Prima Facie - Tamil

Law
Legal
Act
rules
Regulations
Criminal
Civil
BNS
BNSS
BSA
Contract Act
Transfer of property
Divorce
property
Money
Matrimonial
Inheritance
Bail
Surety
Trial
Judgement
Decree
Police
Court
Judicial
Law College
Labour law
International law
Administration law
IPC
CrPC


Prima Facie - Tamil

பல ஜோடிகளுக்கு, காதல் செய்த காலங்கள் சுகமானதாகவும், அவர்களுக்குள் திருமணம் செய்து கொண்ட பின்னர் கசப்பாகவும் உணர காரணம் மிக எளிதானது...

காதல் என்பது தனிநபர்களுக்கு இடையேயான இசைவு, திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கு இடையேயான ஒப்பந்தம்.

ஒப்பந்தம் என்பது உரிமைகளை வழங்குவது போலவே, கடமைகளையும் சாட்டுகிறது.

இக்கால இணையர்களுக்கு உரிமைகள் வேண்டும், ஆனால் கடமைகளை செய்வதில் அலட்சியம், சோம்பேறித்தனம்.

உங்களது சிறிய சிறிய சோம்பேறித்தனத்தின் பரிசு "விவாகரத்து" என்பதாக கூட இருக்கலாம்.

அன்புடன்
அட்வகேட்.அகமது
8124499188.

3 weeks ago | [YT] | 1

Prima Facie - Tamil

Dear Subscribers...

Your "IntellTimes" Channel has been renamed as "Prima facie - Tamil".

Thank you for ur support.

Regards
Ahamad.

2 months ago | [YT] | 1

Prima Facie - Tamil

திருநெல்வேலியில் இருந்து 900கிமீ தொலைவில் இருக்கும் கர்நாடக மாநிலத்தின், ரணிபென்னூர் ஊரில் உள்ள நீதிமன்றம்.

3 months ago | [YT] | 0

Prima Facie - Tamil

Updation

4 months ago | [YT] | 0

Prima Facie - Tamil

உறுதியான மனநிலையில் தேடுங்கள், கண்டிப்பாக கிடைக்கும்..!

ஒரு மாதத்திற்கு முன்பாக நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக ஒரு உத்தரவு பெற்றிருந்தேன். அந்த உத்தரவின் நகலையும் கொடுத்திருந்தனர்.

உத்தரவின் படி அந்த நபர் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் திகதியும் காவல்நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும்.

மாதம் முழுவதும் நன்றாக தூங்கிவிட்டு, நேற்று திடீரென கண்விழித்து கொண்ட அந்த நபர் திடீரென வந்து உத்தரவு நகல் கேட்டு நிற்கிறார்.

அந்த உத்தரவு நகல் இருந்தால் தான், பையவுள்ள நாளைக்கு கையெழுத்து போட முடியும், கையெழுத்து போடலனா? ஆள தூக்கிடுவாங்க. முன்பே கேட்டு விட்டு வந்திருந்தாலாவது, அதை தேடி எடுத்து வைத்திருக்கலாம்.

ஒப்பீட்டளவில், நமது தினசரி பணியில் அது ஒரு சிறிய உத்தரவு தான் என்பதால்
எனக்கு அந்த உத்தரவு நகல் வாங்கியதே ஞாபகத்தில் இல்லை, பின்பு அது எங்கிருக்கிறது என்பது எப்படி ஞாபகம் இருக்கும்.

ஆனால், உத்தரவு நகல் வேண்டும் என அவர் கேட்ட உடனே...

எனது மனதில் வழக்கறிஞர் கவுன், கோட் ஆகியவற்றை வைத்திருக்கும் "பச்சை" கலர் பேக் வந்து போனது.

ஆதலால், ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில், அவரை காத்திருக்க சொல்லி விட்டு, நேரே நீதிமன்றத்தில் இருக்கும் அட்வகேட் சேம்பர் சென்று அந்த பச்சை கலர் பேக்கில் இருந்த அத்தனை காகிதங்களையும் ஆராய்ச்சி செய்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருடைய உத்தரவு நகல் அதில் இல்லை...

பீஸ் வேறு வாங்கியாகி விட்டது, உத்தரவு நகல் கொடுக்காவிட்டால், அப்படி ஒரு உத்தரவினை வாங்காமல் ஏமாற்றி விட்டதாக அல்லவா இந்த உலகம் பேசிவிடும்...

நமது கிளையண்ட்கள் அப்படி தானே?! அவர்களுக்காக விடிய விடிய உட்கார்ந்து சட்ட புத்தகங்களையும், நீதிமன்ற ஆணைகளையும் படித்து விட்டு வந்து வழக்கு நடத்தினாலும், சாதகமான உத்தரவுகளை வாங்கி தந்தாலும், நம்மை முழுமையாக நம்பவே மாட்டார்கள்...

அவர்களை பொறுத்தவரை பழைய டி.ராஜேந்தர் படங்களில் வருவது போல நீதிமன்றத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும், எதிர்தரப்பு வழக்கறிஞர் உடன் கத்தி ஆர்பாட்டம் செய்து நீதிமன்றத்தில் கட்டி உருள‌ வேண்டும்... அப்போது தான் "நல்ல வழக்கறிஞர்" என கூறுவார்கள்.

சரி நம்ம கதைக்கு வருவோம்...

அந்த பச்சை கலர் பேக்கில் உத்தரவு நகல் கிடைக்கவில்லை. உடனே என்னிடம் இருந்த லேப்டாப் பேக்கில் இருக்கலாம் என நினைத்து, திரும்பவும் அலுவலகம் வந்து, அந்த லேப்டாப் பேக்கை கொட்டி கவுத்து தேடினேன், பலன் இல்லை.

தலை கிறுகிறு என வந்தது... சரி, இதுக்கு மேல சரிப்படாது, முதல்ல சாப்பிடுவோம் அப்படினு தோணுச்சு...

அந்த பயல்ல, அப்படியே டீல்ல விட்டுட்டு, சோத்து டப்பாவ தொறந்தேன்....

புளி குழம்பு, அவிச்ச முட்டை, அதோட பீன்ஸ் பொறியல்...

ஆஹா, அருமை...

"உலகை மற, சோற்றை நினை"
அப்படினு எனக்கு நானே சொல்லிட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

பயவுள்ள விட்டேனா பார்? அப்படினு போன்ல வந்திட்டான்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணும் இல்ல, சொல்லிடுவோம் அப்படினு...

"தம்பி, நீங்க ஊருக்கு போங்க, வீட்டுக்கு போயி ஆர்டர் காபிய எடுத்து நான் வாட்சாப்ல அனுப்பி வைக்கேன்" அப்டினு பொதுவா சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

அப்படியே சாப்பிட்டுட்டே இருக்கச்ச, "பளீர்னு" ஒரு பல்ப் எரிய ஆரம்பிச்சுச்சு...

"அந்த பச்சை கலர் பேக் ஃபுல்லா தேடினுயே? அதுல இருந்த அட்வகேட் கோட்டோட பாக்கெட்ல செக் பண்ணுனியா? அப்படினு ஒரு கேள்வி...

கை கழுவிட்டு, குடுகுடுனு ஓடிப்போயி... கோட் பாக்கெட்ட பாத்தா, உத்தரவு நகல் பத்தரமா இருந்துச்சு..!

எனக்கு அப்படியே என்ன பண்றது, சொல்றதுனே தெரியல...

அவன் என்னுட்ட ஆர்டர் காபி கேட்ட உடனே இந்த பச்சை கலர் பேக் ஞாபகம் வந்தது ஒரு தெளிவான செய்தி அப்படினு புரிஞ்சு கிட்டேன்.

உங்களுக்கும் இது போலவே, பல சங்கதிகள் உள்ளுணர்வின் வாயிலாக கூறப்பட்டு கொண்டு தான் இருக்கும்.

உங்கள் மனதில் எழும் எண்ணங்களை விடாமல் தணிக்கை செய்து கொண்டே இருங்கள்.

உங்கள் மனதின் செய்திகளை ஒரு போதும் உதாசீனம் செய்யாதீர்கள்.

