தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் 'அறிவுக்கடல்' மறைமலையடிகளின் தலை மாணவரும் ஆகிய திருக்குறள் பீடம் முதற்குரவர்.தவத்திரு.அழகரடிகள் சமயப்பணி செய்வதற்கு திருக்கழுக்குன்றத் தலத்தை தெரிந்தெடுத்தார். திருக்குறள் பீடம் முதற்குரவர் தவத்திரு அழகரடிகளின் அருட்கட்டளையின்படி 11-05(மே)-1977 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள் 29 சதய நன்னாளில் "அப்பர் தொண்டர் அணி" 'குருகுல மாணவர்','கேதாரசசெல்வர்' ஒளியகம் சிவத்திரு. ந.ரா.ஆடலரசு (அம்பலவாண தேசிகர்) அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்வணியின் வழிவழித் தலைவர்களாக திருக்குறள் பீடாதிபதிகள் இருப்பார்கள். தற்போது இவ்வணியின் தலைவராக திருக்குறள் பீடம் சிவத்திரு. குருபழநி அடிகள் அருளாட்சி செய்து வருகின்றார்கள். அப்பர், சுந்தரர் விழாக்களையும், திருஞானசம்பந்தர் இசைவிழாவையும் 'தமிழ்நெறி வேள்வி செம்மல்' 'சைவத்தமிழ்மணி' ஒளியகம்.சிவத்திரு.ந.ஒளியரசு அவர்கள் அறக்கட்டளை செயலாளராக இருந்து நடத்திவருகிறார்.
Shared 4 years ago
19 views