Islamic Drizzle_மன்பயீ தளம்

ASSALAMU ALAIKKUM
This is Islamic channel

And children program and bayan

Islamic Drizzle_மன்பயீ தளம்

thanks for subscribe my channel


Islamic Drizzle_மன்பயீ தளம்

#காஸாமக்களுக்காக

குனூத்தே நாஜிலா என்பது விரோதிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், தீங்கிலிருந்தும், அவர்கள் மூலம் இஸ்லாமிய உம்மத்திற்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பை, உதவியை வேண்டும் அற்புதமான துஆ.

,நபி(ஸல்)அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ருடைய தொழுகையில் ஓதியுள்ளார்கள்.

2,சோதனைகள் நீங்கி சாதகமான சூழல் ஏற்படுகிற வரை ஓதலாம் என்பது அனைத்து இமாம்களின் கூற்று.

3,ஃபஜ்ருடைய தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிற்கு பின்பு நின்ற நிலையில் ஓத வேண்டும்.

4,குனூத்தே நாஜிலாவிற்காக தக்பீர் சொல்வதோ,கைகளை உயர்த்துவதோ கூடாது.

5,இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும். பின்பற்றி தொழும் மக்கள் மெதுவாக ஆமீன் சொல்ல வேண்டும்.

6,தனியாக தொழுபவரும் குனூத்தே நாஜிலாவை ஓதலாம்.

7,பெண்களும் குனூத்தே நாஜிலாவை தொழுகையில் ஓதலாம். சப்தமின்றி மெதுவாக ஓதவேண்டும்.


#Gaza #Palestinian #duaa #qnoothnajilah #nonbu #நோன்பு #துஆ

1 week ago | [YT] | 44

Islamic Drizzle_மன்பயீ தளம்

#அல்ஹம்துலில்லாஹ்
#lalpet

15/09/2025 திங்கள்கிழமை அன்று கேரளம் பாலக்காட்டில் நடந்த மாபெரும் மீலாது பெரு விழாவில்

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காழியுமானா

*மௌலானா மௌலவி அல் ஹாபிழ் A.நூருல் அமீன் மன்பஈ ஹழ்ரத் அவர்களுக்கு*


*அல்லாமா அமானீ ஹழ்ரத் விருது வழங்கி கௌரவவிக்கப்பட்டார்கள்*

*அல்ஹம்து லில்லாஹ்*

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு ஹழ்ரத் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து கொள்வானாக ஆமீன்

நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக!

அவர்களின் கல்வியின் மூலம் நாம் அனைவரும் நற்பலன்களை பெற்று வாழ்வில் சிறந்து விளங்க அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக

*ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!*

2 weeks ago | [YT] | 47

Islamic Drizzle_மன்பயீ தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

#79வது #இந்திய #சுதந்திரதின #கொண்டாட்டம்.

Video Link:

https://youtu.be/iDFCBuhZMAQ?si=kNZJF...

79 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு
#லால்பேட்டை பனேஷா தைக்கால் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நமது நாட்டின் தேசிய கொடி நமது பள்ளியின் முத்தவல்லி ஹாஜி K.U.சைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் ஏற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பள்ளியின் முத்தவல்லி ஹாஜி K.U.சைபுல்லாஹ் அவர்கள்
#தேசிய_கொடி ஏற்றி வைத்தார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் மாணவர் ஹாபிழ் #அப்துஸ்ஸபூர் #குர்ஆன் வசனங்கள் ஓதினார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் பேராசிரியர் ,பனேஷா ஜும்ஆபள்ளி இமாம் மவ்லவி ஹாபிழ் #மஃசூமுல்லாஹ் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் சுதந்திர தின #சிறப்புரை நிகழ்த்தினார்.

பனேஷா ஜும்ஆபள்ளி மக்தப் ஆசிரியர்
மவ்லவி முஹம்மது அலி ஹஜ்ரத் அவர்கள் #துஆ செய்தார்கள்.

