சட்டம் தொடர்பான சந்தேகங்கள், முன் தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்கள் மற்றும் விளக்கங்கள் கொண்ட பகுதியாக இது இருக்கும்.
தொடர்புக்கு
ப. தனேஷ் பாலமுருகன், வழக்கறிஞர்,
திருநெல்வேலி
Mobile No. 8870009240, 9360314094,
ப. ராஜதுரை, வழக்கறிஞர்,
சென்னை.
Mobile No. 7299703493
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றம் கீழ்க்கண்டவாறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
1.வாதி தாக்கல் செய்த வழக்கு dimiss for default ஆனாலும், இரண்டாவதாக ஒரு வழக்கை தாக்கல் செய்ய தடையில்லை. (Dismissal Of Suit For Default Doesn't Bar Fresh Suit On Same Cause Of Action)
2. பூர்வீகச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு விட்டால் அதனை அவருடைய சுயசம்பாத்திய சொத்தாக கருத வேண்டும். அந்த சொத்தை அவர் விருப்பப்படி உயில் எழுதலாம், யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.(When Joint Hindu Family Property Is Partitioned, Shares Of Parties Become Their Self-Acquired Properties)
3. கிரைய ஒப்பந்தம் செய்து கொண்டவர் நில உரிமையாளருக்கு எதிராக சொத்தை விற்பனையோ, வில்லங்கமோ செய்யக்கூடாதென நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியாது. சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 54 ன்படி ஒப்பந்ததாரருக்கு சொத்தில் உரிமையை, ஆர்வமோ ஏற்படாது. அதனால் அப்படிப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி சிபிசி ஆர்டர் 7 ரூல் 11 ன் கீழ் மனுதாக்கல் செய்யலாம். (Proposed Purchaser Under Agreement To Sell Can't Sue Third Party Who Claims Title & Possession Of Property)
4. சொத்தை பொறுத்து விளம்புகை பரிகாரம் கோரும் வாதிக்கு வழக்கை தாக்கல் செய்வதற்கான காலவரையறை லிமிடேஷன் ஆக்ட் ஆர்ட்டிக்கிள் 58 ன்படி மோசடி ஆவணம் குறித்து தெரியவந்த தேதியிலேயே காலவரையறை தொடங்கி விடும். மாறாக அந்த ஆவணத்தை நகல் பெற்ற தேதியிலிருந்து தொடங்காது.( Article 58 Limitation Act | Limitation Period Begins When Cause Of Action First Arises, Not On Full Knowledge Of Dispute)
5. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் மூலமாக சொத்தை பொறுத்து விளம்புகை பரிகாரம் கோரி தாக்கல் செய்யும் வழக்கில், மூன்றாவது நபர்கள் அதே சொத்தைப் பொறுத்து ஏற்படுத்திய ஆவணங்களை பொறுத்து வாதி செல்லாது என்று அறிவிக்க கோரி பரிகாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை. (Plaintiff Can Seek Declaration Of Title Without Seeking Cancellation Of Sale Deed Executed By Another Party)
இந்த தீர்ப்புகள் அனைத்தும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்.
1 day ago | [YT] | 103
View 8 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
பூர்வீகச் சொத்தை பொறுத்து உறுதியான நிலைப்பாடு நீதிமன்றங்களிடையே இல்லை. உச்சநீதிமன்றமும் சரி, உயர்நீதிமன்றமும் சரி மாறுபட்ட தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதில் உச்சபட்சமாக உச்சநீதிமன்றம் கடந்த 22.04.2025 தேதியில் ANGADI CHANDRANNA VS SHANKAR & ORS என்ற வழக்கில் "When Joint Hindu Family Property Is Partitioned, Shares Of Parties Become Their Self-Acquired Properties" என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது பூர்வீகச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு விட்டால் அதனை அவருடைய தனிப்பட்ட சொத்தாக கருத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்படியானால் ஏற்கனவே பூர்வீகச் சொத்து என்று கூறி உரிமை அளிக்க மறுக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
இதற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளுக்கு நீதிமன்றங்கள் என்ன விடை அளிக்க போகின்றன.
