அனைவருக்கும் வணக்கம்:
என்னுடைய நோக்கம் நான் படிக்கும் புத்தகங்களில் உள்ள கருத்துக்களையும் புத்தகம் குறித்தும் இங்கே வீடியோ வடிவில் பகிரப்படும். இது எனக்கும் புத்தகம் படிக்க உந்துதலாக இருக்கும் உங்களுக்கும் பயன்படும் என்ற நோக்கிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரம் ஒரு புத்தகம் குறித்து விரிவாக பேசுவேன். நீங்கள் புத்தகம் பரிந்துரை செய்தால் அதையும் படித்து விட்டு கருத்துக்களை பகிர தயாராக உள்ளேன்.
மின்னஞ்சல் : noolthiran@gmail.com
நன்றி 🙏
Warm Greetings to All !
My objective of starting this YouTube channel is to share the information and views about the books which i read in short videos .
This will be useful to general public and motivate me to read more books.
I wish to speak about a book every week. I am ready to read and speak about the books which is recommended by my subscribers.
E-Mail ID : NOOLTHIRAN@GMAIL.COM
Thank you 🙏
Noolthiran
பெண்...
உடலில் மென்மையானவள். உள்ளத்தின் வன்மையானவள். உணர்விலோ ஆழமும் அகற்சியும் கொண்டவள்.பல்லாயிரம் எண்ணக்கால்கள் அவள் உள்ளத்தில் ஊன்றியுள்ளன; அவற்றிற்குச் சிறகுகள் உண்டு; வல்லமை உண்டு. அவ்வெண்ணங்கள் ஒன்றிலும் ஊன்றாமலிருக்கும் வரை. அவளை நிலைப்படுத்த எவராலும் இயலாது. ஒன்றில் ஊன்றி விட்டாலோ அவற்றைச் சிறிதே பெயர்க்கவும் எவராலும் முடியாது. எத்துணைத் துயர் வந்தாலும் அவள் அந்நிலையினின்றும் விலகவே மாட்டாள்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நன்றி 🙏
பிரபு
ஆயந்தூர்
19.12.2025
1 day ago | [YT] | 2
View 0 replies
Noolthiran
ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ,ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, ஒரு குறிப்பிட்ட மொழிக்கு, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ வழங்கப்பட்டது அல்ல பௌத்தம். உலகம் முழுவதும் வாழக்கூடிய ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வழங்கப்பட்டதே பௌத்தம்.
1 week ago | [YT] | 2
View 0 replies
Noolthiran
தமிழரின் தொன்மை
முதல்வன் எனுமோர் முதன்மைதான் பெற்ற!
கதிரவன் தோன்றிய காலம் முதலாகத்
தோன்றிய ஓரினம்! தொன்மை மனிதத்தை
ஈன்றதே இந்த இனம் !
- முகிலை இராசபாண்டியன்
நன்றி 🙏
பிரபு
ஆயந்தூர்
29.11.2025
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Noolthiran
ஜோதிராவ் கோவிந்த்ராவ் புலே நினைவைப் போற்றுவோம்.
1890ஆம் ஆண்டு இன்று ஜோதிராவ் கோவிந்த்ராவ் புலே மறைந்த நாள். இந்திய சமூக சீர்திருத்த வரலாற்றில் மறக்க முடியாத பெயராக அவர் திகழ்கிறார். சாதி ஒழிப்பு, பெண்கள் கல்வி, திறந்த சிந்தனை ஆகியவற்றுக்காக போராடிய முன்னோடி சீர்திருத்தவாதி.
அவரும் அவரது மனைவி சாவித்ரிபாய் புலேவும் இணைந்து இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கினர். சமூக அநீதிகளுக்கு எதிராக எழுதிய அவரது நூல்கள் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. ‘சத்தியசோதக் சமாஜ்’ என்ற அமைப்பை உருவாக்கி சமத்துவம், நியாயம், மனிதாபிமானம் ஆகிய கருத்துகளை பரப்பினார்.
