்,நிதி சர்மா.

#மானுடம்காக்க

#kabaddi #Karthika

1 week ago | [YT] | 86

மானுடம் காக்க - Maanudam Kaakka

#பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ #இளையோர் #ஆசிய #விளையாட்டுப் போட்டியில் #திருநெல்வேலி மாவட்டம் #நாரணமாள்புரம் விளையாட்டு கழகம் வீராங்கனை #எட்வினா‌ #ஜெய்சன் 400மீ ஓட்டம் போட்டியில் #வெள்ளிப் பதக்கம் வென்று நமது இந்திய நாட்டிற்கும் #தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார் #தடகள வீராங்கனை எட்வினா‌ அவர்களுக்கு தமிழ்நாடு கபாடி உறவுகள் சார்பாக மனமார்ந்த #வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 💐💐💐💐💐💐

1 week ago | [YT] | 2,081

மானுடம் காக்க - Maanudam Kaakka

#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது. - தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின்

Sports Development Authority of Tamilnadu Udhayanidhi Stalin #மானுடம்காக்க #கார்த்திகாஎக்ஸ்பிரஸ் #கண்ணகிநகர்கார்த்திகா

1 week ago | [YT] | 480