முருகு என்ற வலைத்தளபக்கமானது
தலைவர்கள்
அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு
அறிவியல் அறிஞர்கள்
கண்டுபிடிப்புகள் வரலாறு, புவியியல், அரசமைப்பு, பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் தத்துவம், பண்பாடு
இசை . தெரிந்த தகவல்கள். தத்துவங்கள்ஆகியவற்றை தொகுத்து தருவது


Murugu info

ரவீந்திரநாத் தாகூர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பிறந்த தினம் மே 7, 1861

நினைவு தினம் ஆகஸ்ட் 7, 1941

** இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தியவர்.
** இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்
**, இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றியவர்.
** விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தொடங்கியவர்,

** ரவீந்திரநாத் தாகூர் 1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார். இவர் தமது பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் எழுத தொடங்கினார்.

** தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் இவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன.

** வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் இவர் வெளியிட்டார்.

** 1901-ஆம் ஆண்டு சாந்தி நிகேதன் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். தன் செல்வத்தையும், எழுத்து மூலம் தான் ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார்.

** சாந்தி நிகேதனில் மொழிகளும், கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்றனர், கற்பித்தனர்.

** இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர்.1921 ஆம் ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

** இரவீந்தரநாத் தாகூரின் படைப்பு கீதாஞ்சலி. கீதாஞ்சலி 103 கவிதைகளின் தொகுப்பாகும் இந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனைகளையும் அடிப்படையாக் கொண்டவை. முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதினார். பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார்.

** 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

** தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசு 1915-ஆம் ஆண்டு இவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919-ஆம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் .

** காந்தியடிகளை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் தாகூர்.

** இந்திய தேசிய கீதம் ஜன கண மன இரவீந்தரநாத் தாகூர் இயற்றினார்.

**.வங்காள தேசத்திற்கும் இவர்தான் தேசிய கீதத்தை இயற்றியனார்.

** இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர்.

** தேசிய கீதத்திற்கு இவரே இசையமைத்தார். தாகூர் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து இப்பாடலைப் பாடினார். இப்பாடல் மாணவர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. தாகூர் தான் இயற்றிய ஐந்து பத்திகளைக் கொண்ட முழுப்பாடலையும் பாடினார்.

** ஜன கண மன பாடலை தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஜன கண மன பாடலுக்கும் இசை அமைத்தார்.இந்த இரண்டு நிகழ்வுகளும் நிகழ்ந்த இடம் மதனப் பள்ளி.

** இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தன் கைப்பட எழுதிய ஜன கண மன பாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக வைத்துள்ளனர். தாகூர் ஜன கண மன பாடலின் ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு ‘The Morning Song of India’ என்று பெயரிட்டார்.

** சுதந்திரத்திற்குப் பிறகு கலந்துகொண்ட ஐக்கிய நாடு சபைக்கூட்டத்தில் இந்தியா தேசியப் பாடலான ஜன கண மன பாடலை இசைக்கப்பட்டது

** ஐ.நா. சபையில் தாகூர் இயற்றிய ஜன கண மன பாடல் ஒரு கிராமபோன் வாயிலாக ஒலிக்கப்பட்டது.

** இரவீந்தரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேத தனது 80-ஆவது அகவையில் மறைந்தார்.

14 hours ago | [YT] | 0

Murugu info

மே 03

**1941 ஆம் வருடம் பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

**சுஜாதா ரங்கராஜன் பிறந்த நாள்

**உலக பத்திரிகை சுதந்திர நாள்

4 days ago (edited) | [YT] | 1

Murugu info

ஏப்ரல் 29
^^^^^^^^^^

*** ஓவியத்தில் புகழ் பெற்றவர்

1.....ராஜா ரவி வர்மா
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1948

****************************************************

** தம் எழுச்சி மிக்க எழுத்தால் புகழ் பெற்ற
புரட்சிக் கவிஞர்.

2....பாரதிதாசன்
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1891

****************************************************

1.....ராஜா ரவி வர்மா
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1948

1** ரவிவர்மாவின் ஓவியங்கள் இந்தியாவில் தனித்துவமானவை.
2** உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
3** இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை உருவாக்கினார்.

4**உலக மக்களின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பியவர்.
5** நாட்காட்டி ஓவியம் என்னும் ஓவியத்துறை இந்தியாவில் தோன்றுவதற்கே இவரே காரணம்.

6**இவர் காலத்தில் இருந்த அரசர்கள் மற்றும் அரசியர்களை தீட்டிய உருவச்சித்திரங்கள் இன்றளவும் உயிர்ப்புள்ளவை. ஒரு நூற்றாண்டைத் தாண்டியும் இவரது ஓவியங்கள் புதுப்பொலிவுடன் உள்ளன.