1 week ago | [YT] | 67
View 8 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
கொடைக்கானல் நண்பர்கள் யாராவது இருந்தால் தொடர்பு எண்ணை பதிவிடவும். அல்லது தொடர்பு கொள்ளவும் - 8870009240
2 weeks ago | [YT] | 16
View 2 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
1994-ல் ஒரு படம் ரிலீஸானது.. அந்த படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இந்தியா முழுக்க அந்த படம் வெளியானாலும், சில இடங்களில் அந்த படத்தை தடை செய்யவும் கோரிக்கை எழுந்தது.. அந்த படத்துக்கு எதிராக பலரும் குரல் கொடுத்தார்கள்.. ஆனால், பல சினிமா ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், உலக சினிமா பார்ப்பவர்கள் என அத்தனை பேரும், இந்த படம் வெளியே வரவேண்டும்" என்றார்கள்.
இப்படி ஆதரவு, எதிர்ப்புகளுக்கு நடுவே அந்த படம் வெளியானது.. அந்த படத்தின் போஸ்டரில் A படம் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது.. இதை பார்த்து விட்டுத்தான் ஆண்கள் பலரும் தியேட்டருக்குள் சென்றார்கள்..
தியேட்டர் உள்ளே போனதுமே, படம் ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குள் அந்த முக்கியமான காட்சி வந்தது.. அதை பார்த்ததுமே தியேட்டர் முழுக்க காலியாகிவிட்டது.. இரண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும், அரை மணி நேரத்திலேயே மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.. இதனால், தியேட்டர்களில் பாதியிலேயே படம் நிறுத்தப்பட்டது..
பிறகு, மறுபடியும் அடுத்தக் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு தியேட்டர் வாசல்களில் ஆண்கள் கூடிநின்றார்கள்.. அவர்களும் தியேட்டருக்கு சென்று, அரை மணி நேரததுக்குள் வந்த அந்த காட்சியை மட்டும் பார்த்துவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
இதனால் அந்த டைரக்டர் மிகவும் வேதனைப்பட்டார். உலகத்தில் நடந்த ஒரு கொடுமையை நான் படத்தில் வைத்திருக்கிறேன். அந்த காட்சியில் ஒரு பெண் துணிச்சலாக நடித்துள்ளார்.. ஆனால், அதை கொண்டாடுவதை விட்டுவிட்டு, தியேட்டரை விட்டு வெளியேறுகிறார்களே? படம் முழுக்க பார்க்காமல், பாலியல் படமாகவும், வக்கிர படமாகவும் நினைத்து, அந்த காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு செல்கிறார்களே? என்று மனம் நொந்து கொண்டார்.
அதற்கு பிறகு அதே படம் வெளிநாடுகளில ரிலீஸ் ஆனது.. அதை வெளிநாட்டினர் கொண்டாடினார்கள். வெறும் மூன்றரை கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம், 24 கோடி ரூபாய் வசூல் செய்தது. உலகத்திலுள்ள அத்தனை அவார்டுகளையும் அந்த படம் வென்றது. முக்கியமாக ஒரு பெண்மணியை உலகுக்கு காட்டியது அந்த படம்..
அதுதான் 1994-ல் வெளிவந்த "பண்டிட் குயின்".. பூலான்தேவி கேரக்டரில சீமா பிஸ்வாஸ் அந்த படத்தில் நடித்திருந்தார்.. பின்தங்கப்பட்ட ஒரு கிராமத்தில் உயர்ஜாதியினர் சேர்ந்து, அந்த பெண்ணை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்வார்கள். பிறகு, அந்த பெண்ணை பொதுவெளியில் உள்ள கிணற்றடியில் நிர்வாணமாக நிற்க வைத்து, மொட்டை அடித்து, அந்த பெண்ணின் தலையில் வரிசையாக வந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.
