சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை மனித நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் உலகளாவிய ஆன்மீக அமைப்பு. உடல் ஆரோக்கியத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாற்றம் தரும் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா வழங்குகிறது. ஈஷா அவுட்ரீச் மூலம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் போன்ற முன்முயற்சிகள் உலகளாவிய ஆதரவைப் பெற்று, முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. கிராமப்புற சுகாதார மருத்துவமனைகள், விளையாட்டுப் போட்டிகள், விவசாய முன்முயற்சிகள், அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தல் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு ஈஷா ஆதரவளிக்கிறது. யோகா மற்றும் தியானம் மூலம் உள்நிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டங்கள் மூலம் வெளிசூழ்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்துவதோடு விழிப்புணர்வான மற்றும் நிலைக்கக்கூடிய உலகை நோக்கி ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
Isha Tamil
மஞ்சள் அலங்காரத்தில் மங்கள நாயகி... கணப்பொழுதும் அகலுமோ என் கண்கள் உனைக் கண்டபின்!
#LingaBhairavi #Devi
5 days ago | [YT] | 257
View 3 replies
Isha Tamil
ஒன்றரை மணிக்கு தினமும் இந்த இசை ஒலிக்கும். கேட்பவர்கள் கால்கள் ஆடும். காண்பவர்கள் கண்கள் குதூகலத்தில் விரியும். உற்சாகம் துளியும் குறையாமல் செயலாற்ற, ஈஷாவில் தன்னார்வத் தொண்டர்கள் செய்யும் டமரு சேவா இது.
6 days ago | [YT] | 166
View 2 replies
Isha Tamil
பார்க்குமிடம் எல்லாம் உன் நினைவு எனக்கு வரவே, தெளித்தாயோ உன் நீல நிறத்தை பூத்துளிகளாய் நீல கண்டா? ஆஹா இந்த வண்டுகள் முந்திக்கொண்டனவே, உன் அருட் தேன் அருந்தி உன்மத்தம் கொள்ள!
#IshaYogaCenter
1 week ago | [YT] | 118
View 0 replies
Isha Tamil
பூமிக்கு இறங்கி வந்த சூரியன், சர்வ தர்ம ஸ்தம்பத்தின் உச்சியில் அமர்ந்து, இளைப்பாறியது, தியானலிங்க வாசல் புளிய மரத்து நிழலில்.
#Dhyanalinga
1 week ago | [YT] | 140
View 1 reply
Isha Tamil
அழகுக்கு அழகு சேர்க்கும் சிவப்பு வண்ண மலர்கள்
நெல்லு வயலில் உழுது வரும் மாடு..
விவசாயிக்கு உற்ற தோழனாம் எங்கள் மாடு.
#MattuPongal #IshaYogaCenter
1 week ago | [YT] | 183
View 1 reply
Isha Tamil
நமஸ்காரம், நான் இப்போ தான் ஆதியோகி, லிங்க பைரவி, தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு வரேன். எல்லாம் சூப்பரா இருந்துச்சு. நீங்க எப்போ வரீங்க. இன்னொரு விஷயம், எனக்கு வேஷ்டி சட்டை எப்டி இருக்கு? கமென்ட்ல சொல்லுங்க.
#HappyPongal #IshaYogaCenter
1 week ago | [YT] | 127
View 5 replies
Isha Tamil
ஏகாதசி என்பது, நம் உடலுக்கு இயற்கையாகவே உணவு குறைவாகத் தேவைப்படும் ஒரு நாள். இந்நாளில் விரதம் இருப்பது நம் உடலமைப்பைத் தூய்மைப்படுத்துவதோடு, நம் விழிப்புணர்வை உள்நிலை நோக்கித் திருப்புகிறது. முழுமையாக விரதம் இருக்க இயலாதபட்சத்தில், லேசான பழ உணவு எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும்.
#Ekadashi #Fasting
2 weeks ago | [YT] | 117
View 0 replies
Isha Tamil
ஈஷா மகா சிவராத்திரி விழாவின்போது ஆதியோகி சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய இசை நடனமான டோலு குனித்தா.
2 weeks ago | [YT] | 81
View 1 reply
Isha Tamil
உங்கள் ஐம்புலன்களின் எல்லைகளைத் தாண்டி இருப்பது என்ன? நீங்கள் இன்னும் உணராத பரிமாணங்கள் என்னென்ன? ஐம்புலன்களைத் தாண்டி இருக்கும் பரிமாணங்களை அறிய, உயிருள்ள நுழைவாயிலாக நிற்கிறது தியானலிங்கம். இது வெறும் இடம் அல்ல; ஓர் மகத்தான சாத்தியம். தியானலிங்கம் அதீத கவனத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட, யோக அறிவியலின் சாரத்தை தன்னுள் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவம்.
#Dhyanalinga
2 weeks ago | [YT] | 127
View 1 reply
Isha Tamil
முக்கண் நாயகிக்கு அவள் வாசலில் ஒரு பூக் கண் அர்ப்பணம்.
#IshaYogaCenter
2 weeks ago | [YT] | 123
View 2 replies
Load more