7** 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை பூஜையறையிலும் வரவேற்பறையிலும் அனைவராலும் பயன்படுத்தப்படும் விநாயகர் மகா விஷ்ணு பரமசிவன் லட்சுமி சரஸ்வதி வள்ளி தெய்வானையுடன் மயில் மீது முருகன் அமர்ந்திருக்கும் ஓவியம் ராமர் பட்டாபிஷேகக் காட்சி ஆகிய தெய்வப் படங்கள் ராஜா ரவி வர்மா வின் கை வண்ணத்தில் உருவானவைகளே.

8** இன்று இவரது ஓவியங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இவரது ஓவியங்கள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக ரூபிகா சாவ்ளா எழுத்தோ வியத்துடன் மார்பிள் பதிப்பகம் மிகப் பெரிய அளவில் நூலாக வெளியிட்டிருக்கிறது.

9** மறைவு
^^^^^^^^^^^^
ரவி வர்மர் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி 58ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

10** இவரின் பெயரில் விருது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
புகழ் பொருந்திய ஓவியரான ரவிவர்மவை போற்றும் விதமாக கேரளா அரசு ராஜா ரவி வர்மா புரஸ்காரம் என்று ஒரு விருதை கலை மற்றும் கலாச்சார துறையில் சிறந்து விளங்கும் மக்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவித்து வருகிறது.

11**நினைவஞ்சலி
^^^^^^^^^^^^^^^^^^^
** கேரளாவில், மவேளிகராவில், ஒரு கலைக் கல்லூரி இவரது நினைவாக அமைக்கப்பட்டது.
** கிளிமானூரிலுள்ள ராஜா ரவி வர்மா உயர்நிலைப் பள்ளி இவரது பெயரால் பெயரிடப்பட்டது.
** இவரது பெயரில் கேரளா முழுவதும் பல கலாச்சார அமைப்புகள் உள்ளன.

****************************************************

2...பாரதிதாசன்
^^^^^^^^^^^^^^^^
பிறந்த தினம் ஏப்ரல் 29- 1891

1** புரட்சிக்கவி பாவேந்தர்
2* இவர் தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதிக பற்றுடையவராகத் திகழ்ந்தார்.
3** மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார்.
4** பாரதியின் மீது கொண்டு இருந்த பற்றால் இவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

5** இவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.எண்ணற்ற படைப்புகளை இவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருக்கிறார்.சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

6**எழுத்தாளர் திரைப்படக் கதாசிரியர் கவிஞர் அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர் பாரதிதாசன் .
7** பாரதிதாசனுக்கு பெரியார் புரட்சி கவிஞர் என்ற பட்டம் கொடுத்தார்.

8** அறிஞர் அண்ணா புரட்சிக்கவி என்ற பட்டம் வழங்கினர்.அறிஞர் அண்ணாவினால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

9**தமிழ்நாடு மாநில அரசாங்கம் இவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருதினை வழங்கி வருகிறது.

10** பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

11**1946 – அவரது அமைதி-ஊமைஎன்ற நாடகத்திற்காக இவர் தங்கக் கிளி பரிசு வென்றார்.

12**1970 – இவரது மரணத்திற்குப் பின், இவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

13**2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை இவரது பெயரில் வெளியிடப்பட்டது.

15** இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.

16**மறைவு
^^^^^^^^^^^^
பாரதிதாசன் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம்தேதி தமது 72ஆம் அகவையில் மறைந்தார்.

1 week ago | [YT] | 0

Murugu info

ஏப்ரல் 22

உலக புவி நாள் (world Earth Day)
உலக பூமி தினம் (WED) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்
அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்

2 weeks ago | [YT] | 1

Murugu info

ஏப்ரல் -- 21
***********

வாண்டுமாமா

வி. கிருஷ்ணமூர்த்தி

பிறந்த தினம் ஏப்ரல் 21-1925
நினைவு தினம் ஜுன் 12-2014

**தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லி

பிறப்பிடம்
^^^^^^^^^^^^^
வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா) 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் வி. கிருஷ்ணமூர்த்தி.இளம் வயதிலேயே தந்தையை இழந்தார்.திருச்சி லால்குடி திண்ணியம் கிராமத்தில் அத்தைகளிடம் வளர்ந்தார். அவர்கள் கூறிய கதைகள் மூலம் இவரது கற்பனைத் திறன் பெருக்கியது.

கல்வியும்-ஓவியத்திறமையும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
திருச்சி சின்னக் கடை வீதிமுனை பிள்ளையார் கோயில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், முகமதியன் இலவசப் பள்ளியிலும் பிறகு நேஷனல் கல்லூரி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.இவர் எப்போதும் வரைந்துகொண்டே இருப்பார்.இவர் பள்ளியில் படிக்கும் போது கரும்பலகையில் இறைவன் படங்களை வரைவார்.இவரின் ஓவியத்திறமையை கண்டு ஆசிரியர்கள் பாராட்டினார்கள் .இவருடன் படிக்கும் மாணவர்கள் இவரின் ஓவியத்திறமையைக்கண்டு வியந்தனர்.இவரின் விருப்பம் பெரிய ஓவியராக வேண்டும் என்பதுதான்.ஓவியத்திறமை மட்டும் இல்லாமல் கதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்,

முதல் கதை
^^^^^^^^^^^^^^^^
இவர் மாணவ பருவத்தில் இவர் முதன்முதலாக கலைமகள் இதழில் ‘குல்ருக்’ என்ற கதையை எழுதினார். இவர் பாரதி என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்துப் பத்திரிகைகள் மாநாட்டில் இவரது பத்திரிகை முதல் பரிசு பெற்றது.

