High Quality recordings propagating the authentic teachings of Islam, according to the Qur'an and Sunnah

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ١١ - அவன் ‘அகபா'வைக் கடக்கவில்லை. 90:11

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ١٢ - (நபியே!) "அகபா' என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 90:12

فَكُّ رَقَبَةٍ ١٣ - (அது) ஓர் அடிமையை விடுதலை செய்தல், 90:13

أَوْ إِطْعَـٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ١٤ - அல்லது கடும் பசியுடைய நாளில் உணவளிப்பது, 90:14

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ١٥ - உறவினரான ஓர் அனாதைக்கு, 90:15

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ١٦ - அல்லது வறியவரான ஓர் ஏழைக்கு (உணவளிப்பதாகும்). 90:16

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ١٧ - பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும். 90:17

أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ١٨ - இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள். 90:18