வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது! =============================================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை! ===============================================
வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், அதில் இப்போது உயிரோடுள்ள 215 அரசு ஊழியர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டித்திருக்கிறது.
இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள் கொடுக்கவில்லை. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு அவர்கள் 2011 செப்டம்பர் 29-ஆம் நாள் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் - அலுவலர்கள் 215 பேர்க்குக் குற்றவாளிகள் என்று தண்டனை கொடுத்தார். இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முழுமையாக விசாரித்து, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களை முழுமையாக வாதிட அனுமதித்து, வாச்சாத்தி கிராமத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்று நேரில் கள ஆய்வு செய்து. மாவட்ட முதன்மை நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார். அவர் புதிதாகத் தண்டனை கொடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி இடையே கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமம் வாச்சாத்தி. அம்மலைத் தொடரில் நிறைய சந்தன மரங்கள் உண்டு. அச்சந்தன மரங்களை வாச்சாத்தி மக்கள் திருட்டுத்தனமாக வெட்டித் தங்கள் வீடுகளில் வைத்துப் பின்னர் விற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகாரிகளால் கூறப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனுக்காக இவ்வாறு திருடுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.
20.6.1992 அன்று வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் வாச்சாத்தி கிராமத்தை முற்றுகையிட்டு, சோதனை என்ற பெயரில் வேட்டை யாடினர். 90 பெண்கள் உட்பட 133 பேரைக் கைது செய்தனர். அம்மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். மலைவாழ் பழங்குடிப் பெண்கள் 18 பேரை பாலியல் வன்முறை செய்தனர். அவர்களின் வீடுகள் சூறையாடப் பட்டன. அரசுத் துறைகள் சார்ந்த இந்த வன்முறையாளர்களை வாச்சாத்திக்கு ஏவிவிட்டவர் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா! வாச்சாத்திப் பழங்குடி மக்கள் மீது செயலலிதா கட்டவிழ்த்துவிட்ட வேட்டையை மக்கள், கட்சிகடந்து கண்டனம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அக்கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் பெ. சண்முகம் அவர்களும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் அரசுத்துறை வன்முறையாளர்கள் மற்றும் வன்புணர்ச்சி யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள்நடத்தினர்.
முதல்வர் செயலலிதா வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். அது அம்மையாரின் விருப்பப்படி, வாச்சாத்தியில் வழக்கமாக சந்தனக் கடத்தல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது அவர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என்று 10.8.1992 அன்று அறிக்கை கொடுத்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதின்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சென்னை வழக்கறிஞர்கள் வைகை, என்.ஜி.ஆர். பிரசாத் உள்ளிட்டோரைக் கொண்ட 5 வழக்கறிஞர் குழு இவ்வழக்கை நடத்தியது.
பதின்மூன்று அகவைச் சிறுமி, 8 மாத கர்ப்பினி உட்பட பதினெட்டு இளம் பெண்களை அரசுத் துறையினர் இழுத்துச் சென்று ஏரிக்கரைக் காட்டுப்பக்கம் வன்புணர்ச்சி செய்தது மெய்ப்பிக்கப்பட்டது. மற்ற குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டன. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேர்க்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனைகள் வழங்கினார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை இந்திய அரசின் காவல் துறையான சிபிஐ நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள், பொறுப்புடனும் அக்கறையுடனும் விசாரித்தும், கள ஆய்வு செய்தும் 29.9.2023 அன்று அளித்த தீர்ப்பில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனைகளை உறுதிப்படுத்தினார். பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா பத்துலட்சரூபாய் நிதிஉதவி செய்ய வேண்டும். அதில் 5 இலட்ச ரூபாயை அரசும், மீதி 5 இலட்ச ரூபாயைக் குற்றவாளிகளும் வழங்க வேண்டும் என்றார்.
“இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்த்துடன்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி! அதனால்தான் 1992-இல் நடந்த குற்றச் செயல்களுக்கு 2023 செப்டம்பரில் தீர்ப்பு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாச்சாத்தி வன்கொடுமைக் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் அன்றைய முதல்வர் செயலலிதா என்பதை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.
இனி இதுபோல் ஆட்சியாளர்களால் - ஆதிக்க ஆற்றல்களால் நீண்ட கால தாமதம் ஏற்படாமல் தவிர்க்க, பழங்குடி மக்களுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க இவர்களுக்கென்று தனித்தனியே மாவட்டத்திற்கு இரண்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
சிபிஎம் கட்சியும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதியுடன் தொடர்ந்து முயலாவிட்டால் மேற்படி குற்றவாளிகள் எப்போதோ தப்பி அப்பாவிகள் ஆகியிருப்பர்! நீதிபதி பி. வேல் முருகன் பாராட்டுக்குரியவர்!
சந்திராயன் வெற்றியும் நிலவில் சூழல் சூறையாடலும்! ======================================================================= தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். =======================================================================
சந்திராயன் 3 நிலவில் இறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு தமிழ்நாட்டு மக்களையும், அறிவியல் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரையும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இரசியாவின் லூனா விண்கலம் விழுந்து நொறுங்கிய பகுதியான நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயனிலிருந்து விக்ரம் லாண்டர் 23.8.2023 மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும்.
