நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே

ஒரு மனித பிறவிக்கு வாழ்வில் செல்வமும் கல்வியும் முக்கியமோ, அதை விட முக்கியம் மனிதன் செல்லும் பாதையும், அந்த பாதையில் அவனுக்கு துணையாக வருகிற சொல்லும், சிந்தையும் தான் என்று மனோ தத்துவம் சொல்கிறது.
ஏனெனில் ஒரு பேசும் சொல் , அவன் நடக்கும் முறையும் அவன் மனதில் உள்ளது. அந்த மனம் நல்லதை சிந்திக்க , அவன் மனதில் நல்ல சிந்தனையை விதைக்க வேண்டும். நம் நல்வரின் பாடல்களில் உள்ள சொற்கள் நம்மை நல்வழிப்படுத்தி, நம்புடன் துணையாக இருந்து, இறைவனின் பாதத்திற்கு செல்லும் பாதையில் நம்மை கொண்டு சென்று, இறப்பும் பிறப்பும் இல்லா மரணமில்லா பெருவாழ்வு அடைய செய்யும் வலிமை உடையவை.
நால்வர் சென்ற பாதையில் சென்று, அவர்கள் பொற்ப்பாதங்கள் சென்ற வழியில் அடியேனின் சிந்தினையும் செல்ல, என் அத்தன் ஆருரனின் அருளால் அவரின் பெருமைகளை பேசும் அனைத்து அடியார்களின் சிந்தனைகளையும் இந்த சேனலில் பதிவு செய்ய உள்ளோம்.

சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
தெய்வத்தின்மேல் தெய்வம்இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணையே