வேதாத்திரிய வாழ்வியல் ஆராய்ச்சியின் வழியே, உடல், மனம், உயிர் காக்கும் எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பயோகப் பயிற்சி, தவம் தத்துவ உண்மைகள், அகத்தாய்வு, விளக்கங்கள் உங்களுக்காகவே வழங்குகிறோம்.
-
மறுப்பறிக்கை: அன்பர்களே, @Vethathiriya காணொளிகள் வாயிலாக குண்டலினி யோகம் குறித்த எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இதை உங்கள் அறிவின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு, பொருந்தினால், பயன்படுத்திக் கொள்க. நாங்கள் எந்த வகையிலும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. எதிர்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
-
Disclaimer: Dear friends, Please pay attention. @Vethathiriya sharing the experiences on Kundalini Yoga through this videos. You need understand it with the research of your knowledge then practice it. We let you know that we are not forcing you in any way. We will not be held responsible for the consequences.
-
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! - Be blessed by the Divine!
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, நாம் படும் துன்பத்திற்கு எல்லாம் மனம் தான் காரணமா?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
மனம் ஒன்றும் கெடுதல் செய்யவில்லை. மனதை நீங்கள் எப்படி பழக்கி வைத்திருக்கிறீர்களோ அவ்வழியே நீங்கள் தான் நின்று, சுருங்கி, விரிந்து, மலருகிறீர்கள். மனதை ஆட்டி வைப்பதற்கு யாரும் கிடையாது. மனதைக்கொண்டே நாம் யார் என்று பார்த்தோமானால், மனமே தான் நாமாக இருக்கிறது என வரும்.
நாம் என்ன செய்தாலும் எல்லாம் மனதின் அடித்தளமான ஜீவகாந்தத்தில் பதிகிறது. இது இறைவனின் ஆற்றல். இதைக் கொண்டு, மனம் நம்மை உயர்த்தும், தாழ்த்தும் எனத் தெரியவரும். நாமும் மனதை உயர்த்தலாம், தாழ்த்தலாம்.
வாழ்க வளமுடன்!!
3 hours ago | [YT] | 18
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, சிவயோகம் என்று சொல்லப்படுவது என்ன? அதை எப்படி நம்முடைய இயல்பான வாழ்க்கையில் கடைபிடிப்பது என்று விளக்குவீர்களா?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
பிற உயிர் உணரும் இன்ப துன்ப இயல்பினைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நுட்பமும், அப்படி உணர்ந்து கொண்ட பிறகு அதற்கு இரங்கி உதவும் ஒரு திருப்பமும் மனிதனிடத்து வந்து விடுமேயானால், மனிதனுடைய மனதிலே அறவுணர்வு என்னும் தெய்வீக உணர்வு கிட்டும். பிறருடைய துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுகிறதல்லவா? அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவைப் பிறரோடு கொண்டபோது அதிலிருந்து சேவை மலர்கிறது.
அறிந்தது சிவம். காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்ன என்று பார்க்கும்போது “சிவத்தின் செயலே” எனத்தெரிய வரும். செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் தன்மை.
ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அனைவரோடும் உறவு கொண்டு கடமையாற்றி வந்தால், அதுவே சிவயோகம். எந்தப் பொருளிலேயும், சிவனைக் காணலாம். எந்த நிலையிலேயும், சிவனாகவே இருக்கலாம். சிவனோடு உறவாக இருக்கலாம்; உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால் இறைவனோடும், உயிர்களோடும் ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்த வல்லவை, தவமும் அகத்தாய்வும் தான்.
வாழ்க வளமுடன்!!
2 days ago | [YT] | 282
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, நான் இதுவரை வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து வாழ்ந்துவிட்டேன். ஆனால் நான் பெற்றதோ, துன்பமும் கஷ்டமுமே ஆகும். இப்போது நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்ன செய்ய?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
அறநெறியில் நம்பிக்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். அதை அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும். அதற்கு வேறு மாற்று வழியில்லை.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை புரியும்.
வாழ்க வளமுடன்!!