பணி
^^^^^^^
உயர்நிலைப்படிப்புக்குப் பின்னர் குடும்ப சூழ்நிலையால் கல்லூரிப் படிப்பு இவரால் படிக்க இயலவில்லை. இவர் சிறிது காலம் திருச்சியில் பணியாற்றினார்,பின்னர் சென்னைக்கு வந்தார்.சென்னையில் ஆனந்தவிகடனில் கேலிச்சித்திரம் வரையும் ஓவியர் மாலியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.இவருக்கு ஆனந்தவிகடனில் ஓவியக்குழுவில் ஓவியத்திற்கு தலைப்பெழுதும் வேலைக்கிடைத்த்து. ஓவியம் வரையும் வேலை இவருக்கு கிடைக்கவில்லை.ஓவியத்தின் மீது இருந்த பற்றல் இந்த பணியைத்துறந்தார்.

புனைப்பெயர்
^^^^^^^^^^^^^^^
இவர் கௌசிகன் என்ற புனைபெயரில் பெரியவர்களுக்கு எழுதி வந்தார்.இவர் திருச்சிக்கு திரும்பினார். விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகள் எழுதத் தூண்டினார். மாலி தான் வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவர்.

பத்திரிக்கையில் பணி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
திருச்சியில் இருந்து வெளிவரும் சிவாஜி பத்திரிகையில் பணிச்செய்தார்.இந்த பத்திரிகையில் ஓவியம்,வடிவமைப்பு தவிர எழுத்து வேலையும் செய்தார். திருச்சியில் எம்.ஆர்.எஸ்.மணி சரஸ்வதி அச்சகம்னு ஒரு அச்சகத்தை நடத்தினார்.இந்த அச்சகத்தில் இருந்து வானவில் குழந்தைகளுக்கான மாதம் இருமுறை பத்திரிகையை வெளிவந்தது.வானவில் பத்திரிகை தமிழில் முதன்முறையாக சித்திரக்கதை உத்தியைக் கொண்டு வந்த்து.

வானவில் பத்திரிக்கை புகழ்பெற தொடங்கியது.இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவந்த மின்னல் பத்திரிக்கையின் பொறுப்பை இவர் ஏற்றார்.மணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் பணியைவிட்டு விலகினார்.மீண்டும் சிவாஜி பத்திரிகையில் பணியில் சேர்ந்தார். சிவாஜி பத்திரிகையில் குழந்தைகளுக்காக இவர் சிவாஜி சிறுவர் மலர் என்ற இணைப்பு பத்திரிகையை வெளியிட்டார். சிவாஜி பத்திரிகையின் பொருளாதார நிலைமையின் காரணமாக சிவாஜி சிறுவர் மலர் நிறுத்தப்பட்டது.கிண்கிணி பத்திரிகைகளில் பணியாற்றினார். கிண்கிணி பத்திரிகையும் சிறியகாலத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டது.

கல்கி இதழில் பணி
^^^^^^^^^^^^^^^^^^^^^
பல போராட்டத்திற்கு பிறகு கல்கி இதழில் விற்பனைப் பிரிவில் சேர்ந்தார். விரைவில் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.கல்கியின் அதிபர் இவருக்காகவே கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். கோகுலம் குழந்தைகள் வார இதழில் பலே பாலு, சமத்து சாரு போன்ற இவரது படைப்புகள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது.

கல்கி இதழில் 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்.தொழிலாளர் பிரச்சனையால் கல்கி தமது இதழை நிறுத்தியது.ஒரு ஆண்டுக்கு பிறகு கல்கி இதழ் வெளிவந்த்து.பின்னர் கல்கி இதழில் இவர் மீண்டும் பணியாற்றினார். பொருளாதார சூழ்நிலை காரணமாக கோகுலம் இதழ் நிறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான இதழ் பூந்தளிர்.இந்த இதழும் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட இந்த இதழில் இவர் இணைந்து மீண்டும் பூந்தளிர் இதழை வெளியிட்டார்.

இவரின் படைப்புகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^
வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாகவும், அழகாகவும்,அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும்.65 கதைகள், 45 அறிவியல் தொடர்பான புத்தகங்களை வாண்டு மாமா புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

குழந்தைப் பருவ கற்பனைகளுக்கு, சாகசக் கனவுகளுக்கு உயிர் கொடுத்தவர். சித்திரக் கதைகள் (Comics) சிறுவர் நாவல்கள், சாகசக் கதைகள், அறிவியல் புனைக் கதைகள், மருத்துவம், இயற்கை, தொழில்நுட்பம் என பல தளங்களில் முத்திரை பதித்தவர்.

