முருகப் பெருமானை வழிபடுவதற்கும், கேட்ட வரங்களை பெறுவதற்கும் உரிய மிகச் சிறந்த நாள் சஷ்டி திதியாகும்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் சஷ்டி திதி வரும் போது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு.
இருந்தாலும் அதிகமான முருக பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிப்பது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழாவின் போது தான்.
முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரை சிலரும், சப்தமி வரை சிலரும் விரதம் இருந்து வழிபடுவது உண்டு.
கந்த சஷ்டி விரதம் 2025 துவங்கும் நாள் :
மகாகந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இத ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.
இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன் வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
இந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி மகா கந்த சஷ்டி விரதம் துவங்க உள்ளது. அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது.
விரதம் துவங்கும் முறை :
* முதல் நாளே வீடு மற்றும் பூஜை அறை சுத்தம் செய்து தயாராக வைக்க வேண்டும்.
* விரதம் துவங்கும் நாளான நாளை காலை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று எதற்காக விரதம் இருக்க போகிறீர்கள் என்ற வேண்டுதலை முருகப் பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொண்டு, விரதத்தை ஆரம்பிக்கவும்.
* கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனில் வீட்டில் ஒரு பேப்பரில் வேண்டுதலை எழுதி முருகன் பாதத்தில் வைத்தும் விரதத்தை ஆரம்பிக்கலாம்.
* காலை எழுந்ததும் குளித்து முடித்து, 7 மணிக்கு முன்னதாக முருகனுக்கு பூ போட்டு வழிபட வேண்டும்.
* காலை மாலை இரண்டு வேளையும் 2 நெய் தீபம் ஏற்றவும்.
* நைவேத்தியமாக ஒரு டம்ளர் பால், பழம் அல்லது கற்கண்டு எளிமையாக முடிந்தவற்றை வைத்து வழிபடலாம்.
* தீப, தூபம் காட்டி பூஜை செய்த பிறகு "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். முடிந்தால் எழுதலாம்.
விரதத்தின் போது செய்ய வேண்டியவை :
* கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் தினமும் கேட்கலாம் அல்லது படிக்கலாம்.
* தினமும் தலைக்கு குளிக்க தேவையில்லை செவ்வாய், வெள்ளி அன்று தலைக்கு குளித்தால் போதுமானது.
* வாரம் ஒரு முறை வீடு பூஜை அறை சுத்தம் செய்தால் போதும்.
* விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி பூஜை அறைக்கு செல்லாமல் வழிபடலாம்.
* முதல் நாள் மற்றும் முடியும் நாள் மட்டும் ஒரு வேளை விரதம் இருந்தால் கூட மிக சிறப்பு.
* முருகனுக்கு வைக்கும் நைய்வேத்தியத்தை மட்டும் ஒருவேளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
* விரதம் முடிந்த மறு நாளே அசைவம் சாப்பிடக்கூடாது.
குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை :
குழந்தைக்காக வேண்டி 48 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று ஷட்கோண கோலம் போட்டு, ஆறு வெற்றிலை தீபம் ஏற்றி, வேல்மாறல் மற்றும் செகமாயை யுற்றெ என துவங்கும் திருப்புகழ் படிக்கவும்.
தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தை சொல்லியபடி இருப்பது சிறப்பு.
விரதம் காலத்தில் முடிந்த வரை மற்றவர்கள் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அன்னதானம் அளிப்பது, குழந்தைகள் படிப்பிற்காக உதவுதல் ஆகியவற்றை செய்யலாம்.
நிறைவு நாளன்று முருகன் கோவில்களில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்வைக் கண்டுவிட்டு விரதம் முடிக்கலாம்.
அல்லது மறுநாள் திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம் முடிக்கலாம்.
Shri Adhi Keshav
கந்த சஷ்டி விரதம் 2025
#kandhasashti #sashti #sashtifasting #sashtiviratham #mahakandhasashti #kandhasashtiviratham #kandhasaahtiviradham #கந்தசஷ்டிவிரதம் #சஷ்டி #சஷ்டிவிரதம் #மகா கந்த சஷ்டி
இன்று ஆரம்பிக்கிறது கந்த சஷ்டி விரதம் 2025

2 weeks ago | [YT] | 8