4 days ago | [YT] | 237
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய அன்பர்களுக்கு அறிவிப்பு - தலைப்பு மாற்றம் - Headline Changed (@Vethathiriya )
Vethathiriya SKY Lead - Vethathiriya Simplified Kundalini Yoga Lead
வேதாத்திரிய ஸ்கை வழிகாட்டி - வேதாத்திரிய எளியமுறை குண்டலினி யோகா வழிகாட்டி
வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
4 days ago | [YT] | 11
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, இறைவனுக்கு படையல் படைப்பது எதற்காக?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
மனித மனமானது இறைநிலையின் முடிவான பொருள். பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. அதுவே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் திணிவு பெற்று மடிப்புற்று விண் தோன்றி அது இணைந்து பஞ்சபூதங்களாகி அதன் பதம் அடைந்த கூட்டால் ஓரறிவு உயிர்கள் தோன்றி அதிலிருந்து பரிணமித்து ஆறறிவு மனிதன் வரை அவனேதான் வந்துள்ளான்.
இறைநிலையிலிருந்து எழுந்து வந்த நிலையில் இயங்குகின்ற உயிர்களுக்குத்தான் பசி, தாகம், இன்பம், துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஆசைகள் தோன்றும். ஏன் எனில், உயிர்களுக்கு உடலும், குடலும் வந்துவிட்டது! ஆனால் அரூபியான இறைவனுக்கு உடலும், குடலும் உண்டா? அவனுக்கு பசிக்குமா? இந்த ஒரு கேள்வியை எழுப்பி மனிதன் சிந்தனையால் விரிந்து விடையைப் பெற்று விட்டால் தேங்காய், பழம் மற்றும் பட்டு நகை இன்னும் மற்ற பொருட்கள் எல்லாம், அணு முதற் கொண்டு அண்டம் ஈராக இப்பிரபஞ்சத்தை தன்னகத்தே வைத்தும், காத்தும், இயக்கியும் வருகின்ற இறைவனுக்குத் தேவைதானா என்பது விளங்கிவிடும்.
வாழ்க வளமுடன்!!
6 days ago | [YT] | 208
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
சுவாமிஜி, கோயில்களில் அங்கப்பிரதட்ஷணம் செய்வதின் பொருள் என்ன?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
கோயில்களில் “அங்கப்பிரதட்ஷணம்” என்ற ஒரு சடங்கு முறை உண்டு. கோயில் பிரகாரத்தை மனிதன் தரையில் படுத்து உருண்டு கொண்டே சுற்றிவரவேண்டும் என பெரியவர்கள் வைத்துள்ளார்கள்.
மனிதன் இருக்கும் இடத்திலேயே எல்லை கட்டிய நிலையில் உருண்டு கொண்டேயிருந்தால் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது. தன்னையோ மனித வாழ்வின் நோக்கத்தையோ அறிந்து கொள்ளவும் முடியாது
மனிதன் தன் குறுகிய வட்டத்தைத் தாண்டி கடந்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்த “அங்கப்பிரதட்ஷணம்” என்ற சடங்கு முறையில் தரையில் உருளச் செய்து பிறகு எழுப்பி நடத்திக் காட்டி உணரச் செய்தார்கள்.
வாழ்க வளமுடன்!!
6 days ago | [YT] | 25
View 0 replies
Vethathiriya SKY Lead
கேள்வி:
சுவாமிஜி, நல்லவர்களுக்கு துன்பம் ஏற்படுவது ஏன்?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
பரிணாமத் தொடர்ச்சியான மனிதகுலம் கூட்டமைப்பில் தான் வாழ முடியும். ஒரு நாளைக்கு நாம் உண்ணுகிற உணவில், எத்தனை பேருடைய எண்ணம், உழைப்பு, உழைக்கும் போது உடல்படும் துன்பத்தில் ஏற்படும் வருத்த அலைகள் இவை அனைத்தும் சேர்ந்த வினைப்பதிவுகளோடுதான் பெறுகிறோம்.