அறிவியல், தொழில்நுட்பம் பற்றி படிக்கப் பிடிக்காத சிறுவர்களைக்கூட ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் வகையில் எழுதியது இவரது தனிச் சிறப்பு. குழந்தைகளுக்கான கதைகள், நாவல்கள், அறிவியல் நூல்கள் , சித்திரக்கதைகள் உள்ளிட்ட ஏராளமான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். கவுசிகன் என்ற பெயரில் இவரது 6 சிறுகதைத் தொகுப்புகள், 10 நாவல்கள் வெளிவந்துள்ளன.

விருதுகள்
^^^^^^^^^^^

**தோன்றியது எப்படி(இரண்டு தொகுதிகள்) - 1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

** மருத்துவம் பிறந்த கதை - 1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

**நமது உடலின் மர்மங்கள் - 1999 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு.

**மருத்துவம் பிறந்த கதை- 1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

**பெண்சக்தி - 2005 ஆம் ஆண்டுக்கான பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.

**பரவசமூட்டும் பறவைகள்- 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.

**இயற்கை அற்புதங்கள் - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இயற்பியல் வகைப்பாட்டில் பரிசு.

**அன்றும் இன்றும் - 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் பரிசு.

மறைவு
^^^^^^^^^
வாண்டுமாமா 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தமது 89ஆம் அகவையில் மறைந்தார்.

2 weeks ago | [YT] | 1

Murugu info

லியொனார்டோ டாவின்சி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

**பிறந்த தினம் ஏப்ரல் 15, 1452
**நினைவு தினம் மே 2, 1519

**உலக புகழ் பெற்ற ஓவியர்.
**லியொனார்டோ டா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியர்.
**இவருடய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஓவியம்.

**இன்றுவரை தன் மந்திரப் புன்னகையால் உலகையே மயக்கிக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியம் வரைந்தவர்.

லியொனார்டோ டா வின்சென்ட்
1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி இத்தாலியிலுள்ள வின்சி என்ற இடத்தில் பிறந்தார்.பெற்றோர் செர் பியரோ டா வின்சி- கத்தரீனா.

இவர் தந்தையார் ஒரு நில உரிமையாளர் தாய் ஒரு விவசாயிகள் குடும்பப் பெண். டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயதிலேயே வரைவதிலும் மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி.மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட தந்தை வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.

ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம் இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார்.

இவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஆற்றல் இவரிடம் இருந்தது. இவர் தன் விளக்கக் குறிப்புகளையும் கடிதங்களையும் இவர் வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார்..இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

டாவின்சிக்கு அதிக ஞாபக சக்தி இருந்தது. இவருக்கு குதிரைகள் என்றால் மிகவும் விருப்பம். இவர் நல்ல உடல் வலிமையுடன் திகழ்ந்தார். குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார். இயற்கையை அதிகம் நேசித்தவர். ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்தார்.இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர். தன் ஓவியங்களில் எந்த கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் பின்பற்றியதில்லை. இவர் ஓவியங்களில் ஒளியையும் அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் .டாவின்சி. இயற்கையை மட்டுமல்லாமல் விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார்.

விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டத்தில் வான் குடையைப் பற்றி சிந்தித்து துல்லியமாக வரைந்தவர் டாவின்சி. கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் அலாரம் பற்றி சிந்தித்திருக்கிறார்.நீராவி பற்றியும் பீரங்கிகள் பற்றியும் கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார். எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்தவர்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டியவர் டாவின்சி.நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார்.இவர் பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார்.

லியோனார்டோ டா வின்சி, ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இசை, அறிவியல், கணிதம், பொறியியல், தாவரவியல், உயிரியல், வானவியல் முதலிய பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மேதையாக விளங்கினார் .

லியோனார்டோ டா வின்சி வரைந்த கடைசி விருந்து மற்றும் மோனோலிசா போன்ற ஓவியங்கள். புகழ் பெற்றவை.
இறுதி இராவுணவு ஓவியம் மிலான் நகரில் அருளன்னை மரியா கோவில் என்னும் வழிபாட்டிடத்தை உள்ளடக்கிய துறவற இல்லத்தின் உணவறைச் சுவரில் வரைந்தார். இவ்வோவியம் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும் இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது. கடைசி இரவு விருந்து என்ற ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498 இவர் வரைந்து முடித்தார்.இந்த ஓவியம் சுண்ணாம்புக் கலவைச் சாந்து பூசிய சுவரில் வரைந்த சுவரோவியம் இவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவார். இவர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும்.