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவதாக நிலவில் தடம் பதித்த பெருமையைத் தாண்டி, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைச் சந்திராயன் 3-இன் பயணம் நிலைநாட்டியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச் சாதனைப் பயணத்தில் பணியாற்றிய அறிவியலாளர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீரமுத்துவேல், துணை இயக்குநர்களாக கல்பனா, வனிதா முத்தையன் ஆகிய தமிழர்கள் பணியாற்றியிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரும் பெருமை. வளர்ந்துவரும் எந்தப் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் தமிழர்கள் முன்வரிசையில் இருப்பார்கள் என்பதை இவர்கள் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற வகையில் ஒருபுறம் மகிழத்தக்தாக சந்திராயன் 3 நிலவுப்பயணம் அமைந்திருந்தாலும், அதன் பின்னணி நோக்கத்தை அறியும்போது அதிர்ச்சியும் பதட்டமும் ஏற்படுகிறது.
விண்வெளிப் பயணத்தில் ஏற்கெனவே முன்னேறியுள்ள அமெரிக்கா, சீனா நாடுகளைப் போன்றில்லாமல் நிலவின் இருட்டுப் பகுதியான தென் துருவத்தை தேர்ந்தெடுத்து, அதைநோக்கி சந்திராயன் 3 பயணத்தை நடத்தி, அத் தென்துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரை இறக்கி, அதிலிருந்து ரோவர் என்ற நடமாடும் ஆய்வு நிலையத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்றால் அதன் உண்மையான நோக்கம்தான் என்ன?
நிலவைப்பற்றிய அறிவியல் உண்மைகளைக் கண்டறிவதும், அதன்வழியாக இப் பேரண்டம் பற்றிய அறிவை விரிவாக்குவதும்தான் இந்திய அரசின் நோக்கமா? இல்லை! இந்திய அரசின் முதன்மையான நோக்கம் நிலவின் கனிம வளத்தை தன் பங்கிற்குச் சூறையாடுவதுதான். அதன் துணைவிளைவாக, பேரண்டம் பற்றிய இந்திய மக்களின்-தமிழர்களின் அறிவு விரிவடையலாம். ஆனால், முதன்மை நோக்கம் வளச் சுரண்டல்தான்!
இந்தப் பூமி மட்டுமின்றி, விண்வெளியும் சந்தை வேட்டைக்கு உள்ளாகி நெடு நாளாகிவிட்டது! பூமியைச் சுற்றியுள்ள இயற்கை வளமான மின்காந்த அலைகளைத் தனிச் சொத்தாக்கி விலைவைத்து விற்பது பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவுவது, அவற்றைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்காந்த அலைகளைத் தருவது ஆகியவை பல இலட்சம் கோடி ரூபாய் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், அலைப்பட்டை ஊழல் போன்றவை இந்திய அரசியலின் புதிய இயல்புநிலை ஆகிவிட்டன.
இப்போது அதைத்தாண்டி, நிலாவும், வெள்ளியும், புதனும், சூரியனும் கூட வள-வேட்டைக்கு உள்ளாக இருக்கின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில், 800 கோடி டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளிச் சந்தை (Indian Space Market) வரும் 2040-இல் 5 மடங்கு வளர்ந்து 4 ஆயிரம் கோடி டாலராக வளர்வதற்கு வாய்ப்புள்ளதென இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2022-23 கூறியது.
நிலாவின் தென் துருவத்தில் உறைபனி நீர் (Water Ice) ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி டாலர் பெறுமதியான அளவுக்கு உடனடியாகக் கிடைக்கும் என்கிறார்கள்.
இதைவிட, ஹீலியம்-3 (He3 ion) அயனி ஏறத்தாழ 10000 கோடி கோடி ( 1018) டாலர் பெறுமதியான அளவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
இந்த ஹீலியம் 3 அயனி அணுப்பிணைப்பு வழியில் (Nuclear fusion) அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இதுவும் அணுக்கதிரியக்கத்தை வெளியிடும். ஹீலியம் - 3 பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பதற்கான பிரான்ஸ் தலைமையிலான 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால், மோடி அரசு சப்பானோடு ஹீலியம்-3 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹீலியம்-3 யிலிருந்து அணுபிணைப்பு மின்சாரம் உருவாக்குவதில் இந்தியாவிற்கு சப்பான் தொழில் நுட்ப உதவியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என்பதும், நிலாவிலிருந்து இந்தியா ஹீலியம்-3 ஐ எடுக்குமானால், அதனை சப்பானோடு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என்பதும் இவ் ஒப்பந்தத்தின் சாரம்.
இது தவிர புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்குத் தேவையான அரிய கனிமங்களான லாண்ட்டனைடு, ஸ்கேன்டியம், (scandium) இட்ரியம் (yttrium ) போன்றவையும் நிலவின் தென்துருவத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன.
இவ்வாறு நிலவின் வளத்தை சூறையாடுவதற்கான வல்லரசுகளின் போட்டி கடந்த 2015 லிருந்தே தொடங்கிவிட்டது. இனி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியாம், குளோபல் ஆர்ஜின் போன்ற அமெரிக்க தனியார் நிறுவனங்கள் 2025 லிருந்து அடுத்தடுத்து நிலவில் ஆய்வுக் கலங்களை இறக்கிவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தகுந்தாற்போல் அமெரிக்க அரசு கடந்த 2015 லேயே விண்வெளி கனிமவளச் சட்டம் என்ற ஒன்றை இயற்றி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தனியார் பெருங்குழுமங்களும் கூட்டாகச் செயல்படுவதற்கு வழி திறந்துவிட்டிருக்கிறது.
மோடி அரசும் ஏற்கெனவே, இஸ்ரோவோடு சேர்ந்து தனியார் பெருங்குழுமங்கள் நிலா உள்ளிட்ட விண்பொருள் வளங்களைச் சூறையாடுவதற்கு ஏற்ப சட்டம் இயற்றிவிட்டது.
ஈர்ப்பு விசையும், வளிமண்டலமும் பூமியை ஒப்பிட வலு குறைவாக உள்ள நிலாவில் இந்த வளச் சுரண்டல் வேட்டை எந்த வகையான சுற்றுச் சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
ஆனால் அது மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.
மண்ணையும், கடலையும் சூறையாடியது போதாதென்று இப்போது விண்ணுக்கும் புறப்பட்டுவிட்டார்கள்.
சந்திராயன் 3 அறிவியல் சாதனைதான் என்றாலும் அது உயிர்மக் கோள(Bio-sphere)த்திற்கும் மனித குலத்திற்கும் ஏற்படுத்த உள்ள பேரழிவை உணரும்போது அச்சமாக இருக்கிறது.
“கண்டுபிடிப்புகளை நிறுத்துங்கள். காப்பாற்றும் வழியை யோசியுங்கள்” என்று 2019-இல் ஸ்பெயினில் நடந்த ஐ.நா. சுற்றுச் சூழல் மாநாட்டில் சூழலியலாளர்கள் எழுப்பிய முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.
வரம்பற்ற அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி அறவாழ்வை அழிக்கிறது என்பதையும் சேர்த்து இளையோர் சிந்திக்க வேண்டும். அவரவர் மண்ணையும் அம் மண்ணின் உயிர்களையும் பாதுகாக்கும் அற அரசியல்-பொருளியலுக்குத் திரும்ப வேண்டும். அறிவியல் வளர்ச்சி அதற்கு இசைவாக விளங்க வேண்டும்.
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் செய்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்கள் மீது உரிய விசாரணை நடத்தி, அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறும், குற்றச்செயல்களுக்குரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா – நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அமர்வு 24.08.2023 அன்று ஆணை வழங்கியுள்ளது.
வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடி இன பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்கள், 2017ஆம் ஆண்டு இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். அதில் அவர், “கோவை மாவட்ட மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயற்கையான வாழ்வியல் முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் வகையிலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையைச் சுற்றி வணிகக் கட்டடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியில் இடைவிடாமல் பெருங்கூட்டங்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன”.
“நஞ்சை புஞ்சை சாகுபடி நிலங்கள் வருவாய்த் துறையால் முறைப்படி வகை மாற்றம் செய்யப்படாமலே வணிகச் சந்தைகளாக மாற்றப்பட்டு விட்டன. இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் அகற்றி பழையபடி மீளமைக்க, பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் விலங்குகள் பயன்படுத்தும் இயற்கை இடங்களாக மாற்றப்பட வேண்டும்” - இவைதாம் பழங்குடி சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்களின் நீதிமன்ற வழக்கின் (வழக்கு எண் – WP No. 3556 of 2017) சாரம்!
2017 முதல் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துறைத் துணை இயக்குநர் ஆர். இராஜகுரு உயர் நீதிமன்றத்தில் எழுத்து வடிவில் அறிக்கை அளித்தார்.
தமிழ்நாடு அரசின் அந்த அதிகாரி கொடுத்த அறிக்கைதான், முறைப்படியான எந்த அனுமதியும் பெறாமல் ஜக்கி வாசுதேவ் மலைப்பகுதிகளில் யானைகளின் வழித்தடத்தில் வணிக ஆன்மிகக் கட்டுமானங்கள் எழுப்பியுள்ளதையும் அதிகார முறைப்படி அம்பலப்படுத்தியுள்ளது.
“ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20.805 ஹெக்டேர் நிலப்பரப்பில் 15.53 ஹெக்டேர் நஞ்சை நிலமாகவும், மீதி உள்ளவை புஞ்சை நிலமாகவும் உள்ளன. இதில் அரசு புறம்போக்கு நிலங்களும் இருக்கின்றன. இந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றுமுள்ள கட்டுமானங்களுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்கள் அலுவலகத்தில் இல்லை. இதேபோல், இக்கரைப் பூளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும் இவற்றுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மலைப்பகுதி இடர் பாதுகாப்பு அமைப்பு, தீயணைப்புத் துறை ஆகியவை அனுமதி தந்ததற்கான ஆவணங்களும் அரசிடம் இல்லை” என்று அரசு உதவி இயக்குநர் கூறிவிட்டார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் ஈஷா யோகா மையம் தாக்கல் செய்யும் ஆவணங்களைக் கோவை மண்டல நகரமைப்பத் திட்டமிடல் துணை இயக்குநர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மேற்படி கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிய வந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடமுள்ள ஆவணங்களை எல்லாம் இரண்டு வாரங்களுக்குள் கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துணை இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.
இப்பொழுது, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோதச் செயல்கள் மீது உயர் நீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் உள்ளது.
இத்தீர்ப்பு வந்த பின், 25.08.2023 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது ஈஷா மையம். அதில், ஆதியோகி சிலை அமைக்கக் கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த 29.09.2016 அன்று அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளது. “இந்த அனுமதியை எங்கேயும் எப்போதும் அளிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் கூறியுள்ளது.
மேற்படி மாவட்ட ஆட்சியர் அனுமதிக் கடித அசல் நகல் நம்மிடம் இருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் கையொப்பமிட்டு 29.09.2016 நாளிட்ட கடிதம் அது. ஆதியோகி சிலை என்று அதில் குறிப்படப்படவில்லை. “சிவன் உருவச்சிலை” என்று தான் அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளார்கள். காத்திரமான கடைசி நிபந்தனை, “சிலை அமைத்தலின் ஆரம்பக் கட்டப் பணிகளின்போது தொடங்கி, தொடர்புடைய அனைத்து அரசுத் துறைகள் / உள்ளாட்சி / வருவாய் / காவல்துறை சட்ட விதிகளும் எவ்வித விதிமீறலுமின்றி தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்” என்பதாகும்.
உள்ளாட்சி, ஊராட்சி, வருவாய்த்துறை போன்ற எந்தத் துறையின் அனுமதியும் சிவன் சிலைக்கு பெறவில்லை ஈஷா யோகா மையம்! இந்த உண்மையைத்தான் உயர் நீதிமன்றத்தில் இப்போது கோவை மண்டல நகரமைப்புத் துறை துணை இயக்குநர் ஆர். இராஜகுரு போட்டு உடைத்து விட்டார். அவர் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டுதான், உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, 29.09.2016 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் சிவன் சிலை திறப்புக்கு அளித்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அந்த நிபந்தனைகளை ஜக்கியின் ஈஷா மையம் நிறைவேற்றவில்லை என்பது வெள்ளிடை மலை! அந்த விகாரமான ஈஷாவின் விதிமீறலை – ஆக்கிரமிப்பை தொடர்புடைய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சட்டவிரோத வளாகத்தில், சட்டவிதிகளின்படி அனுமதி பெறாத ஆதியோகி சிலையை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வந்து திறந்து வைத்தார். ஈஷா மையம் அனுமதி கேட்டது சிவன் சிலைக்கு! மோடி திறந்ததோ ஆதியோகி சிலை! எதிலும் நேர்மை இல்லை; உண்மை இல்லை!
இன்னொரு முக்கியச் செய்தி – 2012ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக ஈஷா மையம் முறைப்படி அனுமதி வாங்காமல் புதிது புதிதாக ஜக்கி வாசுதேவ் மேற்படி வனப்பகுதி இடங்களில் கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது 12.10.2012 நாளிட்டு இதே கோவை மாநகரமைப்பு மற்றும் கிராமப்புறக் கட்டமைப்பு துணை இயக்குநர் ஓர் எச்சரிக்கை அறிவிக்கை ஈஷா மையத்துக்கு அனுப்பினார். அதில், “நாங்கள் ஆய்வு செய்தபோது, இக்கரைப் போளுவாம்பட்டி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் 34 பிளாக் – கட்டடத் தொகுப்புகளைக் கட்டி முடித்துள்ளீர்கள். உடனே இக்கட்டடப் பணிகளை நிறுத்த வேண்டும். மூன்று நாட்களுக்குள் முறையான அனுமதி வாங்க வேண்டும்” என்று கோரி இருந்தார். அதைச் சட்டை செய்யவே இல்லை, ஜக்கி!
அதன்பிறகு, அதே அதிகாரி 21.12.2012 அன்று இன்னொரு அறிவிக்கை அனுப்பினார் ஈஷாவுக்கு!
“நீங்கள் இன்னும் 30 நாட்களுக்குள் கட்டுமானங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களைக் கட்டடங்கள் இல்லாத பழைய நிலையில் மீளமைக்க வேண்டும். உரிய அதிகாரியிடம் அனுமதி வாங்கியிருந்தால் உடனே அதைக் கொண்டு இந்த அலுவலகத்தில் காட்ட வேண்டும்” என்று கூறி இருந்தார் அதிகாரி. எதையும் செய்யாமல் ஆக்கிரமிப்புக் கொள்ளை ராஜதர்பாருடன் நடத்தினார் ஜக்கி வாசுதேவ்!
இதேநிலை இப்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கும் ஏற்பட்டு விடாமல் – நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இப்போதுள்ள தி.மு.க. ஆட்சிக்கு இருக்கிறது.
அரசின் முறையான அனுமதிகளைப் பெறாமல், சட்டவிரோதக் கட்டுமானங்களை எழுப்பிய ஈஷா யோகா மையத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். அத்துடன், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக – போர்க்கால வேகத்துடன் செயல்படுத்தி, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திட நடவடிக்கை எடுத்து, இயற்கைக்கும் பழங்குடி மக்களுக்கும் காட்டு உயிரினங்களுக்கும் தமிழ்நாடு அரசு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
“கண்ணோட்டம்” வலையொளிக்குத் தடை! "தமிழர் கண்ணோட்டம் " புதிய வலையொளி தொடங்கப்பட்டது! ===================================
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களை வெளிப்படுத்தி, தமிழ்த்தேசிய ஊடகமாகச் செயல்பட்டு வந்த “கண்ணோட்டம்” வலையொளியை தொழில்நுட்பத் தடைகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, “தமிழர் கண்ணோட்டம்” என்ற புதிய வலையொளி பக்கத்தை அறிமுகம் செய்கிறோம்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயர் தமிழ்த்தேசியர்களுக்கு புதிதானதல்ல!
தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்து, தமிழ்த்தேசிய அரசியலை மட்டுமின்றி, தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் “தமிழர் கண்ணோட்டம்” வலையொளி, மேம்பட்ட வகையில் - ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படும்!
தமிழ் மக்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து (SUBSCRIBE), இப்பெரும் பயணத்தைத் தொடங்கி, வலு சேர்த்திட அன்புரிமையுடன் அழைக்கிறோம்!
பின்வரும் இணைப்பை சொடுக்கி, இவ்வலையொளியில் இணைந்திடுங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா!
உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது!
===============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
===============================================
வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், அதில் இப்போது உயிரோடுள்ள 215 அரசு ஊழியர்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தண்டித்திருக்கிறது.
இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள் கொடுக்கவில்லை. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு அவர்கள் 2011 செப்டம்பர் 29-ஆம் நாள் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் - அலுவலர்கள் 215 பேர்க்குக் குற்றவாளிகள் என்று தண்டனை கொடுத்தார். இப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முழுமையாக விசாரித்து, எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களை முழுமையாக வாதிட அனுமதித்து, வாச்சாத்தி கிராமத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்று நேரில் கள ஆய்வு செய்து. மாவட்ட முதன்மை நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார். அவர் புதிதாகத் தண்டனை கொடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி இடையே கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமம் வாச்சாத்தி. அம்மலைத் தொடரில் நிறைய சந்தன மரங்கள் உண்டு. அச்சந்தன மரங்களை வாச்சாத்தி மக்கள் திருட்டுத்தனமாக வெட்டித் தங்கள் வீடுகளில் வைத்துப் பின்னர் விற்று வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகாரிகளால் கூறப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பனுக்காக இவ்வாறு திருடுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.
20.6.1992 அன்று வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் வாச்சாத்தி கிராமத்தை முற்றுகையிட்டு, சோதனை என்ற பெயரில் வேட்டை யாடினர். 90 பெண்கள் உட்பட 133 பேரைக் கைது செய்தனர். அம்மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். மலைவாழ் பழங்குடிப் பெண்கள் 18 பேரை பாலியல் வன்முறை செய்தனர். அவர்களின் வீடுகள் சூறையாடப் பட்டன. அரசுத் துறைகள் சார்ந்த இந்த வன்முறையாளர்களை வாச்சாத்திக்கு ஏவிவிட்டவர் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா! வாச்சாத்திப் பழங்குடி மக்கள் மீது செயலலிதா கட்டவிழ்த்துவிட்ட வேட்டையை மக்கள், கட்சிகடந்து கண்டனம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அக்கட்சியின் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் பெ. சண்முகம் அவர்களும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் அரசுத்துறை வன்முறையாளர்கள் மற்றும் வன்புணர்ச்சி யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள்நடத்தினர்.
முதல்வர் செயலலிதா வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். அது அம்மையாரின் விருப்பப்படி, வாச்சாத்தியில் வழக்கமாக சந்தனக் கடத்தல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது அவர்கள் வீண் பழி சுமத்துகிறார்கள் என்று 10.8.1992 அன்று அறிக்கை கொடுத்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதின்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சென்னை வழக்கறிஞர்கள் வைகை, என்.ஜி.ஆர். பிரசாத் உள்ளிட்டோரைக் கொண்ட 5 வழக்கறிஞர் குழு இவ்வழக்கை நடத்தியது.
பதின்மூன்று அகவைச் சிறுமி, 8 மாத கர்ப்பினி உட்பட பதினெட்டு இளம் பெண்களை அரசுத் துறையினர் இழுத்துச் சென்று ஏரிக்கரைக் காட்டுப்பக்கம் வன்புணர்ச்சி செய்தது மெய்ப்பிக்கப்பட்டது. மற்ற குற்றங்களும் மெய்ப்பிக்கப்பட்டன. தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேர்க்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனைகள் வழங்கினார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை இந்திய அரசின் காவல் துறையான சிபிஐ நடத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் அவர்கள், பொறுப்புடனும் அக்கறையுடனும் விசாரித்தும், கள ஆய்வு செய்தும் 29.9.2023 அன்று அளித்த தீர்ப்பில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனைகளை உறுதிப்படுத்தினார். பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா பத்துலட்சரூபாய் நிதிஉதவி செய்ய வேண்டும். அதில் 5 இலட்ச ரூபாயை அரசும், மீதி 5 இலட்ச ரூபாயைக் குற்றவாளிகளும் வழங்க வேண்டும் என்றார்.
“இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்த்துடன்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி! அதனால்தான் 1992-இல் நடந்த குற்றச் செயல்களுக்கு 2023 செப்டம்பரில் தீர்ப்பு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
வாச்சாத்தி வன்கொடுமைக் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் அன்றைய முதல்வர் செயலலிதா என்பதை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.
இனி இதுபோல் ஆட்சியாளர்களால் - ஆதிக்க ஆற்றல்களால் நீண்ட கால தாமதம் ஏற்படாமல் தவிர்க்க, பழங்குடி மக்களுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க இவர்களுக்கென்று தனித்தனியே மாவட்டத்திற்கு இரண்டு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
சிபிஎம் கட்சியும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதியுடன் தொடர்ந்து முயலாவிட்டால் மேற்படி குற்றவாளிகள் எப்போதோ தப்பி அப்பாவிகள் ஆகியிருப்பர்! நீதிபதி பி. வேல் முருகன் பாராட்டுக்குரியவர்!
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
2 years ago | [YT] | 11
View 0 replies
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
சந்திராயன் வெற்றியும் நிலவில் சூழல் சூறையாடலும்!
=======================================================================
தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=======================================================================
சந்திராயன் 3 நிலவில் இறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு தமிழ்நாட்டு மக்களையும், அறிவியல் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரையும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இரசியாவின் லூனா விண்கலம் விழுந்து நொறுங்கிய பகுதியான நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயனிலிருந்து விக்ரம் லாண்டர் 23.8.2023 மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும்.
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவதாக நிலவில் தடம் பதித்த பெருமையைத் தாண்டி, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைச் சந்திராயன் 3-இன் பயணம் நிலைநாட்டியுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இச் சாதனைப் பயணத்தில் பணியாற்றிய அறிவியலாளர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீரமுத்துவேல், துணை இயக்குநர்களாக கல்பனா, வனிதா முத்தையன் ஆகிய தமிழர்கள் பணியாற்றியிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரும் பெருமை. வளர்ந்துவரும் எந்தப் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் தமிழர்கள் முன்வரிசையில் இருப்பார்கள் என்பதை இவர்கள் மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற வகையில் ஒருபுறம் மகிழத்தக்தாக சந்திராயன் 3 நிலவுப்பயணம் அமைந்திருந்தாலும், அதன் பின்னணி நோக்கத்தை அறியும்போது அதிர்ச்சியும் பதட்டமும் ஏற்படுகிறது.
