LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

4 months ago | [YT] | 28