🪷கார்த்திகை மாத சோமவாரம் 🪷கார்த்திகை மாத பிரதோஷம் 🪷சிவ சகஸ்ரநாம அர்ச்சனை
ஆக இந்த ஆன்மீக முப்பெரும் நிகழ்வுகள்...
வரும் திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நமது மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற இருப்பதால்...
🪷 இந்த முப்பெரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்து கொண்டு ஏக இறைவன்- இறைவி அருளையும் பெற்று மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...
அபிஷேக ஆராதனை மற்றும் திருப்பிரசாதம் வழங்குதல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் ஊழியர்களால் மெய்யன்பர்களால் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
மகிழ்வுடன் திருக்கோவில் ஊழியர்கள் பக்த கோடிகளுடன் மாதங்கியின் மைந்தன் மற்றும் பதஞ்சலி சபை
வெற்றிக்கு வழிகாட்டும் தாரை வழிபாடு ===================================
நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் தாரைகள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிலைகளைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தாரையும் தனித்தனி விளைவுகளைக் கொண்டது.
அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞான ரண்யம் எனும் பழம்பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார்.
அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.
தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது.
சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என அழைக்கிறார்கள். இந்திர விநாயகர் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது.
எல்லாக் கோயில்களிலும் இருக்கும் விநாயகர், இந்த சுசீந்திரம் கோயிலில் பெண் உருவாகிய “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என்று இருப்பதன் மூலம் இந்த ஸ்தலம் பெண் சாபங்களை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
தனக்கொரு தனித்துவம்
தத்துவம் எனக் கண்ட
எம்தலைவன்தான்
தாயன்பில் கோர்த்த
மலரில் தனியொரு
அழகைப் பெற்றான்..
அம்பலத்தான் ஆடல் காண
அவதரித்த அன்புத் தலைவன்
எப்போதும் எம் பலமாவான்
உள்ளிருந்து உலவிடுவான்
வேளை தனில் வெளிப்பட்டு
வியத்தகு மேன்மை புரிவான்...
மூவினை ஒழிய நல்ல
பாவினை சூத்திரம் என
வகுத்த முதல்வன்
தாயாய் தந்தையாய்
தனிப்பெரும் தெய்வமாய்
சத்குருவாய் எங்கள் இதயம்தனை
எப்போதும் வென்றான்
#பதஞ்ஜலி
#மாதங்கியின்_மைந்தன்
11 hours ago | [YT] | 5
View 1 reply
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#வாழ்க_என்_மாதங்கி 🌿🌿
வாசியின் நாயகி உணர்த்திய
வசு விண்மீன் உடையாள்...
புரிதலின் தெரிந்துவக்கும்
மாதங்கி மனம் உவந்த
காலமும் ஆகி தன்மையை அறிந்து
இல்லம் ஏகிய கருணை பொழிந்து..
வாழவை என்றெனுளம்
வாசிக்கும் வீணை போல மனம் படைத்தாள்🪷
ஆசியும் நன்னாளில் பகிர்ந்திடுவாளோ
நன்னயமாய் நடந்திடத்தான் 🙏🙏
நடந்திடவே நயமாய் நேர்ந்தேன் வசி வசி என்ற தமிழ் வளர்த்து 🌿
வளர்த்தேன் இமை கொள்ள
வாஞ்சை அன்பும்🌿🌿💞💞
வாஞ்சை அன்பின் நினைவில்
காலங்கள் வழிந்தோட 🪷
வாராதோ அந்நாளும்
வாக்கின் பலிதங்கள் எல்லாம் நிகழ்ந்திடும்
கவி இசை காதல் வடிவாகி மேதகு மனத்தோர் நினைவெல்லாம்
நிலையென நிலைத்தவள்.
உன் புரிதலுக்கும் பெரிதென
மனந்துவப்பாளோ
வாழ்க என் மாதங்கி 💞🦜🌿🙏
1 day ago (edited) | [YT] | 0
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
🪷கார்த்திகை மாத சோமவாரம்
🪷கார்த்திகை மாத பிரதோஷம்
🪷சிவ சகஸ்ரநாம அர்ச்சனை
ஆக இந்த ஆன்மீக முப்பெரும் நிகழ்வுகள்...
வரும் திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நமது மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற இருப்பதால்...
🪷 இந்த முப்பெரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்து கொண்டு ஏக இறைவன்- இறைவி அருளையும் பெற்று மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...