சமூக மாற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஜோதிராவ் புலேவை இன்று நினைவுகூர்வோம். அவர் விதைத்த சமத்துவ விதைகள் இன்று வரை நம் சமூக சிந்தனையை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. 🌿✨
நன்றி
பிரபு
ஆயந்தூர்
28.11.2025
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Noolthiran
தங்கம், மஞ்சள் நிறமாய் மின்னும் தங்கம்!
அருமையும் பெருமையும் கூடிய தங்கம்!
இம்மியளவே ஆயினும் என்னென்ன செய்திடும் ?
கருப்பை வெள்ளையாக்கும், கெட்டதை நல்லதாக்கும்!
தவறென்றானதை சரியென்றாக்கிடும்!
இழிந்ததை சிறந்ததாய் உயர்த்தி வைத்திடும்!
கிழவனை குமரனாய், அஞ்சி நடுங்கும் கோழையைத் தீரனாய் மாற்றி வைத்திடும்!
என்னோ இது, விண்ணுறை தெய்வங்காள்!
அர்ச்சகரை, அடியாரை உம்மிடமிருந்தே கவர்ந்து கொள்ளுமே!
மல்லர்தம் தலையணை தட்டிச் செல்லுமே!
இம்மஞ்சள் அடிமை என்னென்ன செய்திடும்?
மதங்களைப் பிணைக்கும், சிதைக்கும்!
படுபாவிக்கும் அருள் பாலிக்கும்!
தொழுநோயென்றும் பாராது குலாவச் செய்திடும்!
கொள்ளையர் தம்மை அவையிலமர்த்தி,
பட்டமும் பாராட்டும் பெற்று தந்நதிடும்!
வதங்கிய விதவையை மணவறையில் அமர்த்திடும்!
வினை வைக்க வந்த மண்மகளே!
மனிதரனைவர்க்கும் வாய்த்த விலைமகளே!
- ஷேக்ஸ்பியர்
நன்றி
பிரபு
ஆயந்தூர்
27.11.2025
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Noolthiran
வீரத்தின் உருவம் நீயே!
விண்ணுலகம் வியக்கும் வீரன் நீயே!
அடிமை நிலை அழிய அழைத்தவன் நீயே!
அறத்தின் அடையாளம் நீயே!
சம உரிமை பேசிய சமகால சாணக்கியன் நீயே!
தமிழ் மண்ணை காக்க வந்த தலைவன் நீயே!
தமிழினத்தின் அரண் நீயே !
தமிழர்களின் அண்ணனும் நீயே!
தமிழர்களின் தகப்பன் நீயே!
தமிழர்களின் குருதியும் நீயே!
தமிழர்களின் வழிகாட்டியும் நீயே!
எல்லாம் நீயே!
நான் வீழ்ந்தாலும் , என் தமிழினம் வாழ்ந்தால் போதும் என்று போராடிய தமிழினத் தலைவர் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள்.
குறிப்பு: நமக்கும் இப்போது எல்லாம் எதோ கவிதை எழுத வருகிறது. காரணமாக நான் நினைப்பது வாசிப்பு ஒன்று தான்.
நன்றி 🙏
பிரபு
26.11 .2025
3 weeks ago | [YT] | 6
View 0 replies
Noolthiran
வாடித் தொழிலின்றி
வறுமையால் சாவதெல்லாம்
கூடித்தொழில் செய்யாக்
குற்றத்தால் என் தோழர்களே!
- பாவேந்தர்
குறிப்பு: படத்தில் எனது அப்பா, அம்மா, மகள்
நன்றி 🙏
பிரபு
15.11.2025
@highlight
1 month ago | [YT] | 0
View 0 replies
Noolthiran
நளி இருமுந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக.
- புறநானூறு
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி.
- பட்டினப்பாலை
தமிழ்நாட்டில் செழிப்புற்றிருந்த கடல் வணிகத்தைக் காட்டுகிறது.
