YUSUF YOUTUBE ISLAMIC CHANNEL

இஸ்லாம் மதம் அல்ல வழிகாட்டும் மார்க்கம்.
துணிவு, கனிவு, பணிவு,பரிவு,பிரிவு, பணம், பதவி, அரசியல், ஒழுக்கம், நேர்மை, வியாபாரம், திருமண ஒப்பந்தம், முறிவு, சொத்து சேர்த்தல் , சொத்து பிரித்தல், அண்டை அயலாருடன் நட்பு, பெற்றோரின் கடமை,பிள்ளைகளின் கடமை, கணவனின் கடமை,மனைவியின் கடமை, உடை உடுத்தல், உள்ளத்தை அலங்கரித்தல்,குழந்தை வளர்ப்பு, வளர்ந்த பிள்ளைகளை நேர்வழி செலுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உடல் துப்புரவு,உறவுகளை பேணுதல், இல்லறத்தில் கூடுதல்,ஜகாத் மற்றும் ஸதகா உதவுதல்,நோன்பு, ஐவேளை கடமை, மரணித்தவருக்கு செய்ய வேண்டியவை. இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனும் வாழும் முறையும்,சமுதாயம் பேணும் முறை கூறுதலே மார்க்கம் அதுவே இஸ்லாம். இஸ்லாம் என்ற சொல் அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்தசொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். "அல்லாஹ்" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது பொருள். அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை.