Shri Adhi Keshav

This is devotional chennal, only have god related videos and photos. Keep supporting. Thank you to all


Shri Adhi Keshav

ஹனுமான் வரலாறு, சொல்லும் வாழ்க்கை பாடம் என்ன? வீடியோ இன்று மாலை 4:00 மணிக்கு 🙏 Hanuman video streaming evening today 4pm (17.12.2025)
#அனுமன் #ஹனுமான் #ஆஞ்சநேயா #jaisiyaram #hanuman #hanumanji #hanumanchalisa #hanuman #hindugod #tamilmotivation #ஆன்மீகதகவல் #பக்திமார்க்கம்

8 hours ago | [YT] | 4

Shri Adhi Keshav

“ஐயப்பன் உங்களை அழைக்கும் 5 ரகசிய சைகைகள்!  இதில் ஒன்று நடந்திருந்தாலும்… நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்!?!” 😱
வீடியோ மாலை இன்று மாலை 4.00pm (12.12.2025)
#சபரிமலை #sabimalai
#ayyappa #iyyappa

5 days ago (edited) | [YT] | 8

Shri Adhi Keshav

ஐயப்பன் சனிபகவானுக்கு செய்த சத்தியம் என்ன? ஐயப்ப பக்தர்கள் காண வேண்டிய முக்கியமான பதிவு.. இன்று இரவு 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்.. உங்கள் ShriAdhikeshav ShriAdhiKeshav-no1nh
சேனலில்...
#ஐயப்பா #ஐயப்பன் #iyyappan #ayyappan #sabarimala #ayyappaswamy #ayyappasongs #mythology #சுவாமிஐயப்பன்

3 weeks ago | [YT] | 10

Shri Adhi Keshav

சபரிமலை ஐயப்பன் வீடியோ? #sabimalai #iyyappan #ayyappan #ஐயப்பன் #சபரிமலை

1 month ago | [YT] | 2

Shri Adhi Keshav

கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். 10 வயதில் நாகபட்டினதில் சூட்டுக்கோல் சித்தரிடம் அந்த சிறுவன் கைநீட்டியபோது "பெரும் திருப்பணிகளை நீ செய்யகடவாய், உன்பேச்சை கேட்க பெரும் கூட்டம் எப்போதும் உண்டு" என சொல்லி ஆசீர்வாதம் செய்தார் திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் சித்தர் அந்நொடியில் இருந்து முருகபெருமானால் ஆட்கொள்ளபட்டவர் கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
இந்த நூற்றாண்டில் முருகபெருமான் ஆட்கொண்ட அடியார்களில் வெகுசிலராக நம் கண்முன் வாழ்ந்த மகான், இன்று அவருக்கு நினைவு நாள் அவர் முருகபெருமானோடு கரைந்து போன நாள். அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள். அவ்வையார், அருணகிரி நாதர், நக்கீரர், குமரகுருபரர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை. ஆனால், இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்.

முருகபெருமானின் தமிழ்வடிவாக, ஞானவேல் வடிவாக, அவன் ஏங்கிய ஞான பழமாக நம்மிடம் தமிழும் ஆன்மீகமும் கொட்டி கொடுத்தர் வாரியார் சுவாமிகள். டெல்லி சுல்தானிடம் சவால்விட்டு நிலைத்த குமரகுருபரருக்கும், தமிழக நாத்திக கோஷ்டியிடம் சரிக்கு சரி நின்ற வாரியார் சுவாமிகளுக்கும் ஒரு வித்தியாசமும் காண முடியாது. அவரின் படமும் அவரின் போதனையும் எல்லா இந்துக்கள் வீட்டிலும் இருக்க வேண்டும், எல்லா தலைமுறைக்கும் அவரை கொண்டு செல்ல வேண்டும். அந்த வாரியார் சாமிக்கு ஞான பெரியவருக்கு ஆன்மீக கனிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

எல்லா காலமும் முருகபெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்கள் அருள் நிறைந்திருக்கும், அங்கு தமிழ் தனித்து ஆட்சி செய்து கொண்டிருக்கும், அங்கு திருமுருக கிருபானந்த வாரியாரும் அமர்ந்திருப்பார், முருகபெருமானை வேண்டும்போதெல்லாம் கிருபானந்தவாரியாரையும் நினைந்து கொண்டால் இந்த கலிகாலத்தில் நிச்சயம் உடனடி பலன் உண்டு



நன்றி: பிரம்ம ரிஷியார் அவர்களின் அற்புதமான பதிவுகளில் இருந்து....