சமுதாயத்தில் ஏற்படும் வினைப்பதிவுகளை நாம் ஒவ்வொரு நாளும் பங்கிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அது செயலுக்கு வராது இருக்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தோம்? அதைச் சமன் செய்து (Neutralise) உணவை எடுத்துக் கொள்கிற போது அதன் பதிவுகள் எல்லாம் போய்விட வேண்டும். அந்த அளவுக்கு தன்னில் தானாகி தான் வாழ்வது என்ற நிலைக்கு மனிதன் வந்தால் அப்பதிவுகளைக்கூட தவிர்க்கலாம்.
இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பக்தி கடந்த யோகத்தில் தன் தரம் (Presonality) உயர்த்திக்கொண்டு இறையாற்றல், இயற்கையின் செயல்விளைவு நீதி ஆகியன அறிந்து வாழமுயற்சிக்க வேண்டும். தனக்கும் பிறருக்கும் உடலாலும், மனதாலும் துன்பம் விளைவிக்காத செயல் செய்துவந்தால் போதும்.
வாழ்க வளமுடன்!!
1 week ago | [YT] | 318
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
மகரிஷி, பழிச்செயல் பதிவுகள் என்பது என்ன? அவற்றை எவ்வாறு நீக்கிக் கொள்ளலாம்?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச்செயல்களாகும். மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்குக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு. வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவிதப் பழிச்செயல் பதிவுகளாக 1) உறுப்புப் புலன்களிலும், 2) மூளையிலும் 3) வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.
விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப்பயிற்சி ஏற்று எல்லாப் பழிச்செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி விணைத்தூய்மையும், மனத்தூய்மையும் பெறலாம். எந்த பழிச் செயலானாலும், மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர்தான், மனவலிவு பெற்ற பின்னர்தான் அதை முயற்சியால், பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
ஆகவே, மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறலாம். பழிச்செயல் பதிவுகளே வினைப்பதிவுகள் அல்லது கர்மா என்றும் அழைக்கப்படுகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்
வாழ்க வளமுடன்!!
2 weeks ago | [YT] | 234
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
மகரிஷி, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
: இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல். அதனுடைய தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில் ஊடுருவி நிறைந்திருந்தால் அது தான் நீங்கள் இறைவனுக்குச் செய்யக்கூடிய கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள். இறைவன் மகிழ்ச்சி அடைவான். ஏனெனில் அவன் அன்பும், கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான். அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும் குடலும் அற்ற இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து அரூபமான இறைவனை மகிழ்விக்க நினைப்பது
வாழ்க வளமுடன்!!
2 weeks ago | [YT] | 262
View 0 replies
Vethathiriya SKY Lead
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:
கேள்வி:
மகரிஷி, எண்ணமற்ற நிலை தான் யோகம். எனவே சில தியான முறைகளில் மனத்திலிருந்து எண்ணங்களை அகற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தங்களது எளிய முறை குண்டலினி யோகத்தில் அவ்வாறு எண்ணங்களை மனதில் இருந்து அகற்றுவது பற்றி கூறப்படுவதில்லையே ஏன்?
வேதாத்திரி மகரிஷியின் பதில்:
தெய்வநிலை அறிந்து அந்தத் தெளிவிலே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது தான் ஆன்மீகம். அதில் மேம்பாடு வந்து விட்டது என்றால், அறிவு மேம்பாடு வந்து விடும். இறை இன்பத்தை அடைந்து, மனம் ஒரு பரவச நிலையிலே இருக்கும். வாழ்க்கையில் இன்பமும், மகிழ்ச்சியும், நிறைவும் அதிகரித்திருக்கும். “இத்தகு மேம்பாடுகளைப் பிறரும் அறியச் செய்ய வேண்டும். அதற்குப் பாடுபட வேண்டும்” என்ற துடிப்பும், செயலார்வமும், செயல் திறமும் ஓங்கிவரும். இவைதான் ஆன்மீக மேம்பாட்டின் அடையாளங்கள்.
வாழ்க வளமுடன்!!
2 weeks ago | [YT] | 253
View 0 replies
Load more