இவர் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட மோனாலிசா என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது.இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும் அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. மோனாலிசா ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

மோனலிசா என்ற மந்திரப் புன்னகை ஓவியம் ஆறு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு ஓவியத்தை வரைந்து முடித்தார் டாவின்சி. உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை இவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர். பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் உள்ளது. மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது இவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.

1519-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமது 67-ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

ஓரளவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான சித்திரங்களும் இருபதுக்கும் குறைவான வண்ண ஓவியங்களும் ஒரு சில குறிப்பேடுகளும் மட்டுமே இன்று இவருடைய ஓவியத்திற்கு சான்றாக உள்ளன. இவற்றைக் கொண்டுதான் இவருடைய அதிசயத் திறமைகளை வியக்க முடிகிறது.இவர் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகளைப்பற்றி குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்துள்ளார்.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மோனா லிசா ஓவியம், மர்மங்களால் சூழப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தின் பின் இருக்கும் இரகசியம் மற்றும் சதிக் கோட்பாடானது, டான் பிரவுனின் நாவலான 'டா வின்சி கோட்' வெளியான பின்பு தான் தெரிந்தது. மேலும்இந்த நூல் அதிகம் விற்பனையாகியுள்ளது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவல் மோனாலிசாவின் அடையாளம் மற்றும் இவரது புன்னகையின் இரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது.

இத்தாலியிலுள்ள கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய குழுவினர் (National Committee for Cultural Heritage), மோனா லிசா ஓவியத்தின் கண்களைப் பெரிதுபடுத்தி பார்த்த போது, அதில் எழுத்துக்களும், எண்களும் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த எழுத்துக்கள் ‘LV’ என்றும், வேறு சிலருக்கு ‘CE’ அல்லது ‘B’ என்றும் தோற்றமளிக்கிறது. அதன் பின்னணியில் இணையும் இடத்தில் ’72’ என்ற எண்ணைப் போன்று தோற்றமளிக்கும் குறியீடுகளும் தெரிகின்றன. ‘LV’ என்பது வரைந்தவரின் கையெழுத்துப் பெயரையே குறித்தாலும் (LV = Leonardo da Vinci), மீதி இருக்கும் குறியீடுகளின் அர்த்தம் என்ன என்று அறியக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

3 weeks ago | [YT] | 2

Murugu info

ஏப்ரல் 12
^^^^^^^^^^^^


விண்வெளி வீரர்கள் தினம்
------------------------------------------------------

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும்

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.


யூரி ககாரின் நினைவாக ருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1961-ல் விண்வெளிக்கு முதன் முதலில் விண்வெளிக்கு பயணம் செய்த ருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித விண்வெளிப் பயணத்துக்கான உலக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதி கொண்டாடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றியது,.

ரஷியாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12 வஸ்டொக்- 1 விண்கலத்தில் முதன் முதல் பயணம் செய்து பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் (108 நிமிடங்கள்) பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார்.

யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 இல் வஸ்டோக் விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

3 weeks ago | [YT] | 0

Murugu info

ஏப்ரல் -11
^^^^^^^^^^^^

ஜோதிராவ் புலே
===============

*** மகாத்மா ஜோதிராவ் புலே

பிறந்த தினம் ஏப்ரல் 11- 1827
நினைவு தினம் நவம்பர் 28- 1890

பிறப்பிடம்
^^^^^^^^^^^^^
ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் கோவிந்த்ராவ்-சிம்னாபாய்.

பெயர் காரணம்
^^^^^^^^^^^^^^^^^^^^

சுடர் ஒளி என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டினர்..இவரின் பெயர் ஜோதிராவ் கோவிந்தராவ் புலே.இவரின் குடும்பப் பெயர் கோர்கி என்பதாகும்..பூ வணிகம் செய்ததால் இவர்களை புலே என்று அழைக்கப்பட்டனர்.உண்மையான குடும்பப் பெயரான கோர்கிக்கு பதிலாக புலே என்ற பெயர் நிலைத்துவிட்டது.

கல்வி
^^^^^^^
இவரின் ஏழு வயதில் ஜோதி ஒரு மராத்தி பள்ளியில் சேர்ந்து தொடக்க கல்வியைக் கற்றார்.ஜோதிராவ் புலே படிப்பில் மிகுந்த அறிவும் ஆர்வம் கொண்டு கற்றார். தன் தந்தைக்கு தோட்ட வேலைகளுக்கு உதவியாக இருக்க பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார்.

ஜோதியின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு உருது ஆசிரியரும், ஒரு கிருத்துவ மதபோதகரும் ஜோதி யின் தந்தையிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வலியுறுத்தினார்கள். பதினான்காவது வயதில் பூனாவில் உள்ள ஸ்காட்லாந்து மிஷ்னரி பள்ளியில் மீண்டும் சேர்ந்தார். இவர் ஸ்காட்லாந்து மிஷ்னரி பள்ளியிலும், புத்வர் அரசு பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பள்ளியைத் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தாமஸ் பெயினின் படைப்பான மனித உரிமைகள் என்ற புத்தகம் ஜோதிராவ் புலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மட்டுமே உண்மையான சமூக மாறுதலை அடைய முடியும் என்று இவர் எண்ணினார்.