1 month ago | [YT] | 7

Shri Adhi Keshav

#porunami

பௌர்ணமி சோடசக்கலை நேரம்🙏

பௌர்ணமி அன்று சோடசக்கலை நேரம் என்பது பௌர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும், பிரதமை திதி தொடங்கிய பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் உள்ள, மொத்தம் இரண்டு மணி நேர காலப்பகுதியாகும்.
இந்த இரண்டு மணி நேரத்திற்குள் வரும் சில நொடிகள் (சுமார் ஐந்து நொடிகள்) மிக சக்திவாய்ந்த நேரமாகக் கருதப்படுகிறது, ஆனால் அந்த மிகச் சரியான நேரத்தைக் கணிப்பது கடினம்.
முக்கியத்துவம்:
இந்த நேரத்தில் தியானம் செய்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும். அஷ்ட லக்ஷ்மியின் அருள் கிடைத்து செல்வ வளம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.
சித்தர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தித் தங்கள் தவங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு ஏற்ப இந்த சோடசக்கலை நேரம் மாறுபடும். உங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட மாதத்தின் பௌர்ணமி நேரத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப இந்த நேரத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

- நன்றி சித்தர்களின் குரல்.'s post

1 month ago | [YT] | 7

Shri Adhi Keshav

#பௌர்ணமி #குலதெய்வம் #kuladev #guladev
உங்க குலதெய்வத்தை மறக்காதீங்க..🙏🏻 வீட்டில் மகிழ்ச்சியை அள்ளித் தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு..
இந்த நாளில் நம் குலதெய்வமாக இருக்கும் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியில் இருந்தும் விடுபடலாம்.
பௌர்ணமி வானில் பிரகாசமாக தோன்றும் அற்புதமான நாள்.முழு நிலவாய் இருக்கும் இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் இருக்கும் சக்தி மிகுந்த நாளாகவும் காணப்படுகிறது.ஒவ்வொருவரின் குலமும் செழித்து வாழ கண்டிப்பாக நாம் கட்டாயம் குலதெய்வ வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி சந்திரனை தரிசித்து பிறகு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதன் மூலம் வீட்டிலே நீங்கள் இருக்கக்கூடிய பண வரவு உங்களுக்கு அதிகரிக்கும்.
பௌர்ணமியில் குல தெய்வ வழிபாடு
நம் குலத்தை காக்கும் தெய்வமே குல தெய்வம்.
பெண்களுக்கு குல தெய்வம் திருமணத்திற்கு பின் மாறுபடும்.
ஆண்களுக்கு எப்போதும் ஒரே குல தெய்வம்தான்.
நாம் எத்தனை இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குல தெய்வ வழிபாட்டில் பௌர்ணமிக்கு சிறப்பு பங்கு உள்ளது.பௌர்ணமி நாளிலே குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்று. குலதெய்வ கோயில் அருகில் இருந்தால் பௌர்ணமி பௌர்ணமிக்கு சென்று நீங்கள் வழிபடுவது நல்லது. இது நமக்கு நன்மைகளை வாரி வழங்கும்.தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குலதெய்வம் பூர்வீக கிராமத்தில் இருக்கிறது. நீங்கள் மாத தோறும் பௌர்ணமி நாளில் அங்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.வீட்டில் இருந்தபடியே வீட்டிலே விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம் உங்களுடைய குலதெய்வ படத்திற்கு மாலையிட்டு அல்லது பூக்களால் அலங்கரித்து குலதெய்வத்திற்கு மனதார நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் போன்றவற்றை நீங்கள் குலதெய்வத்திற்கு நெய்வேதியமாக செய்து வேண்டிக் கொள்ளுங்கள்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கொடுத்து வாருங்கள். மாதாமாதம் பௌர்ணமி நாளில் இந்த வழிபாடு நீங்கள் செய்வதன் மூலம் உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கும்.மேலும் யார் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை தவற விடுகிறார்களோ அவர்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கமுடியும்.உதாரணமாக தொழில் வீழ்ச்சி,வேலையில் முன்னேற்றம் இல்லாமை குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமை சிரமங்களை எதிர்கொள்வது போன்ற சிக்கல்களை அவர்கள் தொடர்ந்து சந்தித்து கொண்டே வருவதை நாம் பார்க்கமுடியும். அப்படியானவர்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட அவர்கள் கட்டாயம் குலதெய்வத்தின் அருள்பெறுவது அவசியம் ஆகிறது.