வெற்றி நமதே..!

அன்புடன்
அட்வகேட்.அகமது
8124499188

6 months ago (edited) | [YT] | 2

Prima Facie - Tamil

திருமணத்திற்காக வரன் பார்த்து கொண்டிருக்கிறீர்களா?

ஒரு வழக்கறிஞராக உங்களுக்கான எனது செய்தி...

1. நற்குணங்கள் உள்ள பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்.

2. தானும் நேர்வழியில் நின்று உன்னையும் நேர்வழியில் செல்ல வலியுறுத்தும்‌ பெண்ணை தவற விட்டுவிடாதே.

3. அவளுடைய அழகு, அறிவு, படிப்பு, பாரம்பரியம், செல்வ செழிப்பு ஆகிய விடயங்களில் உனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பெண்ணையே தேர்ந்தெடு.

4. இந்த விடயங்களில் உனது எதிர்பார்ப்புகளை அந்த பெண் பூர்த்தி செய்கிறவளாக இருப்பதை திருமணத்திற்கு முன்பாக நீயே நேரடியாக உறுதி செய்து கொள். உனது எதிர்பார்ப்பு உண்மையாக இருக்குமானால் அதில் சமரசம் செய்யாதே.

5. அந்த பெண்ணின் விவகாரங்களை கவனித்து வரும் அவளது தகப்பனார் அல்லது பொறுப்பாளரிடம் முறையாக சென்று உனது விருப்பத்தை தெரிவித்து பெண் கேள், நேரடியாக அந்த பெண்ணை அணுகாதே. இதனால் உனது கண்ணியம் பாதுகாக்கப்படும்.

6. பெண் பார்க்கும் விடயத்தில் உனது தாயாரை நம்பாதே, அவள் தனக்கு ஏற்றாற்போல மருமகளை தான்‌ தேடுவாள். தகப்பனாரை நம்பாதே அவர் உனது தாயார் சொல்வதை தான் கூறுவார், அக்கா தங்கை கூறுவதை கேட்காதே அவர்கள் தங்களுக்கு ஏற்ற பெண்ணை தான் பரிந்துரை செய்வார்கள், அண்ணன் பேச்சை கேட்காதே தன் மனைவியை விட தகுதி குறைவான பெண்ணையே அவன் உனக்கு நாடுவான். பெண் பார்க்க உனது நண்பனை அழைத்து செல்லாதே, அது உனக்கு அழிவாக முடியலாம்.

7. உனக்கான பெண்ணை நீயே முடிவு செய், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்று கொள்.

8. பெண்ணின் புகைப்படம், வீடியோக்களை நம்பாதே.

9. பெண்ணை பார்த்த உடன் சம்மதம் சொல்லி விடாதே. குறைந்தது ஒரு வாரம் எடுத்து கொள். இவள் எந்த வகையில் எனக்கு பொருத்தமானவள் எனும் கேள்வியை மீண்டும் மீண்டும் உனக்குள் கேட்டு நீயே முடிவு செய்.

10. பெண்ணின் முகத்தை உற்று கவனி பெரும்பாலும் பெண்ணின் தாயாருடைய முகம் அவளின்‌ முகத்தில் ஒளிந்திருப்பதை காணலாம். குழந்தைகள் பெற்றதன் பின்னர் அவளது தாயாரின் தோற்றத்திற்கு வெகுவிரைவில் அவள்‌ வந்துவிடுவாள்‌ என்பதை கவனித்தில் வைத்து கொள். பருவத்தில் பன்றிக்குட்டி கூட அழகாக தான் தெரியும். அவளது அழகு நிரந்தரம் அல்ல.

11. திருமணத்திற்கு முன்பாக அவளது தாயாரின் குணத்தை விசாரித்து கொள். தாயை போல பிள்ளை, நூலை போல சேலை..! என்பது முதுமொழி.

12. திருமணத்திற்கு பின்னர் உங்கள் மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிப்பீர்களா? இல்லையா? என தெளிவாக கூறி விடுங்கள்.