அபிஷேக ஆராதனை மற்றும் திருப்பிரசாதம் வழங்குதல் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் ஊழியர்களால் மெய்யன்பர்களால் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
மகிழ்வுடன்
திருக்கோவில் ஊழியர்கள்
பக்த கோடிகளுடன்
மாதங்கியின் மைந்தன் மற்றும் பதஞ்சலி சபை
2 days ago (edited) | [YT] | 12
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
வெற்றிக்கு வழிகாட்டும் தாரை வழிபாடு
===================================
நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் தாரைகள், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நிலைகளைத் தீவிரமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு தாரையும் தனித்தனி விளைவுகளைக் கொண்டது.
✨ சம்பத்து தாரை – 2, 11, 20
வாழ்க்கையில் வளமும் செழிப்பும் சேர்க்கும் சாதக ஆற்றல்.
✨ சேம தாரை – 4, 13, 22
சிக்கல்களிலிருந்து விடுவிக்கும் பாதுகாப்பு ஆற்றல்.
✨ சாதக தாரை – 6, 15, 24
வெற்றி, முன்னேற்றம், நல்ல வாய்ப்புகள் தரும் ஆற்றல்.
⚡ விபத்து தாரை – 3, 12, 21
உடல்/மனம் காயம் தரும் சக்தி. கவனமாக இருக்க வேண்டிய தாரை.
⚡ பிரத்யக்கு தாரை – 5, 14, 23
பணம்/மனம் தொடர்பான சிக்கல்கள் அல்லது அவமானம் தரும் தாரை.
⚡ வதை தாரை – 7, 16, 25
உடல் வலி, மன வலி, நீண்ட துயரம் தரக்கூடிய தாரை.
உங்களை பாதுகாக்கும் தாரை அருள்
=================================
🌼 விபத்து தாரை நபராகவோ, பொருளாகவோ அருகில் இருந்தால்....
👉 உங்கள் நட்சத்திரத்தின் சம்பத்து தாரை தெய்வ/வடிவ/சித்தர் அருள் பாதுகாப்பாக நிற்கும்.
🌼 பிரத்யக்கு தாரை சுற்றி இருந்தால்.....
👉 சேம தாரையின் தெய்வ/வடிவ/சித்தர் அருள் உங்களை தாங்கும்.
🌼 வதை தாரை அருகில் இருந்தால்....
👉 மித்ர தாரை (நண்பு தாரை) அருள் உங்களை காக்கும்.
🌼 மூன்றும்—விபத்து, பிரத்யக்கு, வதை—நெருக்கத்தில் இருந்தால்கூட....
👉 உங்கள் நட்சத்திரத்தின் சாதக தாரை தெய்வ/வடிவ/சித்தர் அருள் பாதுகாக்கும்.
🔱 தாரைகள் என்பது வெறும் ஜோதிட கணிப்பல்ல…
உங்களை வழிநடத்தும் ஆற்றல்களின் பரிமாற்றம்.
உங்கள் தாரைகளை அறிந்தால், உங்கள் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
ஜோதிடர்
மணிகண்டன் பாரதிதாசன்
2 days ago | [YT] | 2
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்
அனைவருக்கும் செல்வம் உண்டாகட்டும்
அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்
4 days ago | [YT] | 3
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
#அனுசூயா_தேவி_சமேத_அத்திரி_மகரிஷி
( இவர்கள்தான் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் தாய் தந்தை)
ஏ ஐ மூலமாக முழு படம் கிடைத்தது இன்று
6 days ago | [YT] | 10
View 3 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
ஞான அரண்யம் என அழைக்கப்படும் சுசீந்திரம் -
பெண் சாபத்தை நீக்கும் ஸ்தலம்.
அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும்
ஞான ரண்யம் எனும் பழம்பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார்.
அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.
தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது.
அகலிகையால் ஏற்பட்ட
தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது.
சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என அழைக்கிறார்கள். இந்திர விநாயகர் மற்றும் கால பைரவரின் உருவங்கள் காணப்படுகிறது.
எல்லாக் கோயில்களிலும் இருக்கும் விநாயகர், இந்த சுசீந்திரம் கோயிலில் பெண் உருவாகிய “விக்கினேசுவரி” (அ) கணேஷினி என்று இருப்பதன் மூலம் இந்த ஸ்தலம் பெண் சாபங்களை நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
1 week ago | [YT] | 6
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
மீண்டும் ஒரு மேகதூதம்
உனக்காக நான் பாட வேண்டும்...