விண்வெளிப் பயணத்தில் ஏற்கெனவே முன்னேறியுள்ள அமெரிக்கா, சீனா நாடுகளைப் போன்றில்லாமல் நிலவின் இருட்டுப் பகுதியான தென் துருவத்தை தேர்ந்தெடுத்து, அதைநோக்கி சந்திராயன் 3 பயணத்தை நடத்தி, அத் தென்துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரை இறக்கி, அதிலிருந்து ரோவர் என்ற நடமாடும் ஆய்வு நிலையத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்றால் அதன் உண்மையான நோக்கம்தான் என்ன?
நிலவைப்பற்றிய அறிவியல் உண்மைகளைக் கண்டறிவதும், அதன்வழியாக இப் பேரண்டம் பற்றிய அறிவை விரிவாக்குவதும்தான் இந்திய அரசின் நோக்கமா? இல்லை! இந்திய அரசின் முதன்மையான நோக்கம் நிலவின் கனிம வளத்தை தன் பங்கிற்குச் சூறையாடுவதுதான். அதன் துணைவிளைவாக, பேரண்டம் பற்றிய இந்திய மக்களின்-தமிழர்களின் அறிவு விரிவடையலாம். ஆனால், முதன்மை நோக்கம் வளச் சுரண்டல்தான்!
இந்தப் பூமி மட்டுமின்றி, விண்வெளியும் சந்தை வேட்டைக்கு உள்ளாகி நெடு நாளாகிவிட்டது! பூமியைச் சுற்றியுள்ள இயற்கை வளமான மின்காந்த அலைகளைத் தனிச் சொத்தாக்கி விலைவைத்து விற்பது பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
விண்ணில் செயற்கைக் கோள்களை ஏவுவது, அவற்றைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களுக்கு மின்காந்த அலைகளைத் தருவது ஆகியவை பல இலட்சம் கோடி ரூபாய் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் நடைபெற்ற அலைக்கற்றை ஊழல், அலைப்பட்டை ஊழல் போன்றவை இந்திய அரசியலின் புதிய இயல்புநிலை ஆகிவிட்டன.
இப்போது அதைத்தாண்டி, நிலாவும், வெள்ளியும், புதனும், சூரியனும் கூட வள-வேட்டைக்கு உள்ளாக இருக்கின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில், 800 கோடி டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளிச் சந்தை (Indian Space Market) வரும் 2040-இல் 5 மடங்கு வளர்ந்து 4 ஆயிரம் கோடி டாலராக வளர்வதற்கு வாய்ப்புள்ளதென இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2022-23 கூறியது.
நிலாவின் தென் துருவத்தில் உறைபனி நீர் (Water Ice) ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி டாலர் பெறுமதியான அளவுக்கு உடனடியாகக் கிடைக்கும் என்கிறார்கள்.
இதைவிட, ஹீலியம்-3 (He3 ion) அயனி ஏறத்தாழ 10000 கோடி கோடி ( 1018) டாலர் பெறுமதியான அளவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
இந்த ஹீலியம் 3 அயனி அணுப்பிணைப்பு வழியில் (Nuclear fusion) அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. இதுவும் அணுக்கதிரியக்கத்தை வெளியிடும். ஹீலியம் - 3 பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பதற்கான பிரான்ஸ் தலைமையிலான 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால், மோடி அரசு சப்பானோடு ஹீலியம்-3 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹீலியம்-3 யிலிருந்து அணுபிணைப்பு மின்சாரம் உருவாக்குவதில் இந்தியாவிற்கு சப்பான் தொழில் நுட்ப உதவியை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் என்பதும், நிலாவிலிருந்து இந்தியா ஹீலியம்-3 ஐ எடுக்குமானால், அதனை சப்பானோடு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்து கொள்வது என்பதும் இவ் ஒப்பந்தத்தின் சாரம்.
இது தவிர புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்குத் தேவையான அரிய கனிமங்களான லாண்ட்டனைடு, ஸ்கேன்டியம், (scandium) இட்ரியம் (yttrium ) போன்றவையும் நிலவின் தென்துருவத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன.
இவ்வாறு நிலவின் வளத்தை சூறையாடுவதற்கான வல்லரசுகளின் போட்டி கடந்த 2015 லிருந்தே தொடங்கிவிட்டது. இனி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியாம், குளோபல் ஆர்ஜின் போன்ற அமெரிக்க தனியார் நிறுவனங்கள் 2025 லிருந்து அடுத்தடுத்து நிலவில் ஆய்வுக் கலங்களை இறக்கிவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்குத் தகுந்தாற்போல் அமெரிக்க அரசு கடந்த 2015 லேயே விண்வெளி கனிமவளச் சட்டம் என்ற ஒன்றை இயற்றி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தனியார் பெருங்குழுமங்களும் கூட்டாகச் செயல்படுவதற்கு வழி திறந்துவிட்டிருக்கிறது.
மோடி அரசும் ஏற்கெனவே, இஸ்ரோவோடு சேர்ந்து தனியார் பெருங்குழுமங்கள் நிலா உள்ளிட்ட விண்பொருள் வளங்களைச் சூறையாடுவதற்கு ஏற்ப சட்டம் இயற்றிவிட்டது.
ஈர்ப்பு விசையும், வளிமண்டலமும் பூமியை ஒப்பிட வலு குறைவாக உள்ள நிலாவில் இந்த வளச் சுரண்டல் வேட்டை எந்த வகையான சுற்றுச் சூழல் விளைவுகளை ஏற்படுத்தும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
ஆனால் அது மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.
மண்ணையும், கடலையும் சூறையாடியது போதாதென்று இப்போது விண்ணுக்கும் புறப்பட்டுவிட்டார்கள்.