13. திருமணத்திற்கு பின்னர் கூட்டு குடும்ப வாழ்க்கை அல்லது வெளியூர் வாழ்க்கை எனில் அதையும் முன்கூட்டியே பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்று கொள்ளுங்கள்.

14. வெளிநாட்டில் பணிபுரிபவர் எனில் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் உங்கள் மனைவி, யார் வீட்டில் இருக்க வேண்டும், அந்த சமயத்தில் அவருடைய பொறுப்புகள் என்ன? நீங்கள் அவருக்கு நேரடியாக பணம் அனுப்புவீர்களா? மாட்டீர்களா? இதையெல்லாம் பேசி விடுங்கள்.

15. இவ்வளவும் செய்தாலும், உன் மனைவி விடயத்தில் சில ஏமாற்றங்கள் இருக்கதான்‌ செய்யும், அந்த குறைபாடுகளுடன் அவளை ஏற்று கொள்வது தான் உங்களிடையேயான காதலை உறுதி செய்யும் என்பதை புரிந்து கொள்.

16. உனது வருமானம் மற்றும் வாழ்க்கை முறை (life style) பற்றிய உண்மையையும், பிற்காலத்தில் அதில் எந்த அளவு தங்களின் வளர்ச்சி சாத்தியம் என்பதையும் கூறி விடுங்கள், இதனால் வீண் எதிர்பார்ப்புகளை தவிர்க்கலாம்.

17. இறுதியாக ஆனால் மிக முக்கியமாக உன்னை மணம் செய்து கொள்ள அந்த பெண்ணின் சம்மதத்தினை நீயே நேரடியாக உறுதி செய், உனக்கு உன்‌ மனைவி விவகாரத்தில் எந்த அளவு எதிர்பார்ப்புகள் உள்ளனவோ அதே போல அவளுக்கும் தன் கணவன் மீதான எதிர்பார்ப்புகளும் உரிமைகளும் உண்டு, அதை பூர்த்தி செய்யும் வகையில் நீ இருக்கிறாயா என உன்னை நீயே பரிசோதித்து கொள். அதனால் உனக்கு அமைதி அளிக்க கூடிய மனைவியாக அவள் இருப்பாள். வாழ்த்துகள்..!

அன்புடன்
அட்வகேட்.அகமது
திருநெல்வேலி
8124499188

6 months ago (edited) | [YT] | 1

Prima Facie - Tamil

நியூ இயர் ஸ்பெஷல் கதை.

ஒரு ஊர்ல ஒரு பக்தன் இருந்தானாம்...

சாதாரண பக்தன் கிடையாது, பக்தினா பக்தி கண்ணாபின்னானு பக்தி.

பத்து வருசமா கடவுள்கிட்ட அவனோட ஒரே கோரிக்கை "அவனுக்கு லாட்டரில ஒரு கோடி ரூபா" பணம் விழனும் அப்டின்றது தான்

இப்படியே பத்து வருசம் போய்டுச்சி,

பதினோறாவது வருச நியூ இயர் அன்னைக்கு அவன் கடவுள்ட்ட
"கடவுளே கடவுளே இந்த வருசமாவது லாட்டரில எனக்கு அந்த ஒரு கோடி விழனும்" அப்படினு ரொம்ப சின்சியரா வேண்டிகிட்டான்.

ஆனா, கடவுள் அவனோட வேண்டுதல்ல அப்ரூவ் பண்ணாம அப்டியே வச்சிருந்தாரு.

அத பாத்துட்டே இருந்த ஒரு தேவதை கடவுள்ட்ட போய்...

அனைத்தும் ஆகி
அருளாய் இருப்பவனே, அந்த பக்தனின் வேண்டுதல் 10 வருடமா பென்டிங்ல இருக்கே, ஏன் கடவுளே? அப்டினு அவனுக்கு ரெக்கமன்ட் பண்ணிச்சு.

கடவுள் அந்த தேவதையை பார்த்து கூறினார்...
"இந்த பத்து வருடத்தில் அவன் ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி இருந்தா கூட அந்த ஒரு கோடிய கொடுத்துருப்பேன்"

நீதி: உங்கள் கனவுகள் மீது நீங்களாக நடவடிக்கை எடுக்கா விட்டால், கடவுள் கூட ஹெல்ப் பண்ணா மாட்டார்.