நான் ஒரு பெண் என்பதால், இவ்வளவு சாதாரணமாக நினைத்துவிட்டாயா?" என்ற ஆவேசத்தில் அந்த பெண் மிகப்பெரிய சம்பல் கொள்ளைக்காரியாக மாறிவிடுவார்..
இது நிஜத்தில் நடந்த சம்பவமாகும்.. இதை உலகறிய செய்தார் அந்த படத்தின் டைரக்டர் சேகர் கபூர்.. இந்த காட்சியில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். ஆனால், பல நடிகைகள் நடிக்க மாட்டேன் என்றார்கள். உண்மை சம்பவத்தை உலகறிய காட்ட வேண்டும் என்ற முனைப்பில் டைரக்டர் எடுத்ததால் சீமா பிஸ்வாஸ், துணிந்து நடிக்க வந்தார்.
கொல்கத்தாவில் பிறந்து, அசாமில் படித்து, தேசிய நாடக பள்ளியில் பயிற்சி பெற்றவர் சீமா பிஸ்வாஸ்.. இவ்வளவு துணிச்சலாக நடித்தும்கூட, ஒரு கேவலமான செக்ஸ படம் போல அதை பார்த்துவிட்டு, அந்த காட்சி முடிந்ததுமே பொதுமக்கள் பலரும் வெளியேறியது உச்சக்கட்ட கொடுமை...
கிட்டத்தட்ட இந்த மனநிலைமைதான் சிறகடிக்க ஆசை துணைநடிகையின் ஆபாச வீடியோ நிகழ்வை பார்க்கும்போது எனக்கும் ஏற்படுகிறது. அந்த வீடியோ உண்மையாகவே இருந்தாலும், நீங்கள் யார் அதனுள் நுழைவதற்கு? ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? ஏன் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆக்குறீங்க?
ஆபாச வீடியோ உண்மை கிடையாது அது AI வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் நடந்து கொண்டிருப்பது எல்லாம் லிமிட்டை கடந்து போய்க்கொண்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் செய்தது சரியா தவறா என்ற கோணத்தில் தான் பேசுகிறார்களே தவிர, வீடியோவுக்கு பின்னால் இருக்கும், ஆண் குறித்து ஏன் பேசவில்லை? பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் அவனை கேள்வி கேட்கவில்லை? என்று இன்ஸ்டாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
வீடியோவை பார்த்ததும் பலரும் "அடடா புது வீடியோ, புது கன்டென்ட் கிடைத்து விட்டது" எனக்கூறி ஷேர் செய்தார்களே தவிர, பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, மனநிலை போன்ற பாதிப்பை எப்படி சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. காமவெறி கொண்டு காட்டுத் தீ போல வீடியோவைப் பகிர்ந்தார்கள்.. ஆனால், அது பெண்ணை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிப்பை உண்டாகியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நிர்வாணம் என்பது அருவருக்கத்தக்கதா? நிர்வாணம் என்பது குற்றமா? அவரது இன்ஸ்டா பதிவை பார்த்தாலே, அந்த பெண்ணின் மனநிலைமை எவ்வளவு வேதனையில் இருக்கிறது என்பது புரியும்.. ஒரு பெண் என்றால் உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா?
பெண்களை மதிக்க வேண்டும். அவர்களை போற்ற வேண்டும். வீடியோவின் உண்மைத்தன்மை தெரியாத நிலையில் அதனை பகிரும் ஆண்கள் அனைவருமே காம பிசாசுகள்தான்.
1 month ago | [YT] | 21
View 7 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
12.03.2025 சென்னை. வாய்ப்பு உள்ளவர்கள் சந்தித்து பேசலாம்.