மேலும்
இந்நிகழ்வில் மஹல்லா நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மக்தப் மாணவர்கள் என திரளாக கலந்துக் கொண்டு சுதந்திர தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.

ஜாதி மதம் இனம் பாராத
சமத்துவம் சகோதரத்துவம் ஓங்கி
வளம் செழிப்போடு
நிம்மதி மகிழ்வோடு
நமது இந்திய திரு நாடு வளர்ச்சி பெற அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ செய்வோமாக.....

அனைவர்களுக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳

#HappyIndependenceDay #lalpet #பனேஷா_தைக்கால் #ஜும்ஆ_பள்ளி

1 month ago (edited) | [YT] | 38

Islamic Drizzle_மன்பயீ தளம்

Day and night view of the royal Clock Tower
#makkah #kaba #clocktower

2 months ago | [YT] | 43

Islamic Drizzle_மன்பயீ தளம்

லால்பேட்டை
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக்கல்லூரி
அஞ்சுமன் மன்பஉல் பயான் மாணவ சொற்பயிற்ச்சி மன்றம்
நடத்தும்
ஆஷுரா தின
சிறப்பு பட்டிமன்றம்

நாள் -04.07.2025 வெள்ளி(மக்ரிப்)
இடம் -தாருத் தஃப்ஸீர்

🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷

*தலைமை -*
ஷைகுல் ஜாமிஆ, முஃப்தி
அ.நூருல் அமீன் மன்பயீ
ஹள்ரத் கிப்லா

முன்னிலை -* ஜாமிஆவின் உஸ்தாத்மார்கள்

பட்டிமன்ற தலைப்பு
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஊடகங்கள்
துணையா ? தடையா ?

*நடுவர் -*
மவ்லவி ஹாஃபிழ்
S.M.அப்துர் ரஹ்மான் மன்பயீ
நிறுவனர் - மத்ரஸா
மன்பஉஸ் ஸாலிஹாத்
நேதாஜி நகர், சென்னை.

#பட்டிமன்றம் #லால்பேட்டை #ஜாமிஆமன்பவுல்அன்வார்

🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷

3 months ago | [YT] | 37

Islamic Drizzle_மன்பயீ தளம்

#Inshallah #today #2pm
ஷியாக்களோடு சமரசமா? | கோவை அப்துல் அஜீஸ் பாகவி | #tamilbayan #shia #islamicbayan #ஷியா

3 months ago | [YT] | 19

Islamic Drizzle_மன்பயீ தளம்

மே 28, 2025
அஸ்ஸலாமு அலைக்கும்.

🌙 இன்று (புதன்) மஃக்ரிப் க்கு பின்பு ஹிஜ்ரீ 1446 துல்ஹஜ் மாத தலைப்பிறை தமிழகத்தில் பார்க்கப்பட்டது.

🌙 இன் ஷாஅல்லாஹ், இன்று புதன் மஃக்ரிப் -லிருந்து துல்ஹஜ் பிறை *1* ஆகும்.

🌙 இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் *06-06-2025* வெள்ளிக்கிழமை சுன்னத்தான அரஃபா நோன்பு நாள் ஆகும்.

🌙 எதிர்வரும் *07-06-2025* சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

பிறை துஆ:
*اللَّهُمَّ أَهِلَّهُ علَيْنَا بِالأَمْنِ والإِيمَانِ ، وَالسَّلامَةِ والإِسْلامِ ، رَبِّي ورَبُّكَ اللَّه ، هِلالُ رُشْدٍ وخَيْرٍ.*
#dulhaj #துல்ஹஜ் #பிறை #2025

4 months ago | [YT] | 34

Islamic Drizzle_மன்பயீ தளம்

மாநில #மன்பயீ_பேரவையின் #அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி
வ பரக்காத்துஹு


الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்ட மன்பயீ உலமா பேரவையின் சார்பாக நமது ஜாமிஆவின் மாணவர்களுடைய காலை உணவுக்கு தேவையான நாஷ்டா காசில் ஒரு பகுதியை வழங்குவதற்காக கூடியிருந்தோம்.

அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் 471000/ ரூபாயும், சென்னை மாவட்டம் 202000/ ரூபாயும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வுக்காக வந்திருந்த சில மாவட்டங்களின் பதினைந்திற்கும் மேற்பட்ட மன்பயீ பேரவையின் நிர்வாகிகள் பெருமக்களை வைத்து மாநில அளவில்
மன்பயீ பேரவையின் ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் நமது பேரவையின் வருங்கால செயல் திட்டங்கள் குறித்து நமது ஷைகுல் ஜாமிஆ அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்

*அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள்*

1. இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டு புகாரி ஷரீஃப் மஜ்லிஸின் 50 வது ஆண்டு பொன்விழா நடைப்பெற இருக்கிறது இவ்விழாவில் பேரவையின் அனைத்து மன்பயீ ஆலிம்களும் கலந்து கொள்வதற்கு தொதுவாக அவ்விழாவை யொட்டி மாநில மன்பயீ பேரவை ஒன்று கூடல் நிகழ்வு நடத்துவது

2. நமது ஜாமிஆவின் முன்னாள் பேராசிரியர்கள் - பாசத்திற்குரிய உஸ்தாத்மார்கள் அனைவருடைய வரலாற்றையும் ஒரே நூலில் தொகுத்து அதனை மன்பயீ பேரவை வெளியிடுவது,

3. கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக நமது ஜாமிஆவிலிருந்து ஃபத்துவா - மார்க்க தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் இக்காலத்திற்கு ஏற்ற நூறு ஃபத்துவாக்களை மட்டும் இவ்வாண்டு வெளியிடுவது, பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நூறு ஃபத்வாக்களை பேரவை வெளியிடுவது,

4. தமிழ்நாடு அளவில் உள்ள மன்பயீ ஆலிம்களில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கிற ஆலிம்களுக்கு உதவிகள் செய்வது. மன்பயீ பேரவை மன்பயீ ஆலிம்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

5. தமிழகம் அளவில் ஒரே நிர்வாகத்தின் கீழ் 25 வருடங்களுக்கும் மேலாக பணி செய்து வருகிற மன்பயீ இமாம்கள், மன்பயீ முதர்ரிசுகள் ஆகியோருக்கு பொற்கிழியும் சான்றிதழும் வழங்கி கண்ணியப்படுத்துவது.

6. மன்பயீ பேரவைகளின் மாநில, மாவட்ட நிர்வாகக் கூட்டம் கூடுவது,

7. மாவட்ட நிர்வாகிகளை அழைப்பது, அவர்களோடு தொடர்பு கொள்வது அனைத்து காரியங்களையும் மாநில செயல் தலைவர், மௌலவி, முஹம்மது அலி ஹள்ரத் அவர்களும்,(லால்பேட்டை) சென்னை மௌலவி, பி. எம். கலீலுர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களும், அக்பர் பாதுஷா ஹள்ரத் அவர்களும் இருந்து இப்பணியை செய்ய வேண்டும்.

8. இவ்வாண்டு ஜூலை 15 ஆம் தேதி மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி அந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை எடுப்பது,

9. மாநில மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தரும் மன்பயீ பெருமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

*இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்.*

10. ஜூலை 15 அன்று மாநில மன்பயீ பேரவை ஒன்று கூடல் சம்பந்தமாகவும், எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில, மாவட்ட மன்பயீ உலமாக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம்.

அன்புடன்

*T.M.N. ஹாமித் பக்கிரி மன்பயீ*

செயலாளர் : மாநில மன்பயீ பேரவை.
14/5/2025

அழைப்பின் மகிழ்வில்......

மன்பயீ பேரவை தலைவர், ஷைகுல் ஜாமிஆ
A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்


மன்பயீ பேரவை பொருளாளர், *முஹம்மது பஷீர் சேட் மன்பயீ*


*குறிப்பு*

இத்தகவலை மாவட்ட , வட்டார மன்பயீ தளங்களில் பகிரவும்

4 months ago (edited) | [YT] | 54