8 months ago | [YT] | 0

Prima Facie - Tamil

இன்று நிகழ்வொன்றில் பேசிய போது...

1 year ago | [YT] | 1

Prima Facie - Tamil

2024
புதிய ஆண்டு
புதிய துவக்கம்
புதிய கனவுகள்
அத்துடன் நேர்மை.

ஆரம்பத்தில் எல்லோருமே நேர்மையாளர்கள் தான்.

ஆனால் அந்த நேர்மையான வாழ்க்கை சுடும் போது, எதிர்பார்த்த பணம் வராத போது, கனவுகள் நிகழ தாமதமாகும் போது, கொஞ்சம் கூட யோசிக்காமல் நேர்மையின் கழுத்தில் கத்தியை வைத்துவிடுகிறோம். பணத்தை, புகழை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள்...

நேர்மையாக இருந்தால் புகழ் மழையில் பணம் கொட்டும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று இருந்தால் இந்த உலகில் உள்ள எந்த மனிதன் தான் நேர்மையை தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?

நேர்மையாக இருப்பது எளிதல்ல, சவாலானது.

நேர்மையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும்,

மிகுந்த தைரியமும் உறுதியான மனமும் வேண்டும், கோழைகளுக்கு அது சாத்தியமில்லை.

அதனால் தான் அவர்கள் என்றைக்கும் "ஹீரோ" க்களாக இருக்கிறார்கள்.

மாறாக நிறைய பணம் இருந்தாலும், பல வண்ண கார்களில் வலம் வந்தாலும் கொடூர மனம் கொண்ட ஏமாற்றுகாரர்கள் எப்போதும் இந்த சமூகத்தின் "வில்லன்" களாக தான் கவனிக்க படுகிறார்கள்.

வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நேர்மையாக இருப்பதற்கான அடிப்படை தேவை.

மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பதும், அவர்கள் படும் துன்பங்களை பார்த்து இன்பம் கொள்வதையும், பேறுகளை கண்டு பொறாமை கொள்வதையும் குறித்து நான் இங்கு நான் பேசவில்லை, அது ஒரு குரூர மனநிலை, அதனை ஆதரிக்கும் பதிவு அல்ல இது.

நமது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வேடிக்கை பார்க்க கற்று கொள்ள வேண்டும்.

அதெப்படி...

என் வாழ்க்கை அல்லவா?
நான் தானே ஓட வேண்டும், வேடிக்கை பார்ப்பதற்காகவா வாழ்க்கை என உங்கள் மூளையில் பல்பு எரியலாம்.

உண்மை தான்.

உங்கள் வாழ்க்கை தான், நீங்கள் தான் ஓட வேண்டும், உழைக்க வேண்டும், விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கூறுவது "பாசிட்டிவ் சைடு".

நான் அதனுடைய "நெகடிவ் சைடு" பற்றி பேசுகிறேன்.

நம்முடைய செயல்கள் வெற்றியடைந்துவிட்டால், குதூகலிக்கிறோம், வானத்தில் பறக்கிறோம்.

தோல்வி அடைந்துவிட்டால்.... ?!

யார் தலையில் கட்டலாம் என ஆள் தேடுகிறோம்.அந்த தோல்வியை மறைக்க அல்லது இழப்பில் இருந்து மீண்டு வர, நம்மை வெற்றியாளனாக இந்த உலகின் முன்பாக நிலைநிறுத்தி கொள்ள எந்த எல்லைக்கும் செல்கிறோம்.

தொழிலில், அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள பணத்தை நம்முடைய பாக்கெட்டிற்கு கொண்டு வருவதை பெரிய வெற்றியாக நினைக்கிறோம்.
பொய்களை அள்ளி விடுவது, தன்னால் செய்ய முடியாது என தெரிந்தும் கம்மிட் செய்வது என பலவற்றை செய்கிறோம். அதனை திறமை என பீற்றி கொள்கிறோம்.

ஏன்?