1 month ago | [YT] | 18
View 5 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
சொத்து பிரிக்கும் போது உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகத்தை அவர்கள் மன்னித்தாலும், இறைவன் மன்னிப்பதில்லை
பங்கு கேட்பதில் இருக்கும் உரிமையை, பெற்ற தாயையும், தந்தையையும் பாதுகாப்பதில் காட்டுவதில்லை
ஏமாற்றி சொத்து சேர்க்கலாம் ஆனால் அதனை அனுபவிக்க ஏமாற்றி ஆயுளை அதிகரிக்க முடியாது
சொத்தை விட பந்த பாசம், உறவுகள் முக்கியம்
2 months ago | [YT] | 104
View 8 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப நல நீதி மன்றங்கள் அனைத்தும் கீழ் காணும் வழி காட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 31.01.2025 தேதியன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
1. வழக்கறிஞரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை குடும்ப நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்ற விதி 5(ii)ன் படி தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் (Power Agent) தாக்கல் செய்யலாம்.
சக்தியளிக்கப்பட்ட முகவரால் மனு தாக்கல் செய்யப்பட்டால், சிவில் நடைமுறைச் சட்டம் (CPC) ஆர்டர் - III, விதி 1- ன் கீழ், எதிரிக்கு முன்னறிவிப்பு (Notice) வழங்காமல் முதலில் அதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
2. குடும்ப நீதிமன்றம் மனுவை பதிவு செய்து, அதன் எண் (Numbering) வழங்கப்பட்டு, வழக்கறிஞர் அல்லது அவரது உதவியாளர் (Advocate Clerk) மூலமாக சம்மன் (Summons) அனுப்ப வேண்டும்.
3. தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் அவசர இடைக்கால நிவாரணத்திற்காக மனு தாக்கல் செய்யலாம்.
இந்த மனுவின் அவசரத்தன்மையை மதிப்பீடு செய்யும் போது, நீதிமன்றம் தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்.
எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, நீதிமன்றம் மனுவை முடிவு செய்ய வேண்டும்.
தேவையெனில், நீதிமன்றம் ஏகபட்சமாக (Ex-Parte) உத்தரவும் பிறப்பிக்கலாம்.
4. வழக்கில் உள்ள தரப்பினரை முதலில் ஆலோசனை (Counseling) க்கு அனுப்பி பின்னர் மத்யஸ்தம் (Mediation) க்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இருவரும் மத்யஸ்தத்திற்கே நேரடியாக சம்மதித்தால், ஆலோசனை (Counseling) கட்டாயமில்லை.
5. குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 9-ன் கீழ், தரப்பினரை மத்யஸ்தத்திற்காக அனுப்ப வேண்டும்.
அவர்கள் நேரில் (In-Person) அல்லது காணொளி (Video Conference - VC) மூலம் கலந்து கொள்ளலாம்.
காணொளி மூலம் பங்கேற்க உள்ள தரப்பினர், மத்யஸ்தருக்கும் எதிரிக்கும் முன்பே தகவல் வழங்க வேண்டும்.
6. மத்யஸ்தம் வெற்றியடைந்து குடும்ப நீதிமன்ற விதி Rule 35*ன் கீழ் ஒரு சமரசம் செய்யப்பட்டால், நீதிமன்றம் அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தி தீர்ப்பு (Judgment & Decree) வழங்க வேண்டும்.
Rule 27 அல்லது Rule 36*ன் கீழ் மத்யஸ்தம் தோல்வியடைந்தால், வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படும்.
7. குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 13 மற்றும் குடும்ப நீதிமன்ற விதி Rule 41*ன் படி, தரப்பினர் வழக்கறிஞரால் பிரதிநிதிக்க அனுமதிக்க மனு தாக்கல் செய்யலாம்.
நீதிமன்ற அனுமதி கிடைத்த பிறகு, வழக்கறிஞர் *CPC ஆர்டர் III விதி 4*ன் படி *வக்காலத்து (Vakalath)* தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கறிஞர் நேரில் நீதிமன்றத்தில் இருக்கும்போது, அவரது வருகை பதிவாக வேண்டும்.