மேகங்களை அனுப்பி தூது சொல்லும் சாத்தியம் மீண்டும் கை கூட வேண்டும்
இடையில் தடைகள் இல்லாமல்
மன அஞ்சல் உன்னிடம் சேர வேண்டும்
காலம் கருணை கொண்டதால்
கவிதை உன் முகவரி அறிந்தேன் 🙏
அத்திங்களில் பிழையின்றி
என்னை உன்னிடம் அறிவித்தேன் 🌿🌿
தசம் இரண்டு ஆண்டுகள் தாண்டி
தடாதகை உணர்த்திய அதிசயம்
விதி வழியே இயல்பாய் செல்ல
என்னை இன்னும் பணிக்குமோ 🪷🪷🪷
துயர் துடைக்க உடன் நின்று உதவிடும்
தோழமையாய் இருக்க வரம் கேட்டேன்
திருவருளால் காட்டியவள் யாரோ
உன் புரிதலுக்கு பெரிதும் உவப்பாள்
காத்திருக்கிறேன் அதிசயங்களை காண
#kavithaitamil #kavithai #tamilkavithai #மாதங்கியின்_மைந்தன்
1 week ago | [YT] | 7
View 1 reply
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அந்தி மாலையில்
அன்புத்தலைவன்
புகழ் பாட முந்திக் கொண்டது
மல்லியும் முல்லையும் 💞💞💞💞
சரித்திரத்தில்
பொறித்து வைக்கும் சம்பங்கியின் அழகியல்
கோர்வையும்🪷🪷🪷
காந்தனும் வனிதையும் கண்ட
கவினுறும் இணைப்பைப் போல்
காட்சிக்கு அழகாகும் 🙏
அறுவகை மலர்கள் சூழ
ஆதிசேஷன் உவகையும்
மனத்துள்ளே
மௌன இசையோடு
பெரும் நடனம் 🐍🐍🐍
பொன்னம்பலத்தை
உள்ளத்துள்ளே கண்டுவிட்ட
பெருமிதத்தை
தந்துவிட்டதோ
புதன் இரவு ☀️☀️☀️
பொன்னவன் குருவின் அருளை
புகழ்ந்து பாடிட
புதுமை வார்த்தைகளை
புகுத்துவிக்கும்🏵️🏵️🏵️
கன்னியில்
உச்சம் பெற்ற
கவியின் நண்பன்
நெஞ்சகத்தில் என்றும்
இனியதாய் மலர்வான்.. 🌿🌿🌿.
காற்றின் கணிதத்தை
அறிந்த உள்ளம்
காலத்தின் கணிதத்தையும்
அறிய வைத்த உன் பெருமிதம்...🌎🌎
சங்கடங்கள் விலகி
சபையோர் உள்ளம் நிறைந்து
சரித்திர இயக்கமாய்
சமத்துவ சத்குருவின்
சத்சங்கத்தை உயர்த்தும் 🌿🌿🌿
#பதஞ்சலி
1 week ago | [YT] | 15
View 0 replies
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அன்னாபிஷேக தரிசனம் 🌿
அன்னம் என்னும் அன்னையோடு உன் அழகிய மேனி பொருந்தி நிற்கும் அற்புதம் 🪷
ஒலித்திருக்கும் மெல்லிசையின் பிண்ணிணி கோர்வைக்காக
வார்த்தைகள் தானே உதித்திடும் 💞
பரிதியின் நீசமும்
பாசத் தலைவனை பராசக்தி முற்றுகையிட
நேசமுடன் இனிதே முடிவுறும்🪷
அன்பினால் அடியவர் உலகோடு எந்நாளும் பொருந்தி நிற்கும்
எங்கள் இனிய ஈசனே ❤️
பண்புடைத் தலைவன் பாட்டுடைய நாயகன்
எண்ணியவர் இதயம் வெல்லும் வேந்தன்
எங்கள் பதஞ்சலியார்...
முழுமதி முகத்தை
இனிதுறும்
மந்திரக் கவிதைகள் பாடி
மகிழ்ச்சி வெள்ளம் கண்ட பின்னே 🪷
மக்கள் தலைவனே எங்கள் மகேசா
இனியவர்
இடர்களையும் அற்புதத் திருமேனியை
இரவு நிலவு ஒளியில்
இனிய தமிழ் கொண்டு துதி பாடி
கலங்கரை விளக்கம் உன் முகம் கண்டு தெளிவோம்
திருமேனி காண்போம் தெவிட்டாத இன்பம் கொள்வோம்
ஆக்கம்
#மாதங்கியின்_மைந்தன்
சிவ.உதயகுமார்
1 week ago (edited) | [YT] | 13
View 1 reply
Load more