ஏனென்றால், வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பது மட்டும் தான் என நமது பொதுபுத்தியில் பதிந்து வைத்திருக்கிறோம். என்ன விலை கொடுத்தும் வெற்றி பெற துடிக்கிறோம்.

தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கிறோம்.

தோல்வியில் இருந்து பாடங்களை பெற்று மீண்டு வருவோம் என நேர்மறையாக சிந்திப்பதில்லை. குறுக்கு வழிகளை தேடி ஓடுகிறோம்.

இவை எல்லாமே வேடிக்கை பார்க்கும் மனதை வளர்த்து கொள்ளாததன் விளைவு தான்.

ஒரு தோல்வி ஏற்பட்டுவிட்டதா? அதனை வேடிக்கை பாருங்கள். அதனை உங்களோடு இணைத்து கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நில்லுங்கள்.

நிதானம் கொள்ளுங்கள்.

பல நேரங்களில் நாம் அடையும் தோல்வி நமக்கு தகுதிக்கு ஒப்பாத விடயங்களை நம்மைவிட்டும் விலக்க கூடியதாக இருக்கலாம்.

அதாவது, ஒரு சிறிய விடயத்தில் ஏற்பட்ட அந்த தோல்வியே உங்களின் பிரமாண்டமான எதிர்கால வெற்றிக்குரிய விடயங்களுக்கு உங்களை இட்டு செல்லும் காரணியாக இருக்கலாம்.

தோல்வியை ஏற்று கொண்டு அடுத்து என்ன செய்யலாம்? என சிந்தியுங்கள்.

மாறாக, தோல்வியை நினைத்து நம்மை நாமே அழித்து கொள்வதும், அந்த தோல்வியை அடுத்தவன் தலையில் கட்டி அவனை அழிப்பதும், அதற்காக உங்களின் நேர்மையை பழி கொடுத்து உங்களுக்குள் இருக்கும் ஹீரோவை கொலை செய்வதும் வேண்டாம்..!

மனதில் சலனமற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேடிக்கை பார்க்க கற்று கொள்ளுங்கள்.

நீங்கள் துரத்திய வெற்றி உங்களை தேடி வந்தடையும்.


2024
புதிய ஆண்டு அழைக்கிறது

நமக்கு ஒரு புதிய துவக்கம் காத்திருக்கிறது

பெரிய பெரிய கனவுகள் செய்வோம்

நேர்மை எனும் சிறகுகள் பூட்டி வானில் பறப்போம்.

புதிய புதிய உச்சங்கள் தொடுவோம்..!

எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன்
M. அகமது இஸ்மாயீல்.BSc.MBA.LLB
அட்வகேட்- திருநெல்வேலி
8124499188

1 year ago (edited) | [YT] | 1

Prima Facie - Tamil

நீதித்துறையில் டிஜிட்டலிசம் என்பது மனித தன்மையை நீக்கும் வன்முறை.

அந்த மொத்த குடும்பமும் அன்று திருநெல்வேலி நீதிமன்ற வாசலின் முன்பாக காத்து கிடந்தது.

அவனுடைய மனைவி, 5 வயது மகன், தந்தை, தாய், அண்டை வீட்டார் என 12 பேர்.

அவனை ஒரு பொய் வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்திருந்தது போலீஸ்.

15 நாட்களுக்கு ஒருமுறை, விசாரணை கைதிகளை கொண்டு வந்து மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர் படுத்துவது கட்டாயம்.

அவனை சிறையில் அடைத்து 15 நாட்கள் ஆகிவிட்டப்படியால், அவனை நீதிமன்றம் அழைத்து வருவார்கள், கண்ணால் கண்டுவிடலாம் எனும் ஆசையில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வாசலில் காலை 10 மணியில் இருந்தே தவம் இருக்க தொடங்கினர் அந்த குடும்பத்தினர்.

நேரம் சென்று கொண்டே இருந்தது. 10.30 மணி, மாஜிஸ்ட்ரேட் வந்தார், நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கின. ஆனால் அவன் அழைத்து வரப்பட வில்லை.

அவன் மனைவி அந்த வக்கீலின் முகத்தையும் நீதிமன்ற நுழைவாயிலையும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தாள்.