தன் மனைவி சாவித்திரிபாய்க்கு கல்வி கற்றுக் கொடுத்தார்.1848ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புத்தர்வதே என்ற இடத்தில் ஒரு வீட்டில் மகர், மங் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான முதல் பள்ளியை தனது 21வது வயதில் தொடங்கினார்.

தாழ்த்தப்பட்ட பெண் களுக்கு கல்வி கற்றுத்தர எந்த ஆசிரியர்களும் முன்வராத போது தன் மனைவி சாவித்திரியை அப்பள்ளியின் ஆசிரியராக நியமித்தார். 1851 சூலை 3ஆம் நாள் மற்றொரு பெண்கள் பள்ளியை புத்காவர்பேத் என்ற இடத்தில் தொடங்கினார். எட்டு மாணவிகளோடு துவக்கப்பட்ட இந்த பள்ளி நாற்பத்தி எட்டு மாணவிகளாக எண்ணிக்கையில் உயர்ந்தது.

1851-52ஆம் ஆண்டுகளில் மேலும் இரண்டு பள்ளிகளை பெண்களுக்காக திறந்தார். 1855ஆம் ஆண்டு மாலை நேரப்பள்ளி ஒன்றினை நிறுவினார்.மாணவர்களின் பயன்பாட்டிற்கு சுதேசி நூல் நிலையம் ஒன்றையும் தொடங்கினார். மாணவிகளுக்கு உணவும், ஆடையும் வழங்கினர்.

1853 செப்டம்பர் 10ம் நாளன்று தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கல்வி வளர்ச்சி கழகம் ஆரம்பித்தார்.

அனாதை இல்லம் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மறைமுகமாக தங்கி விதவைகள் பிரசவம் செய்துக் கொள்ளவும், அவர்கள் பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்கும் பூனாவில் ஒரு அனாதை இல்லத்தை தொடங்கினார்.

சத்திய சோதக் சமாஜ் சங்கம் தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

1873 செப்டம்பர் 24ல் ஜோதிபா தன் ஆதரவாளர்களை பூனாவிற்கு அழைத்து, சத்திய சோதக் சமாஜ் அதாவது ‘உண்மை நாடுவோர் சங்கம்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். தீனபந்து இந்த சங்கத்தின் பத்திரிகையாகும்.

ஜோதிபா சூன் 1, 1873ல் அடிமைத்தனம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். நேர்மையான வாழ்க்கை வாழும் எந்த மனிதனையும், தன் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு, அவனோடு சேர்ந்து உணவு உண்ண தயாராக இருக்கிறேன்” என்று அந்த புத்தகத்தில் அறிவித்தார்.அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட போராளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த புத்தகத்தை சமர்பித்திருந்தார்.

1876-77 ஆண்டுகளில் மராட்டியத்தில் மிகக்கொடூரமான பஞ்சம் ஏற்பட்டது. பட்டினியால் பல லட்சம் மக்கள் மாண்டார்கள். இந்த பஞ்சத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் வேறு ஊர்களுக்கு செல்லும்போது தங்கள் குழந்தைகளை தங்கள் ஊரிலே விட்டுக்சென்றனர். இந்த குழந்தைகளைக் காப்பாற்ற சத்திய சோதக் சமாஜ், 1877 மே 17ல்‘விக்டோரியா அனாதை இல்லம் ஒன்றை தொடங்கியது.

ஆலைத்தொழிலாளர் சங்கமும்- நூல் வெளியிடும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜோதிபாவின் நண்பருமான லோகந்தேவுடன் இணைந்து ஆலைத்தொழிலாளர் களின் உரிமைக்குக் குரல் கொடுக்க 1880ஆம் ஆண்டு முதல் ஆலைத்தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார்.விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 1883ஆம் ஆண்டு சூலையில் விவசாயிகளின் சாட்டை என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

*** மகாத்மா பட்டம்
^^^^^^^^^^^^^^^^^^^^
காந்திக்கு மகாத்மா பட்டம் கிடைப்பதற்கு முன், 1888-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜோதிராவ் புலேயின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மக்கள் இவருக்கு 'மகாத்மா’ என்ற பட்டம் சூட்டினர். அதன் பிறகு, இவரை மகாத்மா புலே என்றே மக்கள் அழைத்தனர்.

மறைவு
^^^^^^^^^^
மகாத்மா ஜோதிராவ் புலே 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தமது 63 ஆம் அகவையில் மறைந்தார்.

இவரின் இறுதி நூல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சர்வஜனிக் சத்ய தர்ம புஷ்தக் என்ற நூலை எழுதினார். இந்நூல், மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையையும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தையும் வலியுறுத்து கிறது. இந்நூலில் வேதங்களின் புனித தன்மையை மறுத்து, நான்கு சாதி அமைப்பை எதிர்த்துள்ளார்.

பக்கவாதத்தால் இவரின் வலது பக்க உடல் அசைவற்று போனதால் தனது இடது கையினால் எழுதினார். இந்நூலை 1889-ஏப்ரல்-1ஆம் தேதி முடித்தார். இவர் மரணத்திற்கு பின்பு 1891இல் இந்நூல் வளர்ப்பு மகன் யஷ்வந்த்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.

3 weeks ago | [YT] | 0

Murugu info

ஏப்ரல் 6
========
---------------------------------------------------------------------------
கோ. நம்மாழ்வார்
---------------------------------------------------------------------------

பிறந்த தினம் ஏப்ரல் 6 -1938
நினைவு தினம் டிசம்பர் 30 -2013

** இயற்கை வேளாண் விஞ்ஞானி
** பசுமை நாயகன்

நம்மாழ்வார் 1938 ஏப்ரல் 6ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தார்.இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். இவர் கடுஞ்சொல் பேசாதவர்.இவர் எளிமையானவர்.

இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். . கோவில்பட்டியில் ஓர் ஆய்வுப் பண்ணையில் இவருக்கு வேலை கிடைத்தது. அது ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆய்வுப்பண்ணை. 158 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாயப் பண்ணை அது. அங்கே பணியாற்றிய போது இவருக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

அங்கே நடைபெற்ற ஆய்வுகளால் விவசாயிகளுக்குப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.அதனால் பணியில் ஈடுபட முடியவில்லை.அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்தார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

இவர் தமிழகத்தின் அனைத்து கிரமங்களுக்குச் சென்று இயற்கை விவசாயத்தைப்பற்றி எடுத்துரைத்தார். 30 ஆண்டுகளாக தமிழக கிராமங்களில் இடைவிடாத சுற்றுப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டினார். விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை என்று கிராம மக்களிடம் எடுத்துக்கூறினார்.

ஆண்டு முழுவதும் விவசாய நிலங்களைப் பார்வையிடுவது, ஆலோசனைகளை வழங்குவது, விவசாயக் கூட்டங்களில் பங்கு பெறுவது, இயற்கை விவசாயத் தொண்டு நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது, அவற்றை ஓரணியில் திரட்டுவது, மாநகரங்களிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது என ஓய்வின்றி விவசாயிகளுக்காகவே உழைத்தார்.

புரட்சிகர விவசாய சிந்தனையை உருவாக்கிய ஜப்பானிய விவசாய அறிஞர் மசானோபு ஃபுகுவோக்கா, இந்திய நெல் வேளாண் விஞ்ஞானி டாக்டர் ரிச்சாரியா, பாஸ்கர் சாவே, கால்காணி வேளாண்மை என்ற கருத்தைத் தந்த தபோல்கர், சுரேஷ் தேசாய், பெங்களூர் நாராயண ரெட்டி எனப் பல இயற்கை விவசாய விஞ்ஞானிகளை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தவர்.

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் வேப்பமர உரிமையை தன்னுடையது என்று அமெரிக்கா கூறியது.வேப்பமரத்தை தனதாக்க முயன்றது அமெரிக்கா.இந்திய இயற்கை விவசாய சுற்றுச்சூழல் போராளி வந்தனா சிவா இயற்கை விஞ்ஞானிகள் உடன் நம்மாழ்வார் அமெரிக்கா சென்று போராட்டங்கள் நிகழ்த்தினார்.

பழங்காலம் முதல் வேம்பு எங்கள் பயிர் மருத்துவத்திலும் கால்நடை மருத்துவத்திலும் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும்,வேம்பின் பயன்களையும்
வேம்பின் சிறப்பையும் இலக்கியச் சான்றுகளுடன் உரைத்தார் நம்மாழ்வார். வேப்ப மரம் தொடர்பான அனைத்து உரிமைகளும் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றத் தீர்ப்பை பெற்றார் நம்மாழ்வார்.

இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.கரூரை அடுத்த வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கினார் வெற்றிகரமாக அதனை நடத்திவந்தார்.

அங்கிருந்த வறண்ட பாறை நிலப்பரப்பை இவர் மூன்றே ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றினார்.

பேரிகை என்ற இயற்கை உழ வாண்மை வாழ்வியல் மாத இதழை நடத்திவந்தார்.

60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் நிறுவினார்.

மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

இயற்கை விவசாயம் என்பது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ஆகியவற்றை பயன்படுத்தாது விவசாயம் செய்தல்.

**ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி முதலியவற்றின் எருக்களைப் பயன்படுத்துவது.
**பயிர் சுழற்சி முறை மூலம் தானிய சாகுபடி செய்வது.
**பசுந்தாள் உரம் பயன்படுத்துவது.
**இயற்கை விவசாயத்திற்கு கால்நடை வளர்ப்பும் மர வளர்ப்பும் முக்கியமானது.மரங்கள் தான் மழைக்கு ஆதாரம்.
**இயற்கை முறையில் செய்யும் கரைசலான பஞ்சகவ்யா, நவகவ்யா, மூலிகை கரைசல் ஆகியவை பயிர் பாதுகாக்கும்.

இவர் உருவாக்கிய அமைப்புகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*1979ல் குடும்பம்
*1990 லிசா (1990 – LEISA Network)
*1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்.
*இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
*நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
*வானகம் (பண்ணை)
*தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

இவர் எதிர்த்துப் போராடியவை
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*பூச்சி கொல்லிகள்
*மீத்தேன் வாயு திட்டம்
*மரபணு சோதனைகள்
*பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
*வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
*விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

**வேப்பமர உரிமையை பெற்று தந்தவர் நம்மாழ்வார்...

இவரின் படைப்புகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்)வெளியீடு வானகம்
*உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
*தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
*நெல்லைக் காப்போம்
*வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
*இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
*நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
*எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
*பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
*நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
*மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
*களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்
^^^^^^^^^^^^^^
2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது.

மறைவு
^^^^^^^^^
30 டிசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்கோட்டை கிராமத்தில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

கட்டுரை தொகுப்பு நூல்கள்
மற்றும் இணைய தளத்தில்
இருந்து தொகுக்கப்பட்டது...

1 month ago | [YT] | 2

Murugu info

ஏப்ரல் -4

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
பிறந்த தினம் 04-04-1855
நினைவு தினம்- 26- 04-1897

இவரின் சிறப்பியல்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

** மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.

** மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

** இவர் எழுதியது மிகுதி, 42 அகவையில் மறைந்தார் என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை.

** திருவனந்தபுரத்தில் ‘சைவப் பிரகாச சபை’ என்ற சபையை சுந்தரனார் 1885 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

இவரின் படைப்புகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவர் முதல் படைப்பு நூல் நூற்றொகை விளக்கம் என்னும் நூலாகும். இந்நூல் 1888ஆம் ஆண்டு வெளிவந்தது.

சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்,இவர் தமது ஞானகுருவின் மூலம் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார்.இவர் பரமாத்துவித என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார்.பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து இவர் மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார்.

மனோன்மணீயம் இவரது இரண்டாம் படைப்பு ஆகும் இக்கவிதை நாடகநூல் 1891ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக அமைந்தது.

இவர் நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு, பொதுப்பள்ளியெழுச்சி, நற்றாயின் புலம்பல், சிவகாமி சரிதம் ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.

இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநெல்வாடை ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

இவர் திருஞானசம்பந்தர் காலம், பத்துப்பாட்டு , முற்காலத் திருவாங்கூர் அரசர் , ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் , திருவாங்கூர் கல்வெட்டுகள், ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.

இவரின் ஆராய்ச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிட இன ஆராய்ச்சியாகும்..

இவர் சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞர்.கல்வெட்டுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். திருவிதாங்கூரின் பண்டை மன்னர்கள் என்னும் ஆராய்ச்சி நூலை 1894ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நூல் அந்நாட்டு வரலாற்றை உரைக்கும், இன்றியமையாத ஆதாரங்களுள் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. இந்நூலின் பொருட்டு, திருவிதாங்கூர் மாமன்னர், இவர் குடும்பத்தினர் திங்கள்தோறும், ஒரு நன்கொடை தொகையை பரம்பரையாகப் பெற்றுவர ஆணையிட்டார்.

திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையைத் தொடங்கியது. பேராசியர் சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை "Tamilnadu Antiquary", சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்களில் வெளியிட்டன.

புரவசேரி ஆழ்வார் கோயில், சோழபுரம் சோழராஜாகோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், திருவல்லம் பரசுராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை அவர் தேடிக் கண்டுபிடித்து அவை தரும் தகவல்களை வெளியிட்டார்.

.இவர் திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் , மரங்களின் வளர்ச்சி , புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892) ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவர் தமது ஞான ஆசிரியரான கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளின் நூலான நிஜானந்த விலாசம் என்ற நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார்.

விருதுகள்
^^^^^^^^^^^^
இவரின் தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி, இவரை இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் ஏஷியாடிக் கழகம்’ தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது.

லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் F.R.H.S. என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு ‘ராவ்பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கியது. ஜெர்மன் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்று 1896 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் இலக்கியம், வரலாறு, தத்துவத் துறைப் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக பணி புரிந்தார்.

ஆசிரியரைப் பெருமைப்படுத்துதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே சூட்டினார். தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

மறைவு
^^^^^^^^^^^

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப் பிரகாச சபையின் சார்பில் கேரளப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சுந்தரனார் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

1 month ago | [YT] | 2