8. தரப்பினர், சக்தியளிக்கப்பட்ட முகவர் அல்லது வழக்கறிஞர் எழுத்துப் பதிலுரை / மனு / எதிர்மனு (Written Statement / Application / Counter) தாக்கல் செய்யலாம்.
9. நீதிமன்ற விசாரணையின் போது தரப்பினரின் நேரடியாக ஆஜர் (Physical Appearance) தேவைப்பட்டால், ஆனால் அவர்கள் நேரில் வர முடியாவிட்டால், காணொளி மூலம் (VC) பங்கேற்க மனு தாக்கல் செய்யலாம்.
இந்த மனுவிற்கு எதிரிக்கு நோட்டீஸ் வழங்கிய பின், அதனை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
10. சாட்சி உறுதிமொழி (Proof Affidavit) தாக்கல் செய்யலாம். சாட்சியின் ஆதாரங்களை நேரில் (Physically) அல்லது காணொளி மூலம் (VC) பதிவு செய்யலாம்.
காணொளி மூலம் சாட்சியங்களை பதிவு செய்ய, முன்பாக எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.
VC மூலம் பங்கேற்கும் நபரை வழக்கறிஞர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் சரியாக அடையாளம் காண வேண்டும்.
விசாரணை நேரத்தில்:
விசாரணையின் போது, நீதிமன்றம் வழக்கறிஞர் அல்லது தரப்பினரை நேரடியாக கேட்டுப் பாராயணம் செய்யலாம்,
தரப்பினரின் (Physical Presence) அவசியமானது என்றால், அவர்கள் நேரில் (Physically) அல்லது காணொளி (Video Conference - VC) மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம்.
11. நீதிமன்ற தீர்ப்பு/உத்தரவு வழங்குதல்:
நீதிமன்றத்தின் தீர்ப்பு/உத்தரவு (Judgment/Order) ஒரு நகல் தரப்பினருக்கும் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவருக்கும் (Power Agent) இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் நேரில் வர இயலாத பட்சத்தில், அவரது வழக்கறிஞருக்குத் தீர்ப்பின் நகலை வழங்கலாம்.
நீதிமன்ற தீர்ப்பின் நகலை நேரடியாகப் பெற முடியாத நேரங்களில் அது மின்னஞ்சல் (E-mail) மூலம் தொடர்புடைய தரப்பிற்கு அனுப்பப்பட வேண்டும்.
12. தீர்ப்பின் நகல் பெறுவதற்கான மனு (Copy Application):
வழக்கறிஞர், தீர்ப்பின் நகலை பெறுவதற்காக (Copy Application) மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்.
தரப்பினர் வழக்கறிஞரால் பிரதிநிதிக்கப்படவில்லை என்றால் சக்தியளிக்கப் பட்ட முகவர், அவரது உதவியாளர் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.
2 months ago | [YT] | 22
View 1 reply
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?
ஒரு சொத்து குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?
அவ்வாறு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை பெற்றவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் உ. வி. மு. ச கட்டளை 21,விதி 97 ன் கீழ் அல்லது கட்டளை 21,விதி 98 மற்றும் 102 ன் கீழ் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது..உ. வி. மு. ச கட்டளை 21 விதி 102 ஆனது உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உரிமை மாற்றம் பெற்றவர் இந்த பிரிவின் கீழ் எந்த பரிகாரமும் கோர முடியாது என்று கூறுகிறது.
N. S. S. நாராயண சர்மா மற்றும் பலர் Vs M/s கோல்டு ஸ்டோன் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட் (2001-4-CTC-755) மற்றும் பானுமதி (எ) கருணையம்மாள் Vs A. P. அர்த்தநாரி மற்றும் பலர் (2002-5-CTC-483) மற்றும் உச்சநீதிமன்றம் "உஷா சிம்கா Vs டைனாராம் (2008-7-SCC-144)" ஆகிய வழக்குகளில், ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதில் தீரப்பாணையும் வழங்கப்பட்டிருந்தால், அந்த வழக்கு சொத்து குறித்து ஏதேனும் உரிமை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை அந்த சொத்தை வாங்கியவர்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு தடையை உ. வி. மு. ச கட்டளை 21,விதி 102 ஏற்படுத்தும் என்று தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கினால் அது அந்த தீர்ப்பை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் ஏதும் செய்ய முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
4 months ago | [YT] | 83
View 5 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
அரசு மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப் பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.. இதன் காரணமாகவே பலரும் தனியார் மருத்துவமனைக்குப் போய் பணத்தை கொட்டுகிறார்கள்.அரசு மருத்துவமனைக்கு வரும் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அவதி.. காத்திருப்பு என்று எரிச்சல் பலமடங்காகிறது. இதற்கு காரணம் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அவர்கள் கோபம் மருத்துவர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் திரும்புகிறது
மறுபுறம்.. அதிக பணிச்சுமை.. ஓய்வு இல்லாமல் மருத்துவர்களும் பணியாளர்களும் அவர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை எரிச்சல்களை வரும் நோயாளிகள் மீது வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறார்கள். கத்திக் குத்துக்கு உள்ளான பாலாஜி அவர்களும் அப்படி வார்த்தைகளை விட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனாலயே அந்த பையன் மருத்துவர் மீது வெறிக் கொண்டு கத்தியால் குத்தியிருக்கிறான் என்று தோன்றுகிறது.
ஏழைகள் என்பதால் எல்லா நேரமும் எல்லோரும் எல்லா வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு செல்ல மாட்டார்கள். அவமானத்திற்குள்ளாகும் யாராவது இப்படி எதிர்வினையைக் காட்டும் துன்பம் நிகழ்ந்துவிடக்கூடும்.ஒரு மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்ற வெறி சாதாரணமாக ஒரு இளைஞருக்கு வந்திருக்க முடியாது. பையனின் செயல் மருத்துவரின் ஏதோ ஒரு அலட்சியத்திற்கு எதிரானதாக
இருக்கலாம்.. !
அதற்காக இந்த தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.இந்த பிரச்சினையில் சும்மா செய்தி பரபரப்பிற்காக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு என்று நாலு நாள் பேசலாம்.. ஆனால் உண்மையான தீர்வு.. மருத்துவர்களின் எண்ணிக்கையையும் ஊழியர்கள் எண்ணிக்கையும்.. கூடவே பொதுமக்களிடம் கரிசணத்துடன் நடந்துக் கொள்ளும் பண்பை மருத்துவ பணியாளர்களுக்கு உருவாக்குவதே முழுமையாக தீர்வளிக்கும்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏதோ ஒரு வகையில் அரசும் பங்காளிதான். பையன் செய்த தவறுக்கு சிகிச்சைப் பெற்று வரும் அந்த பையனின் தாயார் மீது மருத்துவர்கள் வெறுப்பைக் காட்டாமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப் படுத்த வேண்டும்.
5 months ago | [YT] | 111
View 10 replies
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Doctrine of Acquiescence -
இது சட்டத்தில் ஒரு முக்கிய தீர்ப்பு.!
தமது சொத்தை ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் போது ஆட்சேபனை செய்யாமல் இருந்து விட்டு காலம் கடந்த பின்னர் ஆக்கிரமிப்புசெய்தவர் பேரில் விளம்புகை சொத்து சுவாதீனம் & கட்டிடத்தை இடித்து கொடுக்கும் படி செயலுறுத்துக் கட்டளை ஆகிய கோர முடியாது என தீர்ப்பு உள்ளது.
Plaintiff had not obstructed during the construction by the defendant. In such circumstances the plaintiff is not entitled for declaration, recovery of possession and Mandatory injunction for removal of superstructure on the basis of Doctrine of Acquiescence.
Seetharaman Vs Jeyaraman (2014-3-CTC-802)
6 months ago | [YT] | 55
View 8 replies
Load more