நேரம் 11 மணி ஆகிவிட்டது. அந்த சிறுவன் தனது தந்தையை எங்கே, எப்போது வருவார் என தனது தாயிடமும் தாத்தாவிடமும் மாறி மாறி கேட்டு கொண்டிருந்தான்.

அவள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டாள். மெதுவாக நீதிமன்றத்தின் வாசலில் நுழைந்தும் நுழையாமலும் நின்று கொண்டு அவர்களுடைய வக்கீலை தேடினாள்.

ஒரு புள்ளியில், அவளது பார்வையும், வக்கீலின் பார்வையும் சந்தித்து கொண்டன. அவள் எதும் கேட்கவில்லை, அவர் அந்த பார்வையை படித்து விட்டு, அவசரமாக வெளியே வந்தார்

"எப்படியும் 12 மணி ஆயிடும், கண்டிப்பா கூட்டிட்டு வருவாங்க, வெயிட் பண்ணுங்க"

அவள் காதில் சொல்லிவிட்டு மீண்டும் நீதிமன்றத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கருப்பு கவுன்களுக்கு மத்தியில் தொலைந்து போனார்.

கைது செய்யப்பட்ட பிறகு, 2வது நாள் ஒரே ஒருமுறை தனது மாமனாருடன் சென்று அவனை சிறையில் சந்தித்தாள். பிறகு மாமனார் மட்டும் சிறைச்சாலை சென்று மகனை பார்த்து வந்து கதை சொல்வார்.

அவள் அந்த நீதிமன்ற நுழைவாயிலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். பக்கத்தில் தனது மகன் பேசுவதையோ கேட்பதையோ கவனிக்க அவள் மனம் மறுத்துவிட்டது.

மனம், சிந்தனை, எண்ணம் எல்லாவற்றிலும் தனது கணவனையே ஏந்தி கொண்டு நின்றிருந்தாள்.

12 மணி ஆகிவிட்டது, போலீஸ்காரர்கள் கையில் நீண்ட துப்பாக்கியை வைத்து கொண்டு கைதிகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அவள் பார்வை, அந்த நுழைவுவாயிலில் நிலைகுத்தி நின்று கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

1மணி. இல்லை, அவன் வரவில்லை. அதற்குள் தனது மற்ற நீதிமன்ற அலுவல்களை முடித்துவிட்டு அந்த வக்கீல் வந்தார்.

இவள் ஓடோடி போய் அவர் முன்னால் நின்றாள். இப்போதும் அவள் ஒரு வார்த்தை பேசவில்லை.

"ராஜாவை கூட்டிட்டு வரலயாம், வீடியோ கான்பரன்சிங்ல அப்பியரன்ஸ் காட்டிட்டாங்கலாம்"

என சொல்லிவிட்டு தலையை கவிழ்ந்து கொண்டார்.

------------------------------

மனித வரலாறு, 4வது தொழில் புரட்சியை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

AI எனப்படும் இயந்திர-சிந்தனை (Artificial intelligence) இந்த நான்காவது தொழில் புரட்சியின் மூலமாகவும் (Core) அதே சமயத்தில் இரண்டு கால் மனிதர்களுக்கான உலகினை நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓட செய்வதாகவும் உள்ளது. இதனை டிஜிட்டலைசிங் என்று கூறுகிறார்கள்.

அறிவியல், தொழில்நுட்பம், வேகம், வளர்ச்சி ஆகியவை மனிதனை மேம்படுத்தவில்லை என்று கூறினால் நிச்சயமாக அது ஏற்று கொள்ளப்பட கூடியது கிடையாது.

ஆனால் அதே சமயத்தில் பாகுபாடற்று எல்லா துறைகளிலும் வேகம் வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகும். அதிலும் குறிப்பாக நீதித்துறை (Judiciary).

நீதித்துறைக்கு வெளியில் இருப்பவர்கள் இந்திய நீதி பரிபாலன முறை கேலி, கிண்டல் செய்து, வழக்குகள் மிக தாமதமாக தீர்க்கப்படுவதாக குறைப்பட்டு கொள்கின்றனர்.

ஆனால், இந்திய சமூகத்தையும் அதன் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளையும் அவை சமூகத்திலும் வழக்குகளை தீர்ப்பதிலும் செலுத்தும் தாக்கத்தையும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இந்த தேசத்திற்கான ideal system இது தான் புரிந்து கொள்ள முடியும்.

நீதித்துறையில் முன்பு E-Court வந்தது, நல்ல முயற்சி, வழக்கறிஞர்களுக்கு பல விதங்களிலும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கை தாங்களே Track செய்து, நீதிமன்றத்தில் நடப்பதை அறிந்து கொள்ளவும் உதவ கூடியதாக இருக்கிறது.

தற்போது, E-filing முறையை நடைமுறைப்படுத்த அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கிரிமினல் வழக்குகள், செக் மோசடி மற்றும் விபத்து இழப்பீடு வழக்குகளில் இது நடைமுறைக்கும் வந்துவிட்டது.

E-filing ஆரம்பத்தில் சிரமமான ஒன்றாக இருந்தாலும், சிறிது காலத்திற்கு பின்பாக வழக்கறிஞர்களின் வேலையை எளிமைப்படுத்த கூடியதாகவும், Processing time எனப்படும் கையாளும் கால நேரத்தையும் வேலையையும் குறைத்து துரிதமான நேரத்தில் வழக்குகளை கையாளவும் வழிவகுக்கும்.

இது மாதிரியான டிஜிட்டலைசிங் நடவடிக்கைகள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளித்தாலும் கைதிகளை சிறையில் இருந்தே வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர் படுத்துவது என்பது டிஜிட்டலைசிங் உடைய ஏற்று கொள்ளமுடியாத கொடூர முகம் ஆகும்.

கைதிகளும் மனிதர்கள் தான் என்பதையும், மனிதர்களின் தீய செயலைதான் வெறுக்க வேண்டுமே தவிர அந்த மனிதனையே வெறுத்து ஒதுக்குவது மனித சமூகத்திற்கே கேடாக அமையும் என்பதையும் நாம் புரிய வேண்டும்.

ஒரு கைதியை, நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து மாஜிஸ்ட்ரேட் முன்பு காட்டுவது என்பது மற்றவர்களுக்கு ஒரு சாதாரண சட்ட நடைமுறையாக தான் தெரியும்.

ஆனால், பொய் வழக்கில் சிறை சென்ற ஒருவனுக்கும், அவனுடைய குடும்பத்தினருக்கும் தான் தெரியும் அந்த சில மணி துளிகள் அவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் அளிக்கின்றன என்று.

வெளி உலகை காண அனுமதி மறுக்கப்பட்டு தொடர்ந்து நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருக்க கட்டாயபபடுத்த பட்ட ஒருவனுக்கு வெளி உலகை காணும் ஒரே ஒரு வாய்ப்பு இது ஒன்று தான்.

அந்த சமயத்தில் அவன் தனது குடும்பத்தை பார்ப்பதும், வெளி உலக மக்களை பார்ப்பதும் அவனை பெரிதும் ஆசுவாசப்படுத்தும் உளவியல் காரணிகள் ஆகும்.

ஆனால் இன்றைய டிஜிட்டலைசிங் தொழில்நுட்பம், எல்லாவற்றையும் இலகுவாக்குவதாக கூறி கொண்டு இதிலும் வீடியோ கான்பரன்சிங் முறையை கொண்டு வந்திருப்பது உள்ளப்படியே நீதித்துறையை மனித உணர்வுகளற்ற இயந்திர தனமான நீதி பரிபாலனம் செய்யும் நிலைக்கு இட்டு சென்றுவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கைதியின் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில், கைதியே கேட்டால் ஒழிய கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கூடாது.

சிறுசிறு உணர்வுகளால் ஆனவன்தான் மனிதன். மனிதம் போற்றுவோம். மனித உரிமைகளை பாதுகாப்போம்.

சிந்தனையும் எழுத்தும்
மு.அகமது இஸ்மாயீல்.BSc.MBA.LLB
அட்வகேட்
திருநெல்வேலி.
8124499188

1 year ago (edited) | [YT] | 3