நமது பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் வேளாண் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை சந்தை விலைக்கு சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி, அவற்றை மதிப்புக்கூட்டி நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறோம். விவசாயிர்களிடம் இருந்து பொருட்களை வழங்குவதுடன் அல்லாமல் அவர்கள் தங்கள் பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யவும், அதன் மூலம் கூடுதல் மகசூல் எடுக்கவும் அனைத்து வகையான இடுபொருட்களை அவர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி வருகிறோம். இதன்மூலம் விவசாயிகளுடனான இருமுனை தொடர்பை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை Famara என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறோம். விவசாயிக்க மற்றும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வலையொளியில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம். நமது வலையொளியில் பதிவு செய்யப்படும் கருத்துக்கள் அனைத்தும் விவசாயிகளின் அனுபவ பதிவுகள் மட்டுமே. வாசகர்கள் தங்களுக்கு கருத்து மாறுபாடு இருப்பின் விலகி சென்றுவிடலாம். பதிவிடப்பட்டுள்ள கருத்துக்களை கட்டாயம் ஏற்கவேண்டும் என்பது அவசியம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


0:39

Shared 8 years ago

2.2K views