எப்போதும் நம்வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் பிற நாட்களில் குலதெய்வத்தின் அருளை பெறுவதை காட்டிலும் பெளர்ணமி நாள் அன்று குலதெய்வம் சென்று அன்று 1 நெய் அகல் தீபம் ஏற்றி வர வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.🙏🏻

1 month ago | [YT] | 7

Shri Adhi Keshav

சிக்கல் சிங்காரவேலன் வியர்வை ததும்பும் காட்சி..... ஓம் சரவணபவ
சிக்கல் ஶ்ரீ சிங்கார வேலவருக்கு அரோகரா .. அரஹரோஹரா ..
சிங்கார வேலவனை ... சிந்தையிலே
கொண்டு வந்தார்க்கு ஏது குறை ... வாழ்வினிலே
செந்தூரில் பழநியிலே ... சிக்கலிலே
சென்று கண்டார்க்கு கவலை இல்லை ... சிக்கல் இல்லை
சிங்கார வேலவா ... சிங்கார வேலவா.
கடவுள் முருகனின் வேல் எந்த நாட்களில் வழிபாடு செய்வது🌺🌺🌺
முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன🍁🍁
முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.🍁🍁
பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், இன்று சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப் பெறுகின்றார்.🍁🍁
வேல் வாங்குதல் சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழி தோன்றியது.🍁🍁
முருகனது வேல் மகிமையும், மேன்மையும், தலைமையும், தெய்வீகத் தன்மையுடையது. எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குரியது. முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.🍁🍁
சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது. முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.
சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர். வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்🍁
#முருகன் #முருகா #murugan #muruga #MuruganDevotional #VelVelMurugaVel #OmSaravanaBhava #TamilDevotional #ShriAdhiKeshav #சூரசம்ஹாரம்2025
#Soorasamharam

1 month ago | [YT] | 20

Shri Adhi Keshav

கந்த சஷ்டி விரதம் 2025
#kandhasashti #sashti #sashtifasting #sashtiviratham #mahakandhasashti #kandhasashtiviratham #kandhasaahtiviradham #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #மகா கந்த சஷ்டி
இன்று ஆரம்பிக்கிறது கந்த சஷ்டி விரதம் 2025

​முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும்.

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு.

இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான்.

முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.

கந்த சஷ்டி விரதம் 2025 துவங்கும் நாள் :

மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.

இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.

இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.

விரதம் துவங்கும் முறை :

* முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.

* விரதம் துவங்கும் நாளான நாளை காலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்காக விரதம் இருக்க போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை ஆரம்பிக்கவும்.

* கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.

* காலை எழுந்ததும் குளித்து முடித்து, 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபட வேண்டும்.

* காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.

* நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.

* தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.

விரதத்தின் போது செய்ய வேண்டியவை :

* கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.

* தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.

* வாரம் ஒரு முறை வீடு பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.

* விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.

* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.

* முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.

* முருகனுக்கு வைக்கும் நைய்வேத்தியத்தை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

* விரதம் முடிந்த மறு நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.

குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :

குழந்தைக்காக வேண்டி 48 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஷட்கோண கோலம் போட்டு, ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி, வேல்மாறல் மற்றும் செகமாயை யுற்றெ என துவங்கும் திருப்புகழ் படிக்கவும்.

தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி இருப்பது சிறப்பு.

விரதம் காலத்தில் முடிந்த வரை மற்றவர்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்னதானம் அளிப்பது, குழந்தைகள் படிப்பிற்காக உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.

நிறைவு‌‌ நாளன்று முருகன் கோவில்களில்‌ நடக்கும் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுவிட்டு விரதம்‌ முடிக்கலாம்.

அல்லது மறுநாள் திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம்‌ முடிக்கலாம்.

1 month ago | [YT] | 8

Shri Adhi Keshav

*21-10-2025 – செவ்வாய்கிழமை கேதார கௌரி விரதம்*

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும், இது பார்வதி தேவி சிவனை நோக்கி விரதமிருந்து இடப்பாகத்தைப் பெற்றதால் உருவானது. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச தசமி தொடங்கி, ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரை 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமையையும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும், ஆனந்தமான வாழ்வையும் தரும் என்பது நம்பிக்கை.

#viral #trending #devotional #tamil

1 month ago | [YT] | 9