விவசாயி vivasayi

நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!

ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன் விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த வீரர்களில் முதன்மையான பெருமகனார் நம்முடைய பாட்டன் பூலித்தேவன் அவர்கள்!

'நெற்கட்டான் செவ்வயலில் யாரோ பூலித்தேவனாமே' என ஏளனமாக எண்ணி படையைத்திரட்டி வந்த ஆங்கிலேயர்களை, வெறும் வாளும், வேலும் கொண்ட வீரத்தமிழ் மறவர் படைநடத்தி, களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு போரிட்டு வென்ற மாவீரன்! எந்த இடத்திலிருந்து ஆங்கிலேயர் படைதிரட்டி வந்தனரோ அதுவரை திருப்பி அடித்து விரட்டிய வீரத்திருமகன் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்!

அவர் போரிட்டுக் காட்டிய பிறகுதான் பல மன்னர்கள் தாங்களும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட முடியும் என்ற பெருநம்பிக்கை கொண்டனர்.

பீரங்கி குண்டுகளால் கூடத் துளைக்க முடியாத கோட்டையைக் கட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவன் அவர்களின் வீரத்தைப் போற்றுவதில் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் பெருமிதமடைகிறோம்!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!

3 months ago | [YT] | 39