சந்திராயன் 3 அறிவியல் சாதனைதான் என்றாலும் அது உயிர்மக் கோள(Bio-sphere)த்திற்கும் மனித குலத்திற்கும் ஏற்படுத்த உள்ள பேரழிவை உணரும்போது அச்சமாக இருக்கிறது.
“கண்டுபிடிப்புகளை நிறுத்துங்கள். காப்பாற்றும் வழியை யோசியுங்கள்” என்று 2019-இல் ஸ்பெயினில் நடந்த ஐ.நா. சுற்றுச் சூழல் மாநாட்டில் சூழலியலாளர்கள் எழுப்பிய முழக்கம்தான் நினைவுக்கு வருகிறது.
வரம்பற்ற அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி அறவாழ்வை அழிக்கிறது என்பதையும் சேர்த்து இளையோர் சிந்திக்க வேண்டும். அவரவர் மண்ணையும் அம் மண்ணின் உயிர்களையும் பாதுகாக்கும் அற அரசியல்-பொருளியலுக்குத் திரும்ப வேண்டும். அறிவியல் வளர்ச்சி அதற்கு இசைவாக விளங்க வேண்டும்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
2 years ago | [YT] | 3
View 1 reply
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்நாடு அரசே!
உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி, ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திடு!
==============================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
==============================================================
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் செய்துள்ள சட்டவிரோதக் கட்டுமானங்கள் மீது உரிய விசாரணை நடத்தி, அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறும், குற்றச்செயல்களுக்குரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா – நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அமர்வு 24.08.2023 அன்று ஆணை வழங்கியுள்ளது.
வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடி இன பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்கள், 2017ஆம் ஆண்டு இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். அதில் அவர், “கோவை மாவட்ட மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயற்கையான வாழ்வியல் முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் வகையிலும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையைச் சுற்றி வணிகக் கட்டடங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியில் இடைவிடாமல் பெருங்கூட்டங்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன”.
“நஞ்சை புஞ்சை சாகுபடி நிலங்கள் வருவாய்த் துறையால் முறைப்படி வகை மாற்றம் செய்யப்படாமலே வணிகச் சந்தைகளாக மாற்றப்பட்டு விட்டன. இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் அகற்றி பழையபடி மீளமைக்க, பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் விலங்குகள் பயன்படுத்தும் இயற்கை இடங்களாக மாற்றப்பட வேண்டும்” - இவைதாம் பழங்குடி சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்களின் நீதிமன்ற வழக்கின் (வழக்கு எண் – WP No. 3556 of 2017) சாரம்!
2017 முதல் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துறைத் துணை இயக்குநர் ஆர். இராஜகுரு உயர் நீதிமன்றத்தில் எழுத்து வடிவில் அறிக்கை அளித்தார்.
தமிழ்நாடு அரசின் அந்த அதிகாரி கொடுத்த அறிக்கைதான், முறைப்படியான எந்த அனுமதியும் பெறாமல் ஜக்கி வாசுதேவ் மலைப்பகுதிகளில் யானைகளின் வழித்தடத்தில் வணிக ஆன்மிகக் கட்டுமானங்கள் எழுப்பியுள்ளதையும் அதிகார முறைப்படி அம்பலப்படுத்தியுள்ளது.
“ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20.805 ஹெக்டேர் நிலப்பரப்பில் 15.53 ஹெக்டேர் நஞ்சை நிலமாகவும், மீதி உள்ளவை புஞ்சை நிலமாகவும் உள்ளன. இதில் அரசு புறம்போக்கு நிலங்களும் இருக்கின்றன. இந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றுமுள்ள கட்டுமானங்களுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்கள் அலுவலகத்தில் இல்லை. இதேபோல், இக்கரைப் பூளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும் இவற்றுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மலைப்பகுதி இடர் பாதுகாப்பு அமைப்பு, தீயணைப்புத் துறை ஆகியவை அனுமதி தந்ததற்கான ஆவணங்களும் அரசிடம் இல்லை” என்று அரசு உதவி இயக்குநர் கூறிவிட்டார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, “இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் ஈஷா யோகா மையம் தாக்கல் செய்யும் ஆவணங்களைக் கோவை மண்டல நகரமைப்பத் திட்டமிடல் துணை இயக்குநர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மேற்படி கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று தெரிய வந்தால், சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடமுள்ள ஆவணங்களை எல்லாம் இரண்டு வாரங்களுக்குள் கோவை மண்டல நகரமைப்புத் திட்டமிடல் துணை இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.
இப்பொழுது, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோதச் செயல்கள் மீது உயர் நீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிடம் உள்ளது.
இத்தீர்ப்பு வந்த பின், 25.08.2023 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது ஈஷா மையம். அதில், ஆதியோகி சிலை அமைக்கக் கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த 29.09.2016 அன்று அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறியுள்ளது. “இந்த அனுமதியை எங்கேயும் எப்போதும் அளிக்கத் தயாராக உள்ளோம்” என்றும் கூறியுள்ளது.
மேற்படி மாவட்ட ஆட்சியர் அனுமதிக் கடித அசல் நகல் நம்மிடம் இருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் கையொப்பமிட்டு 29.09.2016 நாளிட்ட கடிதம் அது. ஆதியோகி சிலை என்று அதில் குறிப்படப்படவில்லை. “சிவன் உருவச்சிலை” என்று தான் அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளார்கள். காத்திரமான கடைசி நிபந்தனை, “சிலை அமைத்தலின் ஆரம்பக் கட்டப் பணிகளின்போது தொடங்கி, தொடர்புடைய அனைத்து அரசுத் துறைகள் / உள்ளாட்சி / வருவாய் / காவல்துறை சட்ட விதிகளும் எவ்வித விதிமீறலுமின்றி தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்” என்பதாகும்.
