"இருளென்பது குறைந்த ஒளி " என்கிறார் பாரதி.
நமது சமூகத்தில் பெருவாரியான விடயங்களும் குறைந்த ஒளியில், மங்கலாக, இடையே மறைப்புத்திரையிட்டே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இருளிலேயே காட்டப்படுகின்றன.
மக்கள் அனைவரும் அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர் இல்லை ; எனினும் சிந்திப்பதற்கான வாய்ப்பும் வெளியும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். வெகுமக்களைச் சென்றடையாத எவையும் நிலைத்து நின்றதில்லை.
அவ்விதம் ஒரு பிரிவினரிடையே மட்டும் இருக்கும் "அறிவை" பரவலாக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. ஏனெனில், மக்கள்வயப்படாத ஏதொன்றும் முழுமையாகாது.
கலை, இலக்கியம், மருத்துவம், வரலாறு, சூழலியல் என அனைத்தையும் மக்கள் வயப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு “தழல்” பரிணமித்திருக்கிறது.
தழல், தன் வேரை இந்நிலத்தில் ஊன்றுகிறது. எம்மக்களின் மனதில் சுடர்விட விளைகிறது.
தழல் -
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
வரைகலை ஓவிய உதவி: மேகநாத்
Digital ஓவிய உதவி: சுதாகரன்