நன்றி 🙏
பிரபு
13.11.2025
1 month ago | [YT] | 1
View 0 replies
Noolthiran
சி.பா. ஆதித்தனார் அவர்கள் எழுதிய நூல்கள் எனக்கு வாசிக்க தேவைப்படுகிறது. எங்கு கிடைக்கும் என்ற தகவல் கொடுக்கவும். இணையத்தில் தேடினால் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தாலோ அல்லது எங்கு வாங்க முடியும் என்ற தகவல் தரவும்.
1. தமிழ் பேரரசு
2. சுதந்திர தமிழ்நாடு வினாவிடை
இந்த இரண்டு நூல்களும் தேவை உதவி செய்யவும்.
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிரவும்.
நன்றி 🙏
பிரபு
ஆயந்தூர்
@highlight
1 month ago | [YT] | 0
View 0 replies
Noolthiran
பேராசிரியர் வி. சிவசாமி — ஈழத்து தமிழறிஞரும் கல்வியாழியும் மாணவருக்கும் வழிகாட்டிய ஒரு தலைவரும். தமிழின் நடன கலையும் இலக்கியங்களுக்கும் அவர் ஆழ்ந்த ஆய்வு செய்தார்; தமிழர் மரபு, கலாச்சாரம் குறித்து அவர் வழங்கிய பங்களிப்புகள் நமக்கு வழிகாட்டும் நூல்களாக இருப்பின் நினைவில் நிற்கும். அவருடைய நினைவை நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.
வி. சிவசாமி அவரின் நூல்களைத் தொகுத்து சில விவரங்களுடன் கீழே வழங்குகிறேன்:
தமிழ் தொல்பொருளியல்‑ஓர் அறிமுகம் 1972 தொல்லியல் (இலங்கைத் தமிழகம் மற்றும் பரம்பரை ஆய்வுகள்) குறித்து அறிமுகம் வகையில் எழப்பட்ட நூல்
தமிழ் திராவிடர்‑ஆதிவரலாறும் பண்பாடும் 1973 “திராவிடர்” என்ற பரிமாணத்தில் வரலாறு மற்றும் பண்பாட்டு அம்சங்களை ஆய்வு செய்த நூல்.
தமிழ் ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் 1974 இலங்கையில் “ஞானப்பிரகாசர்” என்று அழைக்கப்படும் புலவர்களின் வரலாற்று ஆய்வினை கொண்டு அமைந்த நூல்.
தமிழ் யாழ்ப்பாணக் காசுகள் 1974 யாழ்ப்பாணம் கொண்ட நாணயங்கள் (காசுகள்) மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை பற்றிய நூல்.
தமிழ் ஆரியர்‑ஆதிவரலாறும் பண்பாடும் 1976 “ஆரியர்” என்ற வரலாற்றுப் பரிமாணத்தில் பண்பாட்டு ஓர் ஆய்வு.
தமிழ் கலாமஞ்சரி 1983 இசை, நடனம், கலை எனப் பல்வேறு கலைகளைக் கொண்டுள்ள ஆய்வுப் தொகுப்பு நூல்.
தமிழ் பரதக்கலை 1988 பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டியக்கலையின் வரலாற்று-தொழில்நுட்ப ஆய்வு நூல்.
தமிழ் தென்னாசிய சாஸ்த்ரிய நடனங்கள் ‑ ஒரு வரலாற்று நோக்கு 1998 தென்னாசிய நாட்டிய மரபுகள் (அதாவது பரதம், ஒடிசி, கதக், போட்டி) தொடர்பான வரலாற்று நோக்கு ஆய்வு.
தமிழ் தமிழும் தமிழரும் 1998 தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் மொழி-மரபு, பண்பாடு ஆகியவைக் கருத்துகளைத் திறந்தவாறு ஆய்வு செய்கிறது.
தமிழ் இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் 2005 இந்து பண்பாட்டின் பழைய மற்றும் இன்றைய நிலைகளைக் காணும் ஆய்வு நூல்.
இப்படி பல நூல்களை வழங்கிய மகத்தான மனிதர் ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி.
நன்றி 🙏
பிரபு
ஆயந்தூர்
08.11.2025
1 month ago | [YT] | 0
View 0 replies
Load more