உள்ளாட்சி, ஊராட்சி, வருவாய்த்துறை போன்ற எந்தத் துறையின் அனுமதியும் சிவன் சிலைக்கு பெறவில்லை ஈஷா யோகா மையம்! இந்த உண்மையைத்தான் உயர் நீதிமன்றத்தில் இப்போது கோவை மண்டல நகரமைப்புத் துறை துணை இயக்குநர் ஆர். இராஜகுரு போட்டு உடைத்து விட்டார். அவர் வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டுதான், உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, 29.09.2016 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் சிவன் சிலை திறப்புக்கு அளித்த அனுமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அந்த நிபந்தனைகளை ஜக்கியின் ஈஷா மையம் நிறைவேற்றவில்லை என்பது வெள்ளிடை மலை! அந்த விகாரமான ஈஷாவின் விதிமீறலை – ஆக்கிரமிப்பை தொடர்புடைய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. அப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சட்டவிரோத வளாகத்தில், சட்டவிதிகளின்படி அனுமதி பெறாத ஆதியோகி சிலையை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வந்து திறந்து வைத்தார். ஈஷா மையம் அனுமதி கேட்டது சிவன் சிலைக்கு! மோடி திறந்ததோ ஆதியோகி சிலை! எதிலும் நேர்மை இல்லை; உண்மை இல்லை!
இன்னொரு முக்கியச் செய்தி – 2012ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக ஈஷா மையம் முறைப்படி அனுமதி வாங்காமல் புதிது புதிதாக ஜக்கி வாசுதேவ் மேற்படி வனப்பகுதி இடங்களில் கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது 12.10.2012 நாளிட்டு இதே கோவை மாநகரமைப்பு மற்றும் கிராமப்புறக் கட்டமைப்பு துணை இயக்குநர் ஓர் எச்சரிக்கை அறிவிக்கை ஈஷா மையத்துக்கு அனுப்பினார். அதில், “நாங்கள் ஆய்வு செய்தபோது, இக்கரைப் போளுவாம்பட்டி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் 34 பிளாக் – கட்டடத் தொகுப்புகளைக் கட்டி முடித்துள்ளீர்கள். உடனே இக்கட்டடப் பணிகளை நிறுத்த வேண்டும். மூன்று நாட்களுக்குள் முறையான அனுமதி வாங்க வேண்டும்” என்று கோரி இருந்தார். அதைச் சட்டை செய்யவே இல்லை, ஜக்கி!
அதன்பிறகு, அதே அதிகாரி 21.12.2012 அன்று இன்னொரு அறிவிக்கை அனுப்பினார் ஈஷாவுக்கு!
“நீங்கள் இன்னும் 30 நாட்களுக்குள் கட்டுமானங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களைக் கட்டடங்கள் இல்லாத பழைய நிலையில் மீளமைக்க வேண்டும். உரிய அதிகாரியிடம் அனுமதி வாங்கியிருந்தால் உடனே அதைக் கொண்டு இந்த அலுவலகத்தில் காட்ட வேண்டும்” என்று கூறி இருந்தார் அதிகாரி. எதையும் செய்யாமல் ஆக்கிரமிப்புக் கொள்ளை ராஜதர்பாருடன் நடத்தினார் ஜக்கி வாசுதேவ்!
இதேநிலை இப்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கும் ஏற்பட்டு விடாமல் – நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இப்போதுள்ள தி.மு.க. ஆட்சிக்கு இருக்கிறது.
அரசின் முறையான அனுமதிகளைப் பெறாமல், சட்டவிரோதக் கட்டுமானங்களை எழுப்பிய ஈஷா யோகா மையத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். அத்துடன், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக – போர்க்கால வேகத்துடன் செயல்படுத்தி, ஜக்கி வாசுதேவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திட நடவடிக்கை எடுத்து, இயற்கைக்கும் பழங்குடி மக்களுக்கும் காட்டு உயிரினங்களுக்கும் தமிழ்நாடு அரசு நீதி வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
2 years ago | [YT] | 8
View 0 replies
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
“கண்ணோட்டம்” வலையொளிக்குத் தடை!
"தமிழர் கண்ணோட்டம் " புதிய வலையொளி தொடங்கப்பட்டது!
===================================
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களை வெளிப்படுத்தி, தமிழ்த்தேசிய ஊடகமாகச் செயல்பட்டு வந்த “கண்ணோட்டம்” வலையொளியை தொழில்நுட்பத் தடைகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, “தமிழர் கண்ணோட்டம்” என்ற புதிய வலையொளி பக்கத்தை அறிமுகம் செய்கிறோம்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயர் தமிழ்த்தேசியர்களுக்கு புதிதானதல்ல!
தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்து, தமிழ்த்தேசிய அரசியலை மட்டுமின்றி, தமிழர்களின் கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு கூறுகளை வெளிப்படுத்தும் வகையில் “தமிழர் கண்ணோட்டம்” வலையொளி, மேம்பட்ட வகையில் - ஆக்கப்பூர்வமான வகையில் செயல்படும்!
தமிழ் மக்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்து (SUBSCRIBE), இப்பெரும் பயணத்தைத் தொடங்கி, வலு சேர்த்திட அன்புரிமையுடன் அழைக்கிறோம்!
பின்வரும் இணைப்பை சொடுக்கி, இவ்வலையொளியில் இணைந்திடுங்கள்!
youtube.com/@thamizharkannottam?sub_confirmation=1
நன்றி!
===============================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
===============================
2 years ago | [YT] | 4
View 0 replies