தமிழ்தேசிய அரசியலை உயிராக கொண்டு தமிழ்தேசியம் மலர தமிழர் ஆட்சி அமைந்திட தமிழர் வாழ்வில் ஏற்றம் அடைய தமிழர் நாட்டை தமிழர் ஆள நமக்கான இறுதி வாய்ப்பு தலைவன் தந்த தமிழ்கொடை நம்முயிர் அண்ணன் செந்தமிழன் சீமானை இறுகபற்றிக்கொண்டு தமிழ்தேசிய அரசியலை கடத்தும் வலையொளியாக நமது விவசாயி வலையொளி செயல்படும் தாய்தமிழ் சொந்தங்களும் அயலக தொப்புள்கொடி உறவுகளும் நமது வலையொளிக்கு ஆதரவு தந்து இணைந்திருங்கள்.
"உழவுக்கு உயிரூட்டுவோம்" தமிழை வாழவைப்போம் தமிழரையே ஆளவைப்போம்
விவசாயி vivasayi
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-09-2025 இன்று காலை 10 மணியளவில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது...
2 months ago | [YT] | 97
View 1 reply
விவசாயி vivasayi
மலைகளின் மாநாட்டிற்கு அண்ணன் சீமான் கைப்பட எழுதிய அழைப்பிதழ்!
2 months ago | [YT] | 78
View 1 reply
விவசாயி vivasayi
ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு *நாம் தமிழர் கட்சி*
கட்சிகள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு
*திராவிட கட்சிகள்*
3 months ago | [YT] | 96
View 4 replies
விவசாயி vivasayi
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி!’ என்கிறார். ‘அடிமை வாழ்வினும்; உரிமைச்சாவு மேலானது!’ என்பது மானத்தமிழ் முன்னோர்கள் கொண்டிருந்த உயிர்க்கோட்பாடு!
அந்த வழிவழியே வந்த வீரத்தமிழ்மறவர்தான் பொன்பரப்பியில் பூத்த புரட்சி தீ, எங்களைப்போன்ற பிள்ளைகளின் முன்னத்தி ஏர், மூத்த வழித்தடம், தமிழ்த்தேசிய இனப்போராளி அண்ணன் தமிழரசன் அவர்கள்!
மற்ற மொழிவழி தேசிய இனங்களைப்போல தமிழினமும் உரிமைப்பெற்று பெருமையோடு வாழ்ந்துவிடாதா? என்று ஏங்கிய எமது முன்னவர்களில் முதன்மையானவர்.
‘சாதியை ஒழிக்காமல் தமிழ்ச்சமூக ஓர்மைஇல்லை; தமிழ்ச்சமூக ஓர்மை இல்லாமல் அதிகார வலிமை இல்லை; அதிகார வலிமை இல்லாமல் தமிழர் விடுதலை இல்லை’ என்கிற அடிப்படை அரசியல் புரிதலோடு பெரும்படை கட்டி எழுப்பிய மாவீரன் அண்ணன் தமிழரசன் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் தாங்கிபிடித்த தமிழ்த்தேசிய தத்துவ வழி நிற்கும் உடன் பிறந்த உறவுகளான நாங்கள் அவ்வீரத்தமிழ் மறவனின் நினைவைப்போற்றுவதில் பெருமையடைகிறோம்!
தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
3 months ago | [YT] | 45
View 0 replies
விவசாயி vivasayi
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் பூலித்தேவன் அவர்கள்!
'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்!
அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.
பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!
நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
3 months ago | [YT] | 39
View 0 replies
விவசாயி vivasayi
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தினாள்!
'தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லைதான்!’ ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சியாக்கப்படுகிறார்கள்? என்பதுதான் கேள்வி; அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமை மீட்புக்கான புரட்சித்தீயைத் தமிழ் மண்ணில் பற்ற வைத்த மானமறத்தி அன்புத்தங்கை அனிதா!
அந்த எளிய மகள் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீட் தேர்வினை இம்மண்ணை விட்டு அகற்றமுடியவில்லை என்பதுதான் சமகால வரலாற்று பெருங்கொடுமை!
அனிதா வீட்டிற்கே சென்று ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், நீட்டை ஒழிக்கும் இரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று சொன்னவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் இரகசியத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதுதான் நம்முடைய நீண்டநாள் கேள்வியாக இருக்கிறது.
அன்புத்தங்கை அனிதாவின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், அவருடைய உடன் பிறந்தாராகிய நாம் தொடர்ச்சியாகப் போராடி, அவர் கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம்!
கல்வி உரிமைப்போராளி அன்புத்தங்கை அனிதா அவர்களுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
3 months ago | [YT] | 56
View 0 replies
விவசாயி vivasayi
மரங்களின் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட அண்ணன் சீமான்💚
#NtkforTN நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
3 months ago | [YT] | 118
View 2 replies
விவசாயி vivasayi
பணிநிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 11.08.2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மீண்டும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
4 months ago | [YT] | 51
View 0 replies
விவசாயி vivasayi
தடையை மீறி மலையேறி மாடுமேய்த்தார்
அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥
4 months ago | [YT] | 52
View 0 replies
விவசாயி vivasayi
ஆகஸ்டு 17 மரங்களின் மாநாடு
மரங்களோடு பேசுவோம்.!
மரங்களுக்காக பேசுவோம்.!
மரம் மண்ணின் வரம்.!
வளர்ப்பதே மனித அறம்.
அண்ணன் செந்தமிழன் சீமான்
4 months ago | [YT] | 36